





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
என்றும் நிலைத்திருக்கும் நல்லமல்கள்لَا إلَهَ إلَّا اللَّهُ، وَسُبْحَانَ اللَّهِ، وَاَللَّهُ أَكْبَرُ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِاَللَّهِ எனும் வாசகங்களாகும்.
இதனை இப்னு ஹிப்பான் அறிவித்தார் - இந்த ஹதீஸை ஹாகிம் பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார்கீர்த்தியும்,மேண்மையும் பொருந்திய அல்லாஹ்வைத் துதித்தல்,தூய்மைப்படுத்தல்,கண்ணியப்படுத்தல் எனும் கருத்துக்களை இந்த வாசகங்கள்அடக்கி உள்ள படியாலும்,அடியான் அல்லாஹ்வின் நாட்டமின்றி எதனையும் செய்யவும்,கெடுதிகளைத் தடுத்து நிறுத்தவும்,நல்லதை அனுகூலமாக்கிக் கொள்ளவும் சக்தியற்றவனாக இருக்கின்றபடியால் அல்லாஹ்வின் செயல்களின் நிமித்தம் அவனைப் போற்றிப் பாராட்டும் விடயம் இதில் பொதிந்துள்ளபடியாலும் இந்த திக்ரினை இதே வாசகங்களைக் கொண்டு ஓதி வருவதானது சிறப்புக்குரியது என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக விளங்குகின்றது.எனவே இந்த வாசகங்கள் இத்தகைய மகத்தான கருத்துக்களைக் கொண்டிருப்பதுதான் அதன் தாக்கமும்,பயனும் முஃமினான அடியான் மரணித்த பின்னரும் அவனுக்குத் தொடர்ந்தும் கிடைக்கக் காரணமாக அமைகிறது
ஒரு முஃமின் தன் முஃமினான சகோதரனின் கண்ணாடியாவான்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்ரஸூல் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு முஃமினை இன்னொரு முஃமினின் கண்ணாடி என்று உயர்ந்த இலக்கிய பாணியில் வர்ணனை செய்துள்ளார்கள்.அதாவது பளபளப்பான நிழல் கண்ணாடியில் ஒருவன் தன்னைப் பார்த்து தனது குறைகளை எப்படி நிவர்த்தி செய்து கொள்கின்றானோ அதுபோன்று தன் சகோதர முஃமின் ஒருவனின் குறையைக் காணும் இன்னொரு முஃமின் அவனுக்கு அதனை உணர்த்தி அவனைச் சீர்திருத்த அவனுக்கு வழி காட்டுவது அவசியம் என்பதே இதன் கருத்தாகும்.ஆனால் மக்கள் முன்னிலையில் அவனுக்கு அறிவுரை வழங்க முற்படுவதன் மூலம் அவனுக்கு அவமானம் உண்டாகலாம் என்ற படியால் இது அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ வேண்டுமேயல்லாது மக்கள் மத்தியில் நிகழக் கூடாது.
"நீங்கள் உங்களின் பணத்தின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முடியாது.எனினும் உங்களில் முக மலர்ச்சியுடையவர்களும் நற்குணமுடையவர்களுமே அவர்களின் ஆதரவை பெற முடியும்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸை ஹாகிம் பதிவு செய்துள்ளார்மக்களைச் சந்திக்கும் போது முக மலர்ச்சியுடனும்,நற் குணத்துடனும் இருப்பதுவும்,அவர்களுடன் நல்ல முறையில் உரையாடி அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதும் சிறப்புக்குரியதாகும் என்பதை இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றது.இது எல்லா மனிதனாலும் செய்ய இயலுமான காரியமாகும்.இந்தப் பண்புகள் மூலம்தான் மக்களின் அன்பை ஈர்த்துக் கொள்ளவும்,சமூகத்தில் மக்களிடையே அந்நியோந்நியத்தை தக்க வைத்துக் கொள்ளவும் முடியும்
அபீ பக்ரா ரழியல்லாஹுஅன்ஹூ அறிவிக்கிறார்கள் ஒரு மனிதர் பற்றி நபி ஸல் அவா்களிடம் பிரஸ்தாபிக்கப்பட்டது அவ்வேலைஅவரை அங்கிருந்த ஒரு மனிதர் பாராட்டிப் பேசினார். அப்போது நபி ஸல் அவர்கள் உனக்கு என்ன நேர்ந்து விட்டது நீ உனது நண்பரின் கழுத்தை துண்டித்து விட்டாய் என பலதடவைகள் கூறி விட்டு நீங்கள் உண்மையில் உங்களில் ஒருவரை புகழ, பாராட்ட விரும்பினால் நான் அவரை குறித்து இன்னது நினைக்கிறேன் என்று கூறட்டும். அவர் கருதியது அவ்வாறு இருந்தால் அவரை அவ்விடயம் பற்றி விசாரிக்க அல்லாஹ் போதுமானவன். அத்துடன் அல்லாஹ்வை விடவும் எவரையும் நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஇந்த ஹதிஸில் இறை தூதரின் வழிகாட்டள்கள் பல காணப்படுகின்றன. அவைகளில் ஒன்று முஸ்லிமை பொருத்த வரை ஒருவரை புகழ்வதில்,பாராட்டுவதில் எல்லை மீறி செயற்படுவதிலிருந்து தூர விலகியிருக்க வேண்டும். பிரமை மற்றும் தற்பெருமை ஷைத்தான் நுழைவாயில்களாகும், அவ்வாறு புகழ்வது புகழப்பட்டவரை பெருமையிலும்,பிரமையிலும் மூழ்கடித்து அவரை அழித்து விடும். எனவே ஒரு முஸ்லிம் பிறரைப் பாராட்டுவதிலும் புகழ்வதிலும் நடு நிலமையைக் கடைப்பிடித்து மனிதர்களின் மறைவான விடயங்களை அல்லாஹ்விடமே பொறுப்புச்சாட்டிட வேண்டும்.
