





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: இந்தக் குர்ஆனை மனனமிட்டு (அதை ஓதி ) பேணி வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) மறந்து விடக் கூடியதாகும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்குர்ஆனை மனனமிட்ட ஒருவர் அது மறந்து விடாதிருக்க தொடரந்தும் ஓதி வருமாறு கட்டளைப் பிரப்பித்துள்ளார்கள். இதனை நபியவர்கள் கட்டிவைக்கப்பட்ட ஒட்டகை அவிழ்த்து விடப்பட்டதும் எவ்வளவு வேகமாக ஓடுமோ அதைவிடவும் மிகவும் வேகமாக அல்குர்ஆன் மறந்துவிடும் என்று குறிப்பிடுகிறார்கள். ஆகவே அதனைப்பேணி ஓதி வந்தால் அது அவருடன் இருக்கும், இல்லாது விட்டால் அவறிடமிருந்து மறைந்து விடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவராவார்'.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்முஸ்லிம்களில் மிகவும் சிறப்புக்குறியவரும், உயர் அந்தஸ்த்தையும் பெற்றவர் யார் என்பதை நபியவர்கள் இங்கு குறிப்பிடுகிறார்கள். அவர் யாரென்றால் அல்குர்ஆன் ஓதி மனனம் செய்து அழகிய முறையில் தர்த்தீலாக ஓதி, அதனை விளங்கி தானும் அமல் செய்வதுடன் அல்குர்ஆனிய கலைகளை பிறருக்கும் கற்றுக் கொடுப்பவராவார்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'உங்கள் வீடுகளைக் அடக்கஸ்தளங்களாக ஆக்கிவிடாதீர்கள், நிச்சயமாக ஷைதான் ஸூரா பகரா ஓதப்படும் வீட்டைவிட்டும் விரண்டோடுகின்றான்'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்தொழுகை நடைபெறாத அடக்கஸ்தளங்களைப் போன்று வீடுகளை ஆக்கி விட வேண்டாமென நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் தடுத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து ஸுறா பகரா ஓதும் வீட்டிலிருந்து ஷைதான் விரண்டோடுகிறான் எனவும் தெரிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமானதாகும்.'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஸூறா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதியவரை அல்லாஹ் தீங்கு மற்றும் துரதிஷ்டவசமான விபத்து போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறான் என நபியவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள 'கபதாஹு' என்ற வாசகத்திற்கு பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு: இரவுத் தொழகைக்குப் பதிலாக இவ்விரு வசனங்களும் போதுமாகும். இரவில் ஓத வேண்டிய ஏனைய திக்ருகளுக்குப் பதிலாக இதுவொன்றே போதுமாகும். இரவுத் தொழுகையில் ஓத வேண்டிய அதி குறைந்த பட்ச அளவு இவ்விரு வசனங்களுடைய அளவாகும். குறிப்பிட்ட வார்த்தையானது மேற்கண்ட அனைத்து கருத்துக்களையும் உள்ளடக்கிக்கொள்ளவதற்கு வாய்ப்புண்டு.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'யார் அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆனில் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும், அந்த ஒரு நன்மை பத்து மடங்காகும். அலிப், லாம், மீம் என்பது ஓரெழுத்து எனக் கூற மாட்டேன், மாறாக அதில் அலிப் (ا) ஓரெழுத்து, (ل) லாம் ஓரெழுத்து, (م) மீம் ஓரெழுத்தாகும்'.
இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு நன்மை உண்டு எனவும், அது அதே போன்று பத்து மடங்காக பன்மடங்காக்கப்படும் எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். நபியவர்கள் இதனை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது 'நான் அலிப் லாம் மீம்' என்பதை ஓரு ஹர்ப் -எழுத்து- எனக் கூறாமாட்டேன். மாறாக அலிப் ஓர் எழுத்து, லாம் ஓர் எழுத்து, மீம் ஓர் எழுத்து, ஆகவே இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு நன்மை வீதம் மூன்று நன்மைகள் கிடைப்பதுடன் இதன் பத்து மடங்கு முப்பது ஆகும்.
