





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தன் கரத்தை விரித்து வைத்திருக்கிறான் (நீட்டுகிறான்)! இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் தன் கரத்தை விரித்து வைத்திருக்கிறான்! சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (கியாமத் நாள்) வரை ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறான்!
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்தனது அடியார்களின் தவ்பாவை –பாவமீட்சியை- அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஒரு அடியான் பகலில் ஒரு பாவத்தை –குற்றத்தை-செய்து இரவில் தனது பாவத்தை மன்னிக்குமாறு தவ்பா செய்தால் அவனது தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கொள்கிறான். ஒரு அடியான் இரவில் பாவமொன்றை செய்து பகலில் அதற்காக தவ்பா செய்தால் அவனின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் அடியார்களின் தவ்பாவினால் மகிழ்ச்சியடைந்து அதனை ஏற்றுக்கொள்ளும் முகமாக அவனின் கரத்தை நீட்டுகிறான். மேற்கிலிருந்து சூரியன் உதயமாகும் வரையில் தவ்பாவின் -பாவமீட்சிக்கான- வாயில் திறந்தே இருக்கும். இது உலக முடிவைக் குறிக்கும். மேற்கில் சூரியன் உதயமானால் தவ்பாவின் வாயில் மூடப்பட்டு விடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'நீ வெட்கப்படாவிட்டால், நினைத்தை செய்துகொள்' என்பது, முந்திய நபித்துவ வாசகங்களில் இருந்து மக்கள் கற்றுக்கொண்ட ஒன்றாகும்.'
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்முன்சென்ற நபிமார்களின் உபதேசமாக வந்து, மக்களுக்கிடையில் பரிமாறப்பட்ட, வாழையடி வாழையாக இந்த சமுதாயத்தின் ஆரம்பம் வரை வந்தடைந்த ஓர் அம்சமாவது, 'நீ எதைச் செய்யவிரும்புகின்றாயோ, அதைப் பார். அது வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருந்தால், விட்டுவிடு. அவ்வாறில்லாவிட்டால், அதைச் செய். ஏனெனில், அசிங்கமானதைச் செய்யத் தடையாக இருப்பது, வெட்கமே! யாரிடம் வெட்கம் இல்லையோ, அவர் எல்லா மானக்கேடான பாவங்களிலும் மூழ்கிடுவார்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபியவர்கள் எனது தோல்புயத்தைப் பிடித்து, இவ்வாறு கூறினார்கள் : 'நீ இவ்வுலகில் ஒரு பரதேசியைப் போன்று, அல்லது ஒரு வழிப்போக்கனைப் போன்று இருந்துகொள்.' இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள் : 'நீ மாலையை அடைந்தால், காலையை அடைவதாக எதிர்பார்க்காதே! காலையை அடைந்தால், மாலையை அடைவதாக எதிர்பார்க்காதே! உனது ஆரோக்கியத்தில் இருந்து, நோய்க்காகவும், உனது வாழ்வில் இருந்து, மரணத்திற்காகவும் எடுத்துக்கொள்!'
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்நபியவர்கள் தனது தோல்புயத்தைப் பிடித்து இவ்வாறு கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'நீ, இவ்வுலகில், ஒதுங்குவதற்கு வீடோ, ஆறுதலளிக்கும் நண்பனோ இல்லாத ஓர் ஊருக்கு வந்து, படைத்தவனை விட்டும் திசைதிருப்பும் காரணிகளான குடும்பம், உறவுகள் மற்றும் தொடர்புகள் போன்ற அனைத்தையும் விட்டு நீங்கி இருக்கும் ஒரு பரதேசியைப் போன்று இருந்துகொள்! அல்லது, அந்தப் பரதேசியை விட அதிகமாக, தனது வாழ்விடத்தைத் தேடி, பாதைகளைக் கடந்து