





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் காலையை அடைந்தால், இவ்வாறு கூறுவார்கள் : 'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் காலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் மாலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே நாம் மரணிப்போம். உன்னிடமே நாம் எழுப்பப்படுவோம்.' மாலையை அடைந்தால் இவ்வாறு கூறுவார்கள் : 'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் மாலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் காலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே நாம் மரணிப்போம். உன்னிடமே நாம் எழுப்பப்படுவோம்' மேலும் ஒரு தடவை, 'உன்னிடமே மீள்வோம்.' என்றும் கூறினார்கள்.
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜா ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்நபியவர்கள், பஜ்ர் உதயமாகி காலைப்பொழுதை அடைந்தால் இவ்வாறு கூறுவார்கள் : (யா அல்லாஹ்! நாம் உன்னைக் கொண்டே) உனது பாதுகாப்பிற்கு உட்பட்டவர்களாக, உனது அருளால் அரவணைக்கப்பட்டவர்களாக, உன்னை நினைவு கூறுவதில் ஈடுபட்டவர்களாக, உனது பெயரைக் கொண்டு உதவி தேடியவர்களாக, உனது பேருபகாரத்தினால் உள்வாங்கப்பட்டவர்களாக, உனது பாதுகாப்பினாலும், சக்தியினாலும் இயங்குபவர்களாக (காலையை அடைந்தோம்.) (உன்னைக் கொண்டே மாலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே மரணிப்போம்.) இது முந்திய வசனங்களைக் போன்ற அர்த்தங்களை உள்ளடக்கியிருக்கும். அதேநேரம் அதனை மாலைநேரத்திற்கென மாற்றி, இவ்வாறு கூறவேண்டும் : யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் மாலையை அடைந்தோம். உயிர்ப்பிப்பவன் எனும் உனது பெயரைக் கொண்டே நாம் உயிர்வாழ்கின்றோம். மரணிக்கச் செய்பவன் எனும் உனது பெயர் கொண்டே நாம் மரணிக்கின்றோம். (ஒன்றுசேர்க்கப்படுவது உன்னிடமே) அதாவது, மரணத்திற்குப் பின்னர் எழுப்பப்படுவதும், ஒன்று சேர்ந்த பின்னர் பிரிந்து செல்வதும் உன்னிடமே. எமது நிலை, எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும் இவ்வாறே தொடர்ந்திருக்கும். அவனை விட்டு விலகியோ, அவனை விரோதித்தோ என்னால் இருக்க முடியாது. அஸ்ருக்குப் பின்னர், அவர் மாலை நேரத்தில் நுழைந்தவுடன் இவ்வாறு கூறுவார் : இவ்வுலகில் மீள்வதும், மறுமையில் ஒதுங்குவதும் உன்னிடமே. நீயே என்னை உயிர்ப்பிக்கின்றாய்! நீயே என்னை மரணிக்கச் செய்கின்றாய்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் அதிகமாக ஓதும்; பிரார்த்தனையாக ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக!
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அதிகமாக சொற்சுருக்கமும் பொருட்செறிவும் மிக்க துஆக்களை அதிகம் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். அவற்றுள் ஒரு துஆ பின்வருமாறு : ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக! இங்கு குறிப்பிடப்பட்ட உலகின் நலனை என்பது விசாலமான இன்பத்தை தரவல்ல ஹலாலான வாழ்வாதரம்,நல்ல –ஸாலிஹான மனைவி -கண்குளிச்சி மிக்க பிள்ளைகள் -ஓய்வு- நல்ல அமல் -செயல்பாடு போன்ற அனுமதிக்கப்பட்டதும் விரும்பத்தக்கதுமான கோரிக்கைகளைக் உள்ளடக்கியுள்ளது.மறுமை நலன் என்பது கப்ரிலும் இறைசன்னிதானத்திலும் நரகிலும் கிடைக்கவிருக்கும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்ப் பெறுதல்,இறைபொறுத்தத்தைத் பெறல்,நித்தியமான பேரின்பத்தை அடைந்து கொள்ளுதல்,கருணையாளனாகிய அல்லாஹ்விடம நெருக்கத்தைப் பெறுதல் போன்றவற்றைக் குறிக்கும்.