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக இருந்தார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை திக்ர் -நினைவுகூர்வதில் பேரார்வமுடையவராக திகழ்ந்தார்கள் என ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் நபியவர்கள் எல்லாக் காலங்களிலும், இடங்களிலும், நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தொழுகையை (ஸுறா பாத்திஹாவை) எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், 'என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்' என்று கூறுவான். அடியான் 'அர்ரஹ்மானிர் ரஹீம்' (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், 'என் அடியான் என்னைத் துதித்துவிட்டான்' என்று கூறுவான். அடியான் 'மாலி;கி யவ்மித்தீன்;' (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், 'என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான்' என்று கூறுவான். மேலும் 'என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான்' என்றும் கூறுவான் ) மேலும், அடியான் 'இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்' (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், 'இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்' என்று கூறுவான். அடியான் 'இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளுபி அலைஹிம் வலழ் ழால்லீன்'. (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்களின் வழியுமல்ல வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் 'இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்' என்று கூறுவான்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்அல் ஹதீஸுல் குத்ஸிய்யில் அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸூறதுல் பாத்திஹாவை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் இரண்டாகப்பிரித்துள்ளேன். அதன் ஒரு அரைப்பகுதி எனக்குரியதாகும். மற்றையது அவனுக்குரியதாகும். எனவே அதன் முதல் பகுதியானது புகழ், பாராட்டு, அல்லாஹ்வை கண்ணியப்படுத்தல் போன்ற வற்றை கொண்டுள்ளது நான் அதற்கு உரிய மிகச் சிறந்த கூலியை கொடுப்பேன் என அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதன் இரண்டாம் பகுதி அடியானின் பணிவு (மன்றாட்டம் ), பிரார்த்தனை செய்தல் போன்ற வற்றை உள்ளடக்கியுள்ளது. எனவே அவனின் வேண்டுதலுக்கு பதிலளிப்பேன் அவன் கேட்பவற்றை வழங்குவேன் எனவும் அவன் குறிப்பிடுகிறான். தொழுபவர் 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் 'என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்' என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர்ரஹீம் எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் எனது அடியான் என்னை நன்றி பாராட்டிவிட்டான் என்று கூறுவான். அதாவது அனைத்து உயிரினங்களுக்குமான எனது பரந்த அருட்கொடைகளை ஏற்றுக்கொண்டான் எனக் கூறுவான். ' மாலிகி யவ்முத்தீன் என்று கூறினால் அதற்கு அல்லாஹ் என்னை எனதடியான் கண்ணியப் படுத்திவிட்டான் என்று பதில் கூறுவான் இது எல்லையில்லா அவனின் சிறப்பை எடுத்துக்காட்டும். அடியான் (இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்) என்று ஓதினால் அதற்கு அல்லாஹ் இது எனக்கும் எனது அடியானுக்குமிடையிலான விவகாரமாகும் எனப் பதிலளிக்கிறான். மேற்படி வசனத்தில் முதல் அரைப்பகுதி அதாவது 'இய்யாக நஃபுது' 'உன்னையே வணங்குகிறோம்' அல்லாஹ்விற்குரிய பகுதியாகும். இது உலூஹிய்யா -இறைமைத்துவம் - அல்லஹ்வுக்குரியது என்பதை ஏற்று, வணக்க வழிபாடுபாடுகளினூடாக அடிபணிதலைக் குறிக்கிறது. இத்துடன் அல்லாஹ்விற்குரிய பகுதி முடிவுறுகிறது. இந்த வசனத்தின் இரண்டாம் அரைப்பகுதி அடியானுடன் தொடர்பானது. அது 'இய்யாக நஸ்தஈன்' (உன்னிடமே உதவிதேடுகிறோம்) என்பதாகும். அல்லாஹ்விடம் உதவி கோருதல் ஆகும். அதனை நிறைவேற்றித் தருவதாக அல்லாஹ் அவனுக்கு வாக்களிக்கிறான். அடியான் 'இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளுபி அலைஹிம் வலழ்ழால்லீன்' (உன்னுடைய கோபத்திற்கு உள்ளானோர் ,மற்றும் நெறி தவறிப்போனோரின் வழி அல்லாது உனது அருளைப்பெற்றவர்களின் நோரான வழியில் எம்மை செலுத்திடுவாயாக) என்று சொன்னால், அல்லாஹ் 'இது என் அடியானின் கெஞ்சுதலும் (மன்றாட்டம் , )பிரார்த்தனையுமாகும் . என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்' அவனது இறைஞ்சுதலுக்கு நான் பதிலளித்து விட்டேன் என்று கூறுவான்.
