





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
என் சமூகத்தினர் அனைவரும் மன்னிக்கப்படுவர்.எனினும் தன் குற்றத்தை அம்பலப்படுத்தியவர்களைத் தவிர.இரவு காலத்தில் பாவ காரியம் ஒன்றைச் செய்த மனிதனின் தவறை அல்லாஹ் மறைத்து வைத்த போது அவன் காலையில் எழுந்ததும்,:இன்னவனே நான் நேற்றிரவு இப்படியெல்லாம் செய்தேன்,என்று அல்லாஹ் மறைத்து வைத்த தன்னுடைய தவறை அவன் காலையில் எழுந்ததும் இப்படி வெளிப்படுத்துவானாகில்,அது தன் தவறை அம்பலப்படுத்துதலாகும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ ஹுராரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஅல்லாஹ் முஸ்லிம்கள் யாவரினதும் குற்றங்களை மன்னிப்பான்.ஆனால் எவன் இரவு காலத்தில் பாவமான காரியத்தில் ஈடுபட்டிருந்து அதனை அல்லாஹ் மறைத்து வைத்திருந்தும் அவன் காலையில் எழுந்ததும் அதனை அவனே மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவானாகில் அவனை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது மரணத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் : உங்களில் எவரும் அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணம் கொண்ட நிலையிலேயே தவிர மரணிக்கவேண்டாம்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஒரு முஸ்லிம் அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொண்ட நிலையிலேயே மரணிக்க வேண்டும் என நபியவர்கள் இங்கு வலியுறுத்துகின்றார்கள். அதாவது, மரணத் தருவாயில், அல்லாஹ் தன்னை மன்னித்து அருள் புரிவான் என்ற நல்ல எதிர்பார்ப்பை அவர் கூடுதலாக வைக்க வேண்டும். ஏனெனில், இறைவன் பற்றிய பயம் என்பது அமல்களை சிறப்பாகச் செய்வதற்கு அவசியமானது. ஆனால், இது அமல்களுக்கு உரிய நிலைமை அல்ல. இங்கு எதிர்பார்க்கப்படுவது அருளை ஆதரவு வைப்பதே!
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'நான் விண்ணுலகப் பயணம் சென்ற இரவில் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம், 'முஹம்மதே! உமது சமுதாயத்திடம் எனது ஸலாமை எத்திவையுங்கள். மேலும், சுவனம் தூய்மையான மண்ணைக் கொண்டது என்றும், மதுரமான நீரைக் கொண்டது என்றும் அவர்களிடம் கூறுங்கள் மேலும், அவை வெற்றுப் பூமிகள், அதில் நட்டப்படும் மரங்கள், ஸுப்ஹானல்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர் ஆகியவை தான் என்றும் கூறுங்கள்' என்று கூறினார்கள்.
இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்இஸ்ரா, மிஃராஜ் இரவின் போது தாம், இறைவனின் உற்ற தோழர், இப்ராஹீம் (அலை) அவர்களைச் சந்தித்ததாகவும், அவர் தம்மிடம், 'முஹம்மதே! உமது சமுதாயத்திடம் எனது ஸலாமை எத்தி வையுங்கள். மேலும், சுவனம் தூய்மையான மண்ணைக் கொண்டது என்றும், உவர்ப்பற்ற, மதுரமான நீரைக் கொண்டது என்றும், அவை விசாலமான, சமாந்திரமான, மரங்களற்ற பூமிகள், அதில் நட்டப்படும் மரங்கள், நல்ல வார்த்தைகளாகிய, ஸுப்ஹானல்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர் ஆகியவைதான் என்றும், ஒரு முஸ்லிம் அவற்றை திரும்பத் திரும்பக் கூறும் போதெல்லாம் சுவனத்தில் அவருக்கு ஒரு மரம் நட்டப்படும் என்றும்' கூறுங்கள்' என்று நபியவர்கள் இங்கு அறிவிக்கின்றார்கள்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர் உள்ளனர். நான் அவர்களோடு சேர்ந்து நடந்தாலும் அவர்கள் என்னைத் துண்டித்து நடக்கின்றனர். அவர்களுக்கு நான் உபகாரம் புரிந்தாலும், அவர்கள் எனக்குத் தீங்கிழைக்கின்றனர். நான் அவர்களை மன்னிக்கின்றேன். ஆனால் அவர்களோ என்னோடு அறியாமைத் தனமாக நடந்து கொள்கின்றனர்.' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: 'நீங்கள் கூறுவது போன்றே நீங்கள் இருந்தால், அவர்களது வாய்களில் சூடான சாம்பலைப் போடுவது போன்ற வேலையையே நீங்கள் செய்கின்றீர்கள். நீங்கள் இவ்வாறே இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கெதிராக உங்களுக்கு உதவும் ஒருவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இருந்துகொண்டே இருப்பார்.'
