





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
"அறிந்து கொள்ளுங்கள் இவ்வுலகமும் அதில் இருப்பவைகளும் சபிக்கப்பட்டவைகளாகும் ஆனால் அல்லாஹ்வின் தியானத்தையும் ,அதனுடன் தொடர்புடைய விடயங்களையும்,மற்றும் அங்குள்ள அறிஞர்களையும் அறிவைத் தேடுகிறவர்களையும் தவிர" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார் - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் அவன் அல்லாஹ்வை வணங்க வேண்டும்,அவனின் ஷரீஆவை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே.இதை விட்டும் உலகிலுள்ள அழங்காரங்கள் யாவும் அவனை தூரமாக்குகின்றன,எனவே அவை யாவும் அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்கான வைகளாகவும்,அவனிடம் இழிவானவைகளாகவும் கருதப்படுகின்றன ஆனால் மனிதன்அல்லாஹ்வின் தியானத்தலும்,மற்றும் அது போன்று ஏனைய வழிபாடுகளிலும் ஈடுபட்டிருப்பதுவும்,மேலும் அவன் அறிவைக் கற்பதுவும் அதனைக்கற்றுக் கொடுப்பதுவும் அவன் சிருஷ்ட்டிக்கப்பட்டதன் நோக்கத்தைச் சார்ந்தது என்றபடியால் இவை அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்காக மாட்டாதது.
அபுல் அப்பாஸ் ஸஹ்ல் இப்னு ஸஃத் அஸ்ஸாஇதி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே: ஒரு செயலை எனக்குக் காட்டித்தாருங்கள், அதை நான் செய்தால், அல்லாஹ்வும் மக்களும் என்னை நேசிக்க வேண்டும்' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் 'உலக வாழ்க்கையில் பற்றற்றவராக இருங்கள், அல்லாஹ் உம்மை நேசிப்பான். மக்களிடம் இருப்பவற்றில் ஆசைகொள்ளாதீர்கள், அவர்கள் உம்மை நேசிப்பார்கள்.' எனப்பதிலளித்தார்கள்.
இதனை இமாம் இப்னுமாஜா உட்பட பிறரும் ஹஸனான அறிவிப்பாளர் தொடர்களுடன் பதிவு செய்துள்ளனர்ஒரு மனிதர், அல்லாஹ்வும் மனிதர்களும் நேசிக்கக்கூடிய ஒரு செயலின் பால் தன்னை வழிப்படுத்துமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், உலகில் தனக்கு தேவையற்றதையும், மறுமைக்கு எவ்விதப் பயனையும் பெற்றுத்தராதவதற்றையும் விட்டு விடுவதோடு, மார்கத்தில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவற்றை விட்டும் விலகி இருக்க வேண்டும். அப்போது உம்மை அல்லாஹ் நேசிப்பான் என்றார்கள். அத்துடன் மக்களிடம் உள்ளவற்றில் ஆசைகொள்ளாது இருப்போரை, மக்கள் இயல்பில் விரும்புவார்கள். யார் அவர்களிடம் இருப்பவற்றில் பேராசைகொண்டு அவர்களுக்கு எதிராக போட்டியாக செயற்படும் போது அதனை மக்கள் வெறுப்பர். ஆகவே யார் இவ்வாறு மனிதர்கள் வைத்திருப்பவற்றில் ஆசை கொள்ளாது எளிமையாக இருக்கிறாரோ அவரை மக்கள் பெரிதும் விரும்புவார்கள்.
மிக்தாம் இப்னு மஃதீ கரிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் : 'ஆதமுடைய மகன் நிரப்பக் கூடிய பைகளில் மிகவும் கெட்டது அவனின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நிமிர்த்திக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்'.
