





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
ரஸுல் (ஸல்) அவர்கள் என்னிடம் நோய் விசாரிக்க வந்தார்கள்.அச்சமயம் அன்னார் "அல்லாஹ்வே! ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக.அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக.அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக."என்று கூறினார்கள், என ஸஃத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
புஹாரியும்,முஸ்லிமும் ஒன்றுபட்டது.இதன் வாசகம் முஸ்லிம் அவர்களுக்குரியதுஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் சுகவீனமாக இருந்த போது, அவர்களை நோய் விசாரிக்கச் சென்ற ரஸூல் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வே! ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக. அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக. அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக."என்று மூன்று தடவைகள் துஆ செய்தார்கள்.இந்த ஹதீஸ் ஒரு மனிதன் முஸ்லிம் நோயாளியிடம் நோய் விசாரிக்கச் செல்வது நபி வழி என்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றது.மேலும் இது ரஸுல் (ஸல்) அவர்களின் சீரிய குணத்தையும்,அவர்கள் தங்களின் தோழர்களுடன் வைத்திருந்த தொடர்பையும் எடுத்துக் காட்டுகிறது.எனவேதான் நபியவர்கள் தங்களின் தோழர்கள் சுகவீனமாக இருந்த போது அவர்களை நோய் விசாரிக்கச் சென்று அவர்களுக்காக துஆவும் செய்தார்கள். மேலும் நோயாளிக்காக துஆ கேட்பது,நோயாளியின் நோய் குணமடைவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும், எனவே நோயாளியின் பெயரைக் குறிப்பிட்டு "அல்லஹ்வே! இன்னாரின் நோயைக் குணப்படுத்தி வைப்பாயாக"" என்று மூன்று தடவைகள் கூறி அவருக்காக துஆ கேட்பது ஒரு விரும்பத் தக்க செயல் என்பதும் இதன் மூலம் புலனாகிறது.
ஒரு முறை நபி ஸல் அவர்கள் (போர் பொருள்களை) பங்கீடு செய்து கொண்டிருந்தார்கள். "இறைத் தூதர் அவர்களே! இந்தப் பொருளைப் பெறும் இவர்களை விட தகுதி வாய்ந்த மற்றவர்கள் உள்ளனர்." என்று கூறினேன். "நிச்சயமாக இவர்கள் என்னிடம் வற்புறுத்திக் கேட்கின்றார்கள், அல்லது என்னை கஞ்சன் என்கிறார்கள். நான் கஞ்சன் அல்ல" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி (ஸல்) அவர்கள் தமக்குக் கிடைத்த கனீமத் பொருளிலிருந்து சில மனிதர்களுக்கு மாத்திரம் கொடுத்து விட்டு மற்றும் சிலரை விட்டு விட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தில் உமர் (ரழி) அவர்கள் கொடுக்காது விட்டவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள்தாம் அதற்கு தகுதியானவர்கள் என்று நபி (ஸல்) அவர்களிடத்தில் கூறினார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவர்களின் ஈமானிய பலயீனத்தினால் என்னிடம் வற்புறுத்திக் கேட்டது மட்டுமல்லாமல் அவர்களின் இந்நிலை காரணமாக மோசமான வார்த்தையினால் அல்லது என்னை கஞ்சத்தனம் எனும் பண்பைப் பெற்றவன் என குறிப்பிடும் அளவுக்கு என்னை நிர்பந்தித்தார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் தனது பண்பில் கஞ்சத்தனம் என்பது கிடையாது என்பதை உணர்த்தவும் அவர்களுடன் மிதமாகவும், இணைவோடும் நடந்து கொள்வதற்கு இவ்வழிமுறையை தெரிவு செய்தார்கள்
நபி (ஸல்) அவரகளின் எழுத்தாளர்களில் ஒருவரான அபூரிப்ஈ என்ற ஹன்ளலா இப்னு ரபீஉ அல் உஸைதி (ரழி) அறிவிக்கிறார்கள். ஒரு தடவை என்னை அபூபக்கர் (ரழி) அவர்கள் சந்தித்து "ஹன்ளலா எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள் அதற்கு "ஹன்ளலா முனாபிக் ஆகிவிட்டான் என்று நான் கூறினேன். "ஸுப்ஹானல்லாஹ் என்ன கூறுகிறீர்" என்று கேட்டார்கள். அதற்கு நான் "நபி (ஸல்) அவர்களிடம் நாம் இருக்கும் போது சொர்கத்தையும், நரகத்தையும் நாம் நேரில் பார்ப்பது போலவே நினைவு கூர்கிறோம். நபி (ஸல்) அவர்களிடமிருந்து நாம் வெளியேறிவந்துவிட்டால் மனைவியரை,குழந்தைகளை கவனிப்பதிலும் வாழ்க்கைத் தேவைகளுக்காக உழைப்பதிலும் மூழ்கிவிடுகிறோம். இதனால் அதிகமானதை மறந்து விடுகிறோம்." என்று கூறினேன்."அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக இது போன்றே நானும் உணர்கிறேன்" என்று அபூபக்கர் (ரழி) கூறினார்கள். உடனே நானும் அபூபக்கர் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம். "இறை தூதர் அவர்களே!ஹன்ளலா நயவஞ்சகன் ஆகிவிட்டார்." என்று கூறினேன். "என்ன கூறுகிறீர்?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "இறைதூதர் அவர்களே! உங்களுடன் இருக்கும் போது கண்ணால் பார்ப்பது போல் சொர்க்கத்தையும்,நரகத்தையும் நினைவு கூர்கிறோம். உங்களை விட்டும் நாங்கள் வெளியேறி விட்டால் மனைவியர், குழந்தைகள், வாழ்க்கைத் தேவை என மூழ்கி அதிகமாக மறந்துவிடுகிறோம்." என்று கூறினேன். "எனது ஆத்மாவை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக என்னிடம் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இறைவனை நினைவு கூர்வதிலேயே தொடரந்தும் இருந்தால் உங்கள் படுக்கையிலும் உங்கள் வழிகளிலேயும் வானவர்கள் கைகொடுத்து மகிழ்வார்கள்.எனினும் ஹன்ளலாவே வணக்த்திற்கு என ஒரு நேரம் உண்டு, வாழ்க்கைக்கு உழைப்பதற்கு என்று ஒரு நேரம் உண்டு." என்று மூன்று முறை கூறினார்கள்
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்அபூபக்கர் (ரழி) அவர்களிடம் ஹன்ளலா (ரழி) அவர்கள், தான் நபியவர்களிடம் சபையில் இருக்கும் நிலைக்கு மாற்றமாக தான் இருப்பதாக கூறினார்கள். அதாவது நபியவர்களிடத்தில் இருக்கும் வேளையில் அல்லாஹ்வை நினைவு கூர்பவராகவும் தமது பிள்ளைகள், பெண்கள் (மனைவிமார்களுடன்) உலக விவகாரகங்களிலும் கலந்து விடும்போது நிலை மாறிவிடுகிறது. எனவே இவ்வாறான நிலை மாற்றம் நயவஞ்கமாகும் என நினைத்தார்கள். உண்மையில் நயவஞ்சகம் என்பது உண்மை நிலையிலிருந்து வெளிப்படையில் வேறு ஒரு நிலையை பிரதிபலிப்பதாகும். இவ்விஷயத்தை நபி ஸல் அவர்களிடம் கூறிய போது "என்னுடன் இருக்கும் நிலையில் நீங்கள் எப்போதும் இருந்தால் உங்களுடன் எல்லா நிலைகளிலும் மலக்குமார்கள் கைலாகு செய்வார்கள். என்றாலும் இவ்விடயத்தில் நடு நிலையை கடைபிடிப்பது அவசியம். அதாவது அல்லாஹ்வுக்கென்று ஒரு சில நேரங்களை ஒதுக்குவதும், தனது குடும்பத்திற்காகவும் உலக விவகாரங்களுக்காகவும் இன்னும் சில நேரங்களை ஒதுக்குவதும் அவசியமாகும்." என்று கூறினார்கள்.
மக்களுக்கு எங்கேனும் ஒரு இடத்தில் தங்கிச் செல்ல நேரிட்டால் அவர்கள் அங்கு கணவாய்களிலும் ,பள்ளத்தாக்குகளிலும் பிரிந்து போய்விடுவார்கள்.எனவே அவர்களிடம் ரஸூல் (ஸல்) அவர்கள் "நீங்கள் இந்த கணவாய்களிலும்,பள்ளத்தாக்குகளிலும் பிரிந்து விடுவீர்களாயின் அது ஷைத்தானின் புறத்தினாலாகும்" என்று கூறினார்கள்.அதன் பின்னர் அவர்கள் எங்கேனும் தங்கிச் செல்ல இறங்கினால் சிலர், சிலருடன் சேர்ந்து நெருக்கமாக இருந்து கொள்வார்கள்.என அபூ ஸஃலபா அல்குஷனீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்பிரயாணத்தின் நடுவே மனிதர்களுக்கு எங்கேனும் தங்கிச் செல்ல நேர்ந்தால் அவர்கள் கூட்டத்திலிருந்து பிரிந்து அங்குள்ள கணவாய்களிலும்,பள்ளத்தாக்குகளிலும் தனித்தனியாகத் தங்கி வரலாயினர்.எனவே அவர்களிடம் ரஸூல் (ஸல்) அவர்கள் அவர்களின் இந்தப் பிரிவினை ஷைத்தானின் ஒரு செயலாகும்.அல்லாஹ்வின் நேசர்களைப் பயமடையச் செய்யவும்,அவர்களின் பகைவர்களை உட்சாகப் படுத்தவும் அவன் இப்படி செய்கின்றான்,என்று நபியவர்கள் கூறினார்கள்.இதன் பின்னர் அவர்கள் எங்கேனும் தங்கினால் சிலர்,சிலருடன் சேர்ந்து நெருக்கமாக இருந்து கொள்வார்கள்.மேலும் அவர்கள் இவ்வாறு மிகவும் நெருக்கமாக இருந்து கொள்வதன் காரணமாக அவர்களுக்கு ஒரு விரிப்பு விரிக்கப்பட்டாலும் அது அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக இருந்தது.
