





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
" ஒரு மனிதன் ஒரு பெண்ணை முத்தமிட்டு விட்டார்.எனவே அவர் உடனடியாக ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அதனைத் தெரியப்படுத்தினார்.அவ்வமயம் "பகலில் இரு முனைகளிலும்,இரவில் ஒரு பாகத்திலும் நீங்கள் தொழுது வாருங்கள்.நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்"(11:114)எனும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்"அவ்வமயம் அந்த மனிதன்,,அல்லாஹ்வின் தூதரே! இது தனக்குத் தானா? என்றார்.அதற்கு அன்னார் இது எனது உம்மத்தினர் அனைவருக்கும் உரியது,என்றார்கள்.என இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது"அபுல் யஸ்ர் என்ற நபித் தோழர் அன்னிய பெண் ஒருவரை முத்தமிட்டுவிட்டார்.பின்னர் தன்னால் நிகழ்ந்த அந்தச் செயலுக்காக அவர் கவலையடைந்தார்.எனவே அவர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து தான் செய்த செயலை எடுத்துக் கூறினார் அவ்வமயம் அவருடைய விவகாரம் தொடர்பாக"பகலில் இரு முனைகளிலும்,இரவில் ஒரு பாகத்திலும் நீங்கள் தொழுது வாருங்கள்.நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்"எனும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான் அது ஸுப்ஹு,ழுஹர்,மேலும் முன்னிரவின் மஃரிப்,இஷா எனும் தொழுகைகளாகும்.அத்துடன் நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்"என்றும் அல்லாஹ் குறிப்பிட்டான்.அதாவது இந்த ஐங்காலத் தொழுகை சிறு பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக அமைகின்றன.நீ செய்ததுவும் அதில் ஒன்றுதான் என்பதை இந்த வசனம் எடுத்துக் காட்டியது.எனவே அந்த மனிதர் இது தனக்குத்தானா?என்றார்.அதாவது இது தனது செயலுக்கு மாத்திரம் குற்றப் பரிகாரமா,அல்லது எல்லா மக்களுக்கும் பொதுவானதா?என்றார்.அதற்கு நபியவர்கள் "எனது சமூகத்தவர் அனைவருக்கும் உரியது" என்றார்கள்.அதாவது இவ்வாறான செயலைப் புரிகின்ற எனது உம்மத்தினர் யாவருக்கும் இந்த ஐங்காலத் தொழுகை குற்றப் பரிகாரமாக அமையும்,என்றார்கள்".மேலும் அபுல் யஸ்ர் அவர்கள் இந்த சம்பவத்தை விரிவாக எடுத்துக் கூறும் போது "ஒரு பெண் என்னிடம் ஈத்தம் பழம் வாங்க வந்ததாள்.அப்பொழுது அவளிடம் "இதைவிட நல்ல ஈத்தம் பழம் வீட்டில் இருக்கின்றது.என்றேன்.எனவே அவளும் என்னுடன் வீட்டுக்குள் வந்தாள்.பின்னர் நான் அவளை நெருங்கி அவளை முத்தமிட்டேன்.பின்னர் நான் அபூ பக்ர் (ரழி) அவர்களிடம் வந்து அதைச் சொன்னேன்.அதற்கு அவர் இது பற்றி யாரிடமும் கூறாதீர்கள்,இரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்,மேலும் பாவமன்னிப்புத் தேடிக் கொள்ளுங்கள் என்றார்கள்.எனினும் என்னால் பொருமையுடன் இருக்க முடியவில்லை.எனவே நான் உமரிடம் வந்து அவரிடம் இதனைச் சொன்னேன்.அதற்கு அவரும் இது பற்றி யாரிடமும் கூறாதீர்கள்,இரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்,மேலும் பாவமன்னிப்புத் தேடிக் கொள்ளுங்கள் என்றார்கள்.அப்போதும் என்னால் பொருமையுடன் இருக்க முடியவில்லை.எனவே நான் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அதனை எடுத்துக் கூறினேன்.