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தனக்கு சில உறவினர் இருப்பதாகவும், அவர்களோடு தான் நல்லமுறையில் நடந்துகொண்டாலும் அவர்கள் அதற்கு நேர்மாற்றமாகவே நடக்கின்றனர் என்று முறைப்பட்டார். அதாவது, அவர்களைச் சேர்ந்து நடந்தாலும், அவர்கள் துண்டித்தே நடக்கின்றனர். அவர்களுக்கு நல்லுபகாரம் புரிந்தாலும், அவர்கள் அநீதமிழைத்து, தீங்கிழைக்கின்றனர். அவர்களை மன்னித்துவிட்டாலும், அவர்கள் மோசமான சொல், செயற்கள் ஊடாக மடமைத்தனமாக நடந்துகொள்கின்றனர். இவ்வாறிருக்க தொடர்ந்தும் அவர்களை சேர்ந்து நடப்பதா? எனக் கேட்டார். அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: நீ கூறுகின்றது போலவே உண்மையில் நடந்திருந்தால், நீ அவர்களுக்கு இழிவையே கொடுக்கின்றாய். நீ நிறைய நல்லுபகாரம் புரிந்தும், அவர்கள் அசிங்கமாக நடந்து கொள்வதால், நீ அவர்களுக்கு சூடான சாம்பலைக் கொடுப்பது போன்று தான் இது உள்ளது. அவர்களுக்கெதிராக உனக்கு உதவி செய்யும் ஒருவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இருந்து கொண்டே இருப்பார். நீ தொடர்ந்து அவர்களுக்கு உபகாரம் செய்து கொண்டும், அவர்கள் உனக்கு அநீதமிழைத்துக் கொண்டும் இருக்கும் காலமெல்லாம் அவர் உன்னை விட்டும் தீங்குகளைத் தடுப்பார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ((ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை (திக்ர்) நினைவுகூறாமல் எழுந்து செல்வது செத்த கழுதையை விட்டும் எழுந்து செல்வது போலாகும் . அது அவர்களுக்குக்கு (மறுமையில்) பேரிழப்பாக அமையும்))
இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவுகூறாமல் எழுந்து செல்வது துர்நாற்றமானதும், அழுக்கானதுமான ஒரு கழுதையின் பிணத்திற்கு முன் ஒன்றுகூடி விட்டு எழுந்துசெல்வதைப் போலாகும் என்று கூறுகின்றார்கள் நபி (ஸல்) அவர்கள். அங்கு இறைநினைவைப் பற்றிய பேச்சுக்களில் ஈடுபடாமல் இருந்தமையே அதற்கான காரணமாகும். மறுமையில் இந்த சபை அவர்களுக்குக் கைசேதமாகவும், நன்மைகளைக் குறைப்பதாகவும், நிரந்தரக் கவலையாகவும் இருக்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'தனது ரப்பை நினைவுகூறுபவனுக்கும், தனது ரப்பை நினைவுகூறாதவனுக்கும் உதாரணம், உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும். முஸ்லிம் அவர்களது அறிவிப்பில், 'அல்லாஹ்வை நினைவு கூறப்படும் வீட்டிற்கும், நினைவு கூறப்படாத வீட்டிற்கும் உதாரணம் உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும்.' என்று உள்ளது.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வை நினைவுகூர்பவனுக்கும், நினைவுகூறாதவனுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்தும் போது, உயிருள்ளவனுக்கும் உயிரற்றவனுக்கும் இடையில், பயனிலும், அழகிய வெளித் தோற்றத்திலும் உள்ள வேறுபாட்டைப் போல என்று அடையாளப்படுத்துகின்றார்கள். தனது ரப்பை நினைவுகூர்பவன் வெளித்தோற்றம் வாழ்க்கை எனும் ஒளியாலும், உள்ளம் அறிவு ஞானம் எனும் ஒளியாலும் அலங்கரிக்கப்பட்டவனைப் போல. அவனில் பலன்கள் உள்ளது. அல்லாஹ்வை நினைவுகூறாதவன், வெளியில் செயலற்றவனாகவும், உள்ளத்தில் ஒன்றுமில்லாதவனாகவும் இருக்கும் மரணித்த பிணத்தைப் போல. அவனில் எப்பயனும் இல்லை. வீடுகளும் இவ்வாறுத்தான். அங்கு வசிப்பவர்கள் அல்லாஹ்வை நினைவுகூர்பவர்களாக இருந்தால், உயிருள்ள வீடு எனப்படும். அவ்வாறில்லா விட்டால், அங்கிருப்பவர்கள் அல்லாஹ்வை நினைவுகூறாத காரணத்தினால், இறந்த வீடு எனப்படும். வீடு, உயிருள்ளது, உயிரற்றது எனக் கூறப்பட்டுள்ளதன் மூலம் நாடப்படுவது அதில் வசிப்பவர்களே!.
அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போது அவர்கள், “எனக்குப் பின் உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்துவிடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்” எனக் கூறினார்கள். ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?” எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது அந்த மனிதரிடம், “உமது நிலைமை என்ன? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால், நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!” எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்து விட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?” என அவரைப் பாராட்டுவதைப் போன்று கேட்டார்கள். பிறகு, “நன்மையானது தீமையை உருவாக்காதுதான்; வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை, வயிறு புடைக்கத் தின்ன வைத்துக்) கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன; பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை; ஏனெனில்) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பி விடும்போது சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக் கொண்டு அசைபோடுகின்றது) சாணமிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை, அது அவருக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக்கொள்கிறாரோ - அவர் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்” எனக் கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பர் மீது அமர்ந்து தனது தோழர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது, இவ்வாறு கூறினார்கள் : எனக்குப் பின்னர் நான் உங்களிடம் அதிகம் பயப்படுவது என்னவென்றால், இப்பூமியின் செல்வ வளங்களும், அலங்காரங்களும், கவர்ச்சிகளும் மற்றும் அவற்றில் உள்ள இன்பங்கள், பயிர்கள், ஆடைகள் என, நிலையற்றதாக இருப்பினும் மக்கள் பெருமைக்காகத் தேடும் அம்சங்கள் உங்களுக்குத் திறந்து கொடுக்கப்படுவதே! அப்போது ஒரு மனிதர், 'உலக அலங்காரங்கள் அல்லாஹ்வின் ஓர் அருட்கொடையாக இருக்கும் போது, அவ்வருட்கொடை சோதனையாகவும், தண்டனையாகவும் மாற்றம் பெறுமா?' எனக் கேட்டார். நபியவர்கள் மௌனித்ததைக் கண்ட நபித் தோழர்கள், அம்மனிதர் நபியவர்களைக் கோபத்திற்குள்ளாக்கியதாக நினைத்து அவரைக் கண்டித்தனர். எனினும், நபியவர்களுக்கு வஹி இறங்கிக் கொண்டிருந்தது என்பது பின்பு தெளிவானது. நபியவர்கள் தமது நெற்றியில் இருந்து வியர்வையைத் துடைத்துக்கொண்டு, 'கேள்வி கேட்டவர் எங்கே?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'நான்' என்று கூறினார். நபியவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, பின்பு இவ்வாறு கூறினார்கள்: உண்மையான நன்மைகள் நன்மையையே கொண்டுவரும். ஆனாலும், இந்த அலங்காரங்கள், முழுமையான நன்மை அல்ல. ஏனெனில், அவை குழப்பங்கள், போட்டி, மறுமையை விட்டும் திசை திருப்பல் ஆகிய கெடுதிகளை ஏற்படுத்துகின்றன. பின்பு அதற்கு ஓர் உதாரணமாக இவ்வாறு கூறினார்கள்: வசந்த காலத்தில் வளரும் பசுமையான சில பயிர்கள், கால்நடைகளுக்கு விருப்பமாக இருந்தாலும், அவை வயிற்றை நிரம்பச் செய்து, கொன்று விடுகின்றன. அல்லது இறப்புக்கு அருகாமையில் விட்டுவிடுகின்றன. ஆனால், பச்சைப் புற்களை சாப்பிடும் மிருகம், வயிற்றின் இரு ஓரங்களும் நிரம்பும் வரை சாப்பிட்டுவிட்டு, சூரியனை முன்னோக்கி, விட்டைகளை விட்டு விட்டோ, சிறுநீர் கழித்துவிட்டோ இருக்கும். பின்பு, தன் வயிற்றில் இருப்பவற்றை மீண்டும் அசை போட்டு, சப்பி விழுங்கிவிடும். அதன் பின்னர் மீண்டும் சாப்பிடும். எனவே, இந்தச் சொத்துக்கள் பசுமையான, இனிமையான பச்சை நிறத் தாவரங்களைப் போன்றவை. அதிகப் படுத்திக் கொள்வது ஒன்றில் கொன்று விடும். அல்லது மரணத்திற்கு அருகாமையில் விட்டுவிடும். ஆனால், தேவையான, போதுமான அளவு உணவை ஹலாலான விதத்தில் எடுத்துக் கொண்டவர்களைத் தவிர, அது பாதிப்பை ஏற்படுத்த மாட்டாது. சிறந்த முஸ்லிம் ஒரு முஸ்லிம் அதிலிருந்து ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது சிறந்த சொத்தாகும். தகுதியான அளவு எடுப்பவருக்கு அதில் பரக்கத் செய்துகொடுக்கப்படும். தகுதியற்ற விதத்தில் எடுப்பவர், வயிறு நிரம்பாமல் சாப்பிட்டுக் கொண்டிருப்பவரைப் போன்றவராவார். மறுமையில் அது அவருக்கு எதிரான சாட்சியாக இருக்கும்.
