





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : இறைவா! நீ நாடினால் எனக்கு மன்னிப்பளிப்பாயாக! நீ நாடினால் எனக்குக் கருணை புரிவாயாக! நீ நாடினால் எனக்கு வாழ்வாதாரம் அளிப்பாயாக!' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யாதீர்கள். கேட்பதை அவனிடம் வலியுறுத்திக் கேட்க்கட்டும். தான் விரும்பியதையே அவன் செய்வான். அவனை நிர்ப்பந்தப்பவர் எவருமில்லை. முஸ்லிமின் அறிவிப்பில் :தனது பிரார்த்தனையை உறுதியுடன் கேட்கட்டும். (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். பெரிதாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவன் கொடுக்கின்ற எதுவும் அவனுக்குப் பெரிதன்று).
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ﷺ அவர்கள், துஆவை (பிரார்த்தனையை) ஏதோ ஒரு விடயத்தை நிபந்தனையுடன் இணைத்துக் கேட்பதை தடைசெய்தார்கள். அது 'அல்லாஹ் விரும்பினால்' என்ற நிபந்தனையாக இருந்தாலும் சரியே!. ஏனெனில், அல்லாஹ் விரும்பினாலேயே மன்னிப்பை அளிப்பான் என்பது உறுதியான, சந்தேகமற்ற உண்மை. ஆகவே, அவனுடைய விருப்பத்தை நிபந்தனையாகக் கூறுவதற்கு எந்த அர்த்தமும் இல்லை. இவ்வாறு நிபந்தனை விதிப்பது, கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில் செயல்படக் கூடியவர்களிடம் மட்டுமே பொருந்தும்; ஆனால் அல்லாஹ் அதுபோன்ற எந்தக் குறையிலிருந்தும் உயர்ந்தவன். இதை நபி ﷺ அவர்கள் ஹதீஸின் இறுதியில் 'அவனை யாரும் (நிர்ப்பந்திக்க முடியாது) கட்டாயப்படுத்த முடியாது' என்று தெளிவுபடுத்தினார்கள். அதேபோல், அல்லாஹ் எதையும் கொடுப்பதென்பது அவனுக்கு பெரிதாவோ, கடினமானதாகவோ ஆகமாட்டது. அவன் இயலாதவன் அல்ல. ஆகவே, 'நீ விரும்பினால்' என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. துஆவை அவனுடைய விருப்பத்துடன் இணைப்பது, அவனுடைய மன்னிப்பைத் தேவையற்றது போல் கருதுவதன் ஒரு வகையாகும். 'நீ விரும்பினால் எனக்கு இதைத்தா' என்று சொல்லுவது, பொதுவாக அவன் தேவையற்றதாகவோ அல்லது இயலாதவரிடமோ மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் முழுமையான ஆற்றல் உடையவரிடமும், அவசியமாகத் தேவைப்படும் போதும், ஒருவர் தன்னுடைய வேண்டுகோளை உறுதியாகக் கேட்க வேண்டும். அவன் கேட்டதை மிக அவசியமாகத் தேவைப்படும் ஏழைபோல், முழுமையாக அல்லாஹ்வின் மீது சார்ந்து கேட்க வேண்டும். ஏனெனில், அல்லாஹ் தான் எவ்விதத் தேவையுமற்றவன் நிறைவானவன் அனைத்திற்கும் ஆற்றல் உடையவன்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால்.(அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும். ஒருவன் ரமழான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் (அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். ஒருவன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றும் அவனை அவர்கள் சொர்க்கத்திற்குள் கொண்டு செல்லவில்லையென்றால். (அவன் நாசமாகட்டும்) அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும்.}
இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபி ﷺ அவர்கள், மூன்று வகை மனிதர்கள் மீது இழிவு, அவமானம் மற்றும் நாசம் போன்றவற்றின் அடையாளமாக அவர்களின் மூக்குகள் மண்ணில் ஒட்டப்பட வேண்டும் என்று அவர்களுக்கு எதிராக துஆ செய்தார்கள்: முதல் வகையினர் : நபி ﷺ அவர்களின் பெயர் கூறப்படும் போது, 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' அல்லது அதற்குச் சமமான ஸலவாத்தை சொல்லாமல் விட்டவர். இரண்டாவது வகை: ரமழான் மாதத்தை அடைந்தும், நல்ல வழிபாடுகளில் அலட்சியம் காட்டியதினால், அந்த மாதம் முடிவடையும் முன் அவருக்கு மன்னிப்பு கிடைக்காமல் போனவர். மூன்றாவது வகை: ஒருவர்; முதுமையை அடைந்த பெற்றோர்களை பெற்றிருந்தும், அவர்களுக்குச் செய்த நோவினை மற்றும் அவர்களின் உரிமைகளில் செய்த அலட்சியம் காரணமாக, சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதியை இழந்தவர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அல் பரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: "இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து ஒருவருடன் ஒருவர் முஸாபஹா செய்யும் போது, அவர்கள் பிரியும் முன்னரே அவ்விருவரின் (சிறிய) பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன".