அதற்கு நபியவர்கள்,"தன்னை நரகவாதி என்று நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போரில் ஈடுபட்டிருக்கும் போது அவரின் இல்லாளின் விடயத்தில் நீங்கள் நடந்து கொள்வது இப்படித்தானா"? என்றார்கள்.மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் கீழே பார்த்த வண்ணம் நீண்ட நேரம் மௌணமாக இருந்தார்கள்.அவ்மயம் وأقم الصلاة طَرَفَيِ النَّهَار وزُلَفًا مِنَ اللَّيلِஎன்ற வாக்கியம் முதல் ( ذكرى للذاكرين ) என்வறவாக்கியம் வரையிலான வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.என்றும் மேலும் அபூ யஸ்ர் நான் நபியவர்களிடம் வந்த போது ரஸூல் (ஸல்) அவர்கள் அதனை எனக்கு ஓதிக் காண்பித்தார்கள்.அவ்வமயம் அன்னாரின் தோழர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இது இவருக்கு மாத்திரமா,அல்லது எல்லா ஜனங்களுக்கும் பொது வானதா?"என்றனர்.அதற்கு நபியவர்கள் எல்லோருக்கும் பொதுவானது.என்றார்கள்.என அபூ யஸ்ரின் சம்பவத்தை இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் நமக்கு அறிவித்தார்கள் இதனைத் துர்மிதீ அவர்கள் அறிவித்துள்ளார்கள்.(3115) மேலும் அஷ்ஷைக் அல்பானீ அவர்கள் صحيح وضعيف الترمذي என்ற நூலில் இதனை" ஹஸன்" சிறந்த ஹதீஸ் என இனங் காட்டியுள்ளார்கள்.(3115) இன்னொரு ஹதீஸில் "எந்த வொரு முஸ்லிமாயினும் பாவ காரியம் ஒன்றை செய்த பின்னர் இரண்டு ரக்ஆத்துக்கள் தொழுது விட்டு அந்தப் பாவத்திற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவாராகில் அவரை அல்லாஹ் மன்னிக்காமல் இருக்கமாட்டான்,என்று ரஸூல் (அவர்கள் கூறிவிட்டு"எவரேனும் யாதொரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டு பின்னர் அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை மிக மன்னிப்பவனாகவும்,நிகரற்ற அன்புடையவனாகவும் அவன் காண்பான்"(4:110) எனும் வசனத்தையும்,"அன்றி அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து தங்களுடைய பாவமன்னிப்பைத் தேடுவார்கள்" (3:135) என்ற வசனத்தையும் ஓதினார்கள்,என்று பதிவாகியுள்ளது
"ஒரு மனிதர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே!தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நான் செய்துவிட்டேன்.அதன் தண்டனையை என் மீது நிறைவேற்றுங்கள்,என்றார்"அவ்வமயம் தொழுகையின் நேரம் வந்டது விட்டது.எனவே அவர்,ரஸூல் (ஸல்) அவர்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.தொழுகை முடிந்ததுவும் அவர்,அல்லாஹ்வின் தூதரே!நான் தண்டனைக்குரிய ஒரு குற்றத்தைச் செய்துவிட்டேன்.எனவே அல்லாஹ்வின் கட்டளையை என் மீது நிறைவேற்றுங்கள்.என்றார்.அதற்கு நபியவர்கள்,நீங்கள் நம்முடன் தொழுகையில் இருந்தீர்களா?என்றார்கள்.அதற்கு அவர் ஆம் என்றார்.அப்பொழுது நபியவர்கள்,உமக்கு மன்னிப்பளிக்கப்பட்டுள்ளது,என்றார்கள்.என்று அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஹதீஸ் விளக்கம்:ஒரு மனிதர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! தண்டனைக்குரிய குற்ற மொன்றை நான் செய்துவிட்டேன் ஆகையால் அதன் தண்டனையை என் மீது நிறைவேற்றுங்கள்,என்றார்.