





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுபவர்களாக இருந்தார்கள் என, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : «اللهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِعِزَّتِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْ تُضِلَّنِي، أَنْتَ الْحَيُّ الَّذِي لَا يَمُوتُ، وَالْجِنُّ وَالْإِنْسُ يَمُوتُونَ». (பொருள் : யா அல்லாஹ்! நான் உனக்குக் கட்டுப் பட்டு விட்டேன்! உன்னை விசுவாசம் கொண்டு விட்டேன். உன் மீதே பொறுப்புச் சாட்டுகின்றேன். உன்னிடமே மீளுகின்றேன். உன்னைக் கொண்டே தர்க்கிக்கின்றேன். யா அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள்கள் இல்லை. என்னை நெறிபிரழச் செய்யாமல் இருக்குமாறு, உன்னுடைய கண்ணியத்தைக் கொண்டு கேட்கின்றேன். மரணிக்காத நித்திய ஜீவன் நீயே! ஜின்களும் மனிதர்களும் மரணிப்பவர்களே! ).
இமாம்களான புஹாரி, முஸ்லிம் இருவரும் இதை பதிவு செய்துள்ளனர். இந்த வாசகம் முஸ்லிமுக்குரியது, புஹாரி இதனை சுருக்கமாக அறிவித்துள்ளார்நபியவர்கள் தமது துஆவில் இவ்வாறு கூறுவார்கள் : யா அல்லாஹ்! நான் உனக்குக் கட்டுப்பட்டுவிட்டேன்! (வழிப்பட்டுவிட்டேன்) உன்னை விசுவாசம் கொண்டு விட்டேன். (உன்னை உண்மைப்படுத்தி, ஏற்றுக் கொள்கின்றேன்) உன் மீதே பொறுப்புச் சாட்டுகின்றேன். (உன்னை நம்பி இருக்கின்றேன்) உன்னிடமே மீளுகின்றேன். (உன்னை நோக்கியே மீண்டு வருகின்றேன்) உன்னைக் கொண்டே தர்க்கிக்கின்றேன். (உனது எதிரிகளுடன் விவாதிக்கின்றேன்) யா அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள்கள் இல்லை. (உண்மையாக வணங்கப்படத் தகுதியானவர்கள் உன்னைத் தவிர யாரும் இல்லை) என்னை (நேர்வழி மற்றும் உனது திருப்தியைப் பெரும் பாக்கியம் ஆகியவற்றை விட்டும்) நெறிபிரழச் செய்வதை விட்டும் உன்னுடைய கண்ணியத்தைக் கொண்டு (அதாவது உனது பலத்தைக் கொண்டு) பாதுகாப்புக் கேட்கின்றேன். (உன்னிடமே ஒதுங்குகின்றேன்) மரணிக்காத (அழிந்து போகாத) நித்திய ஜீவன் நீயே! ஜின்களும் மனிதர்களும் மரணிப்பவர்களே!.
இம்ரான் இப்னு ஹுஸைன் (ரல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கு பதில் அளித்ததும் அவர் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'பத்து' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'இருபது' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'முப்பது' என்று கூறினார்கள்.
இமாம்களான அபூதாவூத், திர்மிதி, அஹ்மத், தாரமீ ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கு பதில் அளித்ததும் அவர் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'பத்து நன்மைகள் அவருக்கு எழுதப்பட்டுவிட்டன' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'அவருக்கு இருபது நன்மைகள்' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'அவருக்கு முப்பது நன்மைகள்' என்று கூறினார்கள். அதாவது ஒவ்வொரு சொல்லுக்கும் பத்து நன்மைகள் உண்டு.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுபவர்களாக இருந்தார்கள் : யா அல்லாஹ்! நான் உன்னிடம், நேர்வழியையும், இறையச்சத்தையும், பத்தினித்தனத்தையும், தன்நிறைவையும் கேட்கின்றேன்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு துஆக் கேட்பார்கள் : யா அல்லாஹ்! நான் உன்னிடம், நேர்வழியையும், (அதாவது, சத்தியத்தை அறிந்து, அதை நடைமுறைப்படுத்தும் நிலையான பாதையை) இறையச்சத்தையும், (அதாவது, கடமைகளை நிறைவேற்றி, தடைகளைத் தவிர்ப்பதையும்) பத்தினித்தனத்தையும், (அதாவது, அனுமதிக்கப்படாத, முறையற்ற சொல், செயற்களை விட்டும் விலகி நிற்கும் நிலையையும்) தன்நிறைவையும் (அதாவது, படைப்புக்களிடம் தேவை காணாமல், தனது ரப்பாகிய அல்லாஹ்விடம் மாத்திரமே தேவை காணும் நிலையை) கேட்கின்றேன்.
