





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை செவியேற்றால், அல்லாஹ் எனக்கு எவ்வளவு நன்மை விளைவிக்கிறானோ அந்த அளவிற்கு அதன் மூலம் நான் பயனடைகிறேன்;. நபித் தோழர்களில் ஒருவர் என்னிடம் ஹதீஸ்களைக் கூறினால், நான் அவரிடம் சத்தியம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், அவர் சத்தியம் செய்தால், நான் அவரை நம்புகிறேன். பின்வரும் இந்த ஹதீஸை அபூபக்கர் கூறினார்- அபூபக்கர் உண்மையைச் சொன்னார்; அவர் தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுவதை நான் கேட்டேன், என்று கூறினார்: ஒரு அடியான் பாவமொன்றை செய்து விட்டு அழகிய முறையில் வுழூசெய்து பின் எழுந்து தனது பாவத்திலிருந்திருந்து மீளும் நோக்கில் இரண்டு ரக்அத்துக்களை தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அவனை அல்லாஹ் மன்னிக்காது விட்டுவிடுவதில்லை பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆல இம்ரானின் 135 வசனத்தை ஓதிக்காட்டினார்கள் "மேலும் அவர்கள் மானக்கேடான காரியத்தை செய்துவிட்டாலோ அல்லாது தங்களுக்கு தாங்களே அநியாயம் இழைத்துக்கொண்டாலோ அல்லாஹ்வை நினைவுகூர்ந்து உடனே தங்ளது பாவங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள்".
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, குப்ரா எனும் நூலில் இாம் நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்ஒரு அடியான் பாவமொன்றை செய்து விட்டு அழகிய முறையில் வுழூசெய்து பின் எழுந்து தனது பாவத்திலிருந்திருந்து மீளும் நோக்கில் இரண்டு ரக்அத்துக்களை தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அவனை அல்லாஹ் மன்னிக்காது விட்டுவிடுவதில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்; (மேலும் அவர்கள் மானக்கேடான காரியத்தை செய்துவிட்டாலோ அல்லாது தங்களுக்கு தாங்களே அநியாயம் இழைத்துக்கொண்டாலோ அல்லாஹ்வை நினைவுகூர்ந்து உடனே தங்களது பாவங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள் .பாவத்தை மன்னிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யார்தான் இருக்க முடியும்.அவர்கள் அறிந்து கொண்டே பாவங்களில் -தவறில் நிலைத்திருக்கமாட்டார்கள்). (ஆல இம்ரான் : 135).
அபூ உமாமா அல்பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: “ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, 'ஒரு மனிதன் வெகுமதிக்காகவும்; புகழுக்காகவும் போராடினால், அவனுக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவனுக்கு எதுவும் கிடைக்காது' என்று கூறினார்கள். அவர் மூன்று முறை இக்கேள்வியைக் கேட்டார்; ஒவ்வொரு முறையும் நபி (ஸல்) அவர்கள், 'அவனுக்கு எதுவும் கிடைக்காது' என்று பதிலளித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள், , 'நிச்சயமாக அல்லாஹ் , இதயசுத்தியுடனும், அவனின் திருமுகத்தை நாடியும் மாத்திரம் செய்யும் செயல்கள் தவிர எதனையும் ஏற்றுக்கொள்வதில்லை' எனக் கூறினார்கள்.”
இதனை அந்நஸாயி பதிவு செய்துள்ளார்அல்லாஹ்வின் கூலியையும், மக்களிடமிருந்து புகழையும் நற்பெயரையும் தேடி முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிட்ட ஒருவரின் நிலை குறித்து நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். அவருடைய கேள்வி, அல்லாஹ்விடமிருந்து அவருக்கு ஏதேனும் கூலி கிடைக்குமா என்பதுதான். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் தனது நோக்கத்தில் மற்றவர்களை அல்லாஹ்வுடன் இணை வைத்ததால் அவருக்கு எந்த கூலியும் கிடைக்காது என்று பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவர் மூன்று முறை அதே கேள்வியைக் கேட்டபோதும் நபி (ஸல்) அவர்கள் அதே பதிலையே மீண்டும் கூறினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் ஒருவரின் செயல்கள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சிறந்த அடிப்படையை விவரித்தார்கள். அல்லாஹ்வுக்கு முழுமையாகக் அடிபணிந்து, அவனுக்கு எதையும் அல்லது யாரையும் இணையாக்காமல், அவனுடைய கூலியை மட்டுமே எதிர்பார்த்து செய்யப்படும் செயல்கள் மாத்திரமே அவனால் ஏற்றுக்கொள்ளப்படும் செயல்களாகும். இந்த அடிப்படைக்கு மாற்றமாக அமைந்த எந்தச் செயலையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரு முஸ்லிம் தனக்கு சம்பந்தமில்லாதவைகளை விட்டு விடுவது இஸ்லாத்தின் சிறந்த காரியங்களில் ஒன்றாகும்'.