ரைஹான் (குங்குமப் பூ) வாசனைப்பொருள் யாருக்காவது வழங்கப்பட்டால் அதனை மறுக்காது பெற்றுக்கொள்ளுங்கள் ஏனெனில் அது சுமப்பதற்கு இலகுவானதாகவும், நல்ல வாசனையுடையதாகும் இருப்பதினாலாகும்.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்வாசனைப் பொருள் யாருக்காவது அன்பளிப்பாக வழங்கப் பட்டால் அதனை ஏற்றுக்கொள்வது அவசியமாகும் ஏனெனில் அதனை சுமப்பதில் எவ்வித சிரமும் கிடையாது அதே போல் அதன் நறுமணமும் சிறந்ததாகவும் இருக்கிறது.
"எவர் தனக்கு தர்க்கம் புரியும் உரிமஇருந்தும் அதனைத் தவிர்த்து கொண்டாரோ அவருக்கு சுவர்க்கத்தின் ஓரத்திலுள்ள வீட்டையும்,எவர் பரிகாசத்திற்கேனும் பொய் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டாரோ அவருக்கு சுவர்க்கத்தின் மத்தியிலிருக்கும் வீட்டையும்,எவர் தனது பண்புகளை அழகுடையதாக ஆக்கிக் கொண்டாரோ அவருக்கு சுவர்க்கத்தின் மேலிருக்கும் வீட்டையும் பெற்றுக் கொடுப்பதற்கு நான் பொருப்புடையவனாவேன்"என்று ரஸூல் (ஸல்) அவ்கள் கூறினார்கள் என அபூ உமாமா அல்பாஹிலீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்ஹதீஸ் விளக்கம்:தர்க்கத்தில் ஈடுபடுவதன் மூலம் காலம் விரயமாகின்ற படியாலும் அது பகைமைக்குக் காரணமாக அமைகின்ற படியாலும் அதில் ஈடுபடுவதை நபியவர்கள் விரும்ப வில்லை ஆகையால் ஏதேனுமொரு விடயத்தில் தனக்குத் தர்க்கம் புரியும் உரிமை இருந்தும் எவர் அதனைத் தவிர்த்துக் கொண்டாரோ அவருக்கு சுவர்க்கத்திற்கு வெளியே அதன் அருகில் நிழல் தருவதற்காக நிர்மாணிக்கப் பட்டிருக்கும் வீட்டை பெற்றுக் கொடுக்கும் பொருப்பை நபியவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றும் மேலும் உண்மைக்குப் புறம்பாகப் பரிகாசத்திற்கேனும் பொய் பேசுவதை எவர் தவிர்த்துக் கொண்டாரோ அவருக்கு சுவர்க்கத்தின் நடுவிலிருக்கும் வீட்டையும்,நல்லொழுக்கம் உள்ளவருக்கு,அவர் நல்லொழுக்கப் பயிற்சி மூலம் தன் ஆத்மாவை சீர்திருத்திக் கொண்டிருந்தாலும் அவருக்கு சுவர்க்கத்தின் மேலிருக்கும் வீட்டையும் பெற்ருக் கொடுக்கும் பொருப்பைத் தான் ஏற்றுக் கொண்டுள்ளதாக ரஸூல் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் அறியத் தந்துள்ளார்கள்.
அலீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இவ்வாறு கூறினார்கள் : 'அல்லாஹும்மஹ்தினீ, வ ஸத்தித்னீ' (இறைவா! எனக்கு நல்வழி காட்டுவாயாக! நேர்மையானதைச் சரியாகச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திப்பீராக. அப்போது (வழி தவறியவனுக்குச் சரியான) வழியை நீர் காட்டுவதையும், (வளைந்த) அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக' என்று கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், அல்லாஹ்விடம் பின்வருமாறு பிரார்த்தித்துக் கேட்குமாறு கூறுகின்றார்கள் : யா அல்லாஹ்! எனக்கு நல்வழி காட்டுவாயாக! என்னை நேர்வழிப்படுத்துவாயாக! மேலும், நேர்மையானதைச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக! அதில் எனக்கு அருள் புரிவாயாக! எனது எல்லா விவகாரங்களிலும் சரியானவனாக என்னை ஆக்கிவிடுவாயாக! ஹுதா என்பது, சத்தியத்தைப் பொதுவாகவும், விளக்கமாகவும் அறிந்துகொள்வதோடு, உள்ளத்தாலும், உறுப்புக்களாலும் அதனை நடைமுறைப்படுத்த அருள்புரியப்படுவதுமாகும். ஸதாத் என்பது, சத்தியத்தின் மீது சரியாக இருக்கும் விதத்தில், உறுதியாக இருப்பதற்கு அருள் புரியப்படுவதாகும். அதாவது, சொல், செயல், நம்பிக்கை என அனைத்திலும் நிலையான பாதையில் இருப்பதாகும். அர்த்தம் சார்ந்த அம்சங்கள், புலன் சார்ந்த அம்சங்கள் ஊடாகவே தெளிவாகப் புரியப்படுவதால், இந்த துஆவை நீங்கள் ஓதும் போது, (வழி தவறியவனுக்குச் சரியான) வழியை நீர் காட்டுவதையும், (வளைந்த) அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக. நேர்வழிகாட்டலை நீ கேட்கும் போது, பயணத்தில் இருப்பவனுக்கு வழிகாட்டுவதை நினைவில் கொள்வாயாக! ஏனெனில், அவன் வழிதவறிப் போய்விடக் கூடாது என்ற பயத்தில், வலப்பக்கமோ, இடப்பக்கமோ திரும்பாமல் நேராகவே செல்வான். அப்போது தான், ஈடேற்றமாக, தனது இலக்கைத் துரிதமாக அடைந்துகொள்ளலாம். நேர்த்தி என்பதன் மூலம், அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக. அம்பை நேராக நிமிர்த்தி வைக்கும் போது, அது வேகமாகச் சென்று, இலக்கை அடைவதை நீ காண்பாய். எறிபவன் ஒரு இலக்கை நாடினால், அந்த இலக்கை நோக்கி, அம்பை நேராக எறிவான். அவ்வாறு தான் அல்லாஹ்விடம் அந்த நேர்த்தியை ஓர் அம்பின் வடிவில் எண்ணிக் கேளுங்கள். எனவே, நீங்கள் உங்களது பிரார்த்தனை, நேர்வழி எனும் இலக்கையும், நேர்த்தியின் தீர்ச்சையையும் அடைவதைக் கேட்பதாக அமையும். நீங்கள் அல்லாஹ்விடம் நேர்த்தியைக் கேட்கும் போது, இந்த அர்த்தத்தை உள்ளத்தால் எண்ணிக் கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் கேட்பது, எறிவதற்காக நீங்கள் பயன்படுத்தும் ஈட்டியைப் போல இருக்கும்.
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது : (என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காயம் குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், பாத்திமா, நபி (ஸல்) அவர்களை அங்கு காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே நாங்கள் எழுந்திருக்கப் போனோம். அவர்கள், ''நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்' என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில்பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்). அப்போது அவர்கள், ''நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? 'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும்போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்' என்று சொன்னார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா, மாவு அரைத்ததால் தனது கையில் ஏற்பட்ட தழும்புகள்; குறித்து தனது தந்தையிடம் முறையிட்டார். சில கைதிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது, வீட்டு வேலைகளில் தனக்கு உதவ அவர்களில் ஒருவரைக் கேட்க நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அவ்வேளை நபியவர்கள் வீட்டில் இருக்கவில்லை. ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை கண்டு விவரத்தை கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வந்த போது, பாத்திமா (ரழி) அவர்கள் ஒரு பணியாளரைக் கேட்பதற்காக வந்துவிட்டு சென்ற செய்தியைக் ஆஇஷா (ரழி) நபியவர்களிடம் கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பாத்திமா மற்றும் அலி (ரழி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அந்த நேரத்தில், இருவரும் படுக்கையில் படுத்து உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளை நபியவர்கள் அவர்களுக்கு இடையே அமர்ந்தார்கள், அப்போது அலி (ரழி) தனது வயிற்றில் நபியவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை உணர்ந்தார். பின்னர் அவர்கள் இருவரிடமும் நபியவர்கள் கூறினார்கள்: ' நீங்கள் இருவரும் என்னிடம் ஒரு வேலைக்காரனைக் தருமாறு கேட்டதைவிடவும் சிறந்த ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்கள் இருவரும், 'ஆம்' என்றார்கள். அப்போது நபியவர்கள் அவர்களிடம் இவ்வாறு கூறினார்கள் : நீங்கள் இருவரும் இரவில் படுக்கைக்குச் செல்லும்போது, அல்லாஹு அக்பர் என்று 34 முறை சொல்லுங்கள். சுப்ஹானல்லாஹ் என்று 33 முறை சொல்லுங்கள். அல்ஹம்துலில்லாஹ் என்று 33 முறை சொல்லுங்கள். இந்த திக்ர் ஒரு வேலைக்காரனை விட உங்கள் இருவருக்கும் சிறந்தது என்றார்கள்.