இமாம்களான அஹ்மத், திர்மிதீ, அந்நஸாஈ, இப்னு மாஜஹ் ஆகியோர் இதை பதிவுசெய்துள்ளனர்மனிதன் தனது ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளல் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். மருத்துவ அடிப்படைகளுள் ஒன்றாக கருதப்படும் இவ்விடயம் குறித்து எம்மை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வழிப்பபடுத்துகிறார்கள். ஒருவர் உயிருடன் இருக்கவும், தனது அத்தியாவசியப் பணிகளைச் செய்யவதற்கு வலிமை பெறுவதற்கு போதுமான அளவு மட்டுமே சாப்பிடுதல் வேண்டும். நிரப்பப்படும் பாத்திரங்களில் மிகவும் ஆபத்தானது வயிறாகும், வயிறு நிறைய அளவுக்கு மீறி சாப்பிடுவதன் விளைவாக எண்ணற்ற கொடிய நோய்கள் தோன்றும். அந்த நோய்கள் விரைவிலோ காலம் தாழ்த்தியோ, உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ ஏற்பட வாய்ப்புண்டு. ஒருவர் தனது வயிற்றை நிரப்ப வேண்டும் என்றால், அவர் இரைப்பையை மூன்றாகப் பிரித்து, மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும், இன்னொரு பகுதியை பானத்திற்கும், இன்னொரு பகுதியை சுவாசிக்கவும் வைத்துக்கொள்ளல் வேண்டும். காரணம் அவருக்கு நெருக்கடி மற்றும் ஆபத்து ஏற்படாமலிருக்கவும் அல்லாஹ் அவருக்கு கடமையாக்கியுள்ள மார்க்க மற்றும் உலக விவகாரங்களில் உள்ள கடமைகளை சோம்பலின்றி நிறைவேற்றுவதற்குமாகும்.
ஓர் இறைவிசுவாசி ஒரே பொந்தினுல்இரு தடவைகள் தீண்டப்படமாட்டான் என அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஓர் இறைவிசுவாசி ஒரே ஆபத்தில் மீண்டும் மீண்டும் விழக் கூடாது. அவன் படிப்பினை பெற வேண்டும் .ஆகவே அவன் மனஉறுதியும்,எச்சரிக்கையும் விழிப்புணர்வும் மிக்கவனாக இருப்பது அவசியமாகும்
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசி ஒருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார் எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, 'முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளை இடுங்கள்' என்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஅனஸ் (ரழி) அவர்களின் செய்தியில் அவர் குறிப்பிடுகையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சால்வையொன்றை போர்த்திருந்த நிலையில் நான் அவருடன் சென்று கொண்டிருந்தேன். அன்னிஹாயா பீ கரீபில் ஹதீஸில் குறிப்பிடப்பட்டது போன்று 'புர்துன்' என்பதன் கருத்து கோடிடப்பட்ட ஆடை - பிடவை என்பது பொருளாகும் நஜ்ரானீ என்பது யமன் நாட்டிலுள்ள ஒரு பிரதேசமாகும் (ஹாஷியா என்பதன் கருத்து ஒரம் என்பதாகும். 'பஅத்ரகஹூ அஃராபிய்யுன் மின்வராஇஹி' என்பதன் அர்த்தம் அவரைப் பின் தொடர்ந்தார் என்பதாகும். 'ஜபத' என்பதன் கருத்து இழுத்தான் என்பதாகும் அனஸ் ரழி கூறுகிறார்கள், நாட்டுப்புற அரபி அவரின் கழுத்தை இழுத்ததனால் அவர் முழுமையாகத் திரும்பி அவனைப் பார்த்தார் என்பது கருத்தாகும்.அத்துடன் இவ்வாறு அவரைத் திரும்பிப் பார்த்த விடயமானது அந்த நாட்டுப்புற அரபி அவருடன் மோசமான முறையில் நடந்துகொன்டாலும் அவரில் எவ்வித மாற்றமும் தென்படவில்லை என்பதைச் சொல்கிறது. 'ஸப்ஹது ஆதிகி ரஸுலில்லாஹ' என்பது தோளின் ஒரு பகுதி என்பது பொருளாகும்' அவன் கடுமையாக இழுத்ததன் விளைவாக அவரின் தோள்பட்டையில் கீரலை ஏற்படுத்தியது என்ற விடயத்தில் அல்லாஹ் நாட்டுப்புற அரபுகள் குறித்துப் பேசிய வசனம் உண்மையாகும்.அல்லாஹ் குறிப்பிடும் போது 'இந்த நாட்டுப்புற அரபிகள் இறைநிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் மிகவும் கடுமையானவர்கள்.மேலும் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது இறக்கியருளிய மார்க்கத்தின் வரையறைகளை அறிவதிலும், தொடர்ந்தும் அந்நாட்டுப்புற அரபி பேசும் போது முஹம்மதே! என நபிகளின் பெயரை விழித்துப் பேசினார். இதிலிருந்து விளங்குவது யாதெனில் அவர் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒருவராக இருந்திருக்க முடியும் அதனால்தான் பாசத்தின் கடலான நபியவர்களுடன் அவ்வாறு கடுமையாக நடந்து கொண்டார். எனக்கு தருமாறு ஆணையிடுயுங்கள் (முர்லி) என்பதன் கருத்து உமது தோழர்களிடம் எனக்கு தருமாறு கட்டளையிடுங்கள். 'மின் மாலில்லாஹி அல்லதி இன்தக' என்பதன் கருத்து உனது சொந்த பொருளிலிருந்து அல்ல என்பதாகும். இந்த கருத்து வேறொரு அறிவிப்பில் தெளிவாக வந்துள்ளது. உனது சொத்தோ உன்னுடைய தந்தையுடைய சொத்தோ அல்ல என இடம் பெற்றுள்ளது. அதாவது இதன் கருத்து ஸகாத் என்பதாகும். காரணம் ஸகாத்தில் புதிதாக இஸ்லாத்தில் இணைந்தோருக்கு வழங்கப்படுவதினாலாகும். 'பல்தபத இலைஹி ரஸூலுல்லாஹ் (ஸல்)' என்பது நபி (ஸல்) அவரை ஆச்சரியத்தோடு நோக்கினார் என்பது பொருள். பின்பு அவரின் மீதுள்ள கருணையால் சிரித்து விட்டு அவருக்கு நன்கொடை வழங்கி உதவி செய்யுமாறு ஸஹாபாக்களுக்குக் கட்டளைப் பிரப்பித்தார்கள்.
