





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
முதுகு வயிற்றுடன் ஒட்டிப் போயிருந்த ஒரு ஒட்டகத்தின் பக்கத்தால் ரஸூல் (ஸல்) அவர்கள் நடந்து சென்ற போது பேச முடியாத இந்தக் கால்நடைகள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.எனவே அது நல்ல நிலையில் இருக்கும் போது அதில் சவாரி செய்யுங்கள். மேலும் அது நல்ல நிலையில் இருக்கும் போது அதனைப் புசியுங்கள்.என்று கூறினார்கள்,என ஸஹ்ல் இப்னு அம்ரு (ரழி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்ஹதீஸ் விளக்கம்:ஒரு ஒட்டகம் கடும் பசியின் காரணமாக அதன் முதுகு அதன் வயிற்றுடன் ஒட்டிப் போயிருந்தது. அதனைக் கண்ட ரஸூல் (ஸல் அவர்கள் கால்நடைகளுக்கு இரக்கம் காட்டும்படி உத்தரவிட்டார்கள்.மேலும் அதனுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது மனிதனின் கடமை என்றும்,எனவே அதன் சக்திக்கு அப்பால் அதற்கு சிரமம் கொடுக்கவும்,அதன் உணவு,குடிப்பு போன்ற அதன் உரிமையில் குறைபாடு செய்யவும் கூடாது என்றார்கள். மேலும் அதன் மீது சவாரி செய்வதாக இருந்தால் அது நல்ல நிலையில் இருக்கும் போதே அதன் மீது சவாரி செய்ய வேண்டு மென்றும்,அதனை உண்ணுவதென்றால் அது உணவுக்குப் பொருத்தமான நிலையில் இருக்கும் போதே அதனைச் சாப்பிட வேண்டும் என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
உஸ்மான் இப்னு ஷஹ்ஹாம் அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நானும் பர்கத் அஸ்ஸப்கீ அவர்களும் முஸ்லிம் இப்னு அபீ பக்ரா அவர்களிடம் சென்றோம். அவர் தனது காணியில் இருந்து கொண்டிருந்தார். நாம் அவரிடம் நுழைந்து, 'உங்களது தந்தை குழப்பங்கள் பற்றி ஏதாவது ஹதீஸைக் கூற நீங்கள் கேட்டுள்ளீர்களா?' எனக் கேட்டோம். அதற்கவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'ஆம். அபூ பக்ரா (ரல்) அவர்கள் அவர்கள் அறிவிப்பதை நான் கேட்டுள்ளேன். நபியவர்கள் கூறியதாக அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : நிச்சயமாக சில குழப்பங்கள் நிகழும். பின்பு ஒரு குழப்பம் நிகழும். அதில் அமர்ந்திருப்பவர், நடந்து செல்பவரை விட சிறந்தவர். அதில் நடந்து செல்பவர், அதற்காக விரைந்து செல்பவரை விடச் சிறந்தவர். அறிந்து கொள்ளுங்கள்! அது இறங்கி விட்டால் அல்லது நிகழ்ந்து விட்டால், யாரிடம் ஒட்டகம் இருக்கின்றதோ, அவர் தனது ஒட்டகங்களுடன் போய் இருந்து கொள்ளட்டும். யாரிடம் ஆட்டு மந்தை இருக்கின்றதோ, அவர் தனது ஆட்டு மந்தையுடன் போய் இணைந்துகொள்ளட்டும். யாரிடம் ஒர நிலப்பூமி இருக்கின்றதோ, அவர் தனது நிலத்தில் போய் இருந்து கொள்ளட்டும். அப்போது ஒரு மனிதர், 'அல்லாஹ்வுடைய தூதரே! ஒட்டகமோ, ஆட்டு மந்தையோ, நிலமோ இல்லாதவர் பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?' என்று கேட்ட போது, 'தனது வாளை நோக்கிச் சென்று, அதன் கூரிய பகுதியை ஒரு கல்லால் அடித்து (உடைத்து) விடட்டும். பின்பு, அவரால் தப்பமுடியுமாக