





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்: (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், 'சொர்க்கவாசிகளே!' 'இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம்! இதுதான் மரணம்' என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள்.பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: 'நரகவாசிகளே! என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் 'இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம்' என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், 'சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை' என்று கூறுவார். இதைக் கூறிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், '(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். எனவே, இவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 19:39 வது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், 'இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர். எனவே இவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்' என்றும் கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மறுமை நாளில் மரணம் கருப்பும் வெள்ளை நிறமும் கலந்த ஆண் ஆட்டின் தோற்றத்தில் கொண்டுவரப்படும் என்பதை தெளிவுபடுத்துகிறார்கள். அவ்வேளை சொர்க்க வாசிகளே! என அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் உடனே தங்களது கழுத்துக்களையும் பிடரிகளையும்; நீட்டிக்கொண்டு தலைகளை உயர்த்திப் பார்ப்பார்கள்;. அப்போது அவர்களிடம் இதனைத் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்பார். உடனே அவர்கள் கண்டு அறிந்திருந்தனால் ஆம்' இது மரணம் எனப்பதிலளிப்பார்கள். பின் அழைப்பாளர் நரகவாதிகளே! என அழைப்பு விடுப்பார் அவர்கள் உடனே அவர்கள் தங்களது கழுத்துக்களையும் பிடரிகளையும்; நீட்டிக்கொண்டு தலைகளை உயர்த்திப் பார்ப்பார்கள்;. அப்போது அவர்களிடம் இதனைத் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்ப்பார். உடனே அவர்கள் கண்டு அறிந்திருந்தனால் 'ஆம்' இது மரணம் எனப்பதிலளிப்பார்கள். உடனே அது அறுக்கப்பபடும் அதன் பின் அழைப்பாளர் சுவர்க்கவாதிகளே! உங்களுக்கு மரணம் என்பது கிடையாது நிரந்தரமாக தங்கிவிடுங்கள் என்றும், நரகவாதிகளைப்பார்த்து உங்களுக்கு மரணம் என்பது கிடையாது நீங்களும் உங்கள் இடத்தில் நிரந்தரமாக தங்கி விடுங்கள் என்று கூறுவார். முஃமின்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதற்கும் காபிர்களை கண்டிக்க வேண்டும் என்பதற்காகவுமே இவ்வாறு கூறப்படும். இவ்வாறு நபியவர்கள் கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஓதினார்கள்: (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். இவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட்டார்கள்) ஆக, மறுமை நாளில் சுவர்க்கவாதிகள் நரகவாதிகள் என வேறுபடுத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவினரும் அவர்களுக்குரிய இடத்திற்கு சென்று நிரந்தரமாக இருந்து விடுவர். தீமை செய்தவன் தான் நல்லது செய்யவில்லை என வருந்தியும், அலட்சியத்துடன் கவனக்குறைவாக இருந்தவன் நல்லனவற்றை அதிகமாகச் செய்யவில்லை எனவும் புலம்புவான்.
