





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸல்மான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ் மிக வெட்கமுள்ளவன், தயாள குணம் படைத்தவன், தனது அடியான் தன்னிடம் பிரார்திப்பதற்காக உயர்த்திய கைகளை பதிலளிக்காது வெறுமையாக திருப்பி விடுவதை யிட்டும் வெட்கப்படுகிறான்'.
இதனை இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜஹ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், துஆ செய்யும் போது கைகளை உயர்த்த வேண்டும் என்று ஊக்குவித்ததுள்ளதோடு, அல்லாஹ் மிகுந்த வெட்கம் உடையவனும் (ஹயீ), மிகுந்த தயாளனும் (கரீம்) ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அல்லாஹ், அடியாருக்கு மகிழ்ச்சி தருவதைச் செய்கிறான். அவனுத் தீங்கு விளைவிப்பவற்றை விலக்குகிறான். அவன், கேட்காமலேயே வழங்குபவன். அப்படியானால், கேட்டு துஆ செய்த போது எவ்வளவு அதிகமாக வழங்குவான் என்பதை நாம் எண்ணிக் கொள்ளலாம். ஒரு இறைவிசுவாசி துஆ செய்வதற்காக தன் கைகளை உயர்த்தும் போது, அந்தக் கைகளை வெறுமையாகவும், பதில் இல்லாமலும் திருப்பி அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான். அதனால், அடியாரின் துஆவை ஏற்றுக்கொண்டு, அவனுக்கு நன்மை வழங்குகிறான்.
உம்முல் முஃமினீன், ஜுவைரிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஸுபஹ் தொழுகைக்குப் பின்னர் காலையில் நபி (ஸல்) அவர்கள் அவர்களிடமிருந்த வெளிப்பட்டுச் சென்றார்கள். அன்னையர் அவர்கள் தமது தொழுமிடத்திலேயே இருந்துகொண்டிருந்தார்கள். பின்பு ழுஹா நேரம் நுழைந்த பின்னர் நபியவர்கள் திரும்பி வந்த போது, அன்னையர் அவர்கள் அமர்ந்து கொண்டே இருந்தார்கள். அப்போது நபியவர்கள், 'நான் உங்களை விட்டுச் சென்ற அதே நிலையில் தானா தற்போதும் இருக்கின்றீர்கள்? என்று கேட்டதற்கு, அவர்கள் 'ஆம்' என்றார்கள். அப்போது நபியவர்கள், இவ்வாறு கூறினார்கள். : 'உங்களுக்கப் பின்னர் நான் நான்கு வார்த்தைகளை, மூன்று தடவைகள் கூறினேன். அவற்றை நீங்கள் இன்றுமுழுவதும் கூறியவற்றுடன் நிறுத்துப் பார்த்தால், அவற்றின் நிறையே அதிகமாக இருக்கும். سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ என்பவையே அவையாகும் (பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவனது திருப்தியின் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியாகிய, உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரலி) அவர்களிடமிருந்து, ஸுபஹ் தொழுத பின்னர் காலைநேரத்தில் வெளிப்பட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் தமது தொழுமிடத்தில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். பின்பு பகல் பொழுதை அடைந்த பின்னர், ழுஹாவுடைய நேரத்தில் நபியவர்கள் திரும்பி வந்தார்கள். அப்போதும் ஜுவைரிய்யா அவர்கள் அதே இடத்தில் அமர்ந்துகொண்டே இருந்தார்கள். அப்போது நபியவர்கள், 'நான் உங்களை விட்டுச் சென்ற அதே நிலையில் தானா தற்போதும் இருக்கின்றீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'ஆம்' என்றார்கள். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'உங்களுக்கப் பின்னர் நான் நான்கு வார்த்தைகளை, மூன்று தடவைகள் மடக்கிக் கூறினேன். நன்மைகள் அடிப்படையில், நான் கூறியதை, நீங்கள் அமர்ந்திருந்த இந்த முழுநேரமும் கூறியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் அவற்றை விட அதன் நன்மையே அதிகமாக இருக்கும். அல்லாஹ்வுடைய படைப்புகளின் (அவனால் மாத்திரமே எண்ணமுடியுமான) எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும் (அதாவது, தன்னுடைய அடியார்களில் தாந் பொருந்திக் கொண்டவர்களை பொருந்திக்கொள்ளச் செய்யும் அளவு. இது எம்மால் புரிந்துகொள்ளமுடியாத ஒன்றாகும்), அவனது (பிரமாண்டமான, பாரிய படைப்பாகிய) அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் (அல்லாஹ்வின் சொற்கள் அளவிட முடியாதவை, தீர்ந்து போகாதவை) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் என (அவன் அனைத்துக் குறைகளையும் விட்டுத் தூயவன் எனத்) துதிக்கிறேன். அளவிட முடியாதவை என்பது மேற்கூறிய மூன்று வகைகளையும் சாரும். அவனுடைய சொற்களின் எண்ணிக்கை மகத்துவத்திலும், பண்பிலும், எண்ணிக்கையிலும் அளவிட முடியாதது. ஆனாலும் இங்கு நாடப்படுவது எண்ணிக்கையை அதிகப்படுத்திக்காட்டுவதாகும். ஏனெனில், இங்கு முதலில் எண்ணி முடிக்க முடியுமான, படைப்புக்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. பின்பு அதைவிட மகத்தான ஒன்றை நோக்கிச் செல்லப்பட்டுள்ளது. அதுவே, அவன் உவக்கும் அளவு என்று கூறப்பட்டுள்ளது. பின்பு, படைப்புக்களிலேயே மிகப் பிரமாண்டமான அர்ஷின் எடையளவு கூறப்பட்டுள்ளது. முதலாவது, எண்ணிக்கை மற்றும் அளவீட்டுக்கு உரியது. இரண்டாவது, விதம் மற்றும் தன்மைக்கு உரியது. மூன்றாவது, பாரம் மற்றும் எடைக்கு உரியது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : ஒரு கூட்டதினர் சபையில் அமர்ந்து அதில் அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூறாமலும், தங்களுடைய நபியின் மீது ஸலவாத்து கூறாமலும் இருப்பார்களாயின் அதுவே அவர்களுக்கு (மறுமையில்) பேரிழப்பாக அமைந்துவிடும். அவன் நாடினால் அவர்களை அவன் தண்டித்து விடுவான் அவன் நாடினால் அவர்களை மன்னித்து விடுவான்.
இதனை அபூதாவுத், திர்மிதீ ஆகியோரும் குப்ராவில் நஸாஈ அவர்களும் பதிவு செய்துள்ளனர்நபி ﷺ அவர்கள், அல்லாஹ்வை நினைவு கூறுவதில்; அதாவது திக்ர் செய்வதில அலட்சியமாக இருப்பதைக் குறித்து எச்சரித்துள்ளார்கள். எந்தக் குழுவினர் ஒரு கூட்டத்தில் அமர்ந்து, அதில் அல்லாஹ்வை நினைவுகூராமலும், அவனுடைய தூதர் ﷺ மீது ஸலவாத்தும் சொல்லாமலும்; இருந்தார்களோ, அந்தக் மஜ்லிஸானது கியாமத் நாளில் அவர்களுக்கு பேரிழப்பாகவும், வருத்தம் நிறைந்தாகவும், கைசேதமாகவும் குறைபாடுடையதாகவும் மாறிவிடும். அல்லாஹ் நாடினால், அவர்களின் முந்தைய பாவங்களுக்காகவும் பின்னர் செய்த தவறுகளுக்காவும் அவர்களைத் தண்டிப்பான். அவன் நாடினால், தன் அருளாலும் கருணையாலும் அவர்களை மன்னிப்பான்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நற்குணங்கள் கொண்டவர்கள், எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர்களாகவும், மறுமையில் எனக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களாகவும் உள்ளனர். உங்களில் எனக்கு மிகவும் வெறுப்பிற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் மற்றும் பெருமையடிப்பவர் ஆவார். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் யார் என்பதை நாம் அறிவோம். 'முதபைஹிகூன்' என்போர் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'பெருமையடிப்பவர்கள்' என்று கூறினார்கள்.
இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள், நற்குணங்கள் கொண்டவர்கள், எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர்களாகவும், மறுமையில் எனக்கு மிக நெருக்கமாக இருப்பவர் களாகவும் உள்ளனர் என்றும், உங்களில் இவ்வுலகில் எனக்கு மிகவும் வெறுப்பிற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில், கெட்ட குணங்களைக் கொண்ட, வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு, கட்டுப்பாடின்றிப் பேசுபவர் மற்றும் பெருமையடிப்பவர் ஆவார் என்றும் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் யார் என்பதை நாம் அறிவோம். 'முதபைஹிகூன்' என்போர் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'பெருமையடிப்பவர்கள்' (அதாவது, மக்களை இழிவாகக் கருதி, வாய் நிறைய அநாவசியமாக நிறையப் பேசுபவர்கள்) என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யார் இஸ்லாத்தை ஏற்று, போதுமான அளவு வாழ்வாதாரமும்; வழங்கப்பட்டு, அல்லாஹ் அவருக்கு வழங்கியுள்ளதில் போதுமென்ற மனதையும் வழங்குகின்றானோ, அவர் வெற்றி பெற்று விட்டார்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள், யார் தனது ரப்புக்கு வழிப்பட்டு, நேர்வழி பெற்று, இஸ்லாத்தை அடையும் பாக்கியத்தையும் பெற்று, கூடுதல், குறைவு இன்றி ஹலாலான வாழ்வாதாரத்தில் போதுமான அளவையும் பெற்றுக்கொண்டு, அவற்றுடன் அல்லாஹ் அவரை தான் வழங்கியதில் திருப்தியடையும் ஒருவராகவும் ஆக்கிவிட்டான் என்றால் அவன் வெற்றியடைந்து விட்டான் என்பதாக அறிவிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, உபைதுல்லாஹ் இப்னுல் மிஹ்ஸன் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் யாராவது, உடலில் ஆரோக்கியத்துடனும், தன் வீடு மற்றும் குடும்பத்தில் பாதுகாப்புடனும், அன்றைய தினத்துக்கு அவசியமான உணவு கையில் இருக்கும் நிலையிலும் காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் முழு உலகமும் வழங்கப்பட்டதைப் போன்றவர் ஆகும்.
இமாம் திர்மிதி, இமாம் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டதுஇங்கு நபியவர்கள், முஸ்லிம்களே! உங்களில் யாராவது, உடலில் நோய்கள் அற்று ஆரோக்கியத்துடனும், தன்னிலும், தனது குடும்பம் மற்றும் தான் செல்லும் பாதைகளிலும் அச்சமற்று பாதுகாப்புடனும், அன்றைய தினத்துக்கு அவசியமான ஹலாலான உணவு கையில் இருக்கும் நிலையிலும் காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் முழு உலகமும் வழங்கப்பட்டதைப் போன்றவர் என்று அறிவிக்கின்றார்கள்.
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறரார்கள் : 'அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சொற்சுருக்கமும் பொருட்செரிவும் மிக்க துஆக்களை விரும்பி ஓதுவார்கள்; அவை தவிர்ந்த பிற துஆக்களை விட்டு விடுவார்கள்.'
இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபி ﷺ அவர்கள், இம்மை மறுமை நலன்களை உள்ளடக்கிய சொற்சுருக்கமும் பொருட்செரிவுமிக்க துஆக்களை விரும்பி ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். அந்த துஆக்கள் அல்லாஹ்வை புகழ்வதையும், நல்ல குறிக்கோள்களையும் உள்ளடக்கியதாக இருந்தன. இதற்கு மாறானவற்றை விட்டுவிடுவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : "(பொய்) சத்தியம் செய்வது, பொருளை விலைபோகச் செய்யும்; இலாபத்தில் கிடைக்கும் பரக்கத்தை அழித்துவிடும்".