அபூ ஜர்யு ஜாபிர் இப்னு ஸுலைம் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:நான் ஒரு மனிதரைக் கண்டேன்.அவர் சொல்வதை மக்கள் அமுல் படுத்துகின்றனர்.அவர் எதையேனும் சொன்னால் அதனைஅவர்கள் செய்யாமல் இருப்பதில்லை.எனவே அவர் யாரென அவர்களிடம் கேட்டேன் அதற்கு அவர்கள்,அவர்தான் அல்லஹ்வின் தூதர் என்றனர்.அப்பெழுது நான்عليك السلام يا رسول الله அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்,என்று இரண்டு தடவைகள் சொன்னேன்.அதற்கு நபியவர்கள் عليك السلام என்று சொல்லாதீர்கள்.عليك السلام என்பது மரணித்தவர்களுக்குச் சொல்லும் ஸலாம் ஆகையால் السلام عليك என்று சொல்லுங்கள் என்று கூறினார்கள்.அப்பொழுது நான், நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தானே,என்றேன்.அதற்கு அவர்"நான் அல்லாஹ்வின் தூதராவேன்.உங்களுக்கு ஏதேனும் சங்கடம் ஏற்படுமிடத்து நீங்கள் அவனை அழைத்தால் அதனை அவன் இல்லாமலாக்குவான்.வரட்சியான காலம் உங்களை வந்தடையு மிடத்து நீங்கள் அவனை அழைத்தால் உங்களுக்கவன் அதில் பயிர்களை முளைக்கச் செய்வான் மேலும் நீங்கள் ஒரு வரண்ட பூமியில் அல்லது பாலை நிலத்தில் இருக்கும் போது உங்களின் வாகணம் காணாமல் போனால் நீங்கள் அவனை அழைத்தால் அதனை அவன் உங்களிடம் திரும்பி வரும்படி செய்திடுவான்" என்று கூறினார்கள்.அப்பொழுது அவரிடம் நான்,எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்,என்றேன்.அதற்கு அன்னார்"யாரையும் திட்டாதீர்கள்" என்றார்கள்.அதன் பின்னர் நான் எந்த வொரு சுதந்திரவானையோ,அடிமையையோ,ஒட்டகத்தையோ,ஆட்டையோ திட்டவில்லை.மேலும் நன்மையான காரியம் சிரியதாக இருப்பினும் அதனை அற்பமாகக் கருதாதீர்கள்.நீங்கள் மலர்ந்த முகத்துடன் உங்களின் சகோதரனுடன் பேசுவதும் நன்மையான கருமத்தைச் சேர்ந்ததுதான்.மேலும் உங்களின் கைலியை உங்களின் பாதிக் கெண்டைக் கால் வரையில் உயர்த்திக் கொள்ளுங்கள்.நீங்கள் அப்படி செய்ய மறுத்தால் உங்களின் கரண்டைக் கால் வரையில் ஆக்கிக் கொள்ளுங்கள்.கைலியை நீங்கள் தொங்க விடுவதையிட்டு உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன்.அது வொரு பெருமைக்குரிய கருமமாகும்.ஏனெனில் பெருமைக்குரிய காரியத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.மேலும் உங்களின் ஒரு குறையை யாரேனும் ஒருவர் அறிந்திருந்து அதளைக் குறிப்பிட்டு அவர் உங்களைத் திட்டினாலோ,அல்லது உங்களை இழிவுபடுத்தினாலோ அவரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கும் ஒரு குறையைக் குறிப்பிட்டு அவரை இழிவுபடுத்தாதீர்கள்.ஏனெனில் அவரின் அந்தச் செயலின் கேடு அவரையே சாரும்"எனக் கூறினார்கள்,என்று அபூ ஜர்ய் ஜாபிர் இப்னு ஸுலைம் (ரழ) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்ஜாபிர் இப்னு ஸுலைம் (ரழி) அவர்கள் கூறுவதாவது:நான் ஒரு மனிதரைக் கண்டேன்.அவர் சொல்வதை மக்கள் ஏற்று நடக்கின்றனர்.