அஸ்ஸாஇப் இப்னு யஸீத் அறிவிக்கிறார்கள் "தபூக் யுத்தத்திலிருந்து நபியவர்கள் திரும்பி வரும் போது மக்கள் அவரைச் சந்தித்தார்கள்.நானும் அவரை சிறார்களுடன் 'தனிய்யதுல் வதாவில்' சந்தித்தேன்" என கூறுகிறாரக்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்நபி (ஸல்)அவர்கள் தபூக் யுத்தத்திலிருந்து ஸஹாபாக்களுடன் திரும்பி வரும்போது மதீனாவுக்கு அருகாமையில் அமைந்துள்ள 'தனியதுல் வதாஃ' எனும் இடத்திற்கு நபியவர்களை வரவேற்பதற்காக அவர்கள் (ஸஹாபாக்கள்) புறப்பட்டுச் சென்றார்கள்.காரணம் யாதெனில் நபி ஸல் அவர்களையும்,போரில் கலந்து கொண்டவர்களையும் மகிழ்வூட்டவும்,அவர்களின் மனதை சாந்தப்படுத்தவும்,போருக்குச் செல்லாது இருப்போருக்கு ஆர்வமூட்டவுமாகும்.
அபூஸைத் அம்ர் இப்னு அக்தப் அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு "ஃபஜ்ர்" தொழுகை தொழுவித்து விட்டு, சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி எங்களுக்கு உரையாற்றினார்கள். இறுதியில் லுஹர் தொழுகை நேரம் வந்தபோது (மேடையிலிருந்து) இறங்கி, தொழுவித்துவிட்டுப் பிறகு மீண்டும் மேடைமீதேறி "அஸ்ர்" தொழுகைவரை உரையாற்றினார்கள். பிறகு மேடையிலிருந்து இறங்கி (அஸ்ர் தொழுகை) தொழுவித்து விட்டு பிறகு மறுபடியும் மேடைமீதேறி சூரியன் மறையும்வரை உரையாற்றினார்கள்.நடந்தவை, நடக்கவிருப்பவை அனைத்தையும் பற்றி (அன்று) எங்களுக்குத் தெரிவித்தார்கள். எங்களில் நன்கறிந்தவர் (அவற்றை) நன்கு மனனமிட்டவர் ஆவார்
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் பஜ்ர் தொழுகையை தொழுதுவிட்டு மின்பருக்கு ஏறி மக்களுக்கு லுஹர் அதான் வரையில் உரை நிகழ்த்தினார்கள்.பின்னர் மின்பரிலிருந்து இறங்கி லுஹர் தொழுதார்கள்.அதை தொடர்ந்து மீண்டும் மிம்பரில் ஏறி அஸர் தொழுகைக்கான அதான் சொல்லும் வரையில் உரையாற்றினார்கள். பின் அஸர் தொழுது விட்டு சூரியன் மறையும் வரையில் உரையாற்றினார்கள் அதாவது ஸூபுஹ் தொழுகை முதல் சூரியன் மறையும் வரையில் முழு நாளும் மக்களுக்கு உபதேசம் செய்தார்கள்.அத்தினத்தில்தான் முன்னைய சென்ற கால விடயங்கள் பற்றியும்,எதிர்கால மறைவான விடயங்கள் பற்றியும் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்தான். அவைகளை நபி (ஸல்) தமது தோழர்களுக்கு அத்தினத்தில் அறிவித்தார்கள்.நபியவர்கள் கூறியவற்றை மனதில் பதித்து நன்கு மனனம் செய்தவர்கள் தாம் அத்தோழர்களில் மிகவும் அறிந்தவர்கள் ஆவார்கள்
அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: தன் இரு தாடைகளுக்கிடையே உள்ள (நாவின் ) தீங்கையும், ஒருவனது இரு கால்களுக்கிடையே உள்ள (மறையுறுப்பின்) தீங்கையும் அல்லாஹ் பாதுகாத்து விட்டால் அவன் சொர்க்கத்தில் நுழைவான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய விடயங்களை விட்டும், விபச்சாரத்தை விட்டும் அல்லாஹ் யாரை பாதுகாக்கிறானோ அவன் நரகை விட்டு தப்பி சுவர்க்கத்தில் நுழைந்து விடுகிறான்.