ஸஈத் இப்னுல் முஸய்யிப் அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள் : (நபி (ஸல்) அவர்களுடைய தந்தையின் சகோதரர்) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே அவரருகே அபூஜஹ்லையும் , 'அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் முஃகீரா'வையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''என் தந்தையின் சகோதரரே! 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை)' என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்' என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் : அபூதாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை வெறுத்து ஒதுக்கப்போகிறீர்களா? என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவரிடம் கோரிக்கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க்கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது ''நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருக்கிறேன்' என்பதாகவே இருந்தது. 'லா இலாஹ இல்லல்லாஹ்' எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்' என்று சொன்னார்கள். அப்போதுதான் ''இணைவைப்போருக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத் தூதருக்கும், இறைநம்பிக்கையாளர் களுக்கும் உரிமை இல்லை' எனும் (9:113 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் ''(நபியே!) நீர் விரும்பியவரை (யெல்லாம்) நல்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக அல்லாஹ் தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான்' எனும் (கஸஸ் : 56 ஆவது) வசனத்தை அருளினான்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சிறிய தந்தை அபூதாலிபிடம் அவர் மரணத்தருவாயில் இருக்கும் வேளை சென்று அவரிடம் : சிறிய தந்தையே' லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர உண்மையான இறைவன் எவரும் இல்லை) என்று கூறுங்கள். உமக்காக இந்த வார்த்தைக்கு அல்லாஹ்விடம் சான்று பகர்பவனாக இருப்பேன், என்று கூறினார்கள். அதற்கு அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் அபூ தாலிபே ! சிலை வணக்கமான உமது தந்தை அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை விட்டுவிடவா பார்க்கிறீர்? என்று கூறினர். இறுதியாக அபூதாலிப் அவர்கள் தான் அப்துல் முத்தலிபின் மார்க்கமான இணைவைப்பு மற்றும சிலைவணக்கத்தில் இருப்பதாக கூறும் வரையில் அவரிடம்; அவர்கள் இருவரும் அப்துல் முத்தலிபின் மார்க்கம் குறித்து தொடர்ந்தும் கூறிக் கொண்டே இருந்தனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எனது இரட்சகன் தடுக்காது விட்டால் உமக்காக நான் பாவமன்னிப்புக்காக பிரார்த்திப்பேன் என்று கூற, அல்லாஹ்வின் பின்வரும் வசனம் இறங்கியது : "இணைவைத்து வணங்குபவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவிர்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?)" (தவ்பா : 113). மேலும் அபூதாலிப் தொடர்பாக பின்வரும் இறைவசனமும் இறங்கியது : "(நபியே!) நிச்சயமாக இவர்களில் நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உம்மால் முடியாது. எனினும் அல்லாஹ், தான் விரும்பியவர்களை(த்தான்) நேரான வழியில் செலுத்துகிறான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்". (கஸஸ் : 56). ஆக, உம்மால் நீ விரும்பியவரை நேர்வழிப்படுத்திட முடியாது. உமது பணியெல்லாம் எத்திவைப்பது மாத்திரமே! ஆல்லாஹ்வே நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான்.
அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 'மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் நிகழாது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள்.(ஆனால்,இந்நிகழ்வுக்கு முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது 'இறைநம்பிக்கை கொண்டிருந்தும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் நம்பிக்கை கொள்வது பயனளிக்காது.' (அன்ஆம் :158) இரண்டு பேர் (விற்பனைக்காத்) துணிகளை விரித்து(ப் பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள்; சுருட்டிக்கூட வைத்திருக்க மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். மேலும், ஒருவர் மடிகனத்த தம் ஒட்டகத்தி(ல் பால் கறந்து அப்போது தா)ன் பாலுடன் (வீடு) திரும்பியிருப்பார்; இன்னும் அதைப் பருகிக் கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். ஒருவர் தம் நீர் தொட்டியை (அப்போதுதான்) கல்வைத்துப் பூசியிருப்பார்; இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். உங்களில் ஒருவர் தம் உணவை (அப்போதுதான்) வாயருகில் கொண்டு சென்றிருப்பார்; அதை உண்டிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறுமை நாளின் பெரிய அடையாளங்களில் ஒன்றாக கிழக்கிலிருந்து சூரியன் உதிப்பதற்கு பதிலாக மேற்கிலிருந்து சூரியன் உதிக்கும் என்பதையும், இப்பெரு நிகழ்வை மக்கள் பார்த்ததும் அனைவரும் அல்லாஹ்வை ஈமான் -நம்பிக்கை- கொள்வார்கள் என இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இவ்வேளை காபிரின் -இறைநிராகரிப்பாளனின் ஈமானோ, நற்காரியங்களோ, தவ்பா-பாவமீட்சியோ- எவ்விதப்பயனையும் தரமாட்டாது. தொடர்ந்தும் நபியவர்கள் இந்த ஹதீஸில் ' மக்கள் அனைவரும் அவர்களின் அன்றாட விவகாரங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையில் திடிரென எதிர்பாராத விதமாக மறுமை சம்பவிக்கும் என அறிவிக்கிறார்கள். விற்பவரும், வாங்குபவரும் (விற்பனைக்காத்) துணிகளை விரித்து(ப் பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள்; சுருட்டிக்கூட வைத்திருக்க மாட்டார்கள் அவ்வாறு இருக்கும் நிலையில் மறுமை சம்பவிக்கும். ஒருவர் மடியில் பால் நிறைந்த தம் ஒட்டகத்தில் பால் கறந்து இன்னும் அதைப் பருகிக் கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். ஒருவர் தம் நீர் தொட்டியை அப்போதுதான் கல்வைத்துப் பூசியிருப்பார்; இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். ஒருவர் தம் உணவை சாப்பிடுவதற்காக வாயருகில் கொண்டு சென்றிருப்பார்; அதை உண்டிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.