விசுவாசிகளின் தாயார், ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் நபி (ஸல்) அவர்களிடம், 'ஸபிய்யா இவ்வாறு இருப்பதே உமக்குப் போதும்' (அறிவிப்பாளர்களில் ஒருவர், ஆஇஷா அவர்கள் அவர் குள்ளமானவராக இருப்பதை நாடியதாகக் கூறுகின்றார்) என்று கூறினேன். அப்போது நபியவர்கள், "நீர் கூறிய இந்த வார்த்தையை கடலில் கலந்துவிட்டால் அதுவும் நாற்றமடைந்துவிடும்" என்று கூறினார்கள். நான் ஒரு மனிதரைப் பற்றி அவர்களிடம் செய்து காட்டினேன். அப்போது நபியவர்கள், 'நான் எந்த மனிதனையும் பற்றி அவ்வாறு பேச விரும்புவதில்லை. அதற்காக, எவ்வளவு வழங்கப் பட்டாலும் சரியே' என்று கூறினார்கள்.
இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஆஇஷா (ரலி) அவர்கள் நபியவர்களிடம், 'உம்முல் முஃமினீன் ஸபிய்யாவிடம் உள்ள உடல் குறைகளில், அவர் குள்ளமானவராக இருப்பதே போதும்' என்று கூறுகின்றார்கள். அப்போது நபியவர்கள், "நீர் கூறிய இந்த வார்த்தையை கடலில் கலந்துவிட்டால் அதுவும் நாற்றமடைந்து விடும்" என்று கூறினார்கள். மேலும், ஒரு மனிதரை ஏளனப்படுத்தும் விதமாக, அவர் செய்வது போன்ற ஒன்றை செய்து காட்டினேன். அப்போது நபியவர்கள், ஏளனப் படுத்தும் விதமாக, அவ்வாறு அவரது குறைகளைப் பேசுவதையோ, அவரைப் போன்று செய்து காட்டுவதையோ, அவர் பேசுவது போன்று பேசிக் காட்டுவதையோ நான் விரும்புவதில்லை. அதற்காக உலக ஆதாயங்கள் நிறைய வழங்கப்பட்டாலும் சரியே! என்றும் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யார், 'ஸுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹீ' (மகத்துவம் மிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் புகழ்கின்றேன்.) என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனத்தில் ஒரு ஈத்தம்பழ மரம் நட்டப் படும்.
இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள், யார், 'மகத்தான (அதாவது தன்னிலையிலும், பண்புகளிலும், செயற்களிலும் மகத்தானவனாக உள்ள) அல்லாஹ்வைத் துதிக்கின்றேன் (அதாவது தூய்மைப் படுத்துகின்றேன்) மேலும் அவனைப் புகழுகின்றேன் (அதாவது பரிபூரணத்துவப் பண்புகளை இணைத்த நிலையில்)' என்று கூறுகின்றாரோ, அவருக்கு அவர் கூறும் ஒவ்வொரு தடவையும், சுவனபூமியில் ஒரு ஈத்தம்பழ மரம் நட்டப்படும் என்று அறிவிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'நீங்கள் பரஸ்பரம் பொறாமை கொள்ள வேண்டாம். ஒருவருக்கொருவர் கோபம் கொள்ள வேண்டாம் (பிறரை அதிகவிலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை உயர்த்த வேண்டாம். ஒருவரை ஒருவர் வெறுக்க வேண்டாம், ஒருவரை ஒருவர் புறக்கணிக்க வேண்டாம். உங்களில் சிலர் சிலரின் வியாபரத்திற்கு எதிராக வியாபாரம் செய்ய வேண்டாம். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். ஆகவே அவர் அவருக்கு அநீதி இழைக்கமாட்டார். அவரை கைவிடமாட்டார். அவரை இழிவுபடுத்த மாட்டார். இறையச்சம் இங்குள்ளது என மூன்று முறை தனது நெஞ்சைச் சுட்டிக்காட்டினார்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை அவமதித்து இழிவாகக் கருதுவது தீமைக்கு போதுமான விடயமாகும். ஒரு முஸ்லிமுக்கு பிற முஸ்லிமின் இரத்தம் (உயிர்) செல்வம் மானம் ஆகியவை ஹராமாகும்'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுடன் சிறந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதோடு, அவர்களுக்கு