அதாவது அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுங்கள் என்றார்.அவ்வமயம் அந்த மனிதர் செய்த குற்றம் என்ன வென்று அவரிடம் ரஸூல் (ஸல்) அவர்கள் விசாரிக்கவில்லை என்று அனஸ் (ரழி) குறிப்பிடுகின்றார்கள்.இதற்கு அந்த மனிதனின் குற்றம் என்ன வென்பதையும் அதற்கு மன்னிப்பளிக்கப்பட்டுவிட்டது என்பதையும் வஹ்யுவின் மூலம் நபியவர்கள் அறிந்திருந்தார்கள்,என்று நியாயம் கூறப்படுகிறது.மேலும் அவ்வமயம் தொழுகையின் நேரம் வந்துவிட்டபடியால் அவர் நபிகளாருடன் தொழுதார்.அதாவது அவ்வமயம் ஏதோவொரு தொழுகையின் அல்லது அஸர் தொழுகையின் நேரம் வந்துவிட்டது ஆகையால்,நபியவர்கள் அதனைத் தொழுதார்கள்.மேலும் அதனை நிறைவேற்றி முடிந்ததுவும்,அன்னார் திரும்பினார்கள்.அப்பொழுது அந்த மனிதர் எழுந்து நின்று,அல்லாஹ்வின் தூதரே! தண்டனை பெறுவதற்குரிய குற்றத்தை நான் செய்துவிட்டேன்.அதன் தண்டனையை என் மீது நறைவேற்றுங்கள்,என்றார்.அதாவது இது சம்மந்தமாக அல்லாஹ்வின் வேதத்திலும்,ஸுன்னாவிலும் என்ன கட்டளை வந்துள்ளதுவோ அதனை என் விடயத்தில் நிறைவேற்றி வையுங்கள்,என்றார்.அப்பொழுது நபியவர்கள் நீங்கள் நம்முடன் தொழவில்லையா? என்றார்கள்.அதற்கு அந்த மனிதர் ஆம் என்றார்.அப்பொழுது ரஸூல் (ஸல்) அவர்கள் உமது பாவம் அல்லது உமது தண்டனைக்கு எது காரணமாக இருந்ததுவோ அது மன்னிக்கப்பட்டுவிட்டது என்றார்கள்.மேலும் இங்கு "ஹத்து" என்று குறிப்பிட்டிருப்பது விபச்சாரம்,மது அருந்துதல் போன்ற குற்றங்களுக்காக இஸ்லாம் விதித்துள்ள தண்டனையை அல்லாமல் எச்சரிக்கை செய்வதற்காக வழங்கும் பொதுவான தண்டனையையே.ஏனெனில் அதற்குரிய தண்டனை எது வென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆகையால் அதனை அப்படியே நிறைவேற்றுவது கடமை.மேலும் அந்த மனிதன் செய்த குற்றம் என்ன வென்று நபியவர்கள் விசாரிக்காமல் இருந்ததன் தத்துவம் யாதெனில்,அது "ஹத்து"க்குரிய குற்மல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தமையே.மேலும் அந்த மனிதர் தான் செய்த குற்றம் யாதென்று அறிவுக்கும் பட்சத்தில் அது "ஹத்து"க்குரிய குற்றமாக இருந்தால் அதனை நிறைவேற்றுவது கடமை.ஏனெனில்,அவர் தொவ்பா செய்திருந்தாலும்,அல்குர்ஆன் குறிப்பிடும் தண்டனைக்கு விதிவலக்கான நியாயம் எதுவும் காணப்பட்டாலன்றி அதனை "தொவ்பா" அழித்து விடாது.எனவே விபச்சாரம் செய்த ஒரு"திம்மீ" காபிர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால் அவருக்குரிய "ஹத்து"விடயமும் அப்படிப்பட்டதே.(அதாவது அதில் அவருக்கு விதிவிலக் களிக்கபடும்.திம்மீ என்பவர் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்து வரும் ஒரு காபிர் குடிமகனாவார்) மேலும் பெரும் பாவத்திற்குத் தொழுகை கப்பாரா-பிராயச்சித்தமாக ஆகுமா,என்பது பற்றி ஹதீஸில் தௌிவாகக் குறிப்பிடப்படவில்லை.எனினும் அப்படி கூறுவதாயின் முன்னர் குறிப்பிட்ட "இஜ்மா"வுக்கு அமைய இந்த ஹதீஸுக்கு விளக்கமளிப்பது கடமை (அதாவது எந்த சந்தர்ப்பத்தில் தொழுகை பெரும் பாவத்திற்குப் பிராயச்சித்தமாக அமையும் என்ற விளக்கத்தைக் கவணத்திற் கொள்வது அவசியம்).
