





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
ஸஹ்ல் இப்னு முஆத் இப்னி அனஸ் அவர்கள் தனது தந்தை மூலமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அறிவிக்கிறார்கள் : உணவை சாப்பிடும் ஒருவர் (அவர் சாப்பிட்டதன் பின்) 'அல்ஹம்து லில்லாஹில்லதி அத்அமனி ஹாதா வரஸகனீஹி மின்கைரி ஹவ்லின் மின்னி வலா குவ்வா என்று கூறுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்' (திக்ரின் கருத்து ) எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே எனக்கு இந்த உணவை அளித்தான். என்னிடமிருந்து எந்தவித சக்தியும் முயற்சியுமின்றியே எனக்கு இதனை அருளினான்;)
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்உணவை உண்ணும் ஒருவர் அல்லாஹ்வை புகழவேண்டும் என நபியவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் அல்லாஹ்வின் உதவியின்றி அந்த உணவை பெற்றுக்கொள்வதற்கோ அதனை சாப்பிடுவதற்கான சக்தியோ தனக்குக் கிடையாது என்று தனது இயலாமையை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வை முழுமையாக புகழ்வதை இது குறிக்கிறது. இந்தப்பிரார்த்தனையை கூறுபவருக்கு அவர் முன்செய்த சிறிய பாவங்களுக்கான இறைமன்னிப்புக் கிடைக்கும் அதற்கு அவர் தகுதிபெறுகிறார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நற்;செய்தி கூறுகிறார்கள்.
"நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழுபதாயிரம் கடிவாளங்கள் இடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அப்துல்லாஹ் இப்னு மஸஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஹதீஸ் விளக்கம்:நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதனை இழுத்து வருவதற்காக அதில் எழுபதாயிரம் கயிறுகள் கட்டப்பட்டிருக்கும்.ஒவ்வொரு கயிற்றையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆ தட்டப்படமாட்டாது.
இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்இங்கு நபியவர்கள், அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆவின் சிறப்பைத் தெளிவுபடுத்தும் விதமாக, அது தட்டப்படமாட்டாது என்றும், அது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும், எனவே, அந்நேரத்தில் துஆக் கேளுங்கள் என்பதாகவும் கூறுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யா அல்லாஹ்! எனது மார்க்கத்தை எனக்கு சீர்செய்து தருவாயாக! அதுவே எனது விவகாரங்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது. எனது உலக வாழ்வையும் சீர்செய்து தருவாயாக! அதில் தான் எனது வாழ்ப்பு உள்ளது. எனது மறுமையையும் எனக்குச் சீர்செய்து தருவாயாக! அதில் தான் எனது மீளுதல் உள்ளது. இந்த வாழ்க்கையை எனக்கு எல்லா நலவுகளையும் அதிகப்படுத்தித் தரும் ஒன்றாக ஆக்கிவிடு. மரணத்தை எனக்கு அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுதலையாக ஆக்கிவிடு.