





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : "பிரச்சினைகளின் போது வணக்கத்தில் ஈடுபடுவது என்னிடம் ஹிஜ்ரத் வந்ததைப் போலாகும்".
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்குழப்பம், கலவரம், கொலைகள் மற்றும் மக்களின் நிலமைகள் சீரற்றுக் கிடக்கும் காலங்களில், வணக்க வழிபாடுகளில் முனைப்புடன் ஈடுபடுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வழிகாட்டுகிறார்கள். இத்தகைய காலங்களில் செய்யப்படும் வணக்கங்களுக்கான வெகுமதி நபி ﷺ அவர்களிடம் ஹிஜ்ரத் செய்ததற்குச் சமமான கூலியைப் பெற்றுத் தரும் என அவர்கள் குறிப்பிடுகிறார்கள் ஏனெனில், இவ்வாறான காலங்களில் மக்கள் இபாதத்தை அலட்சியப்படுத்தி விடுவார்கள் அதில் ஈடுபடாமல் பிற விஷயங்களில் மூழ்கி விடுவார்கள் சிலர் மட்டும் அதற்காக நேரம் ஒதுக்கி அதில் நிலைத்திருப்பார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு முஸ்லிம் பாவகாரியத்திற்காகவோ உறவுகளை துண்டிக்கும் வகையிலோ அன்றி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்ற போது அவனின் பிரார்த்தனை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது அல்லது அப்பிரார்த்தனை மறுமையில் கூலி வழங்குவதற்காக சேமித்து வைக்கப்படுகிறது, அல்லது அவன் கேட்ட பிரார்த்தனைக்கு நிகரான தீங்கிலிருந்து அவனுக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. இம்மூன்று விடயங்களில் ஏதாவது ஒன்றை நிச்சயமாக அவனின் பிரார்த்தனைக்கு அல்லாஹ் பிரதிபலனாக வழங்குகிறான் என்று கூறிய போது நபித்தோழர்கள் அவ்வாறாயின் நாம் அதிகம் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஆம் அதிகமாக இறைஞ்சுங்கள்) அல்லாஹ் மிக அதிகமாக வழங்குபவன் என்று கூறினார்கள்
இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்பாவம் செய்வதற்கும் அநியாயம் இழைக்கவும் இலகுபடுத்தி தருமாறு பிரார்த்தித்தல் அல்லது தனது குழந்தைகள் மற்றும் உறவுகளை துண்டித்து வாழ்வதற்கு அவர்களுக்கு எதிராக பிராரத்தனை செய்தல் போன்ற பாவமான ஒன்றை ஒரு முஸ்லிம் கேட்காது அல்லாஹ்விடம் பிராரத்தனை செய்தால் அவருக்கு அல்லாஹ் பின்வரும் மூன்று விடயங்களில் ஒன்றை நிச்சயம் வழங்குவான்: ஒன்று : அவன் பிரார்த்தனையை உடனே ஏற்று, அவன் கேட்டதை அவனுக்கு வழங்குவான். அல்லது அவனது அந்தஸ்த்தை உயர்த்துவதன் மூலம், அல்லது அவனுக்கு கருணை காட்டி, அவன் பாவங்களை மன்னிப்பதன் மூலம் மறுமை நாள் வரை அவனது கூலியை தாமதப்படுவான். அல்லது இவ்வுலகில் பிரார்த்தனையின் அளவுக்குச் சமமாக அவனிடமிருந்து தீமையைத் தடுப்பான். அப்போது ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம், எனவே இந்த சிறப்புகளில் ஒன்றை நாம் அடையும் பொருட்டு, நாம் அதிகமாக பிரார்த்தனை செய்வோம் எனக் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் நீங்கள் கேட்பதை விட அல்லாஹ்விடம் இருப்பது அதிகமானது, மற்றும் மகத்தானது, அவனுடைய அருளும் முடிவற்றது என்று கூறினார்கள்:
