





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸுஹைப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நலவாக அமைந்து விடுகிறது. இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம் ஏற்பட்டால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாய் அமைகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நலவாய் அமைகிறது.”
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஃமினின் விவகாரம் மற்றும் நிலைமைகள் குறிந்து ஆச்சரியப்படுகிறார்கள். ஏனென்றால் அவனுடைய எல்லா சூழ்நிலைகளும் நன்மையாகவே உள்ளன. அதே வேளை விசுவாசிகளைத் (முஃமினைத்) தவிர வேறு யாருக்கும் இது கிடைப்பதில்லை. அவனுக்கு மகிழ்சியான – மங்கலகரமான ஒரு விடயம் நிகழ்ந்தால் அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான், ஆகவே அவன் நன்றி செலுத்தியமைக்கான கூலியை அவன் அடைந்து கொள்கிறான் -பெற்றுக் கொள்கிறான். அவனுக்கு தீங்கான –துன்பகரமான – விடயம் ஏற்பட்டால் அவன் அதற்காக பொறுமை காத்து அதற்காக அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்க்கிறான். இந்த வகையில் அவனும் தனது பொறுமைக்காக கூலியை பெற்றுக்கொள்வதோடு, ஏற்பட்ட துன்பம் நீங்கும் வரையில் அவன் கடந்து போகும் சகல நிலைகளிலும் அவனுக்கு கூலி கிடைக்கிறது.
அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனது கையினாலோ அல்லது தனது ஆடையாலோ தம் வாயின் மீது வைத்து சப்தத்தை குறைத்துக்கொள்பவராக இருந்தார்கள்.
இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மும் போது பின்வரும் விடயங்களை கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள் : முதலாவது: வாயிலிருந்தோ அல்லது தனது மூக்குத்துவராத்திலிருந்தோ தனக்கு அருகாமையில் உள்ளவரை தொந்தரவு படுத்துவிதமாக ஏதாவது வெளிவராதாவாறு தனது கையை அல்லது தனது ஆடையை வாயின் மீது வைத்துக்கொள்வார்கள். இரண்டாவது: சப்பதம் உயராது குறைத்துக் கொள்வார்கள்.
உஸாமா பின் ஸைத் ரழியல்ல்லாஹு அன்ஹு அவர்களிடம், 'நீங்கள் இன்னாரிடம் உஸ்மான் ரழியல்ல்லாஹு அன்ஹு அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!) என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நான் உங்கள் எதிரில் உங்களுக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர (வேறெதுவும்) அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்துவிடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்பவில்லை. மேலும், ஒரு மனிதர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்லமாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிட மிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்' என்று கூறிவிட்டு நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டேன் என்றார்கள்: மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கு இயந்திரத்தைச் சுற்றிவருவதைப்போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, 'இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர் நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்ய வில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்துவந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்'என்று கூறுவார்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்உஸாமா இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சிலர் : நீங்கள் உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் குறித்து பேசுவதோடு அதனை முழுமையாக கலைவது குறித்து ஏன் முயற்சி செய்யக்கூடாது ? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், பொது நலன் நாடியும் குழப்பத்தை மேலும் தூண்டி விடாதிருக்கவும் இது குறித்து இரகசியமாக தான் கதைத்தாக அவர்களிடம் தெரிவித்தார். இதன் மூலம் அவர் தான் மக்கள் மன்றத்தில் -(பொதுத் தளத்தில்) தலைவர்களை கண்டிப்பதை (விமர்சிப்பதை) விரும்பவில்லை என்ற தனது நோக்கத்தை அவர்களிடம் முன்வைத்தார். அவ்வாறு பகிரங்கமாக கண்டிப்பது கலீபாவுக்கெதிரான அத்துமீறலுக்கு காரணமாக அமைவதோடு, குழப்பம் மற்றும் தீமையின் வாயிலை திறக்க வாய்ப்பாக அமைந்து விடும். ஆகையால் அதனை திறக்கும் முதலாவது நபராக தான் இருப்பதை விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். பின் உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்: தான் தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவுரை கூறுவதாகவும், யாரையும்- அவர் தலைவராக இருந்தாலும்- முகஸ்துதிக்காகப் புகழ்வதில்லை என்றும், அவர்கள் தன்னைப் பொய்யாகப் புகழ்வதற்காகப் புகழ்ந்து பேசுவதில்லை என்றும் கூறினார்கள். மறுமை நாளில் ஒரு மனிதன் கொண்டு வரப்பட்டு நரகத்தில் வீசப்படுவான் என்ற நபியவர்களின் ஹதீஸைக் கேட்ட பிறகு இவ்வாறு நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டார். நரக நெருப்பு மிகவும் தீவிரமாகவும் கடுமையாகவும் இருப்பதன் காரணமாக, அவரது குடல்கள் அவரது வயிற்றிலிருந்து வெளியேறும். அப்படிப்பட்ட நிலையில், கழுதை ஆலைக்கல்லைச் சுற்றிச் சுழல்வது போல அந்த நபர் தனது குடலுடன் சுற்றிக் கொண்டிருப்பார், இந்தக் காட்சியைப் பார்த்து, நரகவாசிகள் அவரைச் சூழ வட்டமாக ஒன்று கூடி, 'ஓ இன்னாரே!' நீர் எங்களுக்கு நன்மை செய்யும்படி கட்டளையிட்டு, தீமையை விட்டும் எங்களைத் தடுக்கவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்கு நன்மை செய்யும்படி கட்டளையிட்டேன், ஆனால் நானே அதைச் செய்யவில்லை. நான் தீமையைத் தடுத்தேன், ஆனால் நானே அதில் ஈடுபட்டேன். என்று கூறினார்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: “யார் இரு பெண் பிள்ளைகளை பருவ வயது வரை பொறுப்பேற்று, வளர்க்கின்றாரோ, அவர் மறுமையில் என்னோடு இப்படி வருவார்” என்று கூறிவிட்டு தமது விரல்களை இணைத்துக்காட்டினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்யாருக்கு இரு பெண் பிள்ளைகளோ, சகோதரிகளோ வழங்கப்பட்டு, அவ்விருவரும் பருவயதை அடையும் வரை செலவழித்து, ஒழுக்கமூட்டி, நல்வழிகாட்டி, தீமைகளை விட்டும் தடுத்து அவர்களை ஆளாக்குகின்றாரோ, அவர் மறுமையில் தன்னோடு இவ்வாறு வருவார் என்று கூறிவிட்டு நபியவர்கள் தமது ஆட்காட்டி மற்றும் நடு விரல்களை இணைத்துக்காட்டுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்".
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்முஃமின்களைத் தவிர வேறு எவறும் சுவர்க்கம் செல்லவே மாட்டார்கள் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அதே போல் பரஸ்பரம் நேசம் கொள்ளாதவரை முஸ்லிம் சமூகம் சீர்பெறவோ, ஈமான் பரிபூரணம் பெறவோ மாட்டாது. இவ்வாறு கூறிவிட்டு நேசத்தை ஏற்படுத்தும் விடயங்களில் மிகவும் சிறப்புக்குரிய விடயமொன்றின் பால் வழிகாட்டுகிறார்கள். அதுதான் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவதாகும். அல்லாஹ் தனது அடியார்களுக்கு வாழத்துரைக்கும் ஒன்றாக ஸலாத்தை ஏற்படுத்தித்தந்துள்ளான்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அப்போது, ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். (நாங்களும் அதனைக் கேட்டோம்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'இது என்ன (சப்தம்) என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று சொன்னோம். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும். அது இந்த நேரம்வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது' என்று சொன்னார்கள். (அது விழுந்த சப்தத்தைத்தான் (இப்போது) நீங்கள் செவியுற்றீர்கள்'.) என்று அவர் (ஸல்) கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஏதோ மேலிருந்து ஒரு பொருள் விழுந்தது போன்ற ஒரு பயங்கரமான சத்தத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கேட்டார்கள். உடனே அவர்கள் அங்கிருந்த தோழர்களிடம் அந்த சப்தம் பற்றிக் கேட்டபோது, இது குறித்து அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று அவர்கள் பதிலளித்தனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்களிடம் ' நிச்சயமாக நீங்கள் செவிமடுத்த அந்த சப்பதம் என்னவென்றால்; எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நரகத்தின் விளிம்பிலிருந்து எறியப்பட்ட ஒரு கல், அது நரகத்தின் ஆழத்தை அடையும் வரை கீழ் நோக்கி சென்று கொண்டே இருந்தது, அது இப்போது நரகத்தின் அடியை சென்றடைந்தது விட்டது, அதன் சப்தத்தைத்தான் தற்போது நீங்கள் கேட்டீர்கள் என நபி ஸல்லல்லாஹ} அலைஹி வஸல்லம் குறிப்பிடுகிறார்கள்.