எதிரிகள் உள்ள பிரதேசித்துக்கு அல்குர்ஆனைக் எடுத்துச் செல்வதை றஸூல்(ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள் எனஅப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஅல்குர்ஆன் அவமதிப்புக்கு உட்படும் எனும் அபாயம் இருப்பின் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொள்ளதாக இறை நிராகரிப்பாளர்கள் வாழும் பிரதேசங்களுக்கு அல் குர்ஆனை எடுத்துச் செல்வதை நபி ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆனால் அவ்வாறான அவமதிப்புக்கு பெரும்பாலும் உட்படாது என இருக்கும் நிலையில் அல் குர்ஆனை எடுத்துச் செல்வது அனுமதிக்கப்பட்டது.
"நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன்.எல்லா கருமத்திலும் அவன் மென்மையை விரும்புகிறான்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மேலும் "நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன்.அவன் மென்மையை விரும்புகிறான்.அவன் வன்முறைக்கும்,மென்மையின்மைக்கும் வழங்காததை மென்மைக்கு வழங்குகிறான்"என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார் - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஹதீஸ் விளக்கம்:நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். ஆகையால் எல்லா கருமங்களும் மென்மையாக நடை பெறுவதையே அவன் விரும்புகிறான்.மேலும் தன் அடியார்களில் யார் மிருதுவான பண்புடையவராக அழகிய முறையில் ,மக்களுடன் தொடர்புகளை வைத்துக் கொள்கின்றவராக இருக்கின்றாரோ அவரை அவன் நேசிப்பான்.மேலும் வன்மையும்,கடினமும் உடையேராருக்கு வழங்காத கூலியினை மென்மையான பண்புடையோருக்கு அல்லாஹ் வழங்குவான்.மேலும் எல்லா விடயத்திலும் அவன் மிருதுவானவனாக இருக்கின்ற படியால் அது அவனுக்கு மிகவும் விருப்பமானதோர் மகத்தான பண்பாகும்,எனவே இப் பண்பு எப்பொழுதும் ஒரு முஸ்லிமிடம் இருத்தல் வேண்டும்.