இருந்தால், தப்பிக் கொள்ளட்டும். யா அல்லாஹ்! நான் எத்திவைத்துவிட்டேனா? யா அல்லாஹ்! நான் எத்திவைத்துவிட்டேனா? யா அல்லாஹ்! நான் எத்திவைத்துவிட்டேனா?' என்று கூறினார்கள். அப்போது ஒரு நபித்தோழர், நான் கட்டாயப்படுத்தப்பட்டு, இரு அணிகளில் ஒன்றுக்கோ, அல்லது இரு தரப்பினரில் ஒன்றுக்கோ அழைத்துச் செல்லப்பட்டு, ஒரு மனிதன் என்னை வாளால் வெட்டிவிட்டாலோ, அல்லது ஒரு அம்பு வந்து என்னைக் கொண்டுவிட்டலோ, எனது நிலை என்ன? என்பது பற்றிக் கூறுங்கள் என்று கேட்டபோது, 'உனது பாவமும், அவனது பாவமும் அவனையே சேரும். அவன் நரகவாதிகளில் இருப்பான்' என்று கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்உஸ்மான் அஷ்ஷஹ்ஹாம் மற்றும் பர்கத் அஸ்ஸப்கீ ஆகியோர், கண்ணியமிக்க நபித்தோழராகிய, அபூ பக்ரா (ரலி) அவர்களது மகனார், முஸ்லிம் அவர்களிடம், தமது தந்தையிடமிருந்து, முஸ்லிம்களுக்கு மத்தியில் நடைபெறும் யுத்தங்கள் மற்றும் குழப்பங்கள் பற்றி ஏதாவது ஹதீஸை செவிமடுத்தார்களா? எனக் கேட்டார்கள். அதற்கவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'ஆம். நபி (ஸல்) அவர்கள், தனது மரணத்திற்குப் பின்னர் சில குழப்பங்கள் நடைபெறும் என்றும், இந்தக் குழப்பங்கள் பற்றி அறியாது, ஒதுங்கி அமர்ந்திருப்பவர், அவற்றைப் பற்றித் தேடிக் கொண்டும், விசாரித்துக் கொண்டும் இருக்காமல், வெறுமனே அவற்றில் நடந்துசெல்பவரை விடச் சிறந்தவர் என்றும், அவ்வாறு நடந்துசெல்பவர், அவற்றைப் பற்றித் தேடிக்கொண்டும், அவற்றில் கலந்து கொண்டும் அவற்றில் ஈடுபடுபவரை விடச் சிறந்தவர் என்றும் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள். பின்பு நபியவர்கள், ஒரு மனிதன் வாழும் காலத்திலோ, அல்லது அவனிடமோ இவ்வாறான குழப்பங்கள் நிகழும் போது, அவனிடம் ஒதுங்கிக் கொள்ளும் இடம் இருக்குமென்றால் அங்கு ஒதுங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றார்கள். எனவே, யாரிடம் ஒட்டகம் இருக்கின்றதோ, அவர் தனது ஒட்டகங்களுடன் போய் இருந்து கொள்ளட்டும். யாரிடம் ஆட்டு மந்தை இருக்கின்றதோ, அவர் தனது ஆட்டு மந்தையுடன் போய் இணைந்துகொள்ளட்டும். யாரிடம் ஒரு நிலமோ, விளைநிலமோ இருக்கின்றதோ, அவர் தனது நிலத்தில் போய் இருந்து கொள்ளட்டும். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வுடைய தூதரே! ஒதுங்கிக் கொள்வதற்காக, ஒட்டகமோ, ஆட்டு மந்தையோ, நிலமோ இல்லாதவர் பற்றி என்ன கூறுகின்றீர்கள்? எனக் கேட்டபோது, 'தனது வாளை நோக்கிச் சென்று, அதன் கூரிய பகுதியை ஒரு கல்லால் அடித்து (உடைத்து) விடட்டும். பின்பு, அவரால் தப்பமுடியுமாக இருந்தால், தன்னோடு தன் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தப்பிக்கொள்ளட்டும்.' என்று கூறினார்கள். பின்பு நபியவர்கள், யா அல்லாஹ்! நான் எத்திவைத்து விட்டேனா? யா அல்லாஹ்! நான் எத்திவைத்து விட்டேனா? யா அல்லாஹ்! நான் எத்திவைத்து விட்டேனா?' என்று கூறி, மூன்று தடவை