





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்த பின் அல்லாஹ் தஆலா, 'நான் உங்களுக்கு மேலதிகமாக ஒரு விடயத்தைத் தருவதை விரும்புகின்றீர்களா?' என்று கேட்பான். அப்போது அவர்கள், 'நீ எங்களது முகங்களை பிரகாசமாக்கவில்லையா? எங்களை நரகில் இருந்து பாதுகாத்து, சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா?' என்று கேட்பார்கள். அப்போது அல்லாஹ் திரையை நீக்குவான். அவர்களுக்கு அல்லாஹ்வைப் பார்ப்பதை விட, விருப்பமான வேறொன்றும் வழங்கப்பட்டிருக்கமாட்டாது.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்துவிட்டால், அல்லாஹ் பின்வருமாறு கூறுவதாக நபியவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் உங்களுக்கு ஏதாவது அதிகமாகத் தருவதை விரும்புகின்றீர்களா? அப்போது சுவனவாதிகள் அனைவரும், 'நீ எங்கள் முகங்களைப் பிரகாசமாக்கவில்லையா? எங்களை நரகில் இருந்து பாதுகாத்து, சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா?' என்று கேட்பார்கள். அப்போது அல்லாஹ் திரையை நீக்குவான். அவனது திரை ஒளியாகும். சுவனவாதிகளுக்கு தமது ரப்பைப் பார்ப்பதை விட வேறு விருப்பமான ஒன்றுமே வழங்கப்பட்டிருக்கமாட்டாது.
சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளி வீசும் நட்சத்திரத்தைப் பார்ப்பதை போன்று பார்ப்பார்கள். அந்தஸ்தில் தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத்தாழ்வின் காரணமாக அவ்வாறு பார்ப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இதைக் கேட்ட நபித் தோழர்கள்,"அல்லாஹ்வின் தூதரே அவை நபிமார்கள் தங்குமிடங்களா? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லாவா?" என்று கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள்,"இல்லை, என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக அங்கே தங்குபவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக் கொண்டவர்களே ஆவார்கள்" எனபதிலளித்தார்
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுசொர்க்கவாசிகள் அவர்கள் பெற்றிருக்கும் சிறப்பின் தரங்களுக்கேற்ப அவர்களின் தங்குமிடங்கள் வித்தியாசப்படும். அதாவது அவர்களின் உயர்தரங்களில் உள்ளோர் அவர்களை விட தராதரங்களில் குறைந்தவர்களை காணும் போது அவர்கள் நட்சத்திரங்களை போன்று இருப்பர்.
முஆவியா ரழியல்லஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், "நீ முஸ்லிம்களின் குறைகளை துருவி ஆராய்ந்தால் அவர்களை நீ நாசமாக்கிவிட்டாய், அல்லது நாசமாக்கிட முயற்சித்தவராவாய்" என நபி ஸல் அவர்கள் கூறுவதை நான் செவிமடுத்தேன்.
இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்முஸ்லிம்களின் நிலமைகளை உளவு பார்த்து அவர்களின் குறைகளை தேடி யாரும் அறியாதிருந்த அவர்களின் இழிவான அருவருக்கத்தக்க விடயங்களை துருவி ஆராய்ந்து அவற்றை பகிரங்கப்படுத்துவது கூடாத செயலாகும். அவ்வாறு நீ செய்வதன் மூலம் அவர்களின் வெட்கம் குறைவடைந்து அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியாதிருந்த அந்தப்பாவங்களை அவர்கள் பகிரங்கமாக துணிவுடன் செய்வதற்கு அது வழிவகுக்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் : நிச்சயமாக ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில் தொழுபவர்கள் தன்னை வணங்குவார்கள் என்பதிலிருந்து நிராசையடைந்து விட்டான். ஆனால் அவர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவை ஏற்படுத்துவதில் நம்பிக்கை இழக்கவில்லை.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இங்கு நபி (ஸல்) அவர்கள், தொழுகையாளிகளான முஃமின்கள் அரபுத் தீபகற்பத்தில் மீண்டும் தன்னை வணங்கி, சிலைகளுக்கு ஸுஜூதை செய்வார்கள் என்பதில் ஷைத்தான் நிராசையடைந்து விட்டான் எனவும், எனினும், அவன் பேராசையுடனும், முஸ்லிம்களுக்கு மத்தியில் சச்சரவுகளையும், குழப்பங்களையும், குரோதங்களையும் ஏற்படுத்த முழு மூச்சாக செயற்படுகின்றான் எனவும் அறிவுறுத்துகின்றார்கள்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் எந்த ஒரு பாவத்தையும் செய்யாது விட்டு விடவில்லை என்று கூற, நபியவர்கள் 'நீ அல்லாஹ்வைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறியிருக்கிறீர் அல்லவா? என மூன்று தடவைகள் கேட்டார்கள் அதற்கு அவர் ஆம் என்று கூறினார். அதற்கு நபியவர்கள் 'அந்த வார்த்தைகள் அவற்றை அழித்துவிடும் என்று கூறினார்கள்