ஒரு பயணி ஒரு ஷைத்தான்,இரண்டு பயணிகள் இரண்டு ஷாத்தான்கள்,மூன்று பயணிகளே பிரயாணிகள்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார் - இதனை மாலிக் பதிவு செய்துள்ளார்தனிப் பயணம் வெறுப்பைத் தரும்.இருவர் சேர்ந்த பயணமும் அப்படியே.குறிப்பாக மனித நடமாட்டமில்லாத இடங்களில் இதனை அதிகம் உணரலாம்.எனினும் பயணத்தின் போது கூட்டம் அதிகம் இருக்கும் போது அது விருப்பமாகவும்,சாவகாசமாகவும் இருக்கும்.எனவே ஒருவன் தனியாகப் பயணம் செய்யும் போது அவனுக்குத் தேவையேதும் ஏற்படும் போது அவனுக்கு உதவ எவரும் கிடைக்கும் வரையில் பயணம் அவனுக்கு வெறுப்பைத் தரும் என்பது தெளிவு.அல்லது அவனுக்கு மரணம் சம்பவிக்கின்ற போதும்,ஷைத்தானின் சூழ்ச்சி எதிலும் அவன் சிக்கி விடாமல் இருக்கும் பொருட்டும் அவனுக்குப் பயணத் தோழன் ஒருவன் தேவை என்பதும் தெளிவு மேலும் இருவர் சேர்ந்து பிரயாணம் செய்கின்ற போதும் சில வேளை ஒருவனுக்கு ஏதேனும் விபத்து நிகழ்ந்து விட்டாலோ மற்றவன் தனிமைப்பட்டு விடுவான்.ஆனால் பயணிகளுக்கு வசதியாக அதிவேகப் பாதைகளில் மோட்டார் வண்டிகள் போன்ற வாகணங்களில் பயணம் நடைபெற்று வரும் இந்த யுகத்தில் பயணம் தனிப் பயணமாகக் கருதப்பட மாட்டாது.மேலும் தனியாகப் பயணம் செய்யும் ஒருவன் ஒரு ஷைத்தானெனக் கருதப்படவும் மாட்டான்.ஏனெனில் பாதையில் பயணம் செய்யும் எல்லா பயணிகளும் சேர்ந்து பயணிகள் கூட்டம் போன்று ஆகிவிடுகின்றனர்.இதற்கு உதாரணமாக மக்கா,ரியாதுக்கிடையிலான பிரயணங்களைக் குறிப்பிடலாம்.எனினும் மனிதர்கள் இல்லாத சஞ்சாரமற்ற பாதைகளில் தனியாகப் பயணம் செய்வோர் இந்த ஹதீஸில் அடங்குவர்.
உஸாமா இப்னு ஸைத் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல் அவர்களின் மகளின் மகனை (பேரனை) அவர் மரணத்தருவாயில் இருக்கும் வேளையில் அவருக்கு காட்டப்பட்டது.உடனே நபி (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அப்போது ஸஃத் ரழி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இது என்ன எனக் கேட்க இதுதான் அல்லாஹ் அடியாயர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தி வைத்துள்ள பாசம். அடியார்களில் இரக்கம் காட்டுபவர்களுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டுவான்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுநபிஸல்அவர்களின் அன்புக்குரியர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் உஸாமா இப்னு ஸைத் அவர்களின் செய்தியில் அவர் குறிப்பிடும் போது நபி ஸல் அவர்களின் மகள்களில் ஒருவரின் மகன் மரணத்தருவாயில் இருக்கையில் நபியவர்களை வருமாறு வேண்டி ஒரு தூதுவரை அனுப்பி வைத்தார்கள். இந்த செய்தி நபியவர்களுக்கு கிடைத்ததும் இச்செய்தியை கூற வந்தவரிடம் அவளுக்கு பொறுமையைக் கடைப்பிடித்து நன்மையை எதிர்பார்க்குமாறு சொல்லிவிடும் என்றும் கிடைத்தவைகள்,கொடுத்தவைகள் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்றும் கூறுவதுடன் அனைத்து விடயங்களும் தவணை நிர்ணயிக்கப்பட்டதாக உள்ளது என்றும் சொல்லிவிடு எனக்குறிப்பட்டார்கள் இந்த வாசகத்தை அக்குழந்தையின் தாய்க்கு கூறுமாறு கட்டளையிட்டார்கள். தனது மகள் அனுப்பிய அம்மனிதரிடத்தில் அக்குழந்தையின் தாயிடம் இதனை கூறுமாறு ஏவினார்கள் (இன்னாலில்லாஹி மா அகத வலஹு மா அஃதா) என்பது மிகப்பெரும் வார்த்தையாகும்.அனைத்து விவகாரங்களும் அல்லாஹ்வுக்குச்சொந்தமானதாக இருந்து அதிலிருந்து ஒன்றை உன்னிடம் இருந்து அல்லாஹ் எடுத்துக்கொண்டாலும்,கொடுத்தாலும் அவனின் அதிகாரத்திற்குட்பட்டதாகும். ஆகவே அவன் அதிகாரம் உரிமை பெற்ற ஒன்றை எடுக்கும்போது எந்த வகையில் ஒரு அடியான் கோபமும் வெறுப்பும் கொள்ள முடியும்? இதற்காகத்தான் மனிதனுக்கு சோதனை ஏற்படும் போது"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" என்று கூறுவது நபி வழியாகும் (சுன்னாவாகும்) அதாவது நாம் அல்லாஹ்வுக்குச்சொந்தமானவர்கள் எங்களை அவன் நாடிய விதத்தில் வழி நடாத்துபவன்.