





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
உம்முல் முஃமினீன ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: பெருந்துடக்குடன் இருந்த நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்போம். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை (துணி கட்டிக்கொள்ளுமாறு) பணிப்பார்கள். அவ்வாறே நான் கீழாடை அணிந்து கொள்வேன். அப்போது அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள் . நபியவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசல்) 'இஃதிகாஃப்' இருந்த போது, அங்கிருந்தவாறே (அருகிலிருக்கும் அறையிலிருந்த) என் பக்கம் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவிவிடுவேன்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்உம்முல் முஃமினீன்ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபியவர்களுடன் தனது; அந்தரங்க நிலைகள் குறித்த சில விடயங்களை இங்கு குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் அவர்கள் இருவரும் பெருந்துடக்கின் போது ஒன்றாக ஒரே பாத்திரத்திலிருந்து நீர் அள்ளிக் குளித்திருக்கிறார்கள். அத்துடன் மாதவிடாயின் போது சுகம் அனுபவிக்க நாடினால் உடலில் தொப்புல் முதல் முழங்கால் வரை தனது உடலை மறைத்துக்கொள்ளுமாறு பணித்துவிட்டு உடலுறவை தவிர்த்து அவர்களை அணைத்துக்கொள்வார்கள். நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் இஃதிகாப் இருக்கும் போது -ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மாதவிடாய்ஏற்பட்டிருக்கும் நிலையில் - நபியவர்கள் தனது தலையை நீட்ட அவர்களுடைய தலையை கழுவிவிடுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'யாராவது எனக்கு ஸலாம் கூறினால், நான் அவருக்கு பதில் அளிப்பதற்காகவேண்டிய, அல்லாஹ் எனக்கு எனது உயிரை மீண்டும் வழங்குவான்.'
இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஇங்கு நபியவர்கள், சமீபமாகவோ, தூரமாகவோ இருந்து யாரெல்லாம் தன் மீது ஸலாம் சொல்கின்றார்களோ, அவர்களுக்குப் பதில் அளிப்பதற்காகத் தனது உயிர் மீண்டும் தனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கின்றார்கள். (மரணத்திற்கு அப்பாற்பட்ட) பர்ஸக் உடைய மற்றும் மண்ணறையுடைய வாழ்க்கை என்பது, மறைவான ஓர் அம்சமாகும். அதன் யதார்த்தத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். அவன் அனைத்திற்கும் சக்திபெற்றவன்.
"ஓரிரவு ரஸூல் (ஸல்) அவர்களுடன் நான் தொழுதேன் அப்பொழுதவர்கள் அல் பகரா ஸூராவை ஆரம்பம் செய்தார்கள்.அதன் நூராவது வசனத்தில் வைத்து அவர்கள் ருகூஃ செய்வார்கள் என நான் நினைத்தேன்.ஆனால் அவர்கள் ஓதிக் கொண்டே இருந்தார்கள்.எனவே இந்த ஸூராவுடன் ருகூஃ செய்வார்கள் என்று நினைத்தேன்.ஆனால் அவர்கள் அதன் பின்னர் அந்நிஸாஉ அத்தியாயத்தையும் அதன் பின் ஆல இம்ரான் அத்தியாயத்தையும் ஆரம்பித்து ஓதினார்தள்.இதையெல்லாம் அவர்கள் தஜ்வீத் சட்டங்களை அனுசரித்துத் தர்தீலாக ஓதினார்கள்.அவ்வமயம் அல்லாஹ்வை துதி செய்து அவனைத் தூய்மைப் படுத்தும் வசனங்களைத் தாண்டும் போது தஸ்பீஹ் செய்தார்கள்.மேலும் அல்லாஹ்விடம் கையேந்தும் படியான வசனங்களைத் தாண்டும் போது அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.