





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'உங்களில் ஒருவருக்கு தனது பெற்றோர்; தனது குழந்தை, ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் அதிக நேசத்திற்குரியவராக ஆகும்வரையில் அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஒரு முஸ்லிம் தனது பிள்ளை, தந்தை, மற்றும் அனைத்து மனிதர்களுடனான நேசத்தை விட தன் மீதான நேசத்தை முற்படுத்தும் வரையில் அவனுடைய ஈமான் பூரணமடைய மாட்டாது, என இந் நபிமொழியில் நபியவர்கள் எமக்கு அறியத்தருகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்' (அல்லாஹ் தூயவன்; அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் உதயமாகும் இவ்வுலகைவிடவும் எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த மகத்தான வார்த்தைகளினால் அல்லாஹ்வை நினைவுகூர்வது உலகம் அதில் உள்ளவற்றைவிடவும் சிறந்தது என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள் அந்த வார்த்தைகள் பின்வருமாறு : "ஸுப்ஹானல்லாஹ்" என்பது: (அல்லாஹ்வை தூய்மையானவன்) என்பது அனைத்துவகையான குறைகளைவிட்டும் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தலைக் இது குறிக்கிறது. 'அல்ஹம்து லில்லாஹ் என்பது : புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. போற்றி நேசம் கொள்வதற்குரிய நிறைவான பண்புகளின் மூலம் அல்லாஹ்வை பாராட்டி புகழ்தலைக் குறிக்கும். 'லாஇலாஹ இல்லல்லாஹு' என்ற வார்த்தை உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாறுமில்லை என்பதைக் குறிக்கும். "அல்லாஹு அக்பர்" என்பதன் கருத்து அவன் எல்லா அம்சங்களையும் விட போற்றவும் பெருமைப்படுத்தவும் மிகவும் தகுதியானவன்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர் 'வருத்திக்கொண்டு காரியங்களை மேற்கொள்வதை விட்டும் நாம் தடுக்கப்பட்டோம்' என்று கூறினார்கள்.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்எந்தத் தேவையுமின்றி, அது சொல் அல்லது செயல் சார்ந்த விடயங்களாயினும் அவற்றை சிரமப் படுத்திக் கொண்டு மேற்கொள்வதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள் என உமர் ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகிறார்கள்.
உமர் இப்னு அபீ ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (அங்கும் இங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னிடம், 'சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயரைக் கூறி, உனது வலது கரத்தால், உனக்கு முன்னால் இருப்பதை சாப்பிடு' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவி உம்முஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் புதல்வர், உமர் இப்னு அபீ ஸலமா ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள். - அவர் நபியவர்களின் கண்காணிப்பு மற்றும் வளர்ப்பின் கீழ் இருந்தவர்- அவர் உணவு உண்ணும் போது தனது கையை உணவை எடுப்பதற்காக அங்குமிங்கும் நகர்த்திக்கொண்டிருந்தார் அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உண்ணும் போது கடைபிடிக்கவேண்டிய மூன்று ஒழுக்கங்களை கற்பித்துக்கொடுத்தார்கள் அவை பின்வருமாறு: முதலாவது : உண்ண ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூறுதல். இரண்டாவது: வலது கையால் உண்ணுதல். மூன்றாவது : உணவுத் தட்டில் தனக்கு அருகில் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடுதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கரத்தால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கரத்தால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கரத்தால்தான் உண்கிறான்; இடக்கரத்தால்தான் பருகுகிறான்'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஸ்லிம் வலது கையால் உணவருந்துமாறும் பானங்களை அருந்துமாறும் கட்டளையிடுவதோடு, ஷைத்தான் இடது கையால் உண்ணுகிறான் மற்றும் குடிக்கிறான் என்பதனால் இடது கையால் சாப்பிடுதல் மற்றும் குடித்தலை தடுத்துள்ளார்கள்.
அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நான், 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய எனக்கு ஏதாவது கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள்;' என்று கூறினார்கள். சில நாட்களுக்குப் பிறகு, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் கேட்க ஏதாவது ஒன்றை எனக்குக் கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: 'அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் தந்தைவழிச் சகோதரரே! இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்விடம் நல்வாழ்வைக் கேளுங்கள்' என்று என்னிடம் கூறினார்கள்.
இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் தந்தைவழிச் சகோதரர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப், அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்கான ஒரு பிரார்த்தனையை தனக்குக் கற்றுக் கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். 'மார்க்க விடயங்களிலும் இம்மை மற்றும் மறுமையிலும் எல்லா வகையான கஷ்டங்களிலிருந்தும் தீங்குகளிலிருந்தும் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தையும்; பாதுகாப்பையும் கேளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் கட்டளையிட்டார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: சில நாட்களுக்குப் பிறகு, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று எனக்கு ஒரு பிரார்ததனையைக் கற்றுக் கொடுக்கச் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரழி) அவர்களின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தி, ' அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் தந்தைவழிச் சகோதரரே!' என்று கூறி, பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை (ஆஃபியத்) கேளுங்கள், அதனால் அவன் உங்களை எல்லா கஷ்டங்களிலிருந்தும் பாதுகாத்து, இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு எல்லா வகையான நன்மைகளையும் வழங்குவான்.
அப்துர் ரஹ்மான் இப்னு அபீலைலா அவர்கள்அறிவிக்கிறார்கள்: ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாம் இருந்தோம். அப்பொழுது அவர்கள் பருகுவதற்கு தண்ணீ|ர் கேட்டார்கள். நெருப்பு வணங்கி ஒருவன் தண்ணீர் கொண்டு வந்து கோப்பையை அவர்களின் கையில் வைக்க உடனே அக்கோப்பையை தண்ணீருடன் எறிந்து விட்டுக் கூறினார்கள், பல விடுத்தங்கள் அவனைத் தடுத்தும் இதனைச் செய்கிறானே என அங்கலாய்த்தவர்களாக இது நான் செய்யவில்லை என்றாலும் நபி ஸல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை நான் செவி மடுத்தேன்: "நீங்கள் சாதாரண பட்டையோ அலங்காரப்பட்டையோ அணிய வேண்டாம். தங்கப் பாத்திரத்திலோ வெள்ளிப் பாத்திரத்திலோ குடிக்க வேண்டாம். அவ்விரண்டின் தட்டுகளில்; நீங்கள் சாப்பிட வேண்டாம். ஏனெனில் அவை இவ்வுலகில் அவர்களுக்குரியதும், மறுமையில் எங்களுக்குரியதுமாகும்".
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாவகையான பட்டு அணிவதை விட்டும் ஆண்களை தடை செய்தார்கள். தங்கப் பாத்திரத்திலோ, வெள்ளிப் பாத்திரத்திலோ தங்கம் வெள்ளி பைகளிலோ சாப்பிடுவதை குடிப்பதை விட்டும் ஆண்களையும் பெண்களையும் தடை செய்தார்கள். மறுமை நாளில் அவை முஃமின்களுக்கே பிரத்தியேகமானது என நபியவர்கள் கூறினார்கள்; ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் ஆணைக்கு கட்டுப்பட்டு இவ்வுலகில் அவற்றைப் பயன்படுத்துவதை விட்டும் தவிர்ந்து கொண்டனர். ஆனால் நிராகரிப்பாளர்களாகிய கபிர்களுக்கு மறுமையில் அவை கிடையாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டை மீறி அவர்களின் இவ்வுலக வாழ்விலே தடை செய்யப்பட்டவைகளை பயன்படுத்தி அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணிய மாட்டார்'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இவ்வுலகில் ஆண்களில் பட்டாடை அணிபவர் மறுமையில் அதனை அணியமாட்டார் என இந்த ஹதீஸில் நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். ஒருவர் பட்டாடை அணிந்து அதற்காக தௌபா –பாவமீட்சி கோராது விட்டால் அவறுக்கான மறுமையின் தண்டனை இதுவாகும்.
அபூ ஸஈதினில் குத்ரிய்யி ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: முஆவியா ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் பள்ளியிலே வட்டமாக அமர்ந்திருந்தவர்களை விழித்து எதற்காக நீங்கள் உட்கார்ந்துள்ளீர்கள்? என வினவினார்கள் (என்ன விடயம் அமர உட்கார செய்தது?- என வினவினார்கள்.) அதற்கு அல்லாஹ்வை நினைவுகூர்வதற்காக உட்கார்ந்தோம் என்று கூறினார்கள. அப்போது அல்லாஹ்வின் மீது ஆணையாக அதைத்தவிர வேறு நோக்கம் இல்லையா? என வினவினார்கள். அல்லாஹ்வின் மிது ஆணையாக அதைத்தவிர வேறு நோக்கம் கிடையாது,என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களில் சிலர் வட்டமாக அமர்ந்திருப்பதைக் கண்ணுற்றதும் அவர்களிடம் சென்று என்ன விடயம் உங்களை உட்கார செய்தது? என வினவினார்கள். அதற்கு அல்லாஹ்வை திக்ர் செய்வதற்காகவும் மேலும் எமக்கு இஸ்லாத்தின் பக்கம் நேர் வழிகாட்டி அதன் மூலம் எம்மீது உபகாரம் புரிந்ததற்கு அவனைப