





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
சுவர்க்த்தில் ஒரு மரம் உள்ளது. அதன் (அதன் நிழலில்) வேகமாக ஓடும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறு ஆண்டுகள் பயணித்தாலும் அதனை கடக்க முடியாது என அபூ ஸஈத் அல் குத்ரி ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் ஸஹீஹுல் புஹாரி மற்றும் ஸஹீஹூல் முஸ்லிமில் இடம் பெற்றிருக்கும் அபூ ஹுரைரா ரழி அவர்களின் அறிவிப்பில் அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது என பதிவாகியுள்ளது.
இதன் இரண்டு அறிவிப்புக்கள் புஹாரீ,முஸ்லிம் ஆகியோர் அறிவித்தவைகளாகும்இந்த ஹதீஸ் சுவர்க்கத்தின் ஞாபகத்தையும், சுவர்க்க வாசிகள் அனுபவிக்கும் பேரின்பம் குறித்தும் தெளிவு படுத்துகிறது.அத்துடன் சுவர்கத்தில் உள்ள மரங்கள், அதன் நிழல் குறித்த வர்ணனைகள் பற்றிய விஷயங்களையும் கொண்டுள்ளதுடன், குதிரையில் பயணிப்பவர் அம்மரத்தின் பிரமாண்டத்தினால் அதன் முடிவை அடைய முடியாமல் போவது தனது பயபக்திமிக்க அடியார்களுக்கு அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள மிகப் பெறும் சிறப்பாக உள்ளது.
நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹூ அறிவிக்கிறார்கள். முஸ்லிம் ஒருவரின் மூன்று குழந்தைகள் இறந்திருந்தால்,அவருக்கு (ஸிராத் எனும் பாலத்தில் ஏற்படும்) கட்டாய நரகத் தீண்டுதலே தவிர வேறு தீங்கு ஏற்படாது.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஒருவர் பெற்றெடுத்த குழந்தைகளில் பெண்பிள்ளைகளில் அல்லது ஆண்பிள்ளைகளில் மூவர் மரணித்து அதற்காக பொறுமை காத்து, நன்மையை நாடி அல்லாஹ்வின் இறைவிதியை பொருந்திக்கொண்டால் அக்குழந்தையின் பெற்றோரின் உடலை நரகம் தீண்டுவதை விட்டும் அல்லாஹ் ஹராமாக்கிவிடுகிறான். எனினும் அல்லாஹ்வின் திருவசனமான "உங்களில் எவரும் அதை கடக்காமல் இருக்க முடியாது" என்ற அல்லாஹ்வின் கூற்றின் அடிப்படையில் நரகத்தின் மீது அமைந்துள்ள பாலத்தை கடக்கும் போது ஏற்படும் சோதனையை அவர் எதிர்கொள்ள வேண்டும்.
பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகள் இறந்து போன எந்த ஒரு முஸ்லிமையும் அவர் தன் பிள்ளைகள் மீது காட்டிய கருணையின் காரணமாக அல்லாஹ் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை என நபி ஸல் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிரார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்முஸ்லிம்களில் யாராவது ஒருவரின் ஆண் அல்லது பெண் குழந்தைகளில் மூவர் பருவ வயதை அடையு முன் மரணித்தால் அவர் சொர்க்கம் நுழைய அது ஒரு காரணமாக இருக்கும்.
ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : “நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம்: ஒரு ஆணின் பார்வை திடீரென்று ஒரு அந்நியப் பெண்ணின் மீது எவ்வித நோக்கமின்றிப் பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள்: உடனடியாக எனது பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்''.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம்: ஒரு ஆணின் பார்வை திடீரென்று ஒரு அந்நியப் பெண்ணின் மீது எவ்வித நோக்கமுமின்றிப் பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்: அவர் அந்நியப்பெண்ணைப் பார்ப்பதை உணர்ந்தால் உடனடியாக முகத்தைத் திருப்பி வேறு பக்கம் பார்க்குமாறு வலியுறுத்தினார்கள். அவர் அவ்வாறு செய்தால், அவர் மீது எந்தப் பாவமும் இல்லை.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்-அஸ்லமி (ரழி) அவர்களுக்கு கல்லெறிந்து தண்டனை வழங்கிய பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எழுந்து நின்று, அல்லாஹ் தடைசெய்த இந்த அசுத்தத்தைத் தவிர்த்து விடுங்கள். யார் இதைச் செய்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் மறைவால் தன்னை மறைத்துக் கொண்டு அல்லாஹ்விடம் தவ்பா செய்யட்டும். ஏனெனில், யார் தனது பாவங்களை நமக்கு வெளிப்படுத்துகிறாரோ, அவருக்கு எதிராக நாம் அல்லாஹ்வின் வேதத்தை நிறைவேற்றுவோம்.