" மனிதரில் சிறந்தவர் நீண்ட ஆயுளைப் பெற்று,நல்ல கிரியைகள் செய்து வந்தவரே"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் அல்அஸ்லமீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார் - இதனை தாரமீ பதிவு செய்துள்ளார்ஹதீஸ் விளக்கம்:நீண்ட ஆயுளைப் பெற்ற ஒரு மனிதன் தன் காலத்தை அல்லாஹ்வின் வழிப்பாட்டில் கழித்து வருங்கால் அவன் அல்லாஹ்வின் நெருக்கத்தை அதிகம் பெறுவான்,ஏனெனில் அடியானின் ஒவ்வொரு நல்லமலும் அவனுக்கு அல்லாஹ்வின் பக்கம் நெருக்கத்தை ஏற்படுத்தித் தரும்.எனவே இவையிரண்டினையும் அடையப் பெற்றவர் மனிதரில் சிறந்தவராக ஆகிவிடுவார்.ஆனால் எவனுடைய ஆயுள் அதிகமாக இருந்த போதிலும் அவனுடைய அமல்கள் நல்லவையாக அமையப் பெறவில்லையோ அது அவனுக்குக் கெட்டதாகவும்,தீமையாகவும் ஆகிவிடும்.எனவேதான் ரஸூல் (ஸல்) அவர்களிடம் நல்ல மனிதன் யார்?என்று வினவப்பட்ட போது "நீண்ட ஆயுளும்,நல்லமலும் பெற்றவர்"என்றும்,கெட்ட மனிதன் யார்?என்று வினவப்பட்ட போது"நீண்ட ஆயுளும் தீய செயலும் பெற்றவன்" என்றும் கூறினார்கள்.இதனை அபூ தாவுத்,திர்மிதீ ஆகியோர் அறிவித்துள்ளனர்.மேலும் அல்பானீ அவர்கள்صحيح الترمذي யில் இதனை ஸஹீஹானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்(5/330)இலக்கம் (2330) மேலும் "கால,நேரம் என்பது வியாபாரியின் மூலதணம் போன்றது.அவன் அதனை இலாபம் ஈட்டித் தரும் விடயத்தில் பயன்படுத்துவது அவசியம்.இதன்படி அவனினின் மூலதணம் அதிகரிக்க அதிகரிக்க இலாபமும் அதிகரித்துச் செல்லும்.எனவே எவன் அதனை நல்லவற்றில் பயன்படுத்தி வருவானோ அவன் ஜெயம் பெறுவான்.எவன் தன் மூலதணதனத்தை பாழாக்கி விடுகின்றானோ அவன் இலாபமடைய மாட்டான்.படு நஷ்ட்டமடைவான்" என்று அத்தீபீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்
"பறட்டைத் தலையும் புழுதியும் படிந்த நிலையி்ல் வீட்டு வாயல்களில் விடப்பட்டோர் பலர் இவர்கள் எதையேனும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினால் அதனை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான்" என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்வறுமையின் காரணமாக தலயைில் எண்ணை தேய்க்காது அதனை சீவி சிங்காரிக்காது பறட்டைத் தலையுடனும்,புழுதி படிந்த ஆடையுடனும் இருக்கின்ற பலர்,அவர்களை மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாததின் காரணமாக அவர்களைத் தங்கள் வீடுகளில் ஏற அவர்கள் அனுமதிப்பதில்லை.அதனால் அவர்கள் வீட்டு வாயல்களில் தடுத்து வைக்கப்படு கின்றனர் இவ்வாறு மக்களிடம் அவர்கள் மதிப்பற்றவர்களாக இருந்த போதிலும் அவர்கள் அல்லாஹ்விடம் மதிப்புள்ளவர்களாக இருக்கின்றனர்.எனவே அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு "அல்லாஹ்வின் மீது ஆணையாக இது நடவாது" என்று கூறுவார்களாயின் அது நடவாது மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக இது நிகழும் என்று அவர் கூறினால் அது நிமழ்ந்து விடும்.இது அவர்களுக்கு அல்லாஹ்விடம் நல்ல கௌரவமும் அந்lதஸ்த்தும் இருக்கின்ற காரணத்தினாலாகும்.அல்லாஹ்விடம் மனிதனின் கௌரவம் மதிப்பிடப்படுவது அவனின் தக்வா எனும் இறை பக்தியின் அடிப்படையிலாகும்."உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றனரோ அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர்"(49:13).என்று அல்லாஹ் கூறுகிறான்.எனவே எவர் மிக இறையச்சம் உடையவராக இருப்பாரோ,அவர் அல்லாஹ்விடம் மிக கண்ணியம் உடையவராக இருப்பார்.மேலும் அவரின் காரியங்களை அல்லாஹ் இலகு படுத்துவான்,அவரின் பிரார்த்தனைகளை அங்கீகரிப்பான்,அவரின் கேடுகளை நீக்குவான்.மேலும் அவர் செய்த சத்தியத்தை செல்லுபடியாக்குவான்.எனினும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ள அவர்கள் அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற,அனுமதித்த விடயங்களையே அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு வேண்டுவார்கள்