இன்னும் பாதுகாப்புத் தேடும் படியான வசனங்களைத் தாண்டும் போது அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்கள்.பின்னர் ருகூஃ செய்தார்கள்.அதில்سبحان ربي العظيم எனும் வாசகத்தை ஓதினார்கள்.மேலும் அன்னாரின் ருகூஃ,அவர்கள் நிலையில் நின்றது போன்று நீளமாக இருந்தது.பின்னர் سمع الله لمن حمده، ربنا لك الحمد»என்று கூறினார்கள்.பின்னர் ருகூவில் தாமதித்தது போன்று நீண்ட நேரம் நின்றார்கள்.பின்னர் ஸுஜூத் செய்தார்கள்.அதில்سبحان ربي الأعلى என்று கூறினார்கள்.அவர்களின் ஸுஜூதும் ஏரத்தாழ அவர்களின் நிலையைப் போன்று நீண்டிருந்தது.என்று ஹுதைபா இப்னு அல்யமான் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஹதீஸ் விளக்கம்:ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு முறை இரவுத் தொழுகை தொழுத போது அவர்களுடன் ஹுதைபா (ரழி) அவர்களும் தொழுதார்கள்.அவ்வமயம் நபியவர்கள் தொழுகையை நீட்டித் தொழுதார்கள்.அவ்வமயம் ஒரு ரகஅத்தில் அல்பகரா,அந்நிஸாஉ,ஆல இம்ரான் ஆகிய ஸூராக்களை ஓதினார்கள்.மேலும் அவர்கள் ஓதிக் கொண்டு இருக்கும் போது அதனிடையே அல்லாஹ்வைத் துதி செய்து அவனைத் தூய்மைப் படுத்தும் வசனங்களைத் தாண்டும் போது தஸ்பீஹ் செய்தார்கள்.மேலும் அல்லாஹ்விடம் கையேந்தும் படியான வசனங்களைத் தாண்டும் போது அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.இன்னும் பாதுகாப்புத் தேடும் படியான வசனங்களைத் தாண்டும் போது அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்கள்.மேலும் நபியவர்களின் தொழுகை எல்லாக் கட்டத்திலும் அதன் நீளம் ஏரத்தாழ ஒரே மாதிரியாக இருந்தது.எனவே அவர்களின் ருகூஃ அவர்களின் நிலையில் நின்றது போன்றும்,ஸுஜூத் ருகூவில் தாமதித்திருந்தது போன்றும் இருந்தது நீளமாக இருந்தது.
"நாம் ஒரு போருக்காக(ரஸுல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம்.அவ்வமயம் நாம் ஆறு பேர்கள் இருந்தோம்.எம்மிடம் ஒரு ஒட்டகம்தான் இருந்தது.அதன் பின்னால் நாம் சென்று கொண்டிருந்தோம்.அவ்வமயம் நமது பாதங்களில் காயம் ஏற்பட்டன.எனது பாதமும் காய்ப்பட்டது.மேலும் எனது நகங்கள் கழன்று விழுந்தன.நாம் அனைவரும் நமது காலில் சீலைத் துண்டுகளைக் கட்டிக் கொண்டோம் இவ்வாறு சீலைத் துண்டுகளைக் கொண்டு நமது பாதங்களில் நாம் கட்டுப் போட்டுக் கொண்டதன் காரணமாக இது "ஒட்டுகள் உடைய யுத்தம்"என்று பெயர் பெற்றது என்று "அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மேலும் இந்த சம்வத்தை அறிவித்துக் கொண்டிருந்த அபூ மூஸா அவர்கள் பின்னர் அதனைச் சொல்வதை விரும்பவில்லை.எனவே"இதனனைச் சொல்லிக் காட்டுவதற்காக நான் இப்டிச் செய்யவில்லை" என்றார்கள், இது அவர்கள் தங்களின் இப்படியான செய்தி யொன்றைப் பகிரங்கப்படுத்த விரும்ப வில்லை என்பதை எடுத்துக் காட்டுவது போல் இருந்தது,என அபூ புர்தா (ரழி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஹதீஸ் விளக்கம்:அபூ மூஸா (ரழி) அவர்கள் ஒரு போரில் கலந்து கொள்வதற்காக ரஸூல் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள்.அப்பொழுது அவருடன் அவரின் சில தோழர்களும் இருந்தனர்.அவர்களின் எண்ணிக்கை ஆறு பேர்கள்.அவ்வமயம் அவர்களிடம் ஒரு ஒட்டகம்தான் இருந்தது.அதன் மீது ஒரு குறிப்பட்ட தூரம் வரை ஒருவர் ஏறிச் செல்ல மற்றவர்கள் அதன் பின்னால் நடந்து சென்றனர்.அவரின் வாய்ப்பு நிறைவு பெற்றதும் அவர் அதிலிருந்து இறங்கி விடுவார்.