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபியவர்கள் எந்த நற்குணங்களைப் பரிபூரணப்படுத்த அனுப்பப்பட்டார்களோ, அவற்றின் அடிப்படைகளான, மார்க்கம் சீராக இருத்தல், மேலும், உலகம் மற்றும் மறுமை சீராக இருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும் விதமான ஒரு துஆவைக் கேட்கின்றார்கள். இந்த சுருக்கமான வாசகம், இம்மூன்று அம்சங்களும் சீராக இருப்பதை வேண்டுவதை உள்ளடக்கியுள்ளது. முதலில் மார்க்கம் சீராக இருப்பதைக் கேட்கின்றார்கள். அதைக் கொண்டுதான் ஈருலக வாழ்வும் சீராக இருக்கப் போகின்றது : (யா அல்லாஹ்! எனது மார்க்கத்தை சீராக்கித் தருவாயாக!) அதாவது, அதன் ஒழுக்கங்களை முழுமையான, பரிபூரண விதத்தில் நிறைவேற்ற எனக்கு அருள் புரிவாயாக! (அதுவே எனது விவகாரங்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது) அது எனது அனைத்து விடயங்களையும் பாதுகாக்கக் கூடியது. எனவே, எனது மார்க்கம் சீர்க்கெட்டுவிட்டால், எனது எல்லா விவகாரங்களும் சீர்க்கெட்டுவிடும். நான் நட்டமடைந்து, தோற்றுவிடுவேன். மார்க்கம் எதிர்பார்க்கப்படும் விதத்தில் சீராக இருப்பதென்பது, உலகம் சீராக இருப்பதனாலே முழுமை பெறும் என்பதனால், பின்வருமாறு கூறினார்கள் : (எனது உலக வாழ்வையும் சீர்செய்து தருவாயாக!) அதாவது, எனக்கு உடல் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும், நல்ல மனைவியையும், நல்ல பிச்சலத்தையும், மேலும் எனக்குத் தேவையானவற்றையும் தருவதன் மூலம். அவை ஹலாலானதாகவும், உன்னை வழிப்படுவதற்கு உதவிசெய்யக்கூடியவையாகவும் இருக்கவேண்டும். பின்பு, அதை சீர்செய்து தருமாறு கேட்பதில் உள்ள நியாயத்தைக் கூறுகின்றார்கள் : (அதில் தான் எனது வசிப்பு உள்ளது) அதாவது, நான் வாழும் இடம், எனது வாழ்நாட்கள். (எனது மறுமையையும் எனக்குச் சீர்செய்து தருவாயாக! அதில் தான் எனது மீளுதல் உள்ளது.) அதாவது, உன்னை சந்திப்பதற்காக நான் மீள்வது. அதாவது, எனது அமல்கள் சீராக இருக்கவேண்டும். வணக்கவழிபாடுகள், உளத்தூய்மை மற்றும் நல்ல இறுதிமுடிவு என்பவற்றிற்கு அல்லாஹ் அடியானுக்கு அருள் புரியவேண்டும். நபியவர்கள் உலகிற்குப் பின்னர் மறுமையைக் கூறியிருப்பதற்கான காரணம், முதலாவதுதான், இரண்டாவது சீராக இருப்பதற்கான ஒரு வழிமுறையாக இருக்கின்றது. இவ்வுலகில் யார், அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப சீராக இருக்கின்றாரோ, அவரது மறுமை சீராக அமைந்துவிடும். அவர் சுபீட்சத்துடன் இருப்பார். (இந்த வாழ்க்கையை) மேலும், நீண்ட வாழ்நாளையும் (எனக்கு எல்லா நலவுகளையும் அதிகப்படுத்தித் தரும் ஒன்றாக ஆக்கிவிடு.) நான் நல் அமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். (மரணத்தை) அதை அவசரமாகத் தருவதை (எனக்கு அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுதலையாக ஆக்கிவிடு) அதாவது, சோதனைகள், குழப்பங்கள், மேலும், பாவங்களையும், பராமுகத்தையும் கொண்டு சோதிக்கப்படுதல் என்பவற்றில் இருந்தும் மேலும், உலக சிரமங்களில் இருந்தும், அதன் தெளிவற்ற நிலையில் இருந்தும்,
அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவை ஓதுவார்கள் : என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும், அறியாமையையும், எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும், என்னை விட நீ அறிந்தவைத்திருப்பவற்றையும் மன்னித்து விடுவாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களையும், நான் வேண்டுமென்று செய்தவற்றையும், எனது அறியாமையையும், எனது பரிகாசத்தையும் மன்னித்துவிடுவாயாக! அவை அனைத்துமே என்னிடம் உள்ளன. யா அல்லாஹ்! நான் முற்படுத்தியவைகள், பிற்படுத்தியவைகள், மறைத்துக்கொண்டவைகள், பகிரங்கப் படுத்தியவைகள் என அனைத்தையுமே மன்னித்துவிடுவாயாக! நீயே முற்படுத்துபவன்! நீயே பிற்படுத்துபவன்! நீ அனைத்திற்கும் சக்தியுள்ளவன்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபியவர்களின் கருத்தாழமிக்க துஆக்களில் பின்வரும் துஆவும் ஒன்றாகும்: என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும் (பாவங்களையும்) அறியாமையையும் (நான் அறியாமல் நடந்தவற்றையும்) மன்னித்துவிடுவாயாக! எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும் (எனது பொடுபோக்குகளையும், நான் அளவு கடந்ததையும்) என்னை விட நீ அறிந்துவைத்திருப்பவற்றையும் (நீ அவற்றை அறிந்து வைத்துள்ளாய், நானோ அவற்றை மறந்துள்ளேன்) மன்னித்துவிடுவாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களையும், நான் வேண்டுமென்று செய்தவற்றையும், (நான் பாவம் என அறிந்துகொண்டே செய்தவற்றையும்) எனது அறியாமையையும், எனது பரிகாசத்தையும் (பரிகாசமாக நான் செய்தவற்றையும், இவ்விரு நிலைகளிலும் என்னிடமிருந்து வெளிப்பட்ட அனைத்தையும்) மன்னித்துவிடுவாயாக! அவை அனைத்துமே என்னிடம் உள்ளன. (மேற்கூறிய குறைகள், பாவங்கள் அனைத்துமே என்னிடம் உள்ளன.) யா அல்லாஹ்! நான் முற்படுத்தியவைகள் (கடந்த காலத்தில் செய்தவைகள்) பிற்படுத்தியவைகள் (பின்னர் செய்யப்போகும் பாவங்கள்) மறைத்துக்கொண்டவைகள் (இரகசியமாகச் செய்தவைகள்) பகிரங்கப்படுத்தியவைகள் (பகிரங்கமாகச் செய்தவைகள்) என அனைத்தையுமே மன்னித்து விடுவாயாக! நீயே முற்படுத்துபவன்! நீயே பிற்படுத்துபவன்! (நீ நாடியோரை உனது அருளை நோக்கி முற்படுத்தி, உனக்குப் பொருத்தமானவற்றைச் செய்ய அவர்களுக்கு அருள் புரிகின்றாய். நீ நாடியவர்களுக்கு உதவி புரியாமல், கைவிட்டுப் பிற்படுத்துகின்றாய். எனவே, நீ பிற்படுத்துபவற்றை யாராலும், முற்படுத்தவோ, நீ முற்படுத்தும் விடயங்களை யாராலும் பிற்படுத்தவோ முடியாது.) நீ அனைத்திற்கும் சக்தியுள்ளவன். (முழுமையான சக்தியும், பூரணமான நாட்டமும் கொண்டவன். நீ நாடிய அனைத்தையும் நீ செய்வாய்!)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நபியவர்கள் காலையையும், மாலையையும் அடையும் போது பின்வரும் துஆக்களை விடாமல் ஓதி வருவார்கள்: யா அல்லாஹ்! இவ்வுலகிலும், மறுமையிலும் பாதுகாப்பை நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும், எனது உலகத்திலும், எனது குடும்பத்திலும், எனது சொத்துக்களிலும் பாதுகாப்பையும், மன்னிப்பையும் நான் கேட்கின்றேன். யா அல்லாஹ்! எனது மறைவிடங்களை மறைத்துவிடுவாயாக! எனது பயத்தை நீக்கி பாதுகாப்பைத் தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலும், பின்னாலும், எனது வலப்புறத்தாலும், இடப்புறத்தாலும், எனக்கு மேலாலும் என்னைப் பாதுகாத்துவிடுவாயாக! எனக்குக் கீழால் எதிர்பார்க்காமல் நான் பிடிக்கப்படுவதை விட்டும் உனது மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன்.
இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னு மாஜா மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறதுநபியவர்கள் காலையையும், மாலையையும் அடையும் போது பின்வரும் துஆக்களை விடாமல் ஓதி வருவார்கள்: யா அல்லாஹ்! இவ்வுலகிலும், மறுமையிலும் (ஈருலகிலும்) உன்னிடம் (நோய்கள், சோதனைகள், உலகச் சிரமங்கள், மனோ இச்சைகள், மார்க்க ரீதியான குழப்பங்கள் அனைத்தையும் விட்டு) பாதுகாப்பை நான் கேட்கின்றேன். யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் (அதாவது, இணைவைப்பு, பித்அத்கள், பாவங்கள் ஆகியவற்றை விட்டும்) எனது உலகத்திலும் (அதாவது, சோதனைகள், நோவினைகள், தீங்குகள் ஆகியவற்றை விட்டும்) எனது குடும்பத்திலும் (அதாவது, எனது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களில்) எனது சொத்துக்களிலும் (எனது பணம் மற்றும் தொழிலில்) பாதுகாப்பையும் (குறைகளை விட்டு ஈடேற்றத்தையும்) (பாவங்களை விட்டு) மன்னிப்பையும் நான் கேட்கின்றேன். யா அல்லாஹ்! எனது மறைவிடங்களை மறைத்து விடுவாயாக! (அதாவது, என்னிடமுள்ள குறைகளையும், தவறுகளையும், கவனயீனத்தையும் மறைத்து, எனது பாவங்களை மன்னித்து விடுவாயாக) எனது பயத்தை (அதாவது அச்சத்தையும், திடுக்கத்தையும்) நீக்கி பாதுகாப்பைத் தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலும், பின்னாலும், எனது வலப்புறத்தாலும், இடப்புறத்தாலும், எனக்கு மேலாலும் என்னை (சோதனைகள் மற்றும் நோவினைகளை விட்டுப்) பாதுகாத்துவிடுவாயாக! (இங்கு எல்லாத் திசைகளில் இருந்தும் பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் கேட்டமைக்கான காரணம், சோதனைகளும், ஆபத்துக்களும் மனிதனை வந்தடைவது இந்தத் திசைகளில் ஒன்றின் ஊடாகவே) எனக்குக் கீழால் எதிர்பார்க்காமல் (நான் பராமுகமாக இருக்கும் நிலையில் திடீரென நிலத்துக் கீழ் இழுத்தெடுக்கப்படுவதன் மூலமாக) பிடிக்கப்படுவதை விட்டும் உனது மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன்.
நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பின்வரும் துஆவைக் கற்றுத் தந்ததாக, ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யா அல்லாஹ்! நலவுகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் உன்னிடம் கேட்கின்றேன். தீமைகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புக் கேட்கின்றேன். யா அல்லாஹ்! உனது அடியாராகிய உனது நபி உன்னிடம் கேட்டவற்றில் சிறந்தவற்றை நான் உன்னிடம் கேட்கின்றேன். உனது அடியாராகிய உனது நபி உன்னிடம் பாதுகாப்புக் கேட்டவற்றில் தீயவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கேட்கின்றேன். யா அல்லாஹ்! நான் உன்னிடம் சுவர்க்கத்தையும், அதனிடம் சமீபமாக்கி வைக்கும் வார்த்தைகள் அல்லது செயற்களையும் கேட்கின்றேன். மேலும் நான் உன்னிடம் நரகத்தை விட்டும், அதனிடம் சமீபமாக்கி வைக்கும் வார்த்தைகள் அல்லது செயற்களை விட்டும் பாதுகாப்புக் கேட்கின்றேன். மேலும் என் மீது விதித்துள்ள அனைத்து விதிகளையும் நன்மையானதாக ஆக்கிவிடுமாறும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