"நான் ரஸூல் (ஸல்) அவர்களிடம் சென்ற போது அவருக்கு அலைக்கஸ் ஸலாம் என்று சொன்னேன்.அதற்கு ரஸூலுல்லாஹ் அவர்கள் அலைக்கஸ் ஸலாம் என்று சொல்லாதீர்கள்.ஏனெனில்அலைகஸ் ஸலாம்'என்பது இறந்து போனவருக்குச் சொல்லும் வாழ்த்தாகும்.என்று கூறினார்கள்"என அபூஜுரைய் அல்ஹுஜைமீ (ரழி) அவர்கள் அறிவிககின்றார்கள்"
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸின் விளக்கம் பின்வருமாறு:ஒரு மனிதர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்விள் தூதரே عليكالسلام என்றார்.அதற்கு இவ்வாறு ஸலாம் சொல்ல வேண்டாம் என அந்த மனிதரை ரஸூல் (ஸல்) தடை செய்தார்கள்.மேலும் நபியவர் அந்த ஸலாத்தை விரும்பவில்லை,என்றபடியால் அன்னார் அந்த மனிதருக்குப் பதில் ஸலாம் சொல்லவில்லை.மாறாக இது இறந்து போனவர்களுக்குத் தெரிவிக்கும் வாழ்த்து என்றார்கள்.பின்னர் பிரிதொரு ஹதீஸில் தெரிவிக்கப் பட்டுள்ளது போன்று السلام عليك என்று ஸலாம் சொல்ல வேண்டும் என ஸலாம் கூறும் முறையை அவருக்குக்கு விளங்கப்படுத்தினார்கள்.மேலும் عليك السلام என்றால் இறந்து போனவர்களுக்குத் தெரிவிக்கும் வாழ்த்து என்று நபியவர்கள் சொன்னார்கள் என்றால் அதன் பொருள் மையவாடிகளைத் தரிசிக்கும் போது கூறும் வாழ்த்து அதுவென்பதல்ல. ஏனெனில்ரஸூல்(ஸல்) அவர்கள் மையவாடிகளைத் தரிசிக்குமிடத்து " السلام عليكم أهل دار قوم مؤمنين விசுவாசம் கொண்ட கூட்டத்தவரின் இல்லத்தில் இருப்பவர்களே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக என்று கூறுவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எனினும் இறந்து போனவர்களுக்கு عليك السلام என்று சொல்லும் பழக்கம் ஜாஹிலிய்யக் காலத்து மக்களிடம் இருந்தது.என்பதை உணர்த்தவதற்காகவே நபியவர்கள் அப்படிச் சொன்னார்கள்.
ஹஸன் அல்பஸரீ அவர்கள் கூறுகின்றார்கள் : ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அவர்கள் இந்தப் பள்ளிவாசலில் எமக்கு அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்ததில் இருந்து இன்னும் நாம் மறக்கவே இல்லை. ஜுன்துப் (ரலி) அவர்கள் நபியவர்கள் மீது இட்டுக்கட்டியிருப்பார் என்று நாம் பயப்படவும் மாட்டோம். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : உங்களுக்கு முன்னிருந்தவர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் ஒரு காயம் காணப்பட்டது. அவர் பொறுக்கமுடியாது, ஒரு கத்தியை எடுத்து, தனது கையை வெட்டிவிடவே, இரத்தம் பெருக் கெடுத்தோடி அவர் மரணித்துவிட்டார். அப்போது அல்லாஹ், 'என்னுடைய அடியான் என்னிடம் அவசரப்பட்டு வந்துவிட்டான். அவன் மீது நான் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றேன்.' என்று கூறினான்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள், எமக்கு முன்னர் வாழ்ந்த ஒரு சமுதாயத்தில் இருந்த ஒரு மனிதருக்கு ஒரு காயம் ஏற்பட்டபோது, அதன் வலியைப் பொறுக்க முடியாது, ஒரு கத்தியை எடுத்து, தன் கையை வெட்டி, மரணத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதாவது, இரத்தம் வழிந்தோடி, அவர் மரணித்து விட்டார் எனவும், அப்போது அல்லாஹ், 'என்னுடைய அடியான் என்னிடம் அவசரப்பட்டு வந்துவிட்டான். அவன் மீது நான் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றேன்.' என்றும் கூறியதாக அறிவிக்கின்றார்கள்.