சாட்சியம் அளித்தார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வுடைய தூதரே! நான் கட்டாயப்படுத்தப்பட்டு, இரு அணிகளில் ஒன்றுடனோ, அல்லது இரு தரப்பினரில் ஒன்றுடனோ கலந்துகொள்ள அழைத்துச் செல்லப் பட்டு, ஒரு மனிதன் என்னை வாளால் வெட்டி விட்டாலோ, அல்லது ஒரு அம்பு வந்து என்னைக் கொண்டு விட்டலோ, எனது நிலை என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், 'அவனது பாவமும், கொல்லப் பட்டவனது பாவமும் அவனையே சேரும். அவன் நரக வாதிகளில் இருப்பான்' என்று கூறினார்கள்.
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதரில் நல்லொழுக்கம்(நற்குணம்); மிக்கவராக இருந்தார்கள்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மனிதர்களில் நல்லொழுக்கத்தில் பரிபூரணமானவர்களாகவும் ஒழுக்க சீலராகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இருந்தார்கள். அழகிய வார்த்தை பேசுதல், நன்மை செய்தல், முகமலர்ச்சியுடன் இருத்தல், (இன்முகம்),மற்றவருக்கு தொல்லை கொடுக்காது இருத்தல், பிறரின் அசௌகரியாமான நடவடிக்கைளை தாங்கிக் கொள்ளல் போன்ற அனைத்து அழகிய குணங்களுக்கும், பண்பாடுபாடுகளுக்கும் முன்னுதாரணமாக அவர்களே திகழ்ந்தார்கள். இதில் அவர்களை முந்தியவர்கள் யாரும் கிடையாது.
ஸஃத் இப்னு ஹிஷாம் இப்னு ஆமிர் அவர்கள் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் பின்வருமாறு கேட்டார்கள் : விசுவாசிகளின் தாயே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாடுகள் பற்றி எனக்கு அறிவித்துத்தாருங்கள் என்று கேட்டதற்கு ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா 'நீர் அல்குர்ஆனை ஓதுவதில்லையா?' என வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்று கூறினேன். அதற்கு அவர்கள்; 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாடு அல் குர்ஆனாகவே இருந்தது' என்று கூறினார்கள்.
இது இமாம் முஸ்லிம் அவர்களால் ஒரு நீண்ட ஹதீஸின் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளதுஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அவர்களின் பண்பாடு குறித்து வினவப்பட்டபோது அவர்கள் மிகவும் சுருக்கமானதும் பொருட்செரிவுமிக்கதுமான ஒரு பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவரை எல்லா முழுமையான பண்புகளையும் நிறைவாகக் கொண்ட அல்குர்ஆனின் பக்கம் அவரின் அவதானத்தைத் திருப்பியதோடு, நபியவர்கள் அல்குர்ஆன் குறிப்பிடும் பண்பாடுகளை கடைப்பிடித்து ஒழுகினார்கள் எனப் பதிலளித்தார்கள். அதாவது அல்குர்ஆன் ஏவியவற்றை நிறைவேற்றினார்கள். அல்குர்ஆன் தடுத்தவற்றை தவிர்ந்திருந்தார்கள். அவர்களின் பண்பாடு அல்குர்ஆன் குறிப்பிடுபவற்றை நடைமுறைப்படுத்துவதும், அதன் வரையறைகளைப் பேணி நடப்பதும், அது கூறும் நற்பண்புகளை கடைப்பிடித்து ஒழுகுவதும், அது (அல்குர்ஆன்) கூறும் கதைகள் மற்றும் உதாரணங்களினால் படிப்பினை பெறுவதும் அவர்களின் பண்பாடாக இருந்தது.