தங்களின் வீட்டு வாயலில் இருவர் சத்தமிட்டு சர்சை செய்து கொண்டிருந்தனர்.அவர்களில் ஒருவர் மற்றவரிடம் தனது பலுவைக் குறைத்து தன் மீது கருணை காட்டு மாறு வேண்டினார்.அதற்கு அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அப்படிச் செய்ய மாட்டேன் என்றார்.அவ்வமயம் அவர்களிடம் நபியவர்கள் வந்து "நன்மை செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர் யார்?" என்றார்கள்.அதற்கு அவர் "அல்லாஹ்வின் தூதரே! நான்தான்.எனினும் அவர் எதனை விரும்பினாரோ அது அவருக்குரியதே" என்றார்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஹதீஸ் விளக்கம்:ரஸூல் (ஸல்) அவர்களின் வீட்டு வாயலில் இருவர் நின்று கொண்டு சண்டையிட்டுத் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர்.அது நபிகளாரின் காதில் வீழ்ந்தது.அந்த ஒலியை நன்கு செவிமடுத்த நபியவர்கள்,இருவரில் ஒருவர் தனது பலுவைக் குறைக்கும் படியும்,தன்னுடைய விடயத்தில் கருணை காட்டு மாறும் வேண்டிக் கொண்டிருந்தார்.அதற்கு அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக அதை நான் செய்ய மாட்டேன் என்றார்.அப்பொழுது அவர்களிடம் நபியவர்கள் வந்து"நன்மை செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர் யார்?"என்றார்கள்.அதற்கு அவர்"அல்லாஹ்வின் தூதரே! நான்தான்.எனினும் அவர் எதனை விரும்பினாரோ அது அவருக்குரியதே" என்றார்.அதாவது நான்தான் சத்தியம் பண்ணினேன்.எனினும் என்னுடன் தர்க்கம் போட்டுக் கொண்டவர் அவர் கடன் பட்டதிலிருந்து எதனை நான் தள்ளுபடி செய்ய வேண்டு மென அவர் விரும்புகிறாரோ அது,அல்லது எந்த விடயத்தில் அவருக்குக் கருணை வேண்டு மென்று விரும்புகின்றாரோ அது அவருக்குண்டு.என்று கூறினார்.மேலும் "அவர்கள் எதனைக் குறைக்க விரும்புகின்றனரோ அதனையும் இன்னும் மூலதணத்திலிருந்து எதயேனும் நான் தள்ளுபடி செய்ய வேண்டுமென தாங்கள் நினைத்தால் அதனையும் நான் தள்ளுபடி செய்து விடுகிறேன் என்று அவர் கூறினார்.பின்னர் அவர்கள் எதனைக் குறைக்க விரும்பினரோ அதனை அவர் தள்ளுபடி செய்தார்"என அஹ்மதிலும்,இப்னு ஹிப்பானிலும் பதிவாகியுள்ளது.(அஹ்மத் (24405) (இப் ஹிப்பான் (5032).இந்த ஹதீஸை இந்த பாடத்தின் கீழ் கொண்டு வரக் காரணம் கடன் தொகையைக் குறைக்கச் செய்வதன் மூலமோ அல்லது அதில் ஏதேனும் சலுகையைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமோ அந்த வழக்காளிகள் இருவருக்கும் மத்தியில் ரஸூல் (ஸல்) அவர்கள் நல்லினக்கத்தை ஏற்படுத்த முயன்றார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதே.மேலும் இது போன்றதோர் சம்பவம் புஹாரியிலும் (2424) முஸ்லிமிலும் (1558) பதிவாகியுள்ளது.கஃப் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் அப்துல்லாஹ் இப்னு அபீ ஹத்ரத் அல்அஸ்லமீ என்பார் அடமிருந்து கடன் வாங்கியிருந்தார்.என்றும்,எனவே அவரிடம் அவர் பெற்ற கடனைக் கேட்ட போது தம் மத்தியில் பேச்சு ஆரம்பித்து,இருவரினதும் சப்தம் உயர்ந்துவிட்டது.