இமாம்களான ஹாகிம், பைஹகீ ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுவிபச்சாரத்திற்கான தண்டனையாக மாயிஸ் , இப்னு மாலிக் அல்-அஸ்லமி (ரழி) அவர்களுக்கு கல்லெறிந்து தண்டனையை நிறைவேற்றியதன் பிறகு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எழுந்து நின்று மக்களை நோக்கி, 'இந்த அருவருப்பான அல்லாஹ் தடைசெய்த அசிங்கமான மற்றும் வெறுக்கத்தக்க பாவங்களை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த அருவருப்பானவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்பவர் இரண்டு விடயங்களை செய்ய வேண்டும்: முதலாவது: அல்லாஹ் தன்னை மறைத்து வைத்திருப்பது போல் தன்னை மறைத்துக் கொள்வது, தனது பாவத்தை வெளிப்படுத்த வேண்டாம். இரண்டாவது: அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு, அதில் நிலைத்திருக்க வேண்டாம். யாருடைய பாவம் நமக்குத் தெளிவாகத் தெரிகிறதோ, அந்த பாவத்திற்காக அல்லாஹ்வின் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட தண்டனையை நாங்கள் செயல்படுத்துவோம்.
(لم يكن الذين كفروا) என்பதை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கும்படி அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டான். என்று ரஸூல் (ஸல்) அவர்கள் உபைய் இப்னு கஃப் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.அதற்கு அவர் அல்லாஹ் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டானா? என்றார். அதற்கு நபியவர்கள் ஆம் என்றார்கள்.அப்போது 'உபை'அழுதார்.என்று அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்.இன்னொரு அறிவிப்பில் அது உபையை அழும்படி செய்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார் - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஇந்த ஹதீஸில் அல்பையினா ஸூராவை உபை அவர்களுக்கு ஓதி காண்பிக்கும்படி அல்லாஹ் தன்னைப் பணித்தான் என்று ரஸூல் (ஸல்) அவர்கள் உபையிடம் கூறிய செய்தியை ரஸூல் (ஸல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.அப்போது,இது எப்படி சாத்தியமாகும்? என்று உபை ஆச்சரியப்படலானார்.ஏனெனில் தரத்தில் குறைந்தவர் தரத்தில் கூடியவரிடம் ஓதிக் காட்டுவதே முறையானது.அவ்வாறின்றி தரம் கூடியவர் தரம் குறைந்தவரிடம் ஓதிக் காட்டுவதல்ல எனினும் உபை அவர்கள் இந்த விவகாரத்தைப் பற்றி ஸூல் (ஸல்) அவர்களிடம் கேட்டு உறுதி செய்து கொண்ட போது அல்லாஹ் தன் பெயரை நபியவர்களிடம் குறிப்பிட்டிருந்தான் என்பதையும் அவர் உறுதியாக அறிந்து கொண்டார் அப்போது அல்லாஹ் தன் பெயரைக் குறிப்பிட்டிருப்பதை எண்ணி மகிழ்ச்சிப் பிரவாகத்தால் அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