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ﷺ அவர்கள், வியாபார நடவடிக்கைகளில் விற்றல் வாங்கலின் போது ஒருவர் உண்மையையே சொன்னாலும்—சத்தியம் செய்வதையும், அதனை அதிகமாக செய்வதையும் எச்சரித்தார்கள். சத்தியம் செய்வதால் பொருள் விற்பனை அதிகரித்து சந்தையில் குறித்த பொருளுக்கு கிராக்கி ஏற்படலாம். ஆனால் அது இலாபம் மற்றும் வருமானத்தில் உள்ள பரகத்தை (அருள்வளத்ததை) குறைத்து, அழித்துவிடும். மேலும் அல்லாஹ், அவனது செல்வம் அழிவதற்கான பல வழிகளை ஏற்படுத்தக் கூடும்—திருட்டு, தீவிபத்து, மூழ்குதல், பறிமுதல், கொள்ளை அல்லது பிற காரணங்களால் அவனது சொத்து நஷ்டமடையலாம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உபையி இப்னு கஃப் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நீங்கள் காற்றை தூற்றாதீர்கள். அவ்வாறு நீங்கள் அதில் விரும்பாதவற்றை கண்டால் ' அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக்க மின் கைரி ஹாதிஹிர் ரீஹி வகைர மாபீஹா வகைர மா உமிரத் பிஹி. வஅவூது பிக மின் ஷர்ரி ஹதிஹிர்ரீஹீ வஷர்ரி மா பீஹா வஷர்ரி மா உமிரத் பிஹி பிஹி 'என்று கூறுங்கள். பொருள் : யாஅல்லாஹ்! இந்தக் காற்றின் நன்மையையும், அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் இது எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறோம். இதன் தீங்கை விட்டும், அது மறைத்து வைத்துள்ள தீங்கைவிட்டும் அது எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம்'.
இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்நபி ﷺ அவர்கள் காற்றை (ரீஹ்) திட்டுவதையும், சபிப்பதையும் தடை செய்தார்கள். ஏனெனில் காற்று அதன் படைப்பாளானாகிய அல்லாஹுத் தஆலாவின் ஆணைக்குட்பட்டது. அது சில நேரங்களில் அருளுடன் வருகிறது. சில நேரங்களில் தண்டனையுடனும் வருகிறது. காற்றை திட்டுவது அதன் படைப்பாளனாகிய அல்லாஹ்வைத் திட்டுவதற்கு நிகரானதாகும். மேலும் அது அல்லாஹ்வின் தீர்ப்பை (கதர்) ஏற்க மறுக்கும் மனநிலையைக் காட்டுகிறது. அதன்பின் நபி ﷺ அவர்கள், காற்றின் படைப்பாளனாகிய அல்லாஹுத் தஆலாவிடம் மீண்டு, அதன் நன்மையையும், அதில் உள்ள நன்மையையும், அது அனுப்பப்பட்ட நன்மைகளையும்—மழை வருதல், மகரந்தச் சேர்க்கை போன்றவற்றையும்—கேட்க வேண்டும் என்றும், அதன் தீமைகளிலிருந்தும், அதில் உள்ள தீமைகளிலிருந்தும், அது கொண்டு வரும் தீமைகளிலிருந்தும் அதாவது பயிர்கள் மற்றும் மரங்கள் அழிவது, கால் நடைகள் இறப்பது, கட்டிடங்கள் இடிந்து விழுவது போன்றவற்றிலிருந்து—அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்க வேண்டும் என்றும் வழிகாட்டினார்கள். இவ்வாறு அல்லாஹ்விடம் வேண்டுவதானது அவனுக்கான உண்மையான அடிமைத்துவத்தை நிரூபிக்கிறது.