அபூ ஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்துள்ளார்கள்: வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி, அதை முஸ்லிம்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், ('வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்:( நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும்இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோருக்கும், யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்'' என்று கூறினார்கள்.'(அல்பகரா (136) வசனம்
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்வேதம் கொடுக்கப்பட்டோர் தமது வேதங்களில் இருந்து கூறும் விடயங்களினால் ஏமாறுவதை விட்டும் தனது சமூகத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எச்சரித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் யூதர்கள் தங்களது மொழியான ஹிப்ருவில் தவ்ராத்தை ஓதி அதனை அறபு மொழியில் தெளிவு படுத்துபவர்களாக இருந்தார்கள். ஆகவே வேதக்காரர்கள்; கூறும் விடயங்களில் பொய்யிலிருந்து உண்மையை பிரித்தறியமுடியாமல் இருப்பதினால் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் கூறுவதை பொய்யென்றோ உண்மையென்றோ கூறவேண்டாம் எனக்கூறினார்கள். ஏனெனில் அல்லாஹ் எமக்கு அல்குர்ஆனிலும் அவர்களின் வேதத்திலும் இறக்கியருளியவைகளையும் ஈமான் கொள்ளுமாறு பணித்துள்ளான்.எமது ஷரீஆவில், அவர்கள் கூறிப்பிடுகின்றவற்றில் பொய் மற்றும் உண்மையை தெளிவுபடுத்தும் விடயங்கள் குறிப்பிடப்படாததினால் அவர்கள் தங்களது வேதங்களில் இருந்து குறிப்பிடுபவற்றில் போலியானவை எது என்பதை நாம் அறிந்து கொள்ளவதற்கான எந்த வழியும் கிடையாது. இதனால் அவர்கள் திரிபுபடுத்தியவற்றில் நாமும் பங்காளர்களாக இருக்காதிருக்க அவர்களை உண்மைப்படுத்தாமலும் பொய்ப்பிக்காமலும் நாம் மௌனம் காத்து எதுவும் கூறாது நிறுத்திக்கொள்கிறோம்.இதுவே உண்மையான விடயமாகும். அது உண்மையாக இருந்து நாம் அதை மறுத்தாள் நாம் ஈமான் கொள்ளவேண்டும் என்று கடட்டளையிடப்பட்டவற்றை மறுத்தவர்களாக-புறக்கணித்தவர்களாக- ஆகிவிடுவோம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இவ்வாறு நாம் கூறவேண்டும் என கட்டளையிட்டுள்ளார்கள். 'நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளியவற்றையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோருக்கும், யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளியவற்றையும் மற்றும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் வழங்கியவற்றையும், மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கிய அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்' என (முஸ்லிம்களே!) நீங்கள் கூறுங்கள். அல்பகரா (136 )
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்: பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்ற வசனம் இறங்கும் வரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸூறாக்களுக்கிடையிலான வித்தியாசத்தை அறியாதவராக இருந்தார்.
இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்அல்குர்ஆனின் ஸூறாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இறங்கிக் கொண்டிருந்தன. நபியவர்கள் ஒவ்வொரு ஸுறாவும் எந்த இடத்தில பிரிகிறது என்பதையோ எந்த இடத்தில் முடிவடைகிறது என்பதையோ பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்ற வசனம் இறங்கும் வரையில் அறியாதவராக இருந்தார்கள் என இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா தெளிவு படுத்துகிறார்கள்.பிஸ்மில் இறங்கியதும் குறிப்பிட்ட ஸுறா முடிவடைந்து புதிய ஒரு ஸுறாவின் ஆரம்பம் குறித்து அறிந்து கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள். 'மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாயோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று அவரிடம் கூறப்படும்'