அபான் இப்னு உஸ்மான் அவர்கள் கூறுகின்றார்கள் : உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூற, தான் கேட்டுள்ளதாக அறிவிக்கின்றார்கள்: "யார், 'பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் பில் அர்ழி வலா பிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம் (எவனுடைய பெயர் இருக்கும் போது, இவ்வானத்திலோ, பூமியிலோ எந்தவொன்றும் தீங்கை ஏற்படுத்தமாட்டாதோ, அந்த அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (காலையை, மாலையை அடைகின்றேன்) அவன் செவிமடுப்பவனாகவும், அறிந்துள்ளவனாகவும் இருக்கின்றான்) என்று மூன்று தடவை கூறுகின்றாரோ, அவர் காலையை அடையும் வரை, அவருக்கு எந்த திடீர் சோதனைகளும் ஏற்படமாட்டாது. யார் காலையை அடையும் போது அவ்வாறு கூறுகின்றாரோ, அவர் மாலையை அடையும் வரை எந்தத் திடீர் சோதனைகளும் ஏற்படமாட்டாது." அபான் இப்னு உஸ்மானுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இந்த ஹதீஸை அவரிடமிருந்து கற்ற மனிதர் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள், 'ஏன் என்னைப் பார்க்கின்றீர்கள்?' அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. எனினும், எனக்கு இந்த நோய் ஏற்பட்ட தினம், நான் கோபத்தில் இருந்ததால், எனக்கு இதைக் கூற மறந்துவிட்டது.' என்று கூறினார்கள்.
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, குப்ரா எனும் நூலில் இாம் நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள், ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியன் உதிக்க முன்னரும், ஒவ்வொரு நாள் மாலையிலும் சூரியன் மறைய முன்னரும் மூன்று தடவைகள் இந்த துஆவை ஓதுவதன் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்துகின்றார்கள். எவனுடைய பெயர் இருக்கும் போது(அதாவது, கூறப்படும் போது), இவ்வானத்திலோ,(மேலும் அதில் இருந்து இறங்கும் சோதனைகளோ) பூமியிலோ (மேலும் அதில் இருந்து வெளிப்படும்) சோதனைகளோ) எந்தவொன்றும் (அது எவ்வளவு பெரியதாக இருப்பினும்) தீங்கை ஏற்படுத்த மாட்டாதோ, அந்த அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (காலையை, மாலையை) அடைகின்றேன் (அவனைக்கொண்டே அனைத்துத் தீங்குகளை விட்டும் பாதுகாப்பும் தேடுகின்றேன்) அவன் (எமது வார்த்தைகளைக்) கேட்பவனாகவும் (எமது நிலைமைகளை) அறிந்தவனாகவும் உள்ளான். யார் மாலையை அடையும் போது இவ்வாறு கூறுகின்றாரோ, அவர் காலையை அடையும் வரை திடீர் சோதனைகள் எதுவும் அவருக்கு ஏற்படமாட்டாது. யார் காலையை அடையும் போது இவ்வாறு கூறுகின்றாரோ, அவர் மாலையை அடையும் வரை திடீர் சோதனைகள் எதுவும் அவருக்கு ஏற்படமாட்டாது. இந்த ஹதீஸை அறிவிக்கும் அபான் இப்னு உஸ்மான் (ரஹ்) அவர்களுக்கு பக்கவாதம் (அதாவது, உடம்பின் ஒரு பாதி செயலிழந்து போதல்) ஏற்பட்டிருந்தது. எனவே, அவரிடம் இந்த ஹதீஸைக் கற்ற மனிதர் ஆச்சரியமாக அவரைப் பார்த்தார். அப்போது அவர் அந்த மனிதரைப் பார்த்து, 'ஏன் என்னைப் பார்க்கின்றீர்கள்?' அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. எனினும், எனக்கு இந்த நோய் ஏற்பட்ட தினம், நான் அதை ஓதவேண்டும் என அல்லாஹ் விதித்திருக்கவில்லை. எனவே, எனக்கு ஒரு கோபம் ஏற்பட்டபோது, நான் மேற்குறிப்பிட்ட