உம்முல் முஃமினீன ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், தாம் காலணி அணிந்து கொள்ளும் போதும் தலைவாரிக் கொள்ளும் போதும் சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்து வேலைகளிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கௌரவமான அனைத்து நல்ல விடயங்களிலும்; வலதைக் கொண்டு ஆரம்பிப்பதை மிகவும் விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறான விடயங்கள் வருமாறு : தனது பாதணியை காலில் அணியும் போதும், தனது தலை முடி மற்றும் தாடியை வாரும் போதும் அவை இரண்டிற்கும் எண்ணைத் தேய்த்து உலர்த்தும் போதும், வுழுச்செய்யும் போது கைகளையும் கால்களையும் கழுவுவதிலும் வலது பக்கத்தால் தொடங்குவார்கள்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், தமது சிறுநாக்குத் தென்படும் அளவு வாயைத் திறந்து பலமாக சிரித்ததை நான் கண்டதில்லை. மாறாக, புன்முறுவலாகவே சிரிப்பார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்சிறுநாக்கு (தொண்டையின் மேற்பகுதியில் உள்ள சதைத் துண்டு) தென்படும் அளவு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அளவுகடந்து சிரிக்கமாட்டார்கள் எனவும், புன்முறுவலாகவே சிரிப்பார்கள் எனவும் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தார்கள். தாம் விரும்பாத ஒன்றை அவர்கள் பார்த்து விட்டால், அந்த வெறுப்பை அவர்களின் முகத்திலிருந்தே நாங்கள் அறிந்துகொள்வோம்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்வீட்டில் தன்னை மறைத்துக்கொண்டு அடக்கமாக இருக்கும் திருமணம் முடிக்காத ஆண்களுடன் உறவு கொள்ளாத கண்ணிப்பெண்ணைவிடவும் மிகவும் நாணமிக்கவராக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இருந்தார்கள் என்பதை அபூஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நபியவர்கள் ஏதாவதொன்றை வெறுத்தால் அவரின் முகம் உடனடியாக மாறிவிடும். அவர் யாருடனும் பேசமாட்டார் இம்முக மாற்றம் அவர்களின் நாணத்தின் உச்சநிலையை காட்டும். மாறாக நபியவர்களின் அதிருப்த்தியை அவர்களின் முகத்திலிருந்தே ஸஹாபாக்கள் புரிந்துகொள்வார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மாலிக் இப்னு புஹைனா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது தனது இரு அக்குள்களின் வெண்மை தெரியும் அளவிற்கு தனது இரு கைககளுக்கிடையியில் இடைவெளி விடுவார்கள்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது தனது இரு கைககளுக்கிடையில் இடைவெளிவிடக் கூடியவர்களாக இருந்தார்கள். அதாவது அவரின் கைகளையும் இரு இரக்கை போன்று தனது அக்குளின் வெண்மையான தோல் தெரியுமளவிற்கு விலாப்புறத்திலிருந்து அகற்றி வைப்பார்கள். இது தனது இரு விலாப்பகுதியிலிருந்தும் கைகளை மிகவும் தூரமாக்கி வைத்திருந்ததை காட்டுகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: விசுவாசிகளுக்கு - அல்லது என்னுடைய சமுதாயத்திற்கு- சிரமமாக இருக்கும் என்று இல்லையென்றிருந்தால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தியிருப்பேன்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்தனது சமுதாய விசுவாசிகளுக்கு சிரமமாக இருக்கும் என்ற பயம் இல்லையென்றிருந்தால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தியிருப்பதாக நபியவர்கள் இங்கு கூறுகின்றார்கள்.