இமாம்களான அபூ தாவூத், திர்மிதி, குப்ரா எனும் நூலில் நஸாஈ, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்குர்ஆனை மனனம் செய்து அதில் உள்ளவற்றை அமல்செய்து எப்போதும் ஓதுவதிலும் மனனம் செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு மனிதர் சுவர்கத்தினுள் நுழைந்துவிட்டால்; அவரிடம் அல்குர்ஆனை ஓதுவீராக அதன் மூலம் சுவர்க்கத்தின் படித்தரங்களில் ஏறிச்செல்வீராக மேலும் உலகத்தில் அமைதியாகவும் நிதானமாகவும் ஒதியது போன்று இங்கும் ஓதுவீராக உனது அந்தஸ்த்து நீ கடைசியாக ஓதி முடிக்கும் வசனத்தில் உள்ளது என்று அவரிடம் கூறுப்படும் என நபியவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூ அப்திர்ரஹ்மான் அஸ்ஸுலமி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தோழர்களில் எமக்கு அல்குர்ஆனை கற்றுத்தந்தோர் தாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பத்து வசனங்களை கற்றுக்கொள்ளக்கூடி யவர்களாக இருந்ததோடு, கற்ற அந்தப் பத்துவசனங்கில் உள்ள விடயங்களை கற்று அமல் செய்யும் வரையில் மற்றைய பத்து வசனங்களை அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை எனக் கூறினார்கள் எனவே இதனால் நாம் அறிவையும் அமலையும் அறிந்து கொண்டோம் என்று கூறினார்கள்;
இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்நபித்தோழர்களாகிய ஸஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அல்குர்ஆனில் பத்து வசனங்களை கற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருந்ததோடு,அந்தப் பத்து வசனங்களில் உள்ள அறிவைக் கற்று அதனை செயல்படுத்தும் வரையில் மேலும் பத்து வசனங்களை கற்பதற்கு செல்ல வில்லை. இதனால் அவர்கள் அறிவையும் அமலையும் ஒன்று சேர அறிந்து கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உபையி இப்னு கஃப் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (என்னிடம்), அபுல் முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். அவர்கள் அபுல் முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? என (மீண்டும்) கேட்டார்கள். நான் அல்லாஹு லாஇலாஹ இல்லா{ஹவல் ஹய்யுல் கய்யூம் எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம் என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல் முன்திரே! என்றார்கள்
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உபை இப்னு கஃபிடம் இறைவேதத்தில் உள்ள மிகவும் மகத்தான வசனம் எது என்று கேட்டபோது அவர் பதில் அளிப்பதற்கு தயங்கினார்.பின்னர் அவர் ' அந்த வசனம் ஆயதுல் குர்ஸி ' அல்லாஹு லாஇலாக இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம் எனக் கூறினார்.இதனை நபியவர்கள் உறுதிப்படுத்தியதோடு அவரின் உள்ளம் அறிவாலும் கல்விஞானத்தாலும் நிறைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி, இந்த அறிவினால் அவர் மகிழ்ச்சியடையவும் அதனை இலகுவாக்கிக் கொடுக்கவும் பிரார்த்தனை செய்தார்கள் .
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து அதில் ஊதுவார்கள் பின் அதில், குல் ஹுவல்லா அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதுவாரகள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்நபியவர்கள் தூங்கச் சென்றால் பிரார்த்தனை செய்பவரைப் போன்று தனது இரண்டு கைகளையும் இணைத்து உயர்த்தி அதில் இலேசான எச்சில் படும் அளவுக்கு; ஊதி குல் ஹுவல்லாஹு அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதுவாரகள்;. பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். இது நபியவர்கள் தூங்கச் சென்றால் கடைப்பித்த வழிமுறைகளுள் ஒன்றாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அதிய்யிப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ' (இறை) கோபத்திற்கு உள்ளானோர்; யூதர்கள் ஆவர். கிறிஸ்தவர்கள் வழிதவறியோர் ஆவர்'
இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளான ஒரு சமூகத்தினர். காரணம் அவர்கள் சத்தியத்தை அறிந்திருந்தும் அதனை எடுத்து நடக்கவில்லை. கிறிஸ்தவர்கள் வழிதவறிய சமூகமாவர். அவர்கள் அறிவின்றி செயற்பட்டோர் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆல இம்ரான் ஸுறாவின் 7வது வசனமான ' ஹுவல்லலதி அன்ஸல அலைக்கல் கிதாப..' என்ற வசனத்தை ஒதினார்கள் (கருத்து: அவன்தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான் அதில் கருத்துத் தெளிவுள்ள)முஹ்கமாத் வசனங்களும் உள்ளன.அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) முதஷாபிஹாத்களாகும். எவர்களின் உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை நாடியும் இதன் தவறான விளக்கத்தை தேடியும் அதில் பலகருத்துக்களுக்கு இடம்பாடானவற்றை பின்பற்றுகின்றனர். அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ 'நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம் அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துமுள்ளவையே என்று கூறுவார்கள் சிந்தனையுடையோரைத்தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.'(ஆலு இம்ரான் 7) (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) முதஷாபிஹாத்களை பின்பற்றுபவர்களை நீங்கள் கண்டால் அவர்களையே அல்லாஹ் உள்ளத்தில் கோளாறு உள்ளோர் எனப்பெயரிட்டுள்ளான் ஆகவே அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பீராக என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி ) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆலு இம்ரான் ஸுறாவின் 7 வசனமான ' ஹுவல்லலதி அன்ஸல அலைக்கல் கிதாப..' என்ற வசனத்தை ஒதினார்கள் (கருத்து: அவன்தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான் அதில் கருத்துத் தெளிவுள்ள)முஹ்கமாத் வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) முதஷாபிஹாத்களாகும். எவர்களின் உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை நாடியும் இதன் தவறான விளக்கத்தை தேடியும் அதில் பலகருத்துக்களுக்கு இடம்பாடானவற்றை பின்பற்றுகின்றனர். அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ 'நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம் அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துமுள்ளவையே என்று கூறுவார்கள் சிந்தனையுடையோரைத்தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.'(ஆலு இம்ரான் 7) இந்த வசனத்தில் அல்லாஹ் தனது நபிக்கு அல்குர்ஆனை இறக்கியதாகவும்,அதில் தெளிவான ஆதாரங்களும், எந்த மூடலுமில்லாத –சிக்கலுமில்லாத சட்டதிட்டங்களும் உள்ளதாகவும், இதுவே இவ்வேதத்தின் அடிப்படையாகவும் மூலாதாரமாகவும் சர்ச்சைகள் சிக்கல்களின் போது இதுவே மூலாதாரமாக இருக்கும் என்பதாகவும் அல்லாஹ் குறிப்பிடுகிறான். என்றாலும் பல கருத்துக்களைகொள்வதற் இடம்பாடான சில வசனங்கள் இவ்வேதத்தில் உண்டு. சிலர் அவ்வாறான வசனங்களின் கருத்துக்களை புரிந்து கொள்வதில் குழப்பத்தில் இருப்பர். இன்னும் சிலரோ குறிப்பிட்ட வசனத்திற்கும் ஏனைய வசனங்களுக்கும் மத்தியில் முரண்பாடு உள்ளதாக நினைப்பர். பின்னர் அல்லாஹ் இவ்வாறான இந்த வசனங்களில் மக்கள் நடந்து கொள்ளும் முறை பற்றி விவரிக்கிறான். உள்ளத்தில் கோளாறுடன் சத்தியத்தை விட்டு விலகி இருப்போர் தெளிவான வசனங்களைவிட்டுவிட்டு இவ்வாறு முதஷாபிஹான வசனங்களை பின்பற்றுவர் இதனூடாக சந்தேகங்களை ஏற்படுத்தி மக்களை வழிகெடுப்பதோடு தங்களின் மனோ இச்சைப்பிரகாரம் அதற்கு வியாக்கியானம் அளிப்பர். ஆனால் அறிவில் தேர்ச்சிபெற்றோர் முதஷாபிஹான வசனங்களை அறிந்திருப்பர் அவற்றை முஹ்கமான வசனங்களோடு ஒப்புநோக்கிபார்ப்பார்ப்பர். இது அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்பதை உறுதியாக விசுவாசிப்பர் ஆகையால் சிக்கலோ முரண்பாடோ இருக்காது என்பதை நம்புவதோடு இதிலிருந்து படிப்பினை பெருவர்.சீரிய அறிவு படைத்தோரைத் தவிர மற்றவர்கள் படிப்பினை பெற மாட்டார்கள். பின்னர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவரகள் ஆஇஷா ரழியல்லாஹு அவர்களிடம் முதஷாபிஹான வசனங்களை பின்பற்றுவோரை நீங்கள் கண்டால் அவர்களையே அல்லாஹ் உள்ளத்தில் கோளாறு உள்ளோர் என்று பெயரிட்டுக் குறிப்பிட்டுள்ளான்.எனவே அவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதோடு அவர்களின் கூற்றுக்களுக்கு செவிசாய்த்திட வேண்டாம் எனவும் கூறினார்கள்.