அவ்வமயம் ரஸூல் (ஸல்) அவர்கள் தங்கள் இருவரையும் தாண்டிச் செல்லுகையில் அன்னார் பாதி என்பதை எடுத்துக் காட்டுவது போன்று தங்களின் கரத்தால் ஜாடை செய்து"கஃபே !" என்றார்கள்.அப்பொழுது தனக்கு அவரிடமிருந்து கிடைக்க வேண்டிய தொகையிலிருந்து பாதியைத் தான் எடுத்துக் கொண்டு மறு பாதியைத் தான் விட்டு விட்டதாகவும்.அவர் குறிப்பிட்டார்.எனவே நல்ல கருமங்கள் செய்யும் விடயத்தில் சகல முஸ்லிம்களும் ஆர்வம் காட்டுவது அவசியமாகும்.எனவே மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் அதில் ஒன்றே.எனவே இருவருக்கு அல்லது இரண்டு குழுக்களுக்கு அல்லது இரண்டு கோத்திரத்திற்கு மத்தியில் பிணக்கு,பிரிவிணை,கோப தாபம்,சண்டை சச்சரவு எதையேனும் கண்டால்,அவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பிரிவினை ஏற்படுத்தும் படியான காரியங்களை நீக்கி அவ்விடத்தில் சகோதரத்துவத்தையும்,பாசத்தையும் உண்டு பண்ண முயற்சித்தல் வேண்டும்.ஏனெனில் இதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.இன்னும் சொல்வதாயின் அது நோன்பாளியினதும்,இரவில் நின்று வணங்குபவனினதும்,தாணதர்மம் வழங்குபவனினதும் அந்தஸ்தைப் பார்க்கிலும் சிறந்ததாகும்.ஏனெனில் "நோன்பு,தொழுகை,தர்மம் என்பவற்றின் அந்தஸ்த்தைப் பார்க்கிலும் சிறந்த விடயம் ஒன்றை உங்களுக்கு அறியத் தரட்டுமா?" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.அதற்கு தோழர்கள் " அல்லாஹ்வின் தூதரே! ஆம்" என்றனர்.அப்பொழுது நபியவர்கள் "முரன் பட்டவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்" என்றார்கள்.இதனை அபூ தாவுத் அறிவித்துள்ளார்கள்.(அபூ தாவுத்,4919) மேலும் அஷ்ஷைக் அல்பானீ அவர்கள் இதனை ஸஹீஹ் அபூ தாவுதில் சரிகண்டுள்ளார்கள்.(இலக்கம் 49109)
"நான் சுவர்க்க வாசலில் நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது அதில் பிரவேசித்தவர்களில் அதிகமானோர் ஏழைகளாக இருந்தனர்.செல்வந்தர்களோ தடுக்கப்பட்டிருந்தனர்.மேலும் நரகவாசிகளுக்கு நரகின் பக்கம் செல்லும்படி உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.நான் நரகவாசலில் நின்று கொண்டிருந்த அச்சமயம் அதில் பிரவேசித்தவர்களில் அதிகமானோர் பெண்களாக இருந்தனர்".என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என உஸாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுசெல்வந்தர்களை விட ஏழைகள்முதலில் சுவர்க்கம் செல்வர்.ஏனெனில் அவர்கள் செல்வமற்ற ஏழைகளாக இருந்தபடியால் அவர்களிடம் அது பற்றிய விசாரணை எதுவும் இருக்காது.இது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் கண்ணியமும்,அவர்கள் உலகில் இழந்த சௌபாக்கியங்களின் நஷ்டயீடுமாகும்.ஆனால் அழியும் பாக்கியங்களான செல்வம்,பட்டம், பதவிகளின் சொந்தக் காரர்களான செல்வந்தர்களோ மறுமையில் பெரிய மைதானத்தில் விசாரணைக்காக நீண்ட நேரம் காத்திருப்பார்கள்.இது அவர்களின் அதிக செல்வம், உயர்ந்த அந்தஸ்து என்பவற்றின் மூலம் அவர்கள் தங்களின் மனோ இச்சைகளுக்கு இசைவாக உலகில் அனுபவித்து வந்த சுகபோகங்களின் விளைவே.ஏனெனில் உலகில் அனுபவித்து வந்த ஹலாலான விடயங்களுக்காக விசாரணையும்,ஹராமான விடயங்களுக்காகத் தண்டணையும் உண்டு.ஆனால் ஏழைகளோ இதனை விட்டும் நீங்கியவர்கள்.மேலும் நரகில் அதிகம் பிரவேசிக்கின்றவர்கள் பெண்களே.காரணம் அவர்கள் அதிகமாக முறையீடு செய்கிறவர்களாகவும், தங்களின் புருஷர்களின் நல்ல கருமங்களை நிராகரிக்கின்றவர்களாகவும் இருக்கின்றனர். என்பதனால்தான்என்பது இந்த ஹதீஸிலிருந்து தெளிவாகிறது.