அவர்களுக்கு எதையேனும் அவர் சொன்னால் அதனை அவர்கள் செய்யாமல் இருப்பதில்லை.எனவே அவர்களிடம் அவர் யாரென வினவினேன்.அதற்கு அவர்கள் அவர்தான் அல்லாஹ்வின் தூதர் என்றனர்.அப்பொழுது நான் عليك السلام يا رسول الله، عليك السلام يا رسول الله என்று இரு தடவைகள் கூறினேன்.அதற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் عليك السلام என்று சொல்லாதீர்கள்.ஏனெனில் அது மரணித்தவர்களுக்குச் சொல்லும் ஸலாம்.ஆகையால் السلام عليك.என்று சொல்லுங்கள் என்று கூறினார்கள்.அப்பொழுது நான் தாங்கள் அல்லாஹ்வின் தூதரா? என்றேன் அதற்கு அன்னார்"ஆம் நான் அல்லாஹ்வின் தூதர்தான்.உங்களுக்கு வருமை,மற்றும் துன்பம் ஏதேனும் ஏற்படுமிடத்து என்னை ரஸூலாக அனுப்பிய அவனை பணிவோடும்,தேவை கொண்டும் நீங்கள் அழைத்தால் அவன் உங்களை விட்டும் அந்த இடைஞ்சலை நீக்கி விடுவான்.மேலும் நிலத்தில் பயிர்கள் முளைக்காத வரட்சியான காலம் உங்களைப் பீடிக்குமிடத்து நீங்கள் அவனை அழைத்தால் அவன் அதில் உங்களுக்குப் பயிர்கள் உண்டாகி அது வளரும்படி செய்வான்.மேலும் நீங்கள் தண்ணீரும்,மனிதரும் இல்லாத ஓர் இடத்தில் இருக்குமிடத்து உங்களின் வாகணம் காணாமல் போனால்,அவ்வமயம் நீங்கள் அவனை அழைத்தால் அவன் அதனை உங்களிடம் திரும்பி வரும்படி செய்வான்"என்றார்கள் அப்பொழுது அவரிடம் நான் எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள் என்றேன்.அதற்கு அவர் "யாரையும் திட்டாதீர்கள்" என்றார்கள்.எனவே அதன் பின்னர் நான் என்த வொரு சுதந்திரவானையோ,அடிமையையோ,ஒட்டகத்ததையோ,ஆட்டையோ திட்டியதில்லை.மேலும்"நன்மையான ஒரு கருமம் சிரியதாக இருப்பினும் அது சிரியது என்பதற்காக அதனை அற்பமாகக் கருதி அதனை விட்டு விடாதீரிகள்.மேலும் உங்களின் சகோதரனுடன் பேசும் போது அவரை இழிவு படுத்ததாதீர்கள்.அவருடன் மலர்ந்த முகத்துடன் நீங்கள் பேசுவதும் ஒரு நன்மையான கருமமே.மேலும் உங்களின் கைலியையும் ஏனைய ஆடையையும் உங்களின் பாதிக் கெண்டைக் கால் வரையில் உயர்த்திக் கொள்ளுங்கள்.நீங்கள் அப்படி செய்ய வில்லை யெனில் உங்களின் கரண்டைக் கால் வரையில் அதனை உயர்த்திக் கொள்ளுங்கள் ஏனெனில் இரண்டு கரண்டைக் கால்களுக்கிடையிலும்,பாதி கெண்டைக் கால் வரையிலும் உங்களின் ஆடையை உயர்த்தி வைத்துக் கொள்வதில் தவறில்லை.மேலும் கைலியைத் தொங்க விடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.அது பெருமைக்குரிய செயலாகும்.மேண்மை மிகு அலவ்லாஹ் அதனை விரும்ப மாட்டான்.மேலும் யாரேனும் உங்களின் பாவ கருமங்களையும்,உங்களின் மோசமான செயல்களையும் கூறி உங்களை திட்டினாலோ,நீங்கள் அவரிடமிருக்கும் அத்தகைய கருமங்களைக் கூறி அவரை இழிவு படுத்தாதீர்கள்.ஏனெனில் இறுதி நாளில் அதன் தண்டனை அவருக்குக் கிடைக்கும்.மேலும் சில வேளை அதில் சிலது ஏலவே இவ்வுலகில் கிடைக்கலாம்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு ஸுலைம் (ரழி) அவர்கள் அறிவரக்கின்றார்கள்.