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்ஒரு பாதையில் அல்லது அதுபோன்ற இடத்தில் இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து, அவர்களில் ஒருவர் மற்றவருக்கு சலாம் கூறி, கைகுலுக்கினால்—அவர்கள் உடலால் பிரியும் முன்போ அல்லது கைகுலுக்கலை முடிக்கும் முன்போ—அவர்களிருவருக்கும் (அவர்களின் பாவங்கள்) மன்னிக்கப்படும் என நபி ﷺ அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'நிச்சயமாக மனித இதயங்கள் யாவும் கருணையாளனாகிய அல்லாஹ்வின் விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையே ஒரு இதயம் போன்று உள்ளது. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று கூறிவிட்டு (அல்லாஹும்ம முஸர்ரிபல் கூலுப் ஸர்ரிப் கல்பி அலா தாஅதிக) ' உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனக்கு கீழ்படிந்து நடப்பதின்பால் திருப்பிவிடுவாயாக!' என்று குறிப்பிட்டார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்மனிதர்களின் இதயங்கள் அனைத்தும் அர்ரஹ்மானின் இரண்டு விரல்களுக்கிடையில் ஒரே இதயம் போல உள்ளன என நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவன் விரும்பிய வாறு அவற்றை கையால்கிறான். அந்த வகையில் அவன் விரும்பினால் அதனைச் சத்தியத்தின் மீது நிலைப்படுத்துவான். விரும்பினால் அதனைச் சத்தியத்திலிருந்து விலக்கி விடுவான். அனைத்து இதயங்களையும் மாற்றுவது அவனுக்கு ஒரு இதயத்தை மாற்றுவது போன்றாகும். இச்செயற்பாடானது அவனை வேறு எந்தக் காரியத்திலிருந்து தடுக்காது. பின்னர் நபி (ஸல்) அவர்கள் பின்வறுமாறு பிரார்த்தனை செய்தார்கள் : யா அல்லாஹ் இதயங்களைத் திருப்புபவனே! இதயங்களை சிலபோது கீழ்ப்படிதலின்பாலும் சிலபோது பாவத்தின்பாலும் சிலபோது உன்னை ஞாபகப்பபடுத்தவும் சில போது உனது ஞாபகத்தை விட்டு அலட்சியத்தின் பாலும் திருப்பும்போது - எங்கள் இதயங்களை உனக்கு கட்டுப்பட்டுப்பட்டு நடப்பதின் பால் திருப்பி விடுவாயாக.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: "நம்மிடமிருந்து ஒரு விடயத்தைக் கேட்டு, அதைக் கேட்டது போன்றே பிறருக்கு எத்திவைப்பருக்கு அல்லாஹ் செலிப்பை ஏற்படுத்துவானாக. அதை நேரடியாகக் கேட்டவரை விட எத்திவைக்கப்பட்டவர் அதிக அறிவுடையவராக இருக்கலாம்".
இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது ஹதீஸை கேட்டு அதை நன்கு மனப்பாடம் செய்து, பிறரிடம் எடுத்து சொல்லுகிறவர்களுக்காக உலக வாழ்க்கையில் பசுமையும்; அழகும் மகிழ்ச்சியும் உண்டாக வேண்டும் என்றும், மறுமையில் சுவர்க்கத்தின் நறுமணமும் நலனும் பசுமையும் அவர்களுக்கு கிடைக்க அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என்றும் துஆ செய்தார்கள். ஏனெனில், ஒருவரிடம் ஹதீஸ் கொண்டு செல்லப்படும்போது, அதை கேட்கிறவர் அதை எடுத்துச் சென்றவரைவிட அதிகமாகப் புரிந்து கொள்ளக் கூடியவராகவும், ஆழமாக சிந்தித்து சட்டத் தீர்வுகளைப் பெறக் கூடியவராகவும் இருக்கலாம். இதனால், முதலாவது நபர் ஹதீஸைச் சரியாக மனப்பாடம் செய்து பரப்புவதில் திறமையுடையவராக இருப்பார்; இரண்டாவது நபர் அதை ஆழமாகப் புரிந்து அதிலிருந்து கருத்துகளை எடுத்துக்கொள்ளும் திறமையுடையவராக இருப்பார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : முஃமினுக்காக- இறைவிசுவாசிக்காக சுவர்க்கத்தில் உள்ளிருந்து வெறுமையாக இருக்கும் ஒரு முத்திலான கூடாரமொன்று இருக்கும். அதன் நீளம் முப்பது மைல் தொலைவைக் கொண்டதாகும். அதிலே இறைநம்பிக்கையாளருக்கான துணைவியர் இருப்பர். அவர்களிடம் அவர் சென்று வருவார். ஆனால் அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் சொர்க்கத்தின் சில இன்பங்கள் குறித்து குறிப்பிடுகிறார்கள்: சொர்க்கத்தில் ஒரு முஃமினுக்கு, மிகப் பிரமாண்டமானதும் விசாலமுமான ஒரு பெரிய கூடாரம் இருக்கும். அது துளையிடப்பட்ட ஒரு காலியான முத்தினால் உருவாக்கப்பட்டிருக்கும். அதன் அகலமும் நீளமும் வானில் அறுபது மைல் அளவு இருக்கும். அந்த கூடாரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், திசையிலும், நான்கு மூலைகளிலும் மனைவிகள் இருப்பார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் காணமாட்டார்கள். அந்த