நாம் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு அவர்களது பாலின் பங்கை எடுத்து வைப்போம். இரவு வேளையில் நபியவர்கள் வருவார்கள் அப்போது தூங்கிக் கிடப்பவர்களை எழுப்பி விடாதபடி விழித்திருப்பவர்களுக்குக் கேட்கும்படியாக அவர்கள் ஸலாம் சொல்வார்கள்.இவ்வாறு வருகை தந்த ரஸூல் (ஸல்) எப்போதும் ஸலாம் சொல்வது போன்றே ஸலாம் சொன்னார்கள்
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்மிக்தாத் (ரழி) அவர்களும் அவருடனிருப்பவர்களும் ஆட்டின் பாலைக் கரந்து தங்களின் பங்கை குடித்து விட்டு ரஸூல் (ஸல்) அவர்கள் வரும் வரையில் அவர்களின் பங்கை எடுத்து வைப்பார்கள்.எனவே இரவு வேளையில் நபியவர்கள் அவர்களிடம் வருவார்கள்.அப்பொழுது அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பர்.அச்சமயம் அதிகம் சப்தமில்லாமல் நடுத்தரத் தொணியில் நித்திரையில் இருப்பவர்களை எழுப்பி விடாதபடி, விழித்திருக்கும் ஏனையவர்களுக்குக் கேட்கும் வண்ணம் அவர்களுக்கு நபியவர்கள் ஸலாம் சொல்வார்கள்.
பஹ்ரெயினிலிருந்து ஜிஸ்யா வரிகளை எடுத்து வர அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரழி) அவர்களை ரஸூல் (ஸல்) அவர்கள் பஹ்ரெயினுக்கு அனுப்பினார்கள்.அவர் பஹ்ரெயினிலிருந்து பணத்தை எடுத்து வந்தார்.அபூ உபைதாவின் வருகைப் பற்றி அன்ஸாரிகள் கேள்வி பட்டனர்.எனவே அவர்கள் பஜ்ருத் தொழுகையில் ரஸூல் (ஸல்) அவர்களுடன் இணைந்து கொண்டனர்.ரஸூல் (ஸல்) அவர்கள் தொழுது முடிந்ததும் திரும்பினார்கள். அச்சமயம் அவர்களைக் கண்ட நபியவர்கள் அவர்களைப் பார்த்துப் புன்முறுவல் செய்தார்கள்.பின்னர் நபியவர்கள் "அபூ உபைதா பஹ்ரெயினிலிருந்து கொண்டு வந்திருக்கும் பொருள் பற்றி நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள் என்று நான் நினைக்கின்றேன்" என்று கூறினார்கள்.அதற்கு அவர்கள் "ஆம் அல்லாஹ்வின் தூதரே!" என்றனர்.அப்போது நபியவர்கள் உங்களுக்கு சுபமங்களம்,உங்களுக்கு மகிழ்ச்சியை தருகின்றவற்றைச் சற்றுப் பாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு வறுமை ஏற்படுவதையிட்டு நான் அஞ்சவில்லை.ஆனால் உங்களுக்கு முந்திய சமூகத்தவர் மீது உலகம் விரித்துத் தரப்பட்டது போன்று உங்களுக்கும் உலகம் விரித்துத் தரப்படும்,என்பதையிட்டே நான் அஞ்சுகிறேன்.ஏனெனில் அப்பொழுது இவ்விடயத்தில் உங்களுக்கு முன்னிருந்தவர்கள் போட்டியிட்டது போன்று நீங்களும் இவ்விடயத்தில் போட்டி போடுவீர்கள்.