இமாம்களான அபூயஃலா, தபரானி, அல்-ழியா அல்-மக்திசி ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் எல்லா வகையான பாவங்கள் மற்றும் குற்றங்கள் அனைத்தையும் செய்து விட்டேன் அவற்றில் சிறியது,பெரியது என எந்த ஒன்றையும் விடாது அனைத்தையும் புரிந்து விட்டேன். இவ்வாறான நிலையில் எனக்கு மன்னிப்புக்கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் 'நீ அல்லாஹ்வைத்தவிர உண்மையான இறைவன் வேறு யாறுமில்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறியிருக்கிறீர் அல்லவா? என்று கேட்டார்கள். இந்தக் கேள்வியை மூன்று தடவைகள் மீண்டும் மீண்டும் அம்மனிதரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் 'ஆம்' நான் சாட்சி கூறியிருக்கிறேன் என பதிலளித்தார்கள். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கலிமதுஸ்ஷஹாதாவின் (அல்லாஹ்வையும் அவனது தூதரான முஹம்மத் ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் ஏற்று சாட்சி கூறுவதன்) சிறப்பு பற்றியும் அவை பாவங்களுக்கு பரிகாரமாக அமைந்துவிடும் என்பதையும், தவ்பா –பாவமீட்சி கோருவது- முன்செய்த பாவங்களை அழித்துவிடுகிறது எனவும் கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அறிஞர்களிடம் பெருமையடித்துக்; கொள்வதற்காகவோ,முட்டாள்களுடன் தர்க்கம் புரிவதற்காகவோ,சபைகளில் (ஏனையோரைவிட) முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவோ,அறிவைத் தேடாதீர்கள்.யார் இவ்வாறு நடந்து கொள்கிறோ அவருக்கு நரகமே கிடைக்கும் ';
இதனை இமாம் இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்அறிஞர்களிடம் தானும் உங்களைப்போன்ற அறிஞர் என்று பெருமையடிப்பதை நோக்காகக் கொண்டு கல்வியை தேடுவதையும், சாமான்ய மனிதர்களுடனும்,அறிவீனர்களுடனும் தர்க்கம் செய்யவதற்கும், சபைகளில் ஏனையோரை தனக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் கல்வி கற்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். இவ்வாறு செய்பவர் அவரின் முகஸ்துதிக்காகவும், அல்லாஹ்வுக்காக என்ற தூய்மையான எண்ணமின்றியும் கல்விகற்றதற்காகவும் நரகத்துக்குரியவராக மாறிவிடுகிறார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக,அன்-நவ்வாஸ் இப்னு ஸிம்ஆன் அல்-அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்;: 738 'அல்லாஹ் நேரான பாதைக்கு ஒரு உதாரணத்தை- உவமையைக் கூறுகிறான்;: பாதையின் இரு ஓரங்களில் திறந்த வாயில்களுடன்; கூடிய இருசுவர்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலுக்கும்; ஒரு திரைசீலை உள்ளது.ஒரு அழைப்பாளர் அந்தப்பாதையின் வாயிலில் நின்று கொண்டு அனைவரும் நேரான இப்பாதையினுள் நுழைந்து நேராக செல்லுங்கள் என கூறுவார் இன்னொரு அழைப்பார் அப்பாதையின் மேலே இருந்து அவர்களில் ஒருவர் அந்த மதிலில் காணப்படும் கதவுகளை திறப்பதற்கு எத்தனித்தால் உமக்கு என்ன நேர்ந்து விட்டது ! இந்தக் கதவுகளை திறக்க வேண்டாம். அவ்வாறு திறந்தால் நீங்கள் அதற்குள் நுழைந்துவிடுவீர்கள் என அவர்களிடம் கூறுவார். இங்கு அஸ்ஸிராத் -நேரான பாதை என்பது இஸ்லாத்தைக் குறிக்கும.; இரு மதில்கள் -சுவர்கள் என்பது அல்லாஹ்வின் சட்ட வரம்புகளையும்,திறந்த கதவுகள் என்பது அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்ட விடயங்களையும்,பாதையின் ஆரம்பத்தில் இருந்த அழைப்பாளர் என்பது அல்லாஹ்வின் வேதத்தையும், பாதையின் மேலே இருந்த அழைப்பாளர் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இருக்கும் அல்லாஹ்வின் உபதேசியையும் குறிக்கும்.'
இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் இஸ்லாத்திற்கு நீண்ட வலைவில்லாத நேரான பாதையொன்றை - உவமையாகக் குறிப்பிடுவதை இந்த ஹதீஸ் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள். பாதையின் இரு ஓரங்களும்; இரு சுவர்களால்,மதில்களால் மூடப்பட்டுள்ளது. அது அல்லாஹ்வின் வரம்புகளை,வரைமுறைகளைக் காட்டும்.அந்த இரு மதில்களிலும் திறந்த பல வாயில்கள் காணப்படும் அவைகள் அல்லாஹ் தடுத்த விடயங்களாகும். அந்த வாயில்கள் யாவும் திரைசீலைகளால் மூடப்பட்டிருக்கும் அப்பாதையில் செல்வோருக்கு வெளியே தெரியமாட்டாது? குறிப்பிட்ட அந்தப்பாதையின் வாயிலின் ஆரம்பாத்தில் நின்று கொண்டு ஒருவர் வழிகாட்டுவார். அவர்கள் அப்பாதையில் செல்லவிருப்போர் அனைவருக்கும்; அங்கும் இங்கும் வலைந்து செல்லாது இப்பாதையில் நேராக செல்லுங்கள் எனக் கூறுவார்.இங்கு குறிப்பிடப்பட்ட அழைப்பாளர் என்பது அல்லாஹ்வின் வேதத்தைக்கு குறிக்கும். இன்னொருவர் பாதைக்கு மேலே இருப்பார், அவர் பாதையில் செல்பவர் வாயிலில் உள்ள திறைச்சீலையை சிறிது அகற்றி பார்க்க எத்தனிப்பார் அப்போது அவர் அவர்களை கண்டிப்பார்; . அவர் அவர்களிடம் உங்களுக்கு என்ன நேர்ந்தது அதனைத் திறக்க வேண்டாம் திறந்தால் அதனுள் நுழைவதை ஒரு போதும் உங்களால் தடுத்துக்கொள்ளவே முடியாது என்று கூறுவார். இரண்டாவது அழைப்பாளர் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தில் இருந்து வழிகாட்டும் அல்லாஹ்வின் உபதேசியாகும்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் எவரேனும் பெரிய, பருமனான, கர்ப்பிணியாக இருக்கும் மூன்று ஒட்டகங்களை தனது குடும்பத்தாரிடம் திரும்பி வரும்போது பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? என நபியவர்கள் கேட்டபோது நாங்கள்: 'ஆம்' என்றோம். அப்போது அவர்கள் 'உங்களில் ஒருவர் தனது தொழுகையில் ஓதும் மூன்று வசனங்கள் அவருக்கு மூன்று பெரிய, கொழுத்த, கர்ப்பிணி ஒட்டகங்களை விட சிறந்தவை.' எனக் கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபியவர்கள் இந்த ஹதீஸில் தொழுகையில் மூன்று வசனங்களை ஓதுவதற்குரிய கூலி ஒரு மனிதர் தனது வீட்டில் மூன்று பெரிய மற்றும் கொழுத்த கர்ப்பிணி ஒட்டகங்கள் இருப்பதை விட சிறந்தது என தெளிவுபடுத்துகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உக்பத் இப்னு ஆமிர் அல்ஜுஹனி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்குர்ஆனை சப்தமிட்டு ஓதுபவர் தர்மத்தை பகிரங்கமாக செய்பவர் போலாவார் மேலும் அல்குர்ஆனை இரகசியமாக ஓதுபவர் இரகசியமாக தர்மம் செய்தவர் போலாவார்
இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்அல்குர்ஆனை சப்தமிட்டு ஓதுபவர் தர்மத்தை பகிரங்கமாக செய்பவர் போலாவார். மேலும் அல்குர்ஆனை இரகசியமாக ஓதுபவர் இரகசியமாக தர்மம் செய்தவர் போலாவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.