இந்த ஹதீஸை இமாம் திர்மிதி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந் ஹதீஸில் ஒரு முஸ்லிமின் இஸ்லாத்தின் அழகுகளின் முழுமை மற்றும் அவரது நம்பிக்கையின் நிறைவு தனக்கு சம்பந்தமில்லாததை விட்டுவிடுவதும் தனக்கு எவ்விதத்திலும் பயனில்லாத வார்த்தைகள் மற்றும் செயல்களை விட்டுவிடுவதாகும் என விளக்கியுள்ளார்கள். அல்லது மார்க்க மற்றும் உலகியல் சார் விடயங்களில் பயனற்ற தேவையில்லாத விடயங்களை விட்டுவிடுவதை இது குறிக்கும். அத்துடன் தேவையற்றவற்றில் ஈடுபடுவது தேவையானதை செய்வதை தடுத்து விடும். மறுமை நாளில் இது குறித்து அனைவரும் விசாரிக்கப்படுவர். எது எப்படி இருந்தாலும் மனிதர்கள் யாவரும் அவரவர் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'ஒரு உண்மையான முஃமின் மற்றவர்களை குறை கூறபவனாகவோ சபிப்பவனாகவோ மானக்கேடான செயல்களை செய்பவனாகவோ அசிங்கமானவற்றைப் பேசுபவனாகவோ இருக்க மாட்டான்'.
இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸில், முழுமையான ஈமான் உள்ள ஒருவரிடம் காணப்படக்கூடாத சில விடயங்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒரு உண்மையான முஃமின் மக்களின் பரம்பரையை விமர்சிப்பவராகவோ, அதிகமாக சபிப்பவராகவோ, வார்த்தையிலோ செயலிலோ வெட்கமற்ற செயல்களைச் செய்பவராகவோ இருக்க மாட்டார்.
யா தல் ஜலாலி வல் இக்ராம் (வல்லமையும்கண்ணியமும் மிக்கவனே) என்ற வார்த்தையையைப் பற்றிக் கொள்ளுங்கள்."என நபி (ஸல்)அவர்கள் கூறியாத அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்இந்த ஹதீஸில் ஒரு கட்டளை உள்ளது. அதுதான் (அலில்லு எனும் வார்த்தை. அதன் பொருள் இந்தப் பிரார்த்தனையை பற்றிக்கொள்ளுங்கள் அதிகமாகச் சொல்லுங்கள். அதன் கருத்தாவது எப்போதும் இவ்வார்த்தைகளை உங்களுடையை பிரார்த்தனையில் கூறுவதுடன் உங்களின் நாவுகளிலும் தவழச் செய்யுங்கள். இப்பிரார்த்தனையானது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றை உள்ளடக்கியுள்ளது அல் இஸ்முல் அஃலம் எனும்அல்லாஹ்வின் உயர் நாமத்தை உள்ளடக்கியுள்ளதாக ஒரு கருத்து உள்ளது. காரணம் யாதெனில் அல்லாஹ்வின் அனைத்து ருபூபிய்யத் உலூஹியத் எனும் பண்புகளை இது உள்ளடக்கியுள்ளது என்பதினாலாகும்.