அப்பொழுது அது அவர்களை அழித்து விட்டது போன்று இது உங்களையும் அழித்து விடும். என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அம்ரிப்னு அவ்ப் அல்அன்ஸாரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஹதீஸ் விளக்கம்:ரஸூல் (ஸல்) அவர்கள் பஹ்ரெயின் வாசிகளிடமிருந்து ஜிஸ்யா வரியை அறவிட்டு வர அபூ உபைதா (ரழி) அவர்களை அனுப்பினார்கள்.அவர் அங்கிருந்து மதீனாவுக்கு வந்ததும்,அதனைக் கேள்வி பட்ட அன்ஸாரிகள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து பஜ்ருத் தொழுகையில் அவருடன் இணைந்து கொண்டனர். அப்போது நபியவர்கள் தொழுகை முடிந்து திரும்பிய போது அங்கு எடுத்து வரப்பட்டுள்ள செல்வத்தைப் பார்வையிட வந்திருந்த அன்ஸாரிளைப் பார்த்துப் புன்முறுவல் செய்தார்கள்.பின்னர் அவர்களிடம்"பஹ்ரெயினிலிருந்து அபூ உபைதா வந்திருப்பதை நீங்கள் கேள்விபட்டுள்ளீர்கள் போலும்"என்றார்கள்.அதற்கு அவர்கள், "ஆம் அல்லாஹ்வின் தூதரே! அதனை நாம் கேள்விபட்டோம். எனவே நமது பங்கைப் பெற்றுக் கொள்ள வந்துள்ளோம்." என்றனர்.எனவே அவர்களுக்கு மகிழ்வைத் தரும்படியான செய்தியைக் கொண்டு அவர்களுக்கு ரஸூல் (ஸல்) அவர்கள் சுபமங்களம் தெரிவித்தார்கள்.மேலும் அவர்களிடம் நபியவர்கள்,செல்வந்தனை விட உண்மைக்கு மிக சமீபமானவன் ஏழை என்றபடியால் அவர்களுக்கு வறுமை உண்டாவதையிட்டுத் தான் அஞ்சவில்லை. எனினும் உலகம் அவர்களுக்குத் திறந்து கொடுக்கப்பட்டு, அதில் அவர்கள் சிக்கி விடுவதையே தான் அஞ்சுவதாகக் கூறினார்கள்.ஏனெனில் அப்பொழுது மனிதனுக்குக் கிடைப்பது போதாமல் ஆகிவிடும்.எனவே மென்மேலும் அதிகம் அடைய வேண்டுமென்பதை அவன் விரும்புவான். எனவே ஹலால்,ஹராம் என்பதைப் பற்றி பொருட்படுத்தாமல் எந்த வழியிலேனும் பொருளீட்ட அவன் முயலுவான்.எனவே உலகின் பால் ஈர்த்துச் செல்கின்ற,மறு உலகை விட்டும் தூரமாக்கும் படியான இந்த இழிவான போட்டி நிகழும் போது அதன் மூலம் அவர்களுக்கு முந்திய சமூகத்தினர் அழிந்து போனது போன்று அவர்களும் அழிந்து போவார்கள்.என்பதே ரஸூல் (ஸல்) அவர்களின் மனவருத்தமாக இருந்தது.
அல்லாஹ்வே! மறுவுலக வாழ்வையன்றி சொகுசான வாழ்வு வேறில்லை.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுநிரந்தர திருப்தியோடு சொகுசாக இருப்பதுதான் வாழ்க்கை.இது மறு உலக வாழ்க்கையில்தான் சாத்தியமாகும்.ஏனெனில் இவ்வலக வாழ்வு எவ்வளவு சொகுசாக இருந்த போதிலும் இறுதியில் அதன் முடிவு அழிவுதான்.