செல்லும், ஒரு வழிப்போக்கனைப் போன்று இருந்துகொள். ஏனெனில் சிலவேளை ஒரு பரதேசி ஒரு வேற்றூரில் வசித்து அங்கு தங்கிவிடலாம். ஆனால் தனது ஊரை நாடிச் செல்லும் வழிப்போக்கன் அவ்வாறல்ல. அவன் நீண்ட சுமைகளை சுமக்காமலும், தரித்துநிற்காமலும், தனது ஊரை அடையும் ஆர்வத்திலேயே இருப்பான். ஒரு பயணிக்கு, எவ்வாறு தனது பயண குறிக்கோளை அடைவதற்கு அவசியமானவற்றைத் தவிர எதுவும் தேவையில்லையோ, அவ்வாறு தான் ஒரு முஃமினுக்கு, தனது குறிக்கோளை அடைவதற்கு உதவியாக இருப்பவற்றை விட எதுவும் அவசியமாக இருக்காது. இப்னு உமர் (ரலி) அவர்கள் இந்த உபதேசத்தை நடைமுறைப்படுத்தினார்கள். அவர்கள் இவ்வாறு கூறுவார்கள் : 'நீ காலையை அடைந்தால், மாலையை அடைவதாக எதிர்பார்க்காதே! உன்னை, மண்ணறைகளில் வாழும் ஒருவனாகவே நீ எண்ணிக்கொள்! ஏனெனில், வாழ்க்கை என்பது, ஆரோக்கியம் மற்றும் நோய் ஆகிய இரண்டையும் கொண்டதுவே. எனவே, உனது ஆரோக்கிய நாட்களை, நோய்க்காலத்திற்காக வணக்கங்களைச் செய்து பயன்படுத்திக்கொள். நல்லமல்களுக்குத் தடையாக நோய்கள் ஏற்பட முன்னர், ஆரோக்கிய நாட்களை அவற்றிற்காகப் பயன்படுத்திக்கொள். உனது இவ்வுலக வாழ்வைப் பயன்படுத்தி, மறுமைக்குப் பயனளிப்பவற்றை அவற்றுள் ஒன்று சேர்த்துக்கொள்
அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு மனிதர், 'அல்லாஹ்வுடைய தூதரே! இஸ்லாத்தின் சட்டத்திட்டதிட்டங்கள் எனக்கு அதிகமாக உள்ளன. நான் தொடர்ந்து பேணி வரமுடியுமான ஒரு விடயத்தை எனக்குக் கூறுங்கள்' என்று கேட்டபோது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : உனது நாவு எப்போதும் அல்லாஹ்வின் திக்ரினால் ஈரமடைந்து இருக்கட்டும்.
இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து, உபரியான வணக்கங்கள் அவரைப் பொறுத்தவரை அதிகமாக இருப்பதாகவும், தான் பலவீனமாக உள்ளதால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும் முறைப்பட்டுவிட்டு, தன்னால் தொடர்ந்து கடைப்பிடிக்கமுடியுமான, அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தரும் இலகுவான ஒரு அமலைக் காட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள், எல்லா நிலைகளிலும் தஸ்பீஹ், தஹ்மீத், இஸ்திக்பார், துஆ போன்றவற்றின் மூலம் எந்நேரமும் அல்லாஹ்வை நினைவுகூர்வதில் திளைத்திருக்கக் கூடியதாக அவரது நாவு இருக்கட்டும் என்று வழிகாட்டினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாத வரையில் உங்களில் எவரும் ஈமான் கொண்டவாரக ஆகமாட்டார்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மார்க்க மற்றும் உலக விவகாரங்கள் அனைத்திலும் தனக்கு விரும்புவதை தனது சகோதர முஸ்லிம்களுக்கு விரும்பி தான் வெறுப்பதை தனது சகோதர முஸ்லிம்களுக்கு வெறுக்காத வரையில் யாரும் முழுமையான இறைநம்பிக்கையை அடைந்து கொள்ளமாட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள். எனவே மார்க்க விடயங்களில் தனது சகோதரரிடம் ஒரு குறையை கண்டால் அதனை திருத்துவதற்கு –சீர்செய்ய- அவர் முயற்சி செய்வார். அதே போன்று அவரில் நன்மையான விடயங்களை கண்டால் அவரை நெறிப்படுத்தி அதற்கு உதவிசெய்வதோடு மார்க்க மற்றும் உலக விவகாரங்களில் அவருக்கு அறிவுரை வழங்குவார்.