சுவர்க்கமும் நரகமும் விவாதித்துக் கொண்டன.அவ்வமயம் என்னிடம் அடக்கி ஆளுவோரும்,கர்வம் கொண்டவர்களும் நரகம்இருக்கின்றனர் என்று கூறியது.மேலும் சுவர்க்கம், என்னிடம் பலவீனமான மனிதர்களும்,ஏழை மக்களும் இருக்கின்றனர்,என்று கூறியது.அப்பொழுது அல்லாஹ் அவை இரண்டுக்கும் இடையே தீர்ப்பு வழங்கினான். அவ்வமயம் "சுவர்க்கமே!நீ என்னுடைய அருளாக இருக்கின்றாய்.உன்னைக் கொண்டு நான் நாடியவர்கள் மீது அருள்பாளிப்பேன்.என்றும்,நரகமே நீ எனது தண்டனையாக இருக்கின்றாய்.உன்னைக் கொண்டு நான் விரும்பிய வர்களைத் தண்டிப்பேன்.உங்கள் இருவரின் தலங்களையும் நிரம்பச் செய்வது என் பொறுப்பாகும்"என்றும் அல்லாஹ் கூறினான்,என.ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என்று அபூ ஸஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஹதீஸ் விளக்கம்:சுவர்க்கமும் நரகமும் பரஸ்பரம் விவாதித்துக் கொண்டன.அச்சமயம் அவை இரண்டும் தமது ஆதாரங்களை முன் வைத்தன.என்று இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.மறைவான இந்த விடயங்கள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவைகளாக இருந்தாலும்,அதன் மீது ஈமான் கொள்வது நமது கடமை.எனவே நரகம் சுவர்க்கத்தை எதிர்த்து வாதிடும் போது நரகில் அடக்கி ஆளுகின்றவர்களும்,கர்வம் கொண்டவர்களும் இருப்பதாகக் கூறியது.அடக்கி ஆளுகின்றவர்கள் என்பது கொடூரமானவர்களையும்,முரடர்களையும் குறிக்கும்.கர்வம் கொண்டவர்கள் என்பது அதிகாரம் கொண்டவர்களைக் குறிக்கும் இவர்கள்தான் மனிதர்களை இழிவாகப் பார்க்கின்றவர்கள்,உண்மையை மறுக்கின்றவர்கள்.மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் பெருமையைப் பற்றிக் குறிப்பிடும் போது "பெருமை என்றால் உண்மையை மறுத்தலாகும்,மனிதர்களை இழிவாகப் பார்த்தலாகும்"என்றார்கள்.எனவே அடக்கி ஆளுகின்றவர்களும்,கர்வம் கொண்டவர்களுமே பெரும்பாலும் நரகம் செல்கின்றவர்களாக இருந்த போதிலும் சில வேளை மனிதர்களுடன் நலினமாக நடந்து கொள்ளும்,நற்பண்புகள் கொண்டவர்களும் நரகம் செல்வார்கள்.ஏனெனில் உண்மையை ஏற்றுக் கொள்ளும் விடயத்தில் அவர்கள் அடக்கி ஆளுகின்றவர்களினதும், கர்வம் கொண்டவர்களினதும் பண்பைக் கொண்டவர்களாக இருப்பதுவே அவர்கள் நரகம் செல்லக் காரணமாக அமைகின்றன. எனவே அதனைவிட்டும் யாவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.எனவே மனிதர்களின் விடயத்தில் அவர்கள் நலினமானவர்களாக நற்பண்புகளை உடையவர்களாக இருந்த போதிலும், பெரும்பாலான அகங்காரம் கொண்டவர்கள் மற்றும் அடக்கி ஆளுகின்றவர்கள் போன்று அவர்களும் கர்வம் கொண்டு அதிகாரத் தோரணையில் உண்மையை ஏற்க மறுத்ததன் காரணமாக அவர்களின் அந்த நற்பண்புகள் மறுமையில் அவர்களுக்குப் பயன் அளிக்காது.ஆகையால் அவர்களும் அடக்கியாளுகின்றவர்களின்,கர்வம் கொண்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.மேலும் சுவர்க்கமோ தன்னிடம் பலவீனமான மக்களும் ஏழை மக்களும் இருப்பதாகக் கூறியது.ஏனெனில் பெரும்பாலும் அவர்கள்தான் உண்மைக்கு வளைந்து கொடுக்கின்றவர்களாகவும் அதற்கு வழிப்பட்டு நடக்கின்றவர்களாகவும் இருக்கின்றனர்.மேலும் கர்வம் கொண்டவர்களும் அடக்கி ஆளுகின்றவர்ளும் பெரும்பாலும் உண்மையை ஏற்றுக் கொள்வதில்லை,அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதுமில்லை.