இமாம்களான இப்னு மாஜா மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டதுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கருத்துச் செரிவுமிக்க ஒரு துஆவைக் கற்றுக்கொடுக்கின்றார்கள். அது நான்கு துஆக்களை உள்ளடக்கியுள்ளது : முதலாவது : அனைத்து நன்மைகளையும் உள்ளடக்கியது: யா அல்லாஹ்! நலவுகளில், உடனடியான (அப்போது கிடைக்கக்கூடிய,) தாமதமான (தூரமான,) (நீ கற்றுக்கொடுத்து) நான் அறிந்த, (தூய்மையான உன்னுடைய அறிவில் மாத்திரம் உள்ள) நான் அறியாத அனைத்தையும் உன்னிடம் கேட்கின்றேன். இங்கு இவ்விடயம், அனைத்தையும் அறிந்த, அறிவுமிக்க, நுட்பமான அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டப்படுகின்றது. எனவே அல்லாஹ், ஒரு முஸ்லிமுக்கு அதில் மிகச் சிறந்ததையும், அழகானதையும் தெரிவு செய்து கொடுப்பான். 'தீமைகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புக் கேட்(டு ஒதுங்கிக் கொள்)கின்றேன்.' இரண்டாவது பிரார்த்தனை : இது முஸ்லிம்களை பிரார்த்தனையில் வரம்பு மீறுவதிலிருந்து பாதுகாக்கிறது. யா அல்லாஹ்! உனது அடியாராகிய உனது நபி (முஹம்மத் (ஸல்) அவர்கள்) உன்னிடம் கேட்டவற்றில் சிறந்தவற்றை நான் உன்னிடம் கேட்(டு வேண்டிக் கொள்)கின்றேன். உனது அடியாராகிய உனது நபி (முஹம்மத் (ஸல்) அவர்கள்) உன்னிடம் பாதுகாப்புக் கேட்டவற்றில் தீயவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கேட்(டு ஒதுங்கிக் கொள்)கின்றேன். இங்கு நபியவர்கள் எவற்றைக் கேட்டார்கள் என வரையறுத்துக் கூறாமல், பொதுவாக, அவர்கள் தமக்காக எதையெல்லாம் கேட்டார்களோ அவற்றைத் தருமாறு பிரார்த்தித்து வேண்டுவதாகும். மூன்றாவது : சுவனத்தில் நுழையவும், நரகை விட்டுத் தூரமாகவும் பிரார்த்தித்து வேண்டுவதாகும். அதுதான் ஒவ்வொரு முஸ்லிமினதும் தேவையும், அவனது அமல்களின் நோக்கமுமாகும். 'யா அல்லாஹ்! நான் உன்னிடம் சுவர்க்கத்தை (அடைந்து கொள்வதை)யும், அதனிடம் சமீபமாக்கி வைக்கும் வார்த்தைகள் அல்லது (உன்னைத் திருப்திப்படுத்தும் நல்ல) செயற்களையும், கேட்கின்றேன். மேலும் நான் உன்னிடம் நரகத்தை விட்டும், அதனிடம் சமீபமாக்கி வைக்கும் வார்த்தைகள் அல்லது (உன்னைக் கோபப்படுத்தும் பாவச்) செயற்களை விட்டும் பாதுகாப்புக் கேட்கின்றேன். (ஏனெனில், உனது அன்பைக் கொண்டு மாத்திரமே கெட்ட செயற்களில் இருந்து பாதுகாப்புப் பெறமுடியும்)' நான்காவது துஆ : அல்லாஹ்வின் விதியில் திருப்தியைத் தருமாறு துஆக் கேட்டல். 