ஸலமா இப்னுல் அக்வஃ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் 'வலக் கையால் உண்பீராக!' என்று சொன்னார்கள். அவர், 'என்னால் முடியாது' என்றார். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், 'உம்மால் முடியாமலே போகட்டும்!' என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதர் தனது இடக்கரத்தால் சாப்பிடுவதைக் கண்டு வலது கரத்தால் சாப்பிடுமாறு கட்டளைப்பிறப்பித்தார்கள். அதற்கந்த மனிதர் தனக்கு முடியாதென ஆணவத்துடனும் பொய்யாகவும் பதில் கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வலது கையால் உண்பது தடுக்கப்பட வேண்டுமென பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அல்லாஹ் தனது நபியின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான். அதனால் அவரின் வலது கை செயலிழந்து போனது. அதன் பிறகு அவரால் உண்பதற்கோ குடிப்பதற்கோ வாயின் அருகில் வலக்கரத்தை உயர்த்த முடியவில்லை.
அபூ ஹுரைரா ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் "ஒரு அடியான் (நல்லதா,கெட்டதா என) சிந்திக்காமல் பேசுகிறான். அதன் மூலம் அவன் கிழக்குக்கும் மேற்குக்குமிடையே உள்ள மிகத்தூரமான அளவுக்கு நரகில் வீழ்வான்" என நபி (ஸல்) கூறினார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுநபி (ஸல்)அவர்கள் பேசும் சந்தர்ப்பத்தில் தான் சொல்லும் விடயம் நன்மையானதா இல்லையா என்பது குறித்து சிந்திக்காத சில மனிதர்கள் குறித்து எமக்கு இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு சிந்திக்காது பேசுகிறவர் அதன் விளைவால் அல்லாஹ் தடைசெய்த ஒரு விடயத்தில் தன்னை வீழ்த்திக் கொள்கிறார். ஆதலால் நரகில் அல்லாஹ்வின் வேதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறார். அல்லாஹ் பாதுகாப்பானாக. சில வேளை இவ்வாறான செயலால் நரகினுள் வீழ்ந்து விடுகிறான் அந்நரகத்தின் விஸ்தீரணம் கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையே உள்ளதை விட மிக தூரமாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் ஒருவர் தனது சகோதரனைச் சந்தித்தால் ஸலாம் சொல்லட்டும். அவர்களுக்கு மத்தியில், ஒரு மரமோ, சுவரோ, கல்லோ பிரித்து, பின்னர் சந்தித்தாலும் ஸலாம் சொல்லட்டும்.
இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை சந்திக்கும் போதெல்லாம் ஸலாம் கூறுமாறு நபியவர்கள் வலியுறுத்துகின்றார்கள். எந்தளவுக்கென்றால், அவர் ஒன்றாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கிடையில் மரம், அல்லது சுவர் அல்லது பெரிய கல் போன்ற ஏதாவதொன்று பிரித்து, பின்னர் சந்தித்தாலும் மீண்டுமொரு தடவை ஸலாம் சொல்லட்டும் என்று கூறுகின்றார்கள்.