





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: அல்லாஹ் உங்களது தவறுகளை அழித்து, அந்தஸ்த்துக்களை உயர்த்தக்கூடிய ஒரு விடயத்தை காட்டித் தரட்டுமா? என நபியவர்கள் கேட்டதற்கு,ஸஹாபாக்கள்: ஆம் யாரஸுலல்லாஹ் என்றார்கள். அதற்கு நபியவர்கள்: சிரமமான நிலையிலும் வுழுவை நிரப்பமாக செய்தல், பள்ளிவாயிலுக்கு அதிகம் நடந்து செல்லுதல், ஒரு தொழுகைக்குப் பின்னர் இன்னோர் தொழுகையை எதிர்பார்த்திருத்தல் என்பனதான் அவை. உண்மையில் அவை அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதாகும்.'
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு மலக்குமார்களின் ஏட்டிலிருந்து அவை முழுமையாக அழிக்கப்பட்டு சுவர்க்கத்தின் உயர் அந்தஸ்த்தைப் பெற்றுக்கொள்ளத்தக்க செயல்கள் குறித்து அறிய விரும்புகிறீர்கள்? என வினவினார்கள். அதற்கு நபித்தோழர்கள் நாம் அதனை விரும்புகிறோம் என்றார்கள். அதற்கு நபியவர்கள் : முதாலாவது : குளிர், குறைவான நீர், உடல் வலி, சூடான நீர் போன்ற சிரமமான சூழ்நிலைகளிலும் வுழுவை நிறைவாகவும் பூரணமாகவும் செய்தல். . இரண்டாவது: வீடு தூரத்தில் இருப்பினும் அதிமாக பள்ளிக்கு நடந்து செல்லுதல். அதிகமாக சென்று வருதல். மூன்றாவது: தொழுகை நேரத்தை எதிர்பார்த்து அந்த சிந்தனையில் இருப்பதோடு அதற்குகாக எப்போதும் தயாராக இருத்தல். அத்துடன் ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் அமர்ந்திருந்தல். ஒரு தொழுகை நிறைவேற்றி முடிந்ததும் இன்னொரு தொழுகையை எதிர்பார்த்திருத்தல். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த விடயங்கள் எதிரிகளின் தாக்குதலிருந்து நாட்டினை பாதுகாக்கும் உண்மையாக எல்லைப் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவதற்கு ஈடாகும் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள். இச்செயற்பாடு உள்ளத்தை ஷைத்தானின் வழிகளிலிருந்து தடுக்கிறது. மனோ இச்சையை அடக்குகிறது. மனசாட்டத்திற்குற்படுவதை தடுக்கிறது இதன் மூலம் ஷைத்தானின் படைகளை அல்லாஹ்வின் படை -கூட்டம் அடக்கிவிடுகிறது. இதுவே மிகப்பெரும் அறப்போராட்டமாகும். இது எதிரிகளின் எல்லையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுதல் என்ற படித்தரத்தில் காணப்படுகிறது.
அபூதர்தா ரழியல்லாஹு அன்ஹூ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக கூறினார்கள் : நான் உங்களுக்கு ஒர் அமலை காண்பித்துதரவா ? அது உங்களின் எல்லா அமல்களைவிடவும் சிறந்தது. உங்கள் அதிபதியிடம் அது மிகவும் தூய்மையானது. உங்கள் அந்தஸ்த்தை மிகவும் அதிகப்படுத்தக்கூடியது. தங்கம் வெள்ளியை செலவளிப்பதை விடவும் உங்களுக்குச் சிறந்தது. மட்டுமல்ல, நீங்கள் உங்கள் எதிரிகளுடன் போரிட்டு நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்கள் கழுத்தையும் வெட்டுவதை விடவும் சிறந்தது ஆகும். அதற்கு நபித்தோழர்கள் "ஆம்" அதனை எமக்கு காண்பித்துத் தாருங்கள் என்றார்கள். நபியவர்கள் கூறினார்கள் அதுதான் அல்லாஹ்வை- திக்ர் செய்வது –நினைவுகூர்வது என்றார்கள்.
இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம் பின்வருமாறு கேட்டார்கள் : அதிபதியான அல்லாஹ்விடத்தில் அமல்களில் மிகவும் சிறந்ததும் உன்னதமானதும், மிகவும் அபிவிருத்திமிக்கதும், தூய்மை நிறைந்துமான ஒன்றை உங்களுக்கு சொல்லித்தருவதை நீங்கள் விரும்புகிறீர்களா? சுவர்க்கத்தில் உங்களின் அந்தஸ்த்தை மிகவும் உயர்த்தக் கூடியதும், தங்கம் வெள்ளியை தர்மம் செய்வததை விட மிகவும் நன்மையை பெற்றுத்தரக் கூடியதும்? போரில் காபிர்களை நேருக்குநேர் எதிர் கொண்டு, நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்களின் கழுத்தையும் வெட்டிவீழ்த்துவதை விடவும் மிகவும் சிறந்ததும் ஆகும், அதற்கு நபித்தோழர்கள் நாம் அதனை விரும்புகிறோம் என்றார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் அனைத்து நிலைகள் மற்றும் நிலமைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூர்வதாகும் என்றார்கள்.