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது, 'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல் லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ழி வ ரப்புல் அர்ஷில் கரீம்' என்று ஓதுவார்கள். (பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மிகுந்த பதட்டம் மற்றும் துக்கத்தின் போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்: 'லா இலாஹ இல்லல்லாஹ்': அல்லாஹ்வைத் தவிர வேறு உண்மையான கடவுள் இல்லை. 'அல்-அளீம்': என்பது தனது தாத் (மெய்நிலை) மற்றும் பண்புகளிலும் செயல்களிலும் (உயர்ந்த அந்தஸ்தையும் மகத்துவத்தையும் பெற்றவனாவான். 'அல்-ஹலீம்' : என்பது பாவியை உடனடியாகத் தண்டிக்காமல், மாறாக அதைத் தாமதப்படுத்தி, தனக்கு அவனை தண்டிப்பதற்கான சக்தி இருந்து, எல்லாவற்றின் மீதும் வல்லமைப் படைத்தாவனாக இருக்கும் அவன் அவனை மன்னிப்பவன் என்பது பொருளாகும் . 'லா இலாஹ இல்லல்லாஹ் ரப்புல்-அர்ஷில்-அலீம்' : அதாவது அவனே மகத்தான சிம்மாசனத்தை படைத்தவன்; 'லா இலாஹ இல்லல்லாஹ் ரபபுஸ் ஸமாவாதி வல் அர்ழி' : வானங்களையும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே, மேலும் அவற்றுக்கிடையே உள்ளவற்றைப் படைத்தவன், அதன் உரிமையாளன் சீர்படுத்துபத்துபவன் மற்றும் தான் விரும்புவதைக் செய்பவன் என்பது இதன் கருத்தாகும் 'ரப்புல் அர்ஷில் கரீம்' என்பது: சிறப்பான சிம்மாசனத்தைப் படைத்தவன் என்பதைக் குறிக்கும்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்: உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்சோம்பல் மற்றும் வயிறு நிறைந்திருத்தல் போன்ற காரணங்களினால் வாயைத் திறப்பதன் மூலம் ஒருவர் கொட்டாவி விட்டால் தனது கையை வாயில் வைத்து மூடிக்கொள்ளட்டும் என்று இந்த ஹதீஸில் வழிகாட்டுகிறார்கள். ஏனெனில் அவ்வாறு திறந்த நிலையில் ஒருவர் கொட்டாவிவிட்டால் ஷைத்தான் அவரின் வாயினுள்ளே சென்று விடுகிறான். வாயில் கையை வைத்து மூடுவது ஷைத்தானுக்கு தடுப்பாக அமைந்துவிடுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களுக்குக் கீழால் உள்ளவர்களைப் பாருங்கள். உங்களுக்கு மேலால் உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே, அல்லாஹ் உங்களுக்குச் செய்துள்ள அருள்களை அற்பமாகக் கருதாமல் இருக்கப் பொருத்தமானதாகும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் உலக விவகாரங்களான, பதவி, அந்தஸ்த்து, பணம் போன்றவற்றில் அவனை விடத் தாழ்ந்த, குறைந்த நிலையில் உள்ளவர்களைப் பார்க்குமாறும், அவ்வாறான உலக விடங்களில் தன்னை விட மேலுள்ள, சிறந்த நிலையில் உள்ளவர்களைப் பார்க்கவேண்டாம் எனவும் ஏவுகின்றார்கள். ஏனெனில் அவன் அவ்வாறு தனக்குக் கீழால் இருப்பவர்களைப் பார்ப்பதுவே, அல்லாஹ் தனக்குச் செய்துள்ள அருள்களை அற்பமாகக் கருதாமல் இருக்கப் பொருத்தமானதாகும்.