அதே போல் நாம் விரும்பியவற்றை எங்களுக்கு முன்பே எடுத்துவிடுவான். எனவே எடுத்தவையும் அவன் கொடுத்வையும் அவனுக்கே உரியன.உனக்குத் தரப்பட்டவை உனக்கு சொந்தமானவை அல்ல,அவை அல்லாஹ்வுக்குரியது.இதனால் அல்லாஹ் நமக்களித்தவற்றை நமக்கு விரும்பிய முறையில் கையாள முடியாது, அவன் அனுமதியளித்தவற்றில் மாத்திரம் தான் அது முடியும். இவற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்னவெனில் எங்களின் உரிமை என்பது அல்லாஹ் எமக்களித்ததினால் கிடைத்த உரிமையாகும் என்பதே. அஜலுன் முஸம்மா எல்லாவற்றுக்ம் குறிப்பிட்ட தவணை உள்ளது எனும் நபியவர்களின் கூற்றை நீ உறுதியாக விசுவாசம் கொண்டால் அல்லாஹ் தந்தவை,எடுத்தவை அவனுக்கே சொந்தமானது என்பதையும் அவற்றுக்கு குறிப்பிட்ட தவணை உண்டு என்பதையும் நீ ஏற்றுக்கொண்டு விட்டாய் என்பது பொருள் அத்துடன் மேற்படி வாசகமானது இறை விதியை மனிதனால் முற்படுத்தியோ பிற்படுத்தியோ மாற்றம் செய்ய முடியாது எனும் கருத்தையும் பிரதிபளிக்கிறது.இதுகுறித்துஅல்லாஹ் "ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு தவணைக்காலம் இருக்கின்றது,அவர்களின் தவணைக் காலம் வந்து விட்டால் அவர்கள் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள். இதனால் கோபம் கொள்வதிலோ அதிர்ச்சியும் ஏக்கமும் கொள்வதினாலோ எவ்விதப் பயனும் கிடையாது.அவைகளால் இறைவிதியை ஒரு போதும் மாற்ற முடியாது என்பதே உண்மையாகும், பின்னர் அத்தூதர் நபி (ஸல்) அவர்களின் மகளிடத்தில் அவர் கூறியதை தெரிவிக்க நபியவர்களின் மகள் நபியை வருமாறு வேண்டி தூதுவரை மீண்டும் அனுப்பி வைத்தார்,அதன் பின் நபியவர்கள் தனது தோழர்களுடன் அவ்விடத்தை அடைந்தார்கள். அப்போது அவரிடத்தில் குழந்தை கொடுக்கப்பட்டது.அந்நேரத்தில் அக்குழந்தையின் உயிர் மூச்சு சென்று கொண்டிருந்தது.இதனைப் பார்த்த நபியவர்கள் அழுது விட்டார்கள்,அவரின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டடியது. உடனே ஸஃத் இப்னு உபாதவும் (கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவர்) அவருடன் இருந்தவர்களும் நபியவர்கள் அதிர்ச்சியால் அழுது விட்டார்கள் என நினைத்து இதென்ன காரியம்?எனக் கேட்க இந்தக் குழந்தையின் மீதிருந்த இரக்கத்தால் அழுதேனே தவிர இறைவிதியில் அதிர்ச்சியுற்று அழவில்லை என்றார்கள். அதனைத் தொடர்ந்து இரக்கமுள்ளவர்களுக்கு தான்அல்லாஹ் இரக்கம் காட்டுகிறான் என்றார்கள். இந்த ஹதீஸ் சோதனைக்குள்ளாக்கப்பட்ட ஒருவருடன் இருக்கும் பாசத்தினால் அவருக்காக அழ முடியும் என்பதற்கான ஆதாரமாக உள்ளது.
நபியவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள். தன் இரு கண்களும் பார்த்திராத ஒன்றைப் பார்த்ததாகக் கூறுவது மிகப்பெரும் அவதூறாகும்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் மிகப்பெரிய பொய் குறித்து தெளிவுபடுத்துகிறார்கள். அதுதான் மனிதன் தூக்கத்தில் தான் ஒன்றை கண்டதாகவும், அல்லது விழிப்போடு இருக்கும் நிலையில் காணாத ஒன்றை கண்டதாகவும் வாதிடுவது மிகப் பெரும் பொய்யாகும். விழித்திருக்கும் நிலையில் தான் ஒன்றை கண்டதாக பொய் சொல்வது கனவில் தான் ஒரு விடயத்தை கண்டதாக சொல்வதை விட மிக ஆபத்தான விடயமாகும், காரணம் யாதெனில் கனவில் ஒன்றைக் காணுவது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து நிகழ்வதாகும். இந்நிலையில் பொய் சொல்வது அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பதை ஒத்ததாகும்.