செய்ய வேண்டிய சில கடமைகள் மற்றும் பேண வேண்டிய சில ஒழுக்கங்களை கோடிட்டுக் காட்டியுள்ளார்கள், அவற்றில் சில பின்வருமாறு: முதல் அறிவுரை: உங்களில் சிலர் மற்றும் சிலர் பெற்றிருக்கும் அருள்கள் நீங்கிவிட வேண்டும் என்று விரும்பி ஒருவருக்கொருவர் பொறாமைப்படாதீர்கள். இரண்டாவது: பொருளை வாங்கும் எவ்வித நோக்கமுமின்றி பொருளின் விலையை உயர்த்துவதற்காக ஏலம் விடாதீர்கள். இதனால் வியாபாரிக்கு இலாபத்தைப் பெற்றுக் கொடுக்கிறார் அல்லது வாங்குபவருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. மூன்றாவது: ஒருவரையொருவர் வெறுக்காதீர்கள். என்பது நேசம் கொள்வதை விடுத்து தீங்கு செய்வதை நோக்காகக் கொள்வதாகும். ஆனால் அல்லாஹ்வுக்காக மாத்திரம் வெறுப்புக் கொள்வதாய் இருந்தால் அது அவசியமான வலியுறுத்தப்பட்ட விடயமாகும். நான்காவது: முகத்தை திருப்பிக்கொள்வதன் மூலம் ஒருவரையொருவர் புறக்கணித்து நடக்காதீர்கள். அதாவது தனது சகோதரனை வெறுத்து புறக்கணித்து நடப்பதைக் இது குறிக்கும். ஐந்தாவது: வியாபாரி ஒருவர், இன்னொரு வியாபாரியிடம் ஒரு பொருளை வாங்கிய நபரிடம் இதே பொருள் என்னிடம் மிகக்குறைந்த விலையில் உள்ளது அல்லது இதே விலையில் மிகத்தரமான பொருள் உள்ளது என்று கூறி இன்னொரு சகோதரனின் வியாபாரத்திற்கு எதிராக வியாபாரம் செய்ய வேண்டாம். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மேலே குறிப்பிடப்பட்ட, தடுக்கப்பட்ட விடயங்களை விட்டுவிட்டு, எல்லா சூழ்நிலைகளிலும் தூய்மையான உள்ளத்துடன் அன்பு, இரக்கம், மென்மை பரஸ்பர கருணைகாட்டல்; மற்றும் நன்மையான விடயங்களில் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளுதல் போன்ற பண்புகளை கடைப்பிடித்து சகோதரர்களாய் இருங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்கள். இஸ்லாமிய சகோதரத்துவம் வேண்டி நிற்கும் முக்கிய விடயங்களில் சில பின்வருமாறு : தனது முஸ்லிம் சகோதரனுக்கு அநீதி இழைக்காமல் இருப்பது அல்லது அவருக்கு எதிராக அத்துமீறல் செய்யாமல் இருப்பது. அநீதி இழைக்கப்படும் சகோதர முஸ்லிமுக்கு அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதியை அகற்றுவதற்கான இயலுமை இருக்கும் நிலையில் அவரை கைவிட்டு விடாமல் இருப்பது. ஒரு முஸ்லிமை சிறுமைப்படுத்தாமலும் அவரை இழிவாகப் பார்க்காதிருத்தலும். இத்துர்குணம் உள்ளத்தில் காணப்படும் பெருமையின் விளைவால் ஏற்படுவதாகும். பின்னர் நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இறையச்சம் என்பது உள்ளத்தில்தான் உள்ளது என்றும், எவருடைய உள்ளத்தில் இறையச்சம் இருக்கிறதோ, அது நல்ல ஒழுக்கத்தையும், இறைபயத்தையும், அல்லாஹ் மீதான அக்கறையையும் ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டதோடு, இவ்வாரானவர் ஒரு முஸ்லிமைக் குறைத்து மதிப்பிடவோ அற்பமாக கருதவோ மாட்டார் என்பதையும் தெளிவுபடுத்தினார்கள். உண்மையில், தனது சகோதர முஸ்லிமை குறைத்து மதிப்பிடுவது அல்லது அற்பமாக கருதுவது ஒருவரிடம் காணப்படும் தீய பண்புகளினதும், தீய குணங்களினதும் மொத்த வடிவமாகும். ஏனெனில் இத்துர்குணம் ஒருவரது உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் ஆணவத்தினால் ஏற்படுவதாகும். பின்னர் நபி (ஸல்) அவர்கள் மேற்கூறியவற்றை வலியுறுத்துகிறார்கள், அதாவது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் விவகாரத்தில் தடைசெய்யப்பட்ட விடயங்களை விவரிக்கிறார்கள் முதலாவது ஒரு முஸ்லிமின் இரத்தம் (உயிர்) புனிதமானது என்றவகையில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அதில் அத்துமீறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் அவரைக் கொல்லவோ, காயப்படுத்தவோ, அடிக்கவோ, அல்லது அவருக்கு வேறு உடல் ரீதியான தீங்கும் செய்யவோ முடியாது. இரண்டாவது: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சொத்தை எவ்வித நியாயமான காரணமின்றி எடுத்துக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது, மூன்றாது : ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் மானத்தை காப்பது கடமையாகும் அதை மீறி நடப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, அதாவது ஒருவரின் குணம் அல்லது பரம்பரை பற்றி தவறாகப் பேசுவது கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ''யார் ஒரு முஃமினின் உலக துன்பமொன்றை நீக்கி விடுகிறாரோ, அல்லாஹ் அவருடைய மறுமை நாளின் துன்பமொன்றை நீக்குவான்;. யார் கஷ்டப்படும் ஒருவருக்கு இலகுபடுத்திக் கொடுக்கிறாரோ அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அவருக்கு இலகு படுத்துவான். எவரொருவர் ஒரு முஸ்லிமுடைய குறையை மறைக்கின்றாரோ இம்மையிலும் மறுமையிலும்; அல்லாஹ் அவருடைய குறையை மறைக்கின்றான். அடியான் தன்னுடைய சகோதரனுக்கு உதவிசெய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அல்லாஹ்வும் அவனுக்கு உதவிசெய்து கொண்டிருக்கிறான். அறிவைத் தேடி யார் ஒரு பாதையில் பயணிக்கிறாரோ அதன் மூலம் அவருக்கு சுவர்க்கத்திற்கான பாதையை அல்லாஹ் இலகுபடுதிக் கொடுப்பான். இறையில்லங்களில் ஒன்றில் ஒரு கூட்டம் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் கற்றுக் கொண்டால் அவர்களின் மீது அமைதி இறங்கும் இறையருள் அவர்களை சூழ்ந்து கொள்ளும். மலக்குகள் அவர்களை சூழ்ந்து கொள்வார்கள். அவர்கள் குறித்து அல்லாஹ் தன்னிடம் இருப்போரிடம் சிலாகித்துக் கூறுவான். எவருடைய செயல் அவரைத் தாமதிக்கச் செய்கிறதோ அவரது பரம்பரை முன்னேற்றி விடமாட்டாது.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும்; வெகுமதியானது அவர் பிற முஸ்லிம்களுக்கு செய்யும் அதே வகையான செயல்களைப் போலவே இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். யார் இவ்வுலகில் ஒரு விசுவாசியின் துன்பம் மற்றும் கஷ்டத்தை நீக்குகிறாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமை நாளின் துன்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பான். மேலும்,யார் கஷ்டத்தில் உள்ள ஒருவரின் கஷ்டத்தை எளிதாக்கி, அவருடைய சிரமத்தை நீக்குகிறாரோ, அவருக்கு அல்லாஹ் இம்மை மறுமை விவகாரங்களை அவருக்கு இலகுபடுத்திக்கொடுப்பான் . ஒரு முஸ்லிமிடம் காணப்படுகின்ற பகிரங்கப்படுத்தப்படுவத்துவதற்கு அவசியமல்லாத குறைகள் மற்றும் தவறுகளை அறிந்திருப்பவர் அக்குறைகளை மறைத்தால் அல்லாஹ் அவருடைய குறைகளை இம்மையிலும் மறுமையிலும் மறைப்பான். இம்மை மறுமை நலன்களில், ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அவ்வடியானுக்கு உதவி புரிபவனாக