அதன் பின்னர் மற்றவர் அதில் ஏறி சாவாரி செய்வார்.இவ்வாறு அவர்கள் தங்களின் இலக்கை அடையும் வரையில் சுலட்சி முறையில் அதில் சவாரி செய்தனர்.அப்போது தங்களின் பாதங்கள் கீறிக் கிழிந்து அதில் காயம் ஏற்படா வண்ணம் தங்களின் பாதங்களை மறைத்துக் கொள்வதற்கு அவர்களிடம் வஸ்திரம் எதுவும் இருக்கவில்லை.எனவே அவர்கள் வெற்றுக் காலுடனேயே நடந்து சென்றனர்.இப்படி பாலை வனத்தில் நீண்ட தூரம் நடந்து சென்றதன் காரமாக அவர்களின் பாதங்கள் காயங்களுக்கு இலக்காகின.இதனையே "அவ்வமயம் நமது பாதங்களில் காயம் ஏற்பட்டன.எனது பாதமும் காய்ப்பட்டது.மேலும் எனது நகங்கள் கழன்று விழுந்தன" என்று அபூ மூஸா (ரழி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.இத்தனை பெரிய இடுக்கண் இவர்களுக்கு ஏற்பட்டு விட்ட போதிலும் அவர்கள் தங்களின் நடையை நிறுத்திக் கொள்ளாது எதிரிகளைச் சந்திக்கும் வரையில் தங்களின் பயணத்தை மேற்கொண்டனர்.மேலும் "நாம் அனைவரும் நமது காலில்சீலைத் துண்டுகளைக் கட்டிக் கொண்டோம்" என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பதிலிருந்து திடமான கரடு முரடான பூமியில் நீன்ட தூரம் அவர்கள் நடந்து சென்றதன் காரமாக அவர்களின் பாதணிகள் அறுந்து விட்டன,எனவே அவர்கள் முரட்டுப் பூமியிலிருந்தும்,அதன் வெப்பத்திலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வண்ணம் தங்களின் பாதங்களில் சீலைத் துண்டுகளைக் கட்டிக் கொண்டனர் என்பது துலாம்பரமாகின்றது.எனவேதான் இந்த யுத்தம் "ذات الرقاع" ஒட்டுகள் உடைய யுத்தம் என பெயர் பெற்றது.இதுபற்றி அபூ மூஸா (ரழி) அவர்கள் குறிப்பிடும் போது "இவ்வாறு நாம் சீலைத் துண்டுகளைக் கொண்டு நமது பாதங்களில் கட்டுப் போட்டுக் கொண்டதன் காரணமாக இது "ஒட்டுகள் உடைய யுத்தம்"என்று பெயர் பெற்றது என்று கூறினார்கள்.அதாவது இந்த நிகழ்வுின் காரணமாக ரஸூல் (ஸல்) அவர்கள் பங்குபற்றிய இந்த யுத்தம் غزوة ذات الرقاع ஒட்டுகள் உடைய யுத்தம் என பெயர் பெற்றது.இந்த யுத்தம் இப்படி பெயர் பெறுவதற்கு இதுவோர் அடிப்டைக் காரணமாகும்.மேலும் இது பற்றி அபூ புர்தா அவர்கள் கூறும் போது இந்த சம்வம் பற்றி விவரித்த அபூ மூஸா (ரழி) அவர்கள் "இதனனைச் சொல்லிக் காட்டுவதற்காக நான் இப்டிச் செய்யவில்லை" என்று கூறினார்ள்.அதாவது தாங்கள் செய்த நல்ல காரியம் ஒன்றை அபூ மூஸா (ரழி) அவர்கள் பகிரங்கப்படுத்த விரும்ப வில்லை என்பதை அவர்களின் இந்த வாசகம் புலப்படுத்துகின்றது என்று கூறினார்கள்.மேலும் பின்பற்றத் தகுதிவாய்ந்த ஒரு நல்லவர் தான் செய்யும் நல்ல கருமத்தைப் போன்று மற்றவரும் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கில் அதனை பிரரிடம் சொல்லிக் காட்டுவதைத் தவிர பொதுவாக தான் செய்யும் நல்ல கருமத்தைப் பகிரங்கப்படுத்தாமல் அதனனை மறைத்து வைப்பதே சிறந்தது.ஏனெனில் அதில்தான் உளத்தூய்மை இருக்கின்றது.எனவேதான் தங்களுக்கு நேர்ந்த இந்த சம்பவத்தைப் பற்றி எடுத்துக் கூறிய அபூ மூஸா (ரழி) அவர்கள் பின்னர் இதனைத் தான் கூறியிருக்கக் கூடாது என்று நினைத்தார்கள்,என்பதே இந்த ஹதீஸ் தரும் கருத்தாகும்.மேலும் "அவர் தன் வலது கரம் தர்மம் செய்ததைத் தன் இடது கரம் அறியாத வாறு மறைத்துக் கொண்ண்டார்" என்று பிரிதொரு ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருப்பது ஈண்டு கவணிக்கத் தக்கதாகும்.