ரஸூல் (ஸல்) அவர்கள் யுத்தம் செய்யும் போது "அல்லாஹ்வே! நீயே எனக்குப் பக்கபலம்,நீயே எனக்கு உதவி செய்கிறவன்,உனது உதவியைக் கொண்டே நான் நடமாடுகிறேன்,உனது உதவியைக் கொண்டே நான் பாய்கிறேன்.மேலும் உனது உதவியைக் கொண்டே நான் சண்டையிடுகிறேன்"என்று கூறுவார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றர்கள்
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்ரஸூல் (ஸல்) அவர்கன் யுத்தம் செய்ய நாடினால்,அல்லது யுத்தம் செய்ய ஆரம்பித்தால் اللهم أنت ناصري ونصيري "அல்லாஹ்வே! நீயே எனக்குப் பக்கபலம்,நீயே எனக்கு உதவி செய்கிறவன்,"என்று கூறுவார்கள்.என்பதன் கருத்தாவது அல்லாஹ்வே! உன் உதவி ஒன்றைக் கொண்டே நான் ஒரு விவகாரத்திலிருந்து இன்னொரு விவகாரத்தின் பக்கம் நகர்கின்றேன்,மேலும் உன் உதவி ஒன்றைக் கொண்டே மார்க்க விரோதிகளின் மீது நான் பாய்கின்றேன்,இன்னும் உதவி ஒன்றைக் கொண்டே நான் அவர்களுடன் யுத்தம் புரிகின்றேன்,என்பதாகும்
இரண்டு பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை.அல்லது அவை அரிதாக நிராகரிக்கப்படுகின்றன.அவையாவன அதான் சொல்லும் போது கேட்கும் துஆவும்,யுத்தத்தில் சிலர் சிலரோடு மோதிக் கொள்ளும் போது கேட்கும் துஆவுமாகும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்ஒரு முஜாஹித்-போராளி யுத்தகளத்தில் இருந்து கொண்டுகேட்கும் துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.என,அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதின் சிறப்பை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.மேலும் அதானும்,இகாமத்தும் சொல்லும் போது ஒரு முஸ்லிம் கேட்கும் துஆவையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்,என அதானின் சிறப்பையும் இந்த ஹதீஸ் தெளிவுபடத்துகிறது.
"நீங்கள் மூவர் ஒன்றாக இருக்கும் போது, நீங்கள் இன்னும் மக்கள் கூட்டதில் கலந்து விடாத வரையில் ஒருவரைத் தவிர்த்து இரண்டு பேர்கள் தனியாக இரகசியம் பேச வேண்டாம்,ஏனெனில் இதனால் அவருக்குக் கவலையுண்டாகும்." என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஉள்ளங்களை அரவணைத்துச் செல்லும்படியும், சபையில் ஒழுங்காக இருந்து கொள்ளும்படியும்,நல்ல முறையில் உரையாடும்படியும் இஸ்லாம் மார்க்கம் பணிக்கின்றது. மேலும் சக முஸ்லிமுக்கு தீமை விளைவிக்கின்ற,அவனை அச்சுறுத்துகின்ற,அவனுக்கு சந்தேககங்களை உண்டு பண்ணுகின்ற சகல காரியங்களையும் அது தடை செய்கிறது.இப்படியான காரியங்களில் ஒன்றுதான் மூன்று பேர்கள் ஒன்றாக இருக்கும் வேளையில் ஒருவரைத் தவிர்த்து இரண்டு பேர்கள் தனியாகப் பேசிக் கொண்டு செல்வதாகும்.ஏனெனில் இது அவருக்கு தீமையை உண்டு பண்ணும்,அவருக்குக் கவலையைத் தரும்.மேலும் அவர் அவ்விருவருடன் இருக்கத் தகுதியற்றவரோ என்று அவருக்குத் தோன்றச் செய்யும்.அத்துடன் அது அவருக்கு தனிமையையும் உணர்த்தும்.எனவேதான் இத்தகைய இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை மார்க்கம் தடை செய்துள்ளது.