ஸுலைமான் பின் ஸுரத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து விட்டது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ (அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தான்) என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள், ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருவீராக!› என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள். அதற்கு அவர், ‘‘எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?” என்று கேட்டார்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் இரு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக் கொண்டார்கள். ஒருவரது முகம் சிவந்து போயிருந்தது, அவரது கழுத்தைச் சூழாக உள்ள நரம்புகள் புடைத்துப் போயிருந்தன. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எனக்கு ஒரு வார்த்தை தெரியும். அதை இவர் கூறினால், இவரை விட்டும் கோபம் அகன்று விடும். 'எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்' என்று இவர் கூறுவது நல்லது.' அப்போது நபித் தோழர்கள் அம்மனிதனிடம், ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுமாறு நபியவர்கள் ஏவுகின்றார்கள் எனக் கூறினார்கள். அப்போது, 'நான் பைத்தியக் காரனா?' எனக் கேட்டார் அம்மனிதர். பைத்தியம் உள்ளவர்கள் தான் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடவேண்டும் என நினைத்துவிட்டார் போலும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து வருபவையாகும். கெட்ட கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருபவையாகும். உங்களில் யாராவது பயங்கரமான ஓர் கெட்ட கனவைக் கண்டால், தனது இடப்பக்கம் உமிழ்ந்துவிட்டு, அதன் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்கட்டும். அப்போது அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தமட்டாது.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்தூக்கத்தில் வரும் மகிழ்ச்சியூட்டும் நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து வருவதாகவும், வெறுப்பையும், கவலையையும் ஏற்படுத்தும் கெட்டகனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். யாராவது பயங்கரமான வெறுப்பான ஒரு கனவைக் கண்டால், தனது இடப்பக்கம் உமிழ்ந்து விட்டு, அதன் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்கட்டும். அப்போது அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தமட்டாது. ஏனெனில் மேலே கூறப்பட்ட அம்சங்களை, அக்கனவின் விளைவாக ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்பக்களை விட்டும் காப்பவையாக ஆக்கியுள்ளான்.
உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: நான், 'அல்லாஹ்வின் தூதரே! வெற்றி எவ்வாறு?' எனக் கேட்டபோது, 'உனது நாவை உன் கட்டுப்பாட்டுள் வைத்துக்கொள்! உனது வீடு உனக்கு விசாலமாக இருக்கட்டும், உன் பாவங்களை நினைத்து அழு' என்று பதிலளித்தார்கள் நபியவர்கள்.
இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஉக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் ஈருலக வெற்றிக்கான காரணிகள் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கின்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மூன்று விடயங்களைப் பற்றிப் பிடிக்குமாறு கூறுகின்றார்கள் : முதலாவது, நன்மைகளற்ற, கெட்டவார்த்தைகளை விட்டும் உனது நாவைக் காத்துக்கொள். நல்லவற்றைத் தவிர வேறு எதனையும் பேசிவிடாதே! இரண்டாவது, உனது வீட்டில் இருந்து அல்லாஹ்வைத் தனிமையில் வணங்குவாயாக! விட்டிற்குள்ளேயே இருப்பதன் மூலம், குழப்பங்களை விட்டும் ஒதுங்கிக்கொள்! மூன்றாவது, நீ செய்த பாவங்களை நினைத்துக் கைசேதப்பட்டு, அழுது பாவமன்னிப்புக் கேட்பாயாக!