எனவே இவையிரண்டுக்கும் இடையே அல்லாஹ் தீர்ப்பு வழங்கினான்.அவ்வமயம் அவன் சுவர்க்த்திடம் "சுவர்க்கமே!நீ என்னுடைய அருளாக இருக்கின்றாய்.உன்னைக் கொண்டு நான் நாடியவர்கள் மீது அருள்பாளிப்பேன்.என்று கூறினான்.மேலும்,நரகத்திடம் நரகமே நீ எனது தண்டனையாக இருக்கின்றாய்.உன்னைக் கொண்டு நான் விரும்பியவர்களைத் தண்டிப்பேன்.என்றும் உங்கள் இருவரின் தலங்களையும் நிரம்பச் செய்திடுவது என் பொறுப்பாகும்"என்றும் கூறினான்.இவ்வாறு சுவர்க்த்தையும்,நரகையும் நிரப்பிவிடும் பொறுப்பை அல்வாஹ் ஏற்றுக் கொண்டான்.மேலும் அல்லாஹ்வின் கோபத்தை விடவும் அவனுடைய அருள் விசாலமானது. எனவே மறுமை நாளில் நரக வாசிகள் நரகில் தள்ளப்பட்ட பின்னர்,நரகம் இன்னும் இருக்கின்றார்களா?அவர்களை எனக்குத் தாருங்கள்,எனக்குத் தாருங்கள் என்று கூறும். அப்பொழுது அல்லாஹ் தன் பாதத்தை அதன் மீது வைப்பான்.அவ்வமயம் அல்லாஹ்வின் பாதத்தின் தாக்கத்தகின் காரணமாக நரகம் ஒன்றோடொன்று இணைந்து நெருக்கமாகிவிடும்.அப்பொழுது அது போதும் போதும் என்று கூறும்.அதன் போது நரகம் நிரம்பி விடும்.மேலும் சுவர்க்கமோ மிக விசாலமானது. அதன் அகலம் வானம் பூமியின் விசாலம் கொண்டதாகும்.சுவர்க்க வாசிகள் சுவர்க்கதில் பிரவேசித்த பின்னரும் அதில் இன்னும் அதிகம் இடமிருக்கும்.ஆகையால் அதனை நிரப்பும் பொருப்பினை அல்லாஹ் ஏற்றுக் கொண்டிருந்தபடியால் அல்லாஹ் இன்னும் பல சமூகத்தினர்களை உண்டாக்கி அவர்களையும் சுவர்க்கதில் பிரவேசிக்கச் செய்திடுவான்.இவ்வாறு சுவர்க்கம் நிரம்பி விடும்.
இவ்வுலகம் முஃமினுக்கு சுவர்க்கமும்,காபிருக்கு நரகமுமாகும்" என்று ரஸூல் (ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்முஃமின் இவ்வுலகில் ஒரு சிறைக் கைதியாவான். ஏனெனில் மறுமையில் அவனுக்கு அல்லாஹ் நிரந்தரமான சுகபபோகங்களைத் தயார்படுத்தி வைத்துள்ளான். ஆனால் காபிருக்கு இவ்வுலகம் சுவர்க்கமாகும்.ஏனெனில் மறுமையில் அவனுக்கு நிரந்தரமான வேதனையை அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ளான்,
நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதரில் மேலானவர் அவர்களில் முதலில் ஸலாம் கூறுகின்றவரே.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மேலும் திர்மிதியின் ஒரு அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதரே! இரண்டு மனிதர்கள் சந்திக்கும் போது யார் முதலில் ஸலாம் சொல்ல வேண்டும்? என வினவப்பட்டது.அதற்கு நபியவர்கள் அவர்களில் முதலில் ஸலாம் சொல்கின்றவரே அல்லாஹ்விடத்தில் மிகவும் மேலானவர்.என்று கூறினார்கள்.என பதிவாகியள்ளது.
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்அல்லாஹ்வுக்கு வழிப்படும் விடயத்தில் அவனுக்கு மிகவும் நெருக்கமான மனிதன் தன் சகோதரனுக்கு ஸலாம் சொல்லும் விடயத்தில் முந்திக் கொள்கின்றவனே. ஏனெனில் அவன் அல்லாஹ்விடமிருந்து நன்மையை ஈட்டிக் கொள்ளும் ஆசையில் அல்லாஹ்வுக்கு வழிப்படும் விடயத்தில் தீவிரம் காட்டி அதன் பக்கம் விரைந்து செல்கிறான்.ஆகையால் அல்லாஹ்விடத்தில் அவன் மனிதரில் மேலானவனாகவும்,உயர்ந்த பக்தனாகவும் ஆகிவிடுகிறான்.என்பது இந்த ஹதீஸிலிருந்து தெளிவாகிறது.