"நரகின் மீது ஹராமானவர் அல்லது யார் மீது நரகம் ஹராம் என்பதை உங்களுக்கு அறியத்தரட்டுமா?அவர்தான் நெருக்கமாக இருந்து கொள்கின்றவரும்,மிருதுவாகவும் விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்கின்றவர்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்ஹதீஸ் விளக்கம் நரகை விட்டும் தடுக்கப்படுகின்ற நபர் யார் என்று :உங்களுக்குஅறியத்தரட்டுமா?:என்பதன் கருத்தாவது வழிபாட்டுத் தளங்களில் முடிந்த வரையில் மக்களுடன் நெருங்கியிருந்து,அவர்களுடன் அன்புடனும்,விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொள்கின்ற மனிதன் நரகை விட்டும் தடுக்கப்படுவான்,என்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு முஸ்லிமுக்கு ஏசுவது பாவமாகும். அவனோடு யுத்தம் செய்வது இறைநிராகரிப்பாகும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்கு ஏசுவதை நபியவர்கள் தடுப்பதோடு, அது 'புஸூக்' என்றும் கூறுகின்றார்கள். அதாவது, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்வதாகும். மேலும், ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுடன் போரிடுவது, நிராகரிப்பை ஏற்படுத்தும் செயலாகும். ஆனாலும், அது சிறிய நிராகரிப்பாகும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: யூத, கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் முந்திக்கொண்டு ஸலாம் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரைப் பாதையில் கண்டால், நெருக்கடியான ஒரு பகுதிக்குச் செல்ல அவர்களை நிர்ப்பந்தியுங்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இறைநிராகரிப்பாளர்கள் ஒரு புறம் இருக்க, யூத, கிறிஸ்தவர்கள் - திம்மிகளாக இருந்தாலும் - அவர்களுக்கு நாமாக முந்திக்கொண்டு ஸலாம் சொல்வதை நபியவர்கள் தடுக்கின்றார்கள். மேலும், அவர்களில் ஒருவரை நாம் பாதையில் கண்டால், பாதையின் ஓரத்திற்கு அவரைத் தள்ளிவிடுமாறும் அறிவுறுத்துகின்றார்கள். பாதையின் மத்தியில் நடந்துசெல்லவேண்டியவன் ஒரு முஃமின் மாத்திரமே! ஒதுங்கிப் போக வேண்டியவன் நிராகரிப்பாளனே! எந்த நிலையிலும் ஒரு முஸ்லிம் தாழ்ந்தவனாக இருக்கக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஹுஸைன் இப்னு அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனது பெயர் ஒருவனிடம் கூறப்பட்டும், என் மீது ஸலவாத் சொல்லாமல் இருப்பவனே, உண்மையில் கஞ்சனாகும்.
இந்த ஹதீஸை இமாம்களான திர்மதி, குப்ரா எனும் நூலில் நஸாஈ, அஹ்மத் ஆகியோர் பதிவுசெய்துள்ளனர்நபியவர்கள், தமது பெயரையோ, புனைப்பெயரையோ, வர்ணனையையோ கேட்டும் ஸலவாத் சொல்லாமல் இருப்பதை எச்சரிக்கும் விதமாக, 'முழுமையான கஞ்சன் யாரென்றால், எனது பெயர் நினைவுபடுத்தப்பட்டும் ஸலவாத் கூறாதவனே' என்று கூறுகின்றார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு: முதலாவது, இது அற்பத்தில் கஞ்சத்தனம் காட்டுவதாகும். இதனால் அவருக்கு குறைவாகவோ, கூடுதலாகவோ நட்டம் ஏற்படுவதில்லை. இதற்கு அவர் பணத்தையோ, முயற்சியையோ செலவளிக்கவேண்டியதில்லை. இரண்டாவது, இவர் தனக்குத் தானே கஞ்சத்தனப்பட்டுக்கொண்டு, நபியவர்களுக்கு ஸலவாத் சொல்வதால் கிடைக்கும் நன்மைகளைத் தவறவிடுகின்றார். ஏனெனில், இவர் ஸலவாத் சொல்லாமல் இருப்பதால், நபியவர்களின் ஏவலின் பிரகாரம் தன் மீது கடமையாகியுள்ள, தனக்கு நன்மைகளைப் பெற்றுத் தரும் ஒரு கடமையை நிறைவேற்றாமல் கஞ்சத்தனம் காட்டுகின்றார். மூன்றாவது, நபியவர்கள் மீது ஸலவாத் சொல்வதன் மூலம், அவர்களுக்கு நிறைவேற்றவேண்டிய சில கடமைகள் நிறைவேற்றப்படுகின்றது. ஏனெனில், அவர்களே எமக்கக் கற்றுத் தந்தவர்கள், அவர்களே எமக்கு வழிகாட்டியவர்கள். அவர்களே எம்மை அல்லாஹ்வை நோக்கி அழைத்தவர்கள். இந்த வஹியையும், இந்த ஷரீஆவையும் கொண்டு வந்தவர்கள் அவரே! அல்லாஹ்வுக்கு அடுத்ததாக, எமக்கு நேர்வழி கிடைக்க அவர்கள் தாம் காரணமாக இருந்துள்ளார்கள். எனவே, நபியவர்கள் மீது ஸலவாத் சொல்லாதவன், தனக்குத் தானே கஞ்சத்தனம் காட்டிக்கொள்வது மாத்திரமால்லாமல், நபியவர்களுக்குச் செய்ய வேண்டிய மிகச் சிறிய ஒரு கடமையை நிறைவேற்றாதும் கஞ்சத்தனம் காட்டுகின்றான்.