'என் மீது விதித்துள்ள அனைத்து விதிகளையும் நன்மையானதாக ஆக்கிவிடுமாறும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.' (அதாவது அல்லாஹ் என் மீது விதித்துள்ள அனைத்து விதிகளையும் எனக்கு நன்மையைத் தருபவையாக ஆக்கி விடுமாறு நான் கேட்கின்றேன்) இது, அல்லாஹ்வின் விதியைத் திருப்தியோடு ஏற்றுக் கொள்ளவைக்குமாறு கேட்கும் துஆவாகும்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு துஆக் கேட்பவர்களாக இருந்துள்ளார்கள் : யா அல்லாஹ்! உனது அருட்கொடைகள் நீங்குவதை விட்டும், உனது பாதுகாப்பு மாறிவிடுவதை விட்டும், உனது சோதனைகள் திடீரென வருவதை விட்டும், உனது அனைத்துக் கோபங்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபியவர்கள் நான்கு விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றார்கள் : முதலாவது : யா அல்லாஹ்! உனது (உலக, மார்க்க) அருட்கொடைகள் நீங்குவதை விட்டும், (மேலும், இஸ்லாத்தில் நான் நிலையாக இருக்கவும், அருட்கொடைகளை இல்லாதொழிக்கும் பாவங்களில் வீழ்ந்துவிடாமல் தூரமாக இருக்கவும்) உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். இரண்டாவது : 'உனது பாதுகாப்பு மாறிவிடுவதை விட்டும்,' (அதாவது, அது சோதனையாக மாறிவிடுவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். உன்னிடம் நிரந்தரமான பாதுகாப்பையும், வலிகள் மற்றும் நோய்களை விட்டுப் பாதுகாப்பையும் கேட்கின்றேன். மூன்றாவது : உனது தண்டனைகள் (சோதனைகளாகத்) திடீரென வருவதை விட்டும். சோதனைகளும் தண்டனைகளும் திடீரென வந்து விட்டால், தவ்பா செய்து சரிசெய்து கொள்வதற்கான ஒரு காலம் இருக்காது. அதனால் வரும் சோதனை மிக மோசமானதாக இருக்கும். நான்காவது : 'உனது அனைத்துக் கோபங்களை விட்டும்' (மேலும், உனது கோபத்தை ஏற்படுத்தும் காரணிகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன்.) நீ யார் மீது கோபம் கொள்கின்றாயோ, அவர் தோற்று, நட்டப்பட்டு விடுவான். இங்கு நபியவர்கள் பன்மையைக் குறிக்கும் வார்த்தையைக் கொண்டுவரக் காரணம், அல்லாஹ்வின் கோபத்திற்குக் காரணமாக அமையும், அனைத்து, சொற்கள், செயற்கள் மற்றும் நம்பிக்கைகளை உள்ளடக்கிக் கொள்ளுவதற்காகும்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு துஆக் கேட்பார்கள் : யா அல்லாஹ்! கடன் சுமையை விட்டும், எதிரியின் அடக்குமுறையை விட்டும் மேலும், எதிரிகளின் நகைப்பை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
இமாம்களான நஸாஈ மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபியவர்கள் இங்கு சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள் : யா அல்லாஹ்! கடன் சுமையை (அது என்னை மிகைப்பதையும், அதன் கவலை மற்றும் சோதனைகளையும்) விட்டும் நான் (வேறு யாரிடமும் இல்லாமல்) உன்னிடம் (ஒதுங்கிப்) பாதுகாப்புத் தேடுகின்றேன். அவற்றைத் திருப்பிச் செலுத்திவிட உதவுமாறு நான் உன்னிடம் கேட்கின்றேன். இரண்டாவது : 'எதிரியின் அடக்குமுறையை விட்டும்' (அதாவது, எதிரி என்னை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். அவனுடைய தொல்லைகளைத் தடுத்து, அவனை வெற்றிகொள்ள உதவுமாறு உன்னிடம் கேட்கின்றேன்.) மூன்றாவது : 'எதிரிகளின் நகைப்பு' அதாவது, முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகள் மற்றும் துன்பங்களில் அவர்கள் மகிழ்ச்சியடைவது.