அல்லாஹ்வின் தூதர் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'தனது ஆடையைத் (தரையில் படும் படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்கரண்டைக்காலுக்கு கீழ் தற்பெருமை மற்றும் அகந்தையுடன் வேட்டி (இஸார்) மற்றும் ஆடையை அணிந்து செல்பவனை நபி முஹம்மது ﷺ அவர்கள் கண்டித்துள்ளார்கள். அவ்வாறு செய்பவர்ளை, மறுமை நாளில் அல்லாஹ் தனது அருட்பார்வை கொண்டு பார்க்கமாட்டான என்ற கடும் எச்சரிக்கைக்குரியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ஆரோக்கியமும் ஓய்வும் மக்களில் அதிகமானோர் அலட்சியமாக இருக்கும் இரு அருட்கொடைகளாகும்.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்நபி (ஸல்) அவர்கள், மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய இரண்டு மிகப் பெரிய அருள்களைப் பற்றி கூறியுள்ளார்கள். அவை ஆரோக்கியம் மற்றும் ஓய்வு நேரம் ஆகும். இந்த இரண்டு அருள்களையும் பலர் சரியான முறையில் பயன்படுத்தாமல் வீணடிப்பதால் நஷ்டமடைகிறார்கள். ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமும் ஓய்வு நேரமும் கிடைத்தும், அல்லாஹ்வை வழிபடுவதில் சோம்பல் காட்டினால், அவன் உண்மையான நஷ்டவாளியாகிறான். இத்தகைய நிலை பெரும்பாலான மக்களிடம் காணப்படுகிறது. ஆனால், ஒருவர் தனது ஓய்வு நேரத்தையும் ஆரோக்கியத்தையும் அல்லாஹ்வின் வழிபாடு மற்றும் நன்மையான செயல்களில் பயன்படுத்தினால், அவன் வெற்றியாளன் ஆவான். இந்த உலகம் மறுமைக்கான பயிர் நிலம் போன்றது. இங்கு நாம் செய்யும் நன்மைகளின் பலன் மறுமையில் கிடைக்கும்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுஜுதில் 'அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு' என்று கூறுவார்கள். இதன் பொருள் : யாஅல்லாஹ்! என் பாவத்தில் சிறியதையும், பெரியதையும், முதலாவதையும், கடைசியானதையும், பகிரங்கமானதையும், இரகசியமானதையும் மன்னிப்பாயாக.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், ஸஜ்தாவில் இருக்கும் போது இவ்வாறு துஆ செய்தார்கள்: யா அல்லாஹ்! என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக' அதாவது, யாஅல்லாஹ் என் பாவங்களை மூடி மறைப்பாயாக, அவற்றின் விளைவுகளிலிருந்து என்னைக் பாதுகாத்து, முழுமையாக மன்னித்து, பரிசுத்தப்படுத்துமாறு வேண்டுகிறேன், சிறிய பாவங்களையும், பெரிய பாவங்களையும், முதல் செய்த பாவத்தையும், இறுதியாக செய்த பாவத்தையும், அவற்றுக்கு நடுவிலுள்ள அனைத்தையும், வெளிப்படையாக செய்த பாவங்களையும், ரகசியமாக செய்த பாவங்களையும் (அல்லாஹ் மட்டுமே அறிந்த பாவங்களையும்) மன்னிக்குமாறும் வேண்டுகிறேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபுத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : அடிக்கடி சாபம் இடுபவர்கள், கியாமத் நாளில் சாட்சிகளாகவும், பரிந்துரை செய்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.'
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்சாபமிடுவதற்கு எவ்விதத்திலும் தகுதியற்றவர்களுக்கு அடிக்கடி சாபமிடுபவர் இருவகையான தண்டனைக்கு உட்படுகிறார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். முதல் தண்டனை, அடிக்கடி சாபமிடுபவர் கியாமத் நாளில் நபிமார்கள் தங்கள் சமூகங்களுக்கு அல்லாஹ்வின் செய்தியை எடுத்துச் சென்றதைப் பற்றி சாட்சியாக இருக்க மாட்டார். மேலும், அவனது சாட்சி உலக வாழ்க்கையிலும் ஏற்றுக் கொள்ளப்படாது, ஏனெனில் அவன் பாவநடத்தை (ஃபிஸ்க்) உடையவனாகக் கருதப்படுவான். அதேபோல், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டு ஷஹீதாகும் சிறப்பும் அவனுக்கு வழங்கப்படாது. இரண்டாம் தண்டனை : அவன் கியாத் நாளில், நம்பிக்கையாளர்கள் (முஃமின்கள்) நரகத்தைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள தங்கள் சகோதரர்களுக்காக பரிந்துரை செய்யும் போது, அவர்களுடன் சேர்ந்து பரிந்துரை செய்ய முடியாது.