ரஸூல்(ஸல்) அவர்கள் என் மீது சாய்ந்திருந்தவாறு "அல்லாஹ்வே! என்னை மன்னித்து என் மீது அருள் புரிவாயாக.மேலும் என்னை மேலிடத்து தோழர்களின் பால் சேர்த்து வைப்பாயாக" என்று கூறுவதை நான் செவிமடுத்தேன். என்று ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுரஸுல் (ஸல்) அவர்களின் ஆயுற் கால முடிவு நெருங்கி வந்த போது அன்னார் உம்முல் முஃமினீன் ஆஇஷா (ரழி) அவர்களின் மேல் சாய்ந்து கொண்டு தங்களை மேலிடத்து நண்பர்களான நபிமார்கள், ஸித்தீக்கீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களின் பால் சேர்த்து வைக்குமாறு தங்களின் இறைவனிடம் வேண்டினார்கள்
அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரழி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை) ஏற்படுத்திக்கொண்டு) அமர்ந்திருந்தேன். (ஒருமுறை) அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ''இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப்பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப்பின்) கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்;?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, ''அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறை வேற்றுங்கள்). அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் அல்லாஹ் விசாரிப்பான்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்குடிமக்களின் விவகாரங்களை தலைவர்களும், அதிகாரிகளும் நிர்வகிப்பது போன்று பனூ இஸ்ராஈல்களின் விவகாரங்களை நபிமார்கள் நிர்வகித்து வந்தனர். அவர்களிடம் சீர்கேடுகள் தோன்றும் போதோல்லாம் அவர்களின் விவகாரங்களை சீர்செய்வதற்கும் அவர்கள் மாற்றிய சட்டதிட்டங்களை நீக்குவதற்காகவும்; நபிமார்களை அனுப்பினான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். ஆனால் என் உம்மத்திற்காக இதைச் செய்ய எனக்குப் பிறகு எந்த தீர்க்கதரிசியும் வரமாட்டார். எனக்குப் பிறகு, ஏராளமான கலீஃபாக்கள் இருப்பார்கள், அவர்களிடையே வேறுபாடுகளும் மோதல்களும் எழும். எனினும் எனக்குப்பின்னால் அதிகமான கலீபாக்கள் தோன்றி அவர்கள் மனிதர்களை ஆட்சி புரிவார்கள்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறிய போது 'உங்களுக்குப்பின்னர் கலீபாக்கள் அதிகரித்து விட்டால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விடுமே. அப்படியாயின் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தாங்கள் நம்மைப் பணிக்கின்றீர்கள்' என ஸஹாபாக்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வினவினர். ஒரு கலீஃபா இருக்கும் நிலையில் இன்னொருவருவருக்கு பைஅத் (சத்தியப் பிரமாணம்) பைஅத் செய்தால் முதல் கலீஃபாவிற்கான விசுவாசம் செல்லுபடியாகும், அதைக் கடைப்பிடிக்க வேண்டும், அதே நேரத்தில் இரண்டாவது கலீஃபாவிற்கான பைஅத் விசுவாசப் பிரமாணம் பாதிலாகும். (செல்லுபடியாக மாட்டாது) அவ்வாறு செயவது தடைசெய்யப்பட்டுள்ளது. கலீஃபாக்களுக்கான உரிமையை வழங்கி நிறைவேற்றுங்கள், அவர்களைப் பின்பற்றுங்கள். குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு முரணாக இல்லாத விடயங்களில் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடங்கள். ஏனென்றால் உங்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்து அல்லாஹ் அவர்களை மறுமையில் விசாரிப்பான்.