அல்லாஹ் இருக்கிறான். உதவி என்பது பிரார்த்தனை, உடல் ரீதியான மற்றும் பணரீதியான உதவி மற்றும் ஏனையவை இதில் உள்ளடங்கும். எவர் அல்லாஹ்வின் திருமுகம் நாடி மார்க்க அறிவைக் கற்கச் செல்கிறாரோ அதன் மூலம் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை இலகுபடுத்திக் கொடுக்கிறான். இறையில்லங்களில் ஒன்றில், ஒன்று சேர்ந்து, அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, தங்களுக்குள் அதை கற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தாரின் மீது அமைதியும், பாதுகாப்பும் இறங்குவதோடு, அல்லாஹ்வின் அருளும், கருணையும் அவர்களைச் மூடிக்கொள்கிறது. மேலும் வானவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்வார்கள். அல்லாஹ் தனக்கு அருகில் இருப்பவர்களின் முன்னிலையில் அவர்களைப் பாராட்டுகிறான். இவ்வாறு அல்லாஹ் உயர்ந்த சபையில் அடியார்கள் பற்றிக் குறிப்பிடுவதே அவர்களின் சிறப்புக்கு போதுமானதல்லவா! நன்மையான செயல்கள் போதுமானதாக இல்லாத ஒருவர் நன்மையான செயல்களைச் செய்தவர்களின் தரத்திற்கு உயர்த்தப்பட மாட்டார். எனவே, அவர் தனது வம்சாவளி அந்தஸ்த்தையும்;;, தனது முன்னோர்களின் கௌரவத்தையும் நம்பி, நன்மையான செயல்களைச் செய்வதில் அலட்சியமாக இருக்கக் கூடாது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர்களில் ஒருவராகிய அகர்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தௌபா செய்து மீளுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு 100 தடவைகள் தௌபாச் செய்கிறேன்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதர்களுக்கு அதிகமாக தௌபா (பாவமீட்சி) மற்றும் இஸ்திஃபார் (பாவமன்னிப்புக் கோருதல்) செய்யுமாறு வலியுறுத்துகிறார்கள். தனது முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருந்த நிலையிலும் தான் ஒரு நாளைக்கு 100 தடவைக்கு அதிகமாக தௌபா மற்றும் இஸ்திஃபார் செய்வதாக தன்னைப்பற்றி நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது நபியவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுபடுவதிலும் பணிவாக நடந்து கொள்வதிலுமுள்ள அவர்களின் நிறைவான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு முஸ்லிமின் கீழ் ஆடை கணுக்காலின் பாதியளவு இருக்கும். அதில் இருந்து இரு கரண்டைக் கால் வரை (செல்வது) குற்றமில்லை. இரு கரண்டைக் காலுக்கும் கீழால் செல்வது நரகத்திற்கே உரியது. யார் பெருமைக்காக தனது கீழ் ஆடையை இழுத்துக்கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.
இமாம்களான அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுமனிதர்களின் உடம்பின் கீழ் அரைப் பகுதியை மறைக்கும் (வேட்டி போன்ற) ஆடைகளுக்கு மூன்று நிலைகள் இருப்பதை நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள் முதலாவது : அரைக்கணுக்கால் வரை இருப்பதுவே விரும்பத்தக்கதாகும். இரண்டாவது : வெறுக்கப்படாமல் அனுமதிக்கப்படும் நிலை. அதாவது, பாதத்தையும் கணுக்காலையும் பிரிக்கும் கரண்டைக் கால் வரை இருத்தல். மூன்றாவது : தடுக்கப்பட்ட நிலை; அதாவது, கரண்டைக்காலுக்குக் கீழாக இருத்தல். இவரை நரக நெருப்புத் தீண்டலாம். அகம்பாவம், பெருமை மற்றும் கருவத்துடன் அவ்வாறு செய்திருந்தால், அல்லாஹ் அவரைப் பார்க்கமாட்டான்.