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அந்நுஃமான் பின் பஷீர் (ரலி) ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : நரகவாதிகளில் குறைந்த தண்டனை உள்ளவர், நெருப்பினால் ஆன இரு செருப்பக்களும், இரு செருப்பு வார்களும் உள்ளவராவார். இவ்விரண்டின் காரணமாக அவரது மூளை, செம்புச் சட்டிகள் கொதிப்பது போன்று கொதிக்கும். அவரை விடக் கடுமையான வேதனைகொண்ட யாரும் இருக்கமாட்டார்கள் என்று அவர் நினைப்பார். ஆனாலும், அவர்தான், மிகைக்குறைந்த தண்டனை உரியவர்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபி (ஸல்) அவர்கள், நரகவாதிகளில் குறைந்த தண்டனை உள்ளவர், நெருப்பினால் ஆன இரு செருப்புக்களும், இரு செருப்பு வார்களும் உள்ளவராவார். இவ்விரண்டின் உஷ்ணத்தின் காரணமாக அவரது மூளை, செம்புச் சட்டிகள் கொதிப்பது போன்று கொதிக்கும். உடல், உடல், உள வேதனைகள் ஒருசேர இருப்பதால், அவரை விடக் கடுமையான வேதனைகொண்ட யாரும் இருக்கமாட்டார்கள் என்று அவர் நினைப்பார். ஆனாலும், அவர்தான் மிகைக்குறைந்த தண்டனை உரியவர் என்று கூறுகின்றார்கள்.
நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், நன்மையையும், பாவத்தையும் பற்றிக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: 'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தும். மக்கள் அதைக் காண்பதை நீ வெறுப்பாய்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நன்மை மற்றும் பாவம் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்ட போது, நபியவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள் : நன்மைகளில் மிக மகத்தானது, அல்லாஹ்வுடன் இறையச்சம் பேணி நற்குணமாக நடப்பதும், படைப்புக்களுடன் நோவினைகளைச் சகித்தும், கோபத்தைக் குறைத்தும், முகமலர்ச்சியை வெளிப்படுத்தியும், நல்வார்த்தைகள் பேசியும், உறவுகளை சேர்ந்து நடந்தும், கட்டுப்பட்டும், மென்மையைக் கடைப்பிடித்தும், நல்ல முறையில் தோழமை கொண்டு சேர்ந்து நடந்தும் நற்குணம் பேணுவதுமாகும் என்று பதிலளித்தார்கள். பாவம் என்பது, உள்ளத்தில் தடுமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தும் ஒன்றாகும். உள்ளத்தில் அது பற்றிய சந்தேகம், அது பாவமாக இருக்கலாம் என்ற பயம் என்பவை இருக்கும். நல்ல மனிதர்களின் பார்வையில் அது அசிங்கமானதாக இருக்கும் என்பதால், அதை வெளிக்காட்டவும் விரும்பமாட்டீர்கள். ஏனெனில், மனித உள்ளம் இயல்பாகவே தனது நலவுகளை அடுத்தவர் பார்ப்பதை விரும்புகின்றது. எனவே அதன் ஒரு செயலை மனிதர்கள் பார்ப்பதை அது வெறுத்தால், அது ஒரு பாவம் என்றே அர்த்தமாகும்.