"கனீமத்" எனும் யுத்த வெற்றிப் பொருட்கள் சில அல்லது யுத்த கைதிகள் சிலர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் எடுத்து வரப்பட்டனர்.அதனை நபியவர்கள் பங்கு வைக்கும் போது சிலருக்குக் கொடுத்தார்கள் இன்னும் சிலருக்குக் கொடுக்கவில்லை.எனவே யாருக்கு நபியவர்கள் கொடுக்க வில்லையோ அவர்கள் நபிகளாரைக் கண்டனம் செய்தனர்.இந்த செய்தி நபியவர்களுக்கு எட்டியது.எனவே அன்னார் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துரைத்த பின்னர் "அல்லாஹ்வின் மீது ஆணையாக உண்மையில் நான் ஒருவருக்குக் கொடுக்கின்றேன்.இன்னொருவருக்குக் கொடுப்பதில்லை.ஆனால் நான் யாருக்குக் கொடுக்கவில்லையோ என்னிடமவர் நான் யாருக்குக் கொடுக்கின்றோனோ அவரை விடவும் விருப்பத்திற்குரியவராவார்.எனினும் நான் சில சமூகத்தினரிடம் அவர்களின் மனதில் இருக்கும் துக்கம் துயரம் என்பதைக் கண்டு கொண்டதன் காரணமாகவே நான் அவர்களுக்குக் கொடுக்கின்றேன்.மேலும் அல்லாஹ் எந்த சமூகத்தவரின் மனதில் போதுமெனும் குணத்தையும்,நன்மையையும் வைத்திரக்கின்றானோ அவர்களை அதன் பொருப்பிலேயே நான் விட்டு விடுகிறேன் அம்ரு இப்னு தக்லிபுவும் அவர்களைச் சார்ந்தவர்களே"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அம்ர் இப்னு தக்லிப் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்யுத்தத்தில் கிடைத்த வெற்றிப் பொருளான கனீமத் அல்லது யுத்த கைதிகள் சிலர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் எடுத்து வரப்பட்டனர்.அதனை நபியவர்கள் பங்கு வைக்கும் போது சிலருக்குக் கொடுத்தார்கள்.இன்னும் சிலருக்குக் கொடுக்காமல் விட்டு விட்டார்கள்.அதாவது சிலரின் உள்ளத்தைச் சாந்தப்படுத்தும் நோக்கில் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.மேலும் எவர்களுக்கு அல்லாஹ் ஈமானையும்,யகீனையும் வழங்கியிருந்தானோ அவர்களின் உள்ளம் உறுதி வாய்ந்ததாக இருந்ததன் காரணமாக அவர்களுக்குக் கொடுக்கவில்லை.எனவே அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களுக்குத் தராமல் மற்றவர்களுக்குக் கொடுக்கக் காரணம் மற்றவர்கள் மார்க்கத்தில் சிறந்தவர்கள் என்பதற்காகவோ என்று எண்ணலாயினர்.ஆகையால் அவர்கள் தங்கள் மத்தியில் நபியவர்களைக் கண்டிக்கவும்,தூற்றவும் ஆரம்பித்தனர்.இந்த செய்தி நபியவர்களுக்குக் கிடைத்தது.எனவே அவர்ரகளை எல்லாம் ரஸூல் (ஸல்) ஒன்று கூட்டி அவர்கள் முன் நின்று ஒரு உரை நிகழ்த்தினார்கள்.அவ்வமயம் புகழுக்குரிய அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்னர் நபியவர்கள்"அல்லாஹ்வின் மீது ஆணையாக உண்மையில் நான் ஒருவருக்குக் கொடுக்கின்றேன்.இன்னொருவருக்குக் கொடுப்பதில்லை.ஆனால் நான் யாருக்குக் கொடுக்கவில்லையோ எனேனிடமவர் நான் யாருக்குக் கொடுக்கின்றோனோ அவரை விடவும் விருப்பத்திற்குரியவராவார்"என்று கூறினார்கள்.அதாவது நான் சிலருக்குக் கொடுத்தும் இன்னும் சிலருக்குக் கொடுக்காமலும் இருப்பதன் கருத்து நான் சிலரை நேசிக்கின்றேன் மற்றும் சிலரை நேசிக்கவில்லை,என்பதல்ல.