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்ள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் இரகசியமான வணக்க வழிபாடுகள் குறித்து வினவினார்கள். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்களில் ஒருவர், ''நான் பெண்களைவிட்டு ஒதுங்கி யிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக்கொள்ளமாட்டேன்' என்று கூறினார். இன்னொருவர், ''நான் ஒரு போதும் இறைச்சி சாப்பிடமாட்டேன் ' என்று கூறினார். மூன்றாம் நபர் நான் படுக்கையில் தூங்க மாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வை புகழ்ந்து துதி செய்து விட்டு (அந்தத் தோழர்களிடம்) வந்து, ''இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொள்வதற்கு இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது! (அறிந்து கொள்ளுங்கள்) என்னைப் பொறுத்தவரை நான் (இரவில்) தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன், மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் புறக்கணித்து நடக்கிராரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்' என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ﷺ அவர்களின் மனைவிகளின் வீடுகளுக்கு சில ஸஹாபாக்கள் (ரழியல்லாஹீ அன்ஹும்) வந்தார்கள். அவர்கள், நபி ﷺ அவர்கள் வீட்டுக்குள் தனிப்பட்ட நிலையில் செய்யும் இபாதத்துகளைப் பற்றி விசாரித்தார்கள். அதைப் பற்றி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டபோது, அவற்றை தாங்கள் செய்யும் இபாத்துக்களுடன் ஒப்பிட்டு தாங்கள் செய்வது மிகவும் குறைவானது எனக் கருதினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: 'நாம் எம்மை நபி ﷺ அவர்களுடன் ஒப்பிடும் போது மிகவும் தூரத்தில் இருக்கிறோம். நபியவர்களின் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. அவ்வாறிருந்தும்அவர்கள் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் எம்மைப் பொறுத்தவரை எமக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லையா என்பது தெரியாது ஆகையால் நாம் அதிகமாக இபாதத் செய்ய வேண்டியதுதான், அதன் மூலம் மன்னிப்பு கிடைக்கலாம் எனக் கூறினார்கள்'. பின்னர் அவர்களில் ஒருவர்: 'நான் பெண்களை மணக்கமாட்டேன்' என்று கூறினார். இன்னொருவர், ''நான் ஒரு போதும் இறைச்சி சாப்பிடமாட்டேன் ' என்று கூறினார். மற்றொருவர்; நான் படுக்கையில் தூங்க மாட்டேன் என்று கூறினார். இந்த விஷயம் நபி ﷺ அவர்களுக்கு எட்டியது. அவர் கோபமடைந்து மக்களிடம் உரையாற்றினார். அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனுக்குத் துதி செலுத்திய பின் அவர்கள் கூறினார்கள்: என்ன காரணம், சிலர் இப்படியும் அப்படியும் பேசுகிறார்கள்?! அல்லாஹ்வின் மீது உங்களைவிட அதிக பயம் கொண்டவனும், அதிக தக்வா உடையவனும் நான்தான். ஆனால் நான் இரவில் தூங்குகிறேன்—இரவு தொழுகைக்காக சக்தி பெறுவதற்குநான் நோன்பை விடுகிறேன்—நோன்புக்காக வலிமை பெறுவதற்கு நான் பெண்களை மணக்கிறேன். எவன் என் வழிமுறையிலிருந்து விலகி, அதற்குப் பிறகு வேறு ஒன்றில் முழுமை இருக்கிறது என்று கருதி, என் வழியை விட்டுவிட்டு வேறு வழியைப் பின்பற்றுகிறானோ—அவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்'.
உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில்- எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து மிகவும் விலகி நிற்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை. அல்லாஹ்வின் புனித(ச்சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினால் தவிர. (அப்போது மட்டும் பழிவாங்குவார்கள்.)
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஆஇஷா பின்த் அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள், முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உயர்ந்த நற்குணங்களில்; சிலதை குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு அவர்கள் குறிப்பிட்ட நற்குணங்களில் ஒன்று : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரண்டு காரியங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டால், அதில் பாவமல்லாதவற்றில் எளியதையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அந்த எளிய காரியம் பாவத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தால், அதிலிருந்து மிகத் தூரமாக இருப்பார்கள்; அப்போது கடினமானதையே தேர்ந்தெடுப்பார்கள். இரண்டாவது நற்குணம் : நபியவர்கள் தமது தனிப்பட்ட விவகாரங்களுக்காக ஒருபோதும் பழிவாங்கவில்லை. தமக்கான சொந்த விவகராங்களில் பிறர் செய்த குறைகளை அவர் மன்னிப்பவராகவும் பொறுப்பவராகவும் இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் வரம்புகள் மீறப்பட்டால், அப்போது அல்லாஹ்வுக்காக மாத்திரம் கடுமையாக நடந்து கொள்வார்கள். அத்துடன் அல்லாஹ்வுக்காகக் கோபப்படும் விடயத்தில் அவர் மக்களிலேயே மிகத் தீவிரமுடையவராக இருந்தார்கள். இரண்டாவது நற்குணம் : நபியவர்கள் தமது தனிப்பட்ட விவகராங்களுக்காக ஒருபோதும் பழிவாங்கவில்லை. தமக்கான சொந்த விவகராங்களில் பிறர் செய்த குறைகளை அவர் மன்னிப்பவராகவும் பொறுப்பவராகவும் இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் வரம்புகள் மீறப்பட்டால், அப்போது அல்லாஹ்வுக்காக மாத்திரம் கடுமையாக நடந்து கொள்வார்கள். அத்துடன் அல்லாஹ்வுக்காகக் கோபப்படும் விடயத்தில் அவர் மக்களிலேயே மிகத் தீவிரமுடையவராக இருந்தார்கள்.