





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்: ஓர் மனிதர் தனது வீட்டினுள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு (பிஸ்மில்) கூறினால் ஷைத்தான் தனது நண்பர்களிடத்தில் உங்களுக்கு இரவில் தங்குவதற்கான இடமோ இரவுணவோ கிடையாது என்று கூறுகிறான். அந்த மனிதர் வீட்டினுள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவு (பிஸ்மில்) கூறாது நுழைந்து விட்டால் ஷைத்தான் தனது சகாக்களிடம் உங்களுக்கு தங்குமிடம் கிடைத்துவிட்டது என்று கூறுவான். அதே போல் உண்ணும் போது அல்லாஹ்வை நினைவு கூறாதிருந்தால் (பிஸ்மில் கூறாதிருந்தால்) ஷைத்தான் தனது சகாக்களிடத்தில் உங்களுக்கு தங்குமிடமும் இரவுஉணவும் கிடைத்து விட்டது என்று கூறுவான்'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்வீட்டினுள் நுழையும் போதும் சாப்பிட முன்பும் அல்லாஹ்வை நினைவு கூறுமாறு இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதாவது 'பிஸ்மில்லாஹ்' என்ற வார்த்தையை வீட்டினுள் நுழையும்போதும் உணவு உண்ண ஆரம்பிக்குபோதும் கூறினால், ஷைத்தான் தனது சகாக்களிடம் இந்த வீட்டுரிமைளார் அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலம் உங்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டான் ஆதலால் உங்களுக்கு இரவில் தங்குமிடமோ இரவு உணவோ கிடையாது என்று கூறுவான். அந்த மனிதர் தனது வீட்டினுள் நுழைகையிலும், உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூறாதிருந்தால் ஷைத்தான் தன சகாக்களுக்கு உங்களுக்கு இந்த விட்டில் தங்குவதற்கான இடமும், இரவுணவும் கிடைத்து விட்டது என அறிவிப்பான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : ((நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கின்றவனின் நிலையையும், கொல்லனின்; நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால், (உலை ஊதுபவனோ) கொல்லனோ ஒன்று உனது ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களில் இரு வகையினர் குறித்து உதாரணம் கூறுகிறார்கள். முதலாவது: அல்லாஹ்வின் பால் வழிகாட்டி அவனின் திருப்தியை பெற்றுக்கொள்ளவும் அவனுக்கு கட்டுப்படுவதில் ஒத்தாசைபுரியும் ஸாலிஹான (நல்ல) நண்பன். இவ்வாறான நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியாகும். ஒன்றில் அவன் உனக்கு கஸ்தூரி தருவான் அல்லது நீ அவனிடம் கஸ்தூரி வாங்கி பயன்பெறுவாய். அல்லது நீ அவனிடம் நருமணத்தையாவது நுகர்வாய். இரண்டாமவர் : அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கும் பாவகாரியங்களுக்கு துணை நிற்கும் தீய நண்பன். இவனிடமிருந்து அசிங்கமான செயற்பாடுகளையே கண்டுகொள்வாய் அத்துடன் இவ்வாறானவருடனான சகவாசத்தினால் பிறரின் இழிசொல்லே பயனாய் கிடைக்கும். இவ்வாறான நண்பனுக்கு உதாரணம் இரும்புப்பட்டறையில் நெருப்பூதும் கொல்லனாகும். இவ்வாறனவனின் சகவாசமானது அப்பட்டறையில் -இரும்பு உலையிலிருந்து வரும் நெருப்புத்தூல்கள் உனது ஆடையை எரித்து விடலாம்; அல்லது அவனிடம் அருவருப்பான வாசனையை பெற்றுக் கொள்ளலாம்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகமாக ' யா முகல்லிபல் குலூப் ஸப்பித் கல்பி அலா தீனிக '- (பொருள்) உள்ளங்களை புரட்டுபவனே! என்னுடைய உள்ளத்தினை உனது மார்க்கத்தில் நிலைத்து இருக்க வைப்பாயாக' என அதிகம் கூறுபவர்களாக இருந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாம் உம்மையும் நீங்கள் கொண்டுவந்தவற்றையும் விசுவாசம் கொண்டுள்ளோம். அவ்வாறிருந்தும் எம்மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபியவர்கள், ஆம் என்று கூறிவிட்டு, 'நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்' என பதிலளித்தார்கள்.
இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபியவர்கள் அதிகம் தனது பிரார்த்தனையில், மார்க்கத்திலும், வணக்க வழிபாட்டிலும் ஸ்திரத்தன்மையையும் உறுதியையும் அல்லாஹ்விடம் வேண்டுபவர்களாகவும், தடம் புரள்தல் மற்றும் வழிகேடு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பையும் கோருபவர்களாகவும் இருந்தார்கள். இந்த துஆவை நபியவர்கள் அதிகம் ஓதுவதைக் பார்த்து அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அப்போது நபியவர்கள் அவரிடத்தில் 'உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்' எனக் கூறினார்கள். உள்ளமானது இறைவிசுவாசம் மற்றும் இறைநிராகரிப்பின் உரைவிடமாகும். உள்ளமானது ஒரே நிலையில் இல்லாது அடிக்கடி நிலைமாறுவதினால் அரபியில் கல்ப் என அழைப்பர். அது மாத்திரமின்றி அதிக வெப்பத்தில் கொதிக்கும் பானையில் உள்ள தண்ணீரை விடவும் உள்ளமானது கொந்தளிக்கக் கூடியது. எனவே யாருக்கு அல்லாஹ் உறுதியை நாடுகிறானோ அவனது உள்ளத்தை நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்யவும், மார்க்கத்தில் உறுதியாக இருக்கும் வாய்ப்பையும் வழங்குகிறான். யாரை அல்லாஹ் நேர்வழியிலிருந்து திருப்ப நாடுகிறானோ அவனை தடம்புரளல் மற்றும் வழிகேட்டின் பால் விட்டுவிடுகிறான்.
உங்களுக்கு எதிராக துஆ செய்யாதீர்கள். உங்களின் குழந்தைகளுக்கு எதிராகவும் துஆ செய்யாதீர்கள். இவ்வாறு துஆ செய்வதன் மூலம் நீங்கள் அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டு உங்களுக்கு அவன் துஆ ஏற்கின்ற அந்த நேரத்திற்கு உட்பட்டு வேண்டாம். என ஜாபிர் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸில் ரஸுல் (ஸல் அவர்கள் குழந்ததைகள் மற்றும் சொத்துக்களுக்கெதிராக பிரார்த்திப்பதை தடை செய்து எச்சரிக்கிறார்கள்.ஏனெனில் துஆவின் தாக்கம் மிகப்பெரியது. அதன் பலாபலன்களை அடியார்களுக்குக் அல்லாஹ் காட்டுவான்.அதனால் அடியான் தனக்கு எதிராகக் கேட்கும் போது அந்த நேரம் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரமாக இருந்தால் அதன் தீங்கு குறித்த அம்மனிதருக்கு ஏற்படுவதுடன் அவருடன் தொடர்பான பிள்ளைகளையும் சொத்தையும் பாதிக்கும்.
"நான் எனது இரட்சகனிடம் பிரார்த்தித்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாதவரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்" என அபூ ஹுரைறா ரழி அவர்கள்அறிவிக்கிறார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுமுஸ்லிமின் அறிவிப்பில் "பாவம் செய்வதற்கோ அல்லது சொந்தபந்தத்தை துண்டித்து வாழ்வதற்கோ பிரார்த்தனை செய்யாமலும்,அவசரப்படாமலும் இருக்கும் காலமெல்லாம் அடியானின் பிரார்த்தனைக்கு தொடர்ந்தும் பதிலளிக்கப்படுகிறது." என நபி (ஸல்) அவர்கள் கூற, "அல்லாஹ்வின தூதரே அவசரப்படுதல் என்றால் என்ன?" என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "பிரார்த்திக்கும் அடியான் நான் பல தடவைகள் பிரார்த்தனை செய்தேன் ஆனாலும் எனது பிரார்த்தனைக்கு பதில் கிடைத்ததாக நான் காணவில்லை" என கைசேதப்பட்டு பிரார்த்திப்பதை கைவிட்டு விடுவதாகும் எனக் கூறினார்கள்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைக் கேட்டதாக அம்ர் இப்னு அபஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னிடம் கூறியதாக அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : ((இரவின் கடைசிப் பகுதியில் இரட்சகனான அல்லாஹ் அடியானுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளான். இந்நேரத்தில் அல்லாஹ்வை நினைவுகூருகிற அடியார்களில் நீயும் ஒருவனாக இருக்கமுடியுமென்றிருந்தால் அப்படி இருந்து கொள்வீராக)).
இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதியில் இறைவன் தன் அடியானுக்கு மிக அருகில் வருவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். முஃமினே ! - இந்த நேரத்தில் அல்லாஹ்வைத் தொழுது அவனை நினைவு கூறி அவனிடம் பாவமன்னிப்புத் கோருபவர்களில் ஒருவராக உமக்கு இருக்க முடியுமென்றிருந்தால் அதற்கு எத்தனிப்பீராக. ஏனெனில் இந்நேரத்தை பயன்படுத்தி அதில் நல்லமல்களில் ஈடுபடுவது மிகவும் தேவையான ஒரு விடயமாகும்.
ஒரு மனிதர் ரஸுல் (ஸல்) அவர்களிடம் வந்தார்.அவர்"நான் ஹிஜ்ரத் செல்லவும்,ஜிஹாத் செய்யவும் உங்களிடம் பைஅத் செய்து கொள்கின்றேன்.ஏனெனில் நான் அல்லாஹ்விடம் அதன் கூலியைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்"என்று கூறினார்.அதற்கு நபியவர்கள் "உமது பெற்றோரில் ஒருவரேனும் உயிருடன் இருக்கின்றனரா?" என்றார்கள்.அதற்கு அவர் "ஆம் இருவரும் இருக்கின்றனர்"என்றார்.அதற்கு நபியவர்கள்"நீங்கள் அல்லாஹ்விடம் அதன் கூலியை எதிர் பார்க்கின்றீர்களா?"என்றார்கள்.அதற்கு அவர்"ஆம்" என்றார்.அப்பொழுது நபியவர்கள் "அப்படியாயின் நீங்கள் உங்கள் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவர்களுடன் சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்"என்று கூறினார்கள்,என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள்அறிவிக்கின்றார்.அன்னாரின் இன்னொரு அறிவிப்பில்"ஒரு மனிதர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து ஜிஹாதில் செல்வதற்கு அனுமதி கோரினார்.அப்பொழுது நபியவர்கள் "உங்களின் பெற்றோர் இருவரும் உயிர் வாழ்கின்றானரா?"என்றார்கள்.அதற்கு அவர் "ஆம்" என்றார்.அதற்கு நபியவர்கள் "அப்படியாயின் அவர்கள் இருவரின் விடயத்தில் ஜிஹாது செய்யுங்கள்"என்றார்கள்.என குறிப்பிடப்பட்டுள்ளது
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஒரு மனிதன் தனது பெற்றோரை தனியாக விட்டு ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாதில் ஈடுபடவும்,ஹிஜ்ரத் செல்லவும் தனக்கு விருப்பமாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.மேலும் அபூதாவூதின் அறிவிப்பில் அப்பொழுதுஅவர்கள் இருவரும் அவரின் அழிவை அஞ்சி அழுது கொண்டிருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நபியவர்கள் அந்த மனிதனிடம் "உங்களின் பெற்றோரில் எவரேனும் உயிருடன் இருக்கின்றனரா?" என்று வினவினார்கள். அதற்கு அவர் "ஆம் அவர்கள் இருவரும் இருக்கின்றனர்"என்றார்.அதற்கு நபியவர்கள்"நீங்கள் அல்லாஹ்விடம் அதன் கூலியைப் பெற விரும்புகிறீர்களா?"என்றார்கள். அதற்கு அவர்"ஆம்"என்றார்.அதற்கு நபியவர்கள் "அப்படியாயின் நீங்கள் உங்களின் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவர்களுடன் சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்" என்றார்கள்.அபூதாவூதின் ஒரு அறிப்பில்,"நீங்கள் அவர்கள் இருவரிடம் திரும்பிச் சென்று,அவர்கள் இருவரையும் நீங்கள் எப்படி அழ வைத்தீர்களோ அப்படியே அவர்களை சிரிக்க வையுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே அந்த மனிதனின் விடயத்தில் எது மிகவும் மேலானதாகவும் மிகக் கடமையாகவும் இருந்ததோ அதன் பக்கம் அவரை ரஸூல் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.அதுதான் அவர் தன் பெற்றோரிடம் சென்று அவர்களுடனிருந்து அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வதாகும்.இப்படி அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வதும்,அவர்களைத் திருப்திப் படுத்துவதும்,அவர்களுக்கு வழிப்பட்டு நடப்பதும் ஆத்மாவுடன் ஜிஹாது செய்யும் செயலாகும் இதனையே புஹாரி, முஸ்லிமின் அறிப்பில் குறிப்பிட்டுள்ள"நீங்கள் அவர்கள் இருவரின் விடயத்தில் ஜிஹாத் செய்யுங்கள்" எனும் வாசகம் எடுத்துரைக்கின்றது.மேலும் அல்லாஹ்வின்பாதையில் ஜிஹாது செய்வதைவிட பெற்றோருக்கு நன்மை செய்தல்,அவர்களுக்குக் கட்டுப்டுதல்.அவர்களுக்கு உதவி,உபாரம் செய்தல் மிகச் சிறந்த அமல்கள் என இன்னொரு ஹதீஸில் ரஸூல் (ஸல்) அவர்கள் தௌிவாகக்குறிப்பிட்டுள்ளார்கள்.இது போன்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது."ஒரு மனிதன் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களிடம்"அமல்களில் சிறந்தது எது?"எனக்கேட்டார்.அதற்கு நபியவர்கள் "தொழுகை" என்றார்கள்.அதற்கு அந்த மனிதன்"அதன் பின்னர் எது"?என்றார்.அதற்கு நபியவர்கள் "ஜிஹாத்-அறப்போர்"என்றார்கள்.அதற்கு அந்த மனிதன் எனது இரண்டு பெற்றோர்களும் இருக்கின்றனரே" என்றார்.அப்பொழுது நபியவர்கள்"நீங்கள் உங்களின் பெற்றோருக்கு நன்மை செய்தல் சிறந்தது"என்றார்கள்.என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.இந்த ஹதீஸை இப்னு ஹிப்பான் அவர்கள் பகுப்பாய்வு செய்துள்ளார்கள்.மேலும் ஜிஹாத்-அறப்போரானது பர்ழு ஐன் என்ற கட்டத்தை அடடையாத வரை பெற்றோருக்கு நன்மை செய்யும் காரியத்தில் ஈடுபாடு கொள்வதானது,ஜிஹாதை விடவும் சிறந்த காரியமாக விளங்கும் என்பதை இந்த ஹதீஸ் உறுதி செய்கின்றது.எனினும் 'ஜிஹாத்' பர்ழுஐன் என்ற கட்டத்தை அடைந்து விட்டாலோ பெற்றோருக்கு கட்டுப்படுவதைப் பார்க்கிலும் ஜிஹாதுக்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “மனிதன் செலவிடும் தீனார்களில் மிகச் சிறந்தது தனது குடும்பத்தினருக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் வாகனத்துக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் தனது தோழர்களுக்காகச் செலவு செய்யும் தீனாரும் ஆகும். அபூ கிலாபா அவர்கள் கூறுகிறார்கள்: இங்கே நபியவர்கள் குடும்பத்தை முதலில் குறிப்பிடுகிறார்கள். தொடர்ந்தும் அபூகிலாபா குறிப்பிடுகையில் குழந்தைககள் உள்ள ஒரு குடும்பத்திற்கு செலவு செய்யும் ஒரு மனிதனை விடவும் மிகப்பெரும் நற்கூலியை பெறும் உயர் மனிதன் எவர்தான் இருக்க முடியும். காரணம் அவர் அவர்களை சுயகௌரவத்துடன் வாழ வைக்கிறார் அல்லது அவரின் மூலம் அல்லாஹ் நலனை பெற்றுக்கொடுத்து அவர்களை தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குகிறான்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செலவு செய்வதன் சில வடிவங்கள் குறித்து தெளிவுபடுத்தி, அவை, (அதாவது செலவு செய்ய வேண்டிய பகுதிகள்) அதிகமாகும் போது அதில் உங்களுக்கு மிகவும் கட்டாயமானது என்பதின் அடிப்படையில், மிகவும் பொருத்தமான செலவீன முறையை வரிசைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளார்;. அந்தவகையில் ஒரு முஸ்லிம் தான் அவசியம் செலவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட,(தம்மைச் சார்ந்தவர்களான) மனைவி பிள்ளை போன்றோருக்கு செலவு செய்யும் செல்வமே அதிக கூலியைப் பெற்றுத்தரும் செல்வமாகும் என நபியவர்கள் குறிப்பிட்டார்கள். அதன் பின் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதற்காக தயார்படுத்தப்பட்ட வாகனத்திற்காக செலவு செய்வது. அல்லாஹ்வின் பாதையில் போராடும் தனது தோழர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்வது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக அபூ ஸஈத் அல்குத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு மனிதர் விருப்பமான ஒரு கனவைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது. எனவே, அவர் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, அதை (மக்களுக்குக்) கூறவும். அவ்வாறல்லாமல் வெறுக்கும் ஏதாவதொன்றைக் கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வரும். அதன் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதுடன், யாரிடமும் அதைக் கூறாமலிருக்கட்டும். அப்போது, அது அவருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தமாட்டாது.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்தூக்கத்தில் வரும் மகிழ்ச்சியான கனவுகள் அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன என்பதை நபியவர்கள் கூறிவிட்டு, அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, அதை ஏனையோருக்குக் கூறுமாறு அறிவுறுத்துகின்றார்கள். வெறுப்பான, கவலையான ஏதாவதொன்றைக் கண்டால், அது ஷைத்தானிடமிருந்து வரக்கூடியது எனவும், அதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதோடு, அதை யாரிடமும் கூறாமல் இருக்கட்டும் எனவும் அறிவுறுத்தியதோடு, அப்போது அது பாதிப்பை ஏற்படுத்தமாட்டாது என்றும் கூறினார்கள். அதாவது, மேற்கூறப்பட்ட அம்சங்களை, கனவினால் ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புக்களைத் தடுக்கும் காரணிகளாக அல்லாஹ் வைத்துள்ளான்.