மாறாக நான் யாருக்குக் கொடுத்தேனோ அவர்களை விடவும் யாருக்கு நான் கொடுக்கவில்லையோ அவர்களே என்னிடம் மிகவும் அன்புக்குரியவர்கள்.என்றார்கள்.பின்னர் தாங்கள் இப்படிச் செய்ததற்காரணத்தைத் தெளிவு படுத்தரினார்கள்.அவ்வமயம் எவர்களின் மனதில் துக்கம் துயரம் இருக்க நான் கண்டேனோ அவர்களுக்கு கனீமத் எனும் யுத்தத்தில் கிடைத்த வெற்றிப் பொருள் அவர்களுக்குக் வழங்சகப்படாது போனால் அவர்களிளின் கவலை இன்னும் அதிகரித்துவிடும் என்பதால் அவர்களின் உள்ளத்தைச் சாந்தப்படுத்து முகமாக அதனை அவர்களுக்கு வழங்கினேன்,என்று விளக்கமளித்த நபியவர்கள் "மேலும் அல்லாஹ் எந்த சமூகத்தவரின் மனதில் போது மெனும் குணத்தை வைத்திரக்கின்றானோ அவர்களை அதன் பொருப்பிலேயே நான் விட்டு விடுகிறேன்" என்று கூறினார்கள்.அதாவது சில கூட்டத்தினருக்கு நான் கொடுக்காமல் விட்டு விடுகின்றேன் என்றால் அவர்களுக்கு அல்லாஹ் போது மெனும் மனதையும்,ஈமானின் பலத்தையும் அதன் உறுதியையும் கொடுத்திருக்கின்ற காரணமாக அவர்களை அதன் பொருப்பில் விட்டு விடுகின்றேன்,மேலும் மனிதரில் எவருடைய ஈமான் உறுதியானதாக இருக்கின்றதோ அவர்களின் பொருப்பை அதன் பால் நான் சாட்டி விடுகின்றேன் அப்படியான கூட்டத்தைச் சார்ந்தவர்தான் அம்ர் இப்னு தக்லிப் என்பாரும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு தக்லிப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மேலும் பிரிதொரு ஹதீஸில்"ஒருவர் என்னிடம் மிகவும் அன்புக்குரியவராக இருந்த போதிலும் மற்றவருக்கு நான் கொடுத்து விடுகிறேன்.என்றால் அவர் நரகில் முகம் குப்புர வீழ்ந்து விடுவார் என்ற அச்சத்தின் காரணமாகத்தான்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.மேலும் அல்லாஹ்வின் தூதர் தன்னைப் பாராட்டியதைக் கேள்வியுற்ற அம்ரு (ரழி) அவர்கள்"அல்லாஹ்வின் மீது ஆணையாக ரஸூல் (ஸல்) அவர்கள் என்னைப் பற்றிக் கூறிய அந்த வார்த்தைக்குப் பதிலாக எனக்குச் சிவப்பு ஒட்டகங்கள் தரப்படுமாயின் அதனை நான் விரும்ப மாட்டேன்" என்று கூறினார்கள்.அதாவது நபியவர்கள் தன்னைப் பாரட்டி கௌரவித்த அந்த பாராட்டுரைக்குப் பதிலாகத் அறபு மக்களின் பெறுமதி மிக்க செல்வமான சிவப்பு ஒட்டகங்கள், தனக்குத் தரப்படுமாயின் அதனைத் தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுப் பரைசாட்டினார்.
ஒரு பிள்ளை தன் தந்தை தன்னைத் வாங்கி விடுதலை செய்கின்ற ஒரு அடிமை போன்று அவரிடத்தில் தன்னைக் காணாத வரையில் அவன் தன் தந்தைக்கு ஈடு செய்தவனாக ஆகமாட்டான்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், எனஅபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஹதீஸ் விளக்கம்:ஒரு பிள்ளை தன் தந்தைக்கு என்னதான் உதவி உபகாரங்கள் செய்த போதிலும் அவன் தன்னை தன் தந்தையிடம் அவர் தன்னை விடுதலை செய்யத் தக்க ஒரு அடிமையைப் போன்று கண்டு கொள்ளாத வரையில் அவன் தன் தந்தைக்கு ஈடு செய்தவனாகக் கருதப்படமாட்டான்.