முஃமின் அவர்களிடையே சென்று வருவார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான் : என்னுடைய நல்லடியார்களுக்கு, எந்தக் கண்களும் கண்டிராத, எந்தக் காதுகளும் கேட்டிராத, எந்த மனித உள்ளத்திலும் தோன்றிராத விடயங்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளேன். அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் விரும்பினால், "அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) 'எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது". (அஸ்ஸஜ்தா : 17) என்ற வசனத்தை ஓதிப் பாருங்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள், உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் கூறுவதாகப் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள் : என்னுடைய நல்லடியார்களைக் கண்ணியப் படுத்தும் விதமாக, சுவனத்தில் எந்தக் கண்களும் காணாத, வர்ணனையால் எந்தக் காதும் கேட்டிராத, யதார்த்த்தால் எந்த உள்ளத்திலும் தோன்றிராத பலவற்றை நான் ஏற்பாடு செய்துவைத்துள்ளேன். அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் விரும்பினால், "அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) 'எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது". என்ற வசனத்தை ஓதிப் பாருங்கள். (அஸ்ஸஜ்தா : 17)
அபூ அப்துல்லாஹ் அல்ஜதலீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் ஆஇஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களது குணங்களைப் பற்றிக் கேட்டபோது, அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : நபியவர்கள் கெட்டவராகவோ, கெட்டவார்த்தைகள் பேசுபவராகவோ, சந்தைகளில் சப்தமிட்டுக் கொண்டிருப்பவராகவோ இருக்கவில்லை. ஒரு தீமைக்குக் கூலியாக இன்னொரு தீமையை செய்ய மாட்டார்கள். மாறாக மன்னித்து, புறக்கணித்து விடுவார்கள்.
இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஉம்முல் முஃமினீன் ஆஇஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களது நற்குணங்கள் பற்றிக் கேட்கப்பட்ட போது அவர்கள், நபியவர்களது இயல்பிலேயே சொற்களிலோ, செயற்களிலோ அசிங்கமாக, கெட்ட விதமாக நடந்துகொள்பவராக இருக்கவில்லை எனவும், வேண்டுமென்றே சிரமப்பட்டு அவ்வாறு நடந்து கொள்பவராக இருக்கவில்லை எனவும் சந்தைகளில் சப்தங்களை உயர்த்திப் பேசுபவராக இருக்கவில்லை எனவும், ஒரு தீமைக்குக் கூலியாக இன்னொரு தீமையை செய்யமாட்டார்கள் எனவும், மாறாக உள்ளத்தால் மன்னித்து, வெளிப்படையில் புறக்கணித்து விடுவார்கள் எனவும் கூறுகின்றார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களது அடிமையாக இருந்த, ஹானிஃ அவர்கள் கூறுகின்றார்கள் : உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு கப்ருக்கு முன்னால் நின்று விட்டால், தமது தாடி நனையும் வரை அழுவார்கள். அப்போது அவரிடம், சுவனம் மற்றும் நரகம் பற்றிக் கூறப்படும் போது அழமாட்டீர்கள். ஆனால், இதற்காக அழுகின்றீர்களே? எனக் கேட்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நிச்சயமாக மண்ணறைதான் மறுமையின் படித்தரங்களில் முதலாவது படித்தரமாகும். அதில் தப்பிவிட்டார் என்றால், அதற்குப் பின்னால் உள்ளது அதை விட இலகுவாக இருக்கும். அதிலிருந்து தப்பா விட்டால், அதற்குப் பின்னால் உள்ளது அதை விடக் கடினமாக இருக்கும்.
இமாம் திர்மிதி, இமாம் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டதுஉஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு கப்ருக்கு முன்னால் நின்றுவிட்டால், தமது கண்ணீரினால் தாடி நனையும் வரை அழுவார்கள். அப்போது அவரிடம், சுவனம் மற்றும் நரகம் பற்றிக் கூறப்படும் போது, சுவர்க்கத்திற்கு ஆசைப்பட்டோ, நரகைப் பயந்தோ அழமாட்டீர்கள். ஆனால், மண்ணறையைப் பார்த்து அழுகின்றீர்களே? எனக் கேட்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நிச்சயமாக மண்ணறைதான் மறுமையின் படித்தரங்களில் முதலாவது படித்தரமாகும். அதில் தப்பிவிட்டார் என்றால், அதற்குப் பின்னால் உள்ள படித்தரங்கள் அதை விட இலகுவாக இருக்கும். அதிலிருந்து தப்பா விட்டால், அதற்குப் பின்னால் உள்ள தண்டனைகள் அதை விடக் கடினமாக இருக்கும்.