இந்த வசனங்களைக் கூற மறந்துவிட்டேன்.' என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""யார் சத்தியம் செய்யும்போது 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின்மீது சத்தியமாக!' என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படும் வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், ''வா சூது விளையாடுவோம்' என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வதை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கிறார்கள்.; ஏனெனில் ஒரு முஸ்லிம்; அல்லாஹ்வைத் தவிர வேறு யாரின் மீதும் சத்தியம் செய்ய அனுமதிக்கப் படமாட்டார். அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்பவர்கள் - உதாரணமாக, அறியாமை காலத்தில் வணங்கப்பட்ட லாத் அல்லது உஸ்ஸாவின் சிலைகளின் மீது சத்தியம் செய்பவர்கள் - தங்கள் தவறை சரிசெய்து, 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூற வேண்டும். தவ்ஹீத் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை) என்ற வாசகத்தைச் சொல்வது கட்டாயமாகும். அந்தக் கூற்று, இணைவைப்பிலிருந்து ஒருவர் விலகி இருப்பதைப் பற்றிய அறிவிப்பாகவும், ஒருவரின் பொய்யான சத்தியத்திற்கான பரிகாரமாகவும் உள்ளது. ஒரு நபர் தனது நண்பரை சூதாட்டம் விளையாட அழைத்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். சூதாட்டம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தங்களுக்குள் பணத்தை வைத்து போட்டியிடுவதாகும்;. அதில் வெற்றியாளர் அனைத்துப் பணத்தையும் எடுத்துக் கொண்டு, பங்கேற்பாளர்களில் ஒருவர் லாபமடைவார், மற்றவர் நஷ்டமடைவார். இவ்வாறு சூதாட்டத்திற்கு அழைத்தவர் அவர் தனது தவறுக்கு குற்றப்பரிகாரமாக ஏதாவது ஒன்றை தர்மம் செய்வது விரும்பத்தக்கது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸஈத் (ரலி) மற்றும் அபூ ஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள்: ஓர் அழைப்பாளி (மறுமையில்) அழைத்து இவ்வாறு கூறுவார் : நீங்கள் ஒரு போதும் நோய்வாய்ப்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். நீங்கள் ஒரு போதும் மரணிக்காமல் உயிருடனே இருக்கலாம். நீங்கள் ஒருபோதும் முதுமையை அடையாமல் வாலிபத்திலேயே இருக்கலாம். ஒரு போதும் சிரமப்படாமல் இன்பத்திலேயே இருக்கலாம். அதைத் தான் இவ்வசனம் கூறுகின்றது : "நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்."(ஸூரத்துல் அஃராஃப் : 43)
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள், சுவனவாதிகள் சுவனத்தின் இன்பத்தில் இருந்துகொண்டிருக்கும் போது, ஒரு அழைப்பாளி அவர்களை அழைத்து இவ்வாறு கூறுவார் எனக் கூறுகின்றார்கள் : நீங்கள் இங்கு எந்த சிறிய நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக நிரந்தரமாக வாழலாம். நீங்கள், சிறிய மரணமாகிய, உறக்கம் கூட இல்லாமல் மரணமற்ற நிரந்தர வாழ்க்கை வாழலாம். நீங்கள் வயோதிபத்தை அடையாமல் நிரந்தரமாக வாலிபத்திலேயே இருக்கலாம். நீங்கள் கவலையும், சிரமமும் இல்லாமல் இன்பமாகவே வாழலாம். அதைத் தான் இவ்வசனம் கூறுகின்றது : "நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்."(ஸூரத்துல் அஃராஃப் : 43)