"எனது சிரிய தந்தை அனஸ் இப்னு நழ்ர் அவர்கள் பத்ரு யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.எனவே அவர் "அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிகீன்களை எதிர்த்து தாங்கள் புரிந்த முதலாவது யுத்தத்தில் நான் கலந்து கொள்ள வில்லை.எனினும் முஷ்ரிகீன்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அல்லாஹ் எனக்கு வாய்ப்பளித்தால் அப்பொழுது நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை அல்லாஹ் நிச்சயமாக வெளிப்படுத்துவான்.என்று கூறினார்.பின்னர் உஹுது தினம் வந்தது.அதில் முஸ்லிம்கள் தோழ்வி கண்டபோது அவர் "அல்லாஹ்வே! அவர்கள்-அதாவது தனது தோழர்கள் செய்த காரியத்திற்காக நான் உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.மேலும் அவர்கள்-அதாவது அந்த முஷ்ரிகீன்கள் செய்த காரியத்தின் பொருப்பிலிருந்து நான் நீங்கிக் கொண்டேன்.என்று கூறியவாறு முன்னோக்கி நகர்ந்தார்கள்.அப்போதவர் ஸஅத் இப்னு முஆதைக் கண்டார்கள்.எனவே அவர் "ஸஅத் இப்னு முஆதே! கஃபாவின் இறைவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உஹுது மலைக்குத் தாழே சுவர்க்க வாடையை நுகர்கின்றேன்" என்றார்கள்.பின்னர் ஸஅத் "அல்லாஹ்வின் தூதரே! அவர் செய்ததை என்னால் செய்ய முடிய வில்லையே" என்று கூறினர்கள்.என்ற தகவலை அறிவித்த அனஸ் (ரழி) அவர்கள் "நாம் அவரின் உடம்பில் என்பதுக்கும் அதிகமான வாள் வெட்டுக் காயங்கள் அல்லது ஈட்டிக் குத்துக் காயங்கள் அல்லது அம்பு எறிதலுக்கு இலக்கான காயங்கள் இருக்கக் கண்டோம்,மேலும் அவரை முஷ்ரிகீன்கள் சித்திரவதை செய்து கொலை செய்திருந்தனர்.எனவே அவரை யாரும் இனங்காண வில்லை.எனினும் ஈற்றில் அவரின் விரல் மூலம் அவரின் சகோதரி அவரை இனங்கண்டு கொண்டார்.என்று கூறினார்.மேலும் "நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் தாங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குருதியை உண்மையாக்கி வைத்தார்கள்.அவர்களில் பலர் (இறந்து ஷஹாதத் எனும்) தங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டனர்.வேறு சிலர் அதனை எதிர்பார்த்தே இருக்கின்றனர்" (33:23) எனும் திரு வசனம் அவருடைய விடயத்திலும்,அவர் போன்றவர்களின் விடயத்திலும் அருளப்பட்டது என்பது எமது எண்ணம்" என்று அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஹதீஸ் விளக்கம்:அனஸ் இப்னு மாலிக் அவர்கள் தனது சிறிய தந்தை அனஸ் இப்னு நழ்ர் அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற போது:தனது சிறிய தந்தை அவர்கள் பத்ரில் கலந்து கொள்ளவில்லை.ஏனெனில் ரஸூல் (ஸல்) அவர்கள் யுத்தம் செய்வதற்காக பத்ருக்குப் போகவில்லை.மாறாக குறைசிகளின் வர்த்தகக் கோஷ்ட்டி யொன்றை வழி மறிப்பதற்காகவே.அங்கு சென்றார்கள்.அவ்வமயம் அவர்களுடன் முன்னூற்றுச் சொச்சம் பேர்கள் இருந்தனர்.மேலும் எழுபது ஒட்டகங்களும்,இரண்டு குதிரைகளும் இருந்தன.தோழர்கள் அதனைப் பின் தொடர்ந்து சென்றனர்.எனவே அதில் பங்கேற்காத அனஸ் இப்னு நழ்ர் அவர்கள் நபியவர்கள் முஷ்ரிகீன்களை எதிர்த்துப் போரிட்ட முதலாவது யுத்தத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை எடுத்துக் கூறிய பின்னர்"நான் இன்னொரு யுத்தத்தை அடைந்து கொண்டால் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை அல்லாஹ் வெளிப்படுத்துவான்,என்றார்கள்.பின்னர் பத்ரு நிகழ்ந்து ஒரு வருடமும் ஒரு மாதமும் கழிந்த பின்னர் உஹுது யுத்தம் நிகழ்ந்தது.அவ்வமயம் மக்கள் ரஸூல் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்தனர்.முற் பகலில் முஸ்லிம்கள் யுத்த களத்தில் வெற்றி வாய்ப்பைப் பெற்றனர்.