Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way






























Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
"இந்தக் குர்ஆனைக் கவனித்து வாருங்கள்" என்றால் தொடர்ந்து ஓதி வாருங்கள் என்பதாகும், "ஏனெனில், முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் தப்பிவிடக் கூடியதாகும்". உள்ளத்தில் மனனமிட்டு வைத்திருக்கும் அல்குர்ஆனை நபியவர்கள் கயிற்றில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் ஒட்டகத்திற்கு ஒப்பிட்டுள்ளார்கள். அல்லாஹ் தனது பேரன்பினால் இதனை மனனம் செய்யும் மகத்தான பாக்கியத்தை அருளியுள்ளான், அதனை ஓதி, மனனமிடுவதன் மூலம் கவனிப்பது அவசியமாகும். அல்குர்ஆன் மறந்துவிடாமலிருக்க தினமும் கவனித்து ஓதுவதற்காக குறிப்பிட்ட ஒரு பகுதியை வழமையாக்கிக் கொள்ள வேண்டும். இயல்பிலேயே மறந்தவருக்குப் பாதிப்பு ஏதும் கிடையாது. இருப்பினும் அல்லாஹ் மனனமிடும் பாக்கியத்தை அருளிய பின், கவனயீனம், அலட்சியம் காரணமாக மறந்தவருக்கு தண்டனை கிடைக்கலாம் என அஞ்சப்படுகின்றது. எனவே அது உள்ளத்தில் தரிப்பதற்காக அதனைத் தொடர்ந்து ஓதுவதன் மூலம் கவனிக்க வேண்டும். அத்துடன் அதன் சட்டதிட்டங்களை அமுல்படுத்தவும் வேண்டும். ஏனெனில் ஒன்றை அமுல்படுத்துவதால் அது பாதுகாக்கப்பட்டு, நிலைத்திருக்க வழி செய்யும்.
"அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவர்", இது அனைவருக்குமான பொதுவான அறிவிப்பாகும். அல்குர்ஆனைக் கற்றல், கற்பித்தல் ஆகிய இரு பண்புகளையும் ஒருங்கிணைப்பவரே மக்களில் சிறந்தவராகும், அவர் ஒருவரிடம் கற்று, இன்னொருவருக்கு கற்பிக்கின்றார். ஏனெனில் அல்குர்ஆனைக் கற்பதுதான் மிகச் சிறந்த கலையாகும், அதனைக் கற்றல் மற்றும் கற்பித்தலானது அதன் வசனம், கருத்து அனைத்தையுமே குறிக்கின்றது. அல்குர்ஆனை மனனமிட்டு, அதனை மக்களுக்கு, ஓதவும், மனனமிடவும் கற்பிப்பவரும் இதில் அடங்குவார், அதேபோன்று குறித்தமுறையில் கற்றவரும் இதில் அடங்குவார். இரண்டாவது வகையான கருத்தைக் கற்றல் என்பது அல்குர்ஆன் விளக்கவுரைகளைக் கற்பதும் கற்பிப்பதுமாகும். ஒருவர் அதனைக் கற்று, மக்களுக்கு அல்குர்ஆனை விளங்கும் முறை, விளக்கும் முறைகளைக் கற்பித்து, அதன் பொதுவிதிகளைப் போதித்தால் அவரும் இந்தப் பாக்கியத்திற்கு உடந்தையாவார்.
தொழுகை, குர்ஆன் ஓதல் போன்ற வணக்கங்கள் நடைபெறாத மண்ணறைகளைப் போன்று வீடுகளை ஆக்கி விட வேண்டாமென நபியவர்கள் தடுத்ததாக அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள். மண்ணறைகளில் தொழுவது செல்லுபடியாக மாட்டாது என்பதனாலேயே அவ்வாறான வணக்கங்கள் நடைபெறாத வீடுகளை மண்ணறைகள் எனக் கூறப்பட்டுள்ளது. ஸூரா பகரா ஓதப்படும் வீடுகளில் உள்ளவர்களை அந்த ஸூரா, மற்றும் அதன் படி செயல்படுவதன் பரகத் காரணமாக வழிகெடுக்க முடியாதென்பதால் அவ்வாறான வீடுகளிலிருந்து ஷைத்தான் ஓடுவிடுகின்றான் என நபியவர்கள் கூறுகின்றார்கள்.
ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களையும் இரவில் தூங்க முன் ஓதியவரை எந்தவொரு கெடுதி, தீங்கும் தொடாமல் அல்லாஹ் பாதுகாக்கின்றான் என நபியவர்கள் கூறுகின்றார்கள். இதில் வேறு கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு : இரவுத் தொழகைக்குப் பதிலாக இவ்விரு வசனங்களும் போதுமாகும். தூங்கும் போது ஓத வேண்டிய ஏனைய திக்ருகளுக்குப் பதிலாக இது போதுமாகும். இரவுத் தொழுகையில் ஓத வேண்டிய அதி குறைந்த பட்ச அளவு இவ்விரு வசனங்களுடைய அளவாகும். இந்நபிமொழியில் இடம்பெற்றுள்ள வார்த்தை மேற்கண்ட அனைத்து கருத்துக்களையும் உள்ளடக்குகின்றது.
அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓரெழுத்தை ஓதும் ஒரு முஸ்லிமுக்கு அந்த ஓரெழுத்துக்குக் கூலியாக பத்து நன்மைகள் வழங்கப்படுவதாக நபியவர்களைத் தொட்டும் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள். "الم என்பது ஓரெழுத்து எனக் கூற மாட்டேன்" என்றால் அந்த மூன்றெழுத்துக்களின் கூட்டு ஓரெழுத்தெனக் கூற மாட்டேன். மாறாக அதில் ا ஓரெழுத்து, ل ஓரெழுத்து, م ஓரெழுத்தாகும் என்பதே அர்த்தமாகும். எனவே அதனை ஓதியவருக்கு முப்பது நன்மைகள் வழங்கப்படுகின்றன. இது பாரிய ஓர் அருட்கொடையாகவும், பெரிய கூலியாகவும் உள்ளது. எனவே அல்குர்ஆன் ஓதுவதை அதிகப்படுத்துவது அவசியமாகும்.
ஹதீஸ் விளக்கம் : "நபி (ஸல்) அவர்கள் தனது அனைத்து நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவராக இருந்தார்கள்", அதாவது தஸ்பீஹ், லாஇலாஹ இல்லல்லாஹ், தக்பீர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற அனைத்து வித திக்ருகளையும் செய்வார்கள், குர்ஆன் ஓதுவதும் அல்லாஹ்வை நினைவுகூர்தல் என்பதால் அதுவும் இவற்றுள் அடங்கும், ஏன் அதுதான் ஒரு வகையில் மிகச் சிறந்த திக்ராகும். "அனைத்து நேரங்களிலும்" என்றால் சிறு தொடக்கு, பெருந்தொடக்குள்ள நிலைகளிலும் கூட நபியவர்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வார்கள் என்பதாகும். இருப்பினும் குளிப்புக் கடமையான ஜனாபத்து நிலையில் அல்குர்ஆன் ஓதுவதை அறிஞர்கள் விதிவிலக்களித்துள்ளனர். ஏனெனில் அவர்கள் சுத்தமாகும் வரை பார்த்தோ, மனனமாகவோ அல்குர்ஆனை ஓத முடியாது. அலீ (ரலி) கூறுகின்றார்கள் நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையனவராக இல்லாத சந்தர்ப்பங்களில் எமக்கு அல்குர்ஆனை ஓதித் தருவார்கள். ஆதாரம் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா. மாதவிடாய், மற்றும் பிரசவ இரத்தம் ஏற்பட்டுள்ள பெண்ணும் ஜனாபத்துடையவர்களுடன் சேர்வார்களா என்பதில் கருத்து வேற்றுமை உள்ளது. மனனமாக ஓத முடியுமென்பதே வலுவான கருத்தாகும். அவர்கள் ஜனாபத்துடையவர்களுடன் இணைய மாட்டார்கள், ஏனெனில் அவ்விரு நிலைகளும் பெண்களது கட்டுப்பாட்டிலில்லை, அவற்றின் காலங்கள் நீடிக்கின்றன. எந்நிலையிலும் அல்குர்ஆன் ஓதலாம் என்ற பொதுவிதியிலிருந்து பின்வரும் நிலைகள் விதிவிலக்கு அளிக்கப்படுகன்றன : மல, சலம் கழிக்கும் போது, உடலுறவின்போது, குளியலறை, கழிவறைகள் போன்ற அல்குர்ஆனுக்குப் பொருத்தமில்லாத அசுத்தமான இடங்கள்.