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : கிராமவாசி ஒருவர் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் வந்து, எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள். நான் அதைச் செய்தால் சொர்க்கம் செல்ல வேண்டும்.என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீர் அல்லாஹ்வையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமளானில் நோன்பு நோற்க வேண்டும் என்றார்கள். அதற்கு அவர், என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மேல் ஆணையாக! இதைவிட அதிகமாக வேறெதையும் செய்யமாட்டேன் என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் (இதோ) இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்! என்றார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கிராமப்புரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் தனக்கு சுவர்கம் செல்வதற்குரிய செயலொன்றை காட்டித்தருமாறு கோரி நபியர்வகளிடம் வந்தார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சுவர்கம் நுழைவதும்; நரகத்திலிருந்து மீட்சி பெறுவதும் இஸ்லாத்தின் கடமைகளான அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி வழிபட்டு அவனுக்கு எதனையும் இணைவைக்காது வாழ்வதில் தங்கியுள்ளது எனப் பதிலளித்தார்கள். அத்துடன் தினமும் அடியார்களுக்கு அல்லாஹ் கடமையாக்கியுள்ள ஐவேளைத் தொழுகைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் உமக்கு அல்லாஹ் கடமையாக்கியுள்ள உமது செல்வத்திற்கான ஸகாத்தை வழங்குவதுடன்,அதனை ஸகாத் பெற தகுதியானவர்ளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் அதே போன்று ரமழான் மாதத்தில் நோன்பை பேணி கடைபிடித்தொழுக வேண்டும். இவ்வாறு நபியவர்கள் கூறிய போது வந்த அந்த மனிதர் எனது ஆன்மா எவனின் கைவசம் உள்ளதோ அவனின் மீது ஆணையாக நபியவர்களே உங்களிடமிருந்து செவிமடுத்த கட்டாயக் கடமைகளுக்கு மேலதிகமாக எந்த வணக்கத்தையும் செய்யமாட்டேன் அவற்றில் எதனையும் குறைக்கவும் மாட்டேன் என சத்தியம் செய்து கூறினார். அந்த மனிதர் திரும்பிச் சென்றதும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (உங்களில் ) யார் சுவர்க்க வாதிகளில் ஒருவரை பார்த்து சந்தோசப்பட விரும்புகிறாரோ அவர் இந்த கிராமப்புற அரபியை பார்த்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: எவன் தன் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவரோ வயோதிபம் அடைந்திருக்கும் நிலையில் அவர்களை அவன் அடையப் பெற்றும் சுவர்க்கம் செல்லவில்லையோ அவன் அழிந்து போகட்டும். அவன் அழிந்து போகட்டும். அவன் அழிந்து போகட்டும்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இழிவும் நாசமும் உண்டகாட்டும் எனப் பிரார்தித்தார்கள். அதாவது தனது மூக்கை மன்னில் தேய்த்துக்கொள்ளும் நிலைக்கு ஒப்பாக குறிப்பிட்டு மூன்று தடவைகள் அவன் மண்ணை கவ்வட்டும் எனப் பிரார்த்தித்தார்கள். அப்போது தோழர்கள் அவர்களிடம் நீங்கள் நாசமுண்டாகட்டும் எனப் பிரார்தனை செய்த அந்நபர் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் எவனோருவன் தனது பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ வயோதிபத்தில் அடையப்பெற்று அவர்களுக்கு உபகாரம் செய்யாது, நோவினை செய்தன் காரணமாக அவர்களின் மூலம் சுவர்க்கம் செல்லாதவர் எனக் குறிப்பிட்டார்கள்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற்கொண்ட போது 'ஜும்தான்' எனப்படும் மலையொன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது, 'செல்லுங்கள்: இது 'ஜும்தான்' மலை ஆகும். தனித்துவிட்டவர்கள் (முபர்ரித்தூண்கள்) வெற்றி பெற்றுவிட்டார்கள்;' என்று சொன்னார்கள். மக்கள், 'தனித்து விட்டவர்கள் (முபர்ரித்தூண்கள்) என்போர் யார், அல்லாஹ்வின் தூதரே?' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்' என்று பதிலளித்தார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுவோரின் அந்தஸ்த்துக்களை தெளிவு படுத்துகிறார்கள் அவர்கள் தனித்துவமானவர்கள் ஏனையோரை விட இன்பம் நிறைந்த சுவர்க்கத்தில் உயர் அந்தஸ்துக்களை அடைந்து கொண்டவர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். இவர்களின் நிலை ஏனைய மலைகளிலிருந்து வேறுபட்டு தனித்துவமாக திகழும் 'ஜும்தான்' என்ற மலைக்கு ஒப்பானது என்று விவரிக்கிறார்கள்.
"எல்லா சமூகத்திற்கும் ஒரு சோதனையுண்டு.எனது சமூகத்தின் சோதனை செல்வம்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என கஃபு இப்னு இயாழ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்"எல்லா சமூகத்திற்கும் ஒரு சோதனையுண்டு" அதாவது வழிகேட்டிலும்,பாவ காரியங்களிலும் வீழ்த்தக்கூடிய கருமங்கள் உண்டு, என்றும்,எனது சமூகத்தின் சோதனை செல்வம்.என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்வதை நான் செவிமடுத்தேன் என்று கஃபு இப்னு இயாழ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.ஏனெனில் அது உலகிலிருக்கும் வளங்களை அடைவதற்குக் காரணமாகவும்,மறுமையில் இருப்பவற்றைப் பூரணமாக அடைந்து கொள்வதற்குத் தடையாகவும் செல்வம் அமைகின்றது.எனவே செல்வத்தைக் கொண்டு வீன் விளையாட்டுக்களில் ஈடுபாடு கொள்ளும் போது அது நல்ல கருகங்களில் ஈடுபடுவதை விட்டும் சிந்தனையைத் திசை திருப்பி மறு உலகை மறக்கச் செய்துவிடும்.