மேலும் யுத்தம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ஓரிடத்தில் நிலை கொள்ளுமாறும் அவ்விடத்தை விட்டும் நகர வேண்டாம் என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் சில அம்பெறியும் வீரர்களுக்குக் கட்டளைப் பிறப்பித்திருந்தார்கள்,எனினும் முஷ்ரிகீன்களின் அணி சிதருண்டு தோழ்வியைத் தளுவிய,போது அந்த வீரர்களில் சிலர் அந்த இடத்திலிருந்து இறங்கிச் செல்லலாயினர்.அப்பொழுது முஷ்ரிகீன்களின் குதிரை வீரர்கள் அந்தத் திசையிலிருந்து முஸ்லிம்கள் மீது திடீர் தாக்குதல் மேற் கொண்டு முஸ்லிம்களின் அணியில் கலந்து விட்டார்கள்.இதன் காரணமாக முஸ்லிம்களுக்குத் தோழ்வி ஏற்படலாயிற்று.அவ்வமயம் அவர்களில் ஓடக்கூடியவர்கள் எல்லாம் ஓடலாயினர்.எனினும் அனஸ் இப்னு நழ்ர் (ரழி) அவர்களோ எதிரிகளின் திசையை நோக்கி முன்னேறினேறினார்கள்.அவ்வமயம் அவர்கள் "அல்லாஹ்வே! அவர்கள்-அதாவது தனது தோழர்கள் செய்த காரியத்திற்காக நான் உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.மேலும் அவர்கள்-அதாவது ரஸூல் (ஸல்) அவர்களையும்,அவர்களுடனிருந்த முஃமின்களையும் எதிர்த்துப் போரிட்ட முஷ்ரிகீன்களின் கொடிய காரியத்தின் பொருப்பிலிருந்தும் நான் நீங்கி விட்டேன்.என்று கூறினார்கள்.இவ்வாறு அவர் முன்னேறிச் செல்லுகையில் ஸஃத் இப்னு முஆத் (ரழி) அவர்களைக் கண்டார்கள்.அப்பொழுது அவரிடம் ஸஃத் அவர்கள் "எங்கே போகிரீர்கள்?" என்றார்கள்.அதற்கு அவர் "ஸஅத்தே! கஃபாவின் இறைவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உஹுது மலைக்குத் தாழே சுவர்க்க வாடையை நுகர்கின்றேன்" என்றார்கள்.இது அவர்களின் கற்பனயல்ல.இது அவர்களின் உண்மையான உணர்வாகும்.இது அல்லாஹ் அவருக்களித்த கராமத் எனும் அற்புத மாகும்.அதன் மூலம் அவர் ஷஹீத் ஆவதற்கு-வீர மரணம் அடைவதற்கு முன்னரே சுவர்க்க வாசனையை அவரால் உணர முடிந்தது.எனவே அவர் யுத்தகளத்தை விட்டும் திரும்பி விடாமல் எதிரிகளை நோக்கி முன்னேறி அவர்களுடன் போரிட்டு ஷஹீதானார்கள்.இதனைக் கண்ட ஸஃது (ரழி) அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! அவர் செய்ததை என்னால் செய்ய முடிய முடிய வில்லையே" என்றார்கள்.அதாவது அவர்கள் மேற் கொண்ட பிரயாசம் போன்று தன்னால் மேற் கொள்ள முடிய வில்லையே என்றார்கள்.மேலும் அவர்களின் மேனியில் வாளால்,அல்லது,ஈட்டியால்,அல்லது அம்பால் ஏற்பட்ட அடியால் என்பதுக்கும் மேற்பட்ட வடுக்கள் உண்டாகி இருந்தன.அதன் காரணமாக அவர்களின் தோல் யாவும் சின்னாபின்னம் ஆகியிருந்தது.எனவே அவர்களின் சகோதரியல்லாது வேறு எவரும் அவரை இனங் கண்டு கொள்ள வில்லை.அதுவும் அவர்களின் விரலின் மூலமே அவர்களை இனங் காண முடிந்தது.மேலும் "நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் தாங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள்.அவர்களில் பலர் (இறந்து ஷஹாதத் எனும்) தங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டனர்.வேறு சிலர் அதனை எதிர்பார்த்தே இருக்கின்றனர்" (33:23) எனும் இறை வசனத்தை அவருடையவும் அவரைப் போன்றவர்களுடையவும் விடயத்தில் அல்லாஹ் இறக்கினான் என முஸ்லிம்கள் எண்ணலாையினர்.ஆம் அவரும் அவரைப் போன்றவர்களும்தான் முதலில் இத் திரு வசனத்திற்கு உரித்துடையவர்கள்.ஏனெனில் "நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை அல்லாஹ் வெளிப்படுத்துவான்" என்று அனஸ் (ரழி) அவர்கள் குறிப்பிட்டது போன்று அவர்கள் அல்லாஹ்விடம் செய்த அந்த வாக்குருதியை உண்மையாக்கி வைத்தார்கள்.இவ்வாறு எவரும் செய்ய முடியாத இந்தக் கைங்கரியத்தை அவர்கள் செய்தார்கள்.எனவே அல்லாஹ் அவர்களை ஷஹீதாகச் செய்து அதற்கேற்ற கூலியை அவர்ளுக்கு வழங்கினான்" என்று விவரித்தார்கள்.