நபித் தோழர் ஒருவர் நான் எழுபது அஹ்லுஸ் ஸுப்பாக்களை-திண்ணைத் தோழர்களைப் பார்த்தேன்.அவர்களில் எவரிடமும் தங்களின் மேல் பாகத்தை மறைக்கும் துணி எதுவும் இருக்கவில்லை.அவர்களிடம் ஒரு கைலி அல்லது ஒரு போர்வை மாத்திரமே இருந்தது.அதனை அவர்கள் கழுத்தில் சேர்த்துக் கட்டியிருந்தனர்.அதில் சிலது பாதிக் கெண்டைக் காலையும்,இன்னும் சிலது கரண்டைக் காலையும் எட்டியிருந்தது.எனவே தங்களின் அவ்ரத் தெரிந்து விடுமோ என்பதை விரும்பாத அவர்கள் அதனைத் தம் கைகளால் கூட்டிப் பிடித்துக் கொண்டனர்.என்று கூறினார்,என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்அஹ்லுஸ்ஸுப்பா-திண்ணை வாசிகள் என்போர் தங்களின் வீடு வாசல்களையும்,சொத்து சுகங்களையும் தங்களுக்கு மிகவும் விருப்பமான தங்களின் தாய் நாடு மக்காவில் விட்டு விட்டு அங்கிருந்து வெறுங் கையோடு மதீனாவுக்கு புலம் பெயர்ந்து வந்த ஏழை முஹாஜிரீன்கள்.இந்த திண்ணை வாசிகள் எழுபது பேர்களை விட சற்று அதிகளவிலான ஆண்கள்.மஸ்ஜித் நபியின் கடைக் கோடியில் ஒரு பந்தல்போடப்பட்டிருந்தது.அதுவே அந்த ஸுப்பா-திண்ணையாகும்.அந்த ஏழை முஹாஜிரீன்கள் அதன் கீழே படுத்துக் கொள்வார்கள்.மேலும் கோடைக் காலத்திலும் மாரி காலத்திலும் அவர்கள் அணிந்திருந்த உடை எப்படியிருந்தது,என்பது பற்றிக் குறிப்பிடும் போது அபூ ஹுரைரா (ரழி) அவர்கள்"அவர்கள் ஒருவரிடமாவது தங்களின் மேல் பாகத்தை மறைத்துக் கொள்ளும் படியான ஒரு சட்டையோ அல்லது ஒரு துணியோ இருக்கவில்லை எனவே அவர்கள் ஒரு கைலியை அல்லது ஒரு போர்வையைக் கொண்டு மாத்திரம் தங்களின் கீழ் பாகத்தில் அணிந்து கொண்டனர்."என்று தெரிவிக்கின்றார்கள்.இதன் மூலம் அந்தத் திண்ணைத் தோழர்களிடம் மேல் கீழ் என்று இரண்டு ஆடைகள் இருக்கவில்லை.எனவே அவர்கள் ஒரு துணியைக் கொண்டே மேலிருந்து கீழ் வரைத் தங்களின் மேணியை மறைத்துக் கொண்டனர் என்பதை அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.மேலும் இவர்களின் நிலையைப் பற்றி அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் குறிப்பிடும் போது,அவர்கள் அணிந்து கொள்ளும் ஆடை நன்றாக விரித்துக் கட்டிக் கொள்வதற்குப் போதாமல் இருந்த படியால் சிறு பிள்ளைகளுக்கு அவர்களின் உடையின் ஒரு முணையை அவர்களின் பிடரியில் கட்டி விடுவது போன்று அந்தத் தோழர்கள் தாங்கள் அணிந்து கொள்ளும் துணியின் ஒரு முணையை தங்களின் பிடரியில் கட்டி வைத்தார்கள்.மேலும் அவர்கள் சிலரின் ஆடை கெண்டைக்காலின் பாதி வரையும் இன்னும் சிலரின் ஆடை கரண்டைக்கால் வரையிலும் நீண்டிருந்தது.மேலும் தங்களின் அவ்ரத் வௌியில் தென்படுவதை விரும்பாத அவர்கள் அந்த ஆடையைத் தம் கையால் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள்.என்று குறிப்பிடுகின்றார்கள்.அதாவது அவர்கள் தொழும் வேளையில் ருகூஃ,ஸுஜூதுகளுக்குச் செல்லும் போது தங்களின் அவ்ரத் வௌியில் தெரியா வண்ணம் அந்த ஆடையைக் கூட்டிப் பிடித்துக் கொள்வார்கள்.அதிகமான ஸஹாபாக்களின் நிலை இப்படித்தான் இருந்தது.எனவே அவர்கள் உலகின் பாலும் அதன் அலங்காரத்தின் பக்கமும் சாராமல் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர்.உலகம் அவர்களுக்கு திறந்து கொடுக்கப்பட்ட பின்னரும் அவர்கள் அதில் மூழ்கிவிடவில்லை.மாறாக அல்லாஹ் அவர்களை மரணமடையச் செய்யும் வரை அவர்கள் தங்களிடம் உள்ளதைக் கொண்டு திருப்தி யடைந்தவர்களாக உலகைவிட்டும் பற்றற்று வாழ்ந்து வந்தனர்.என்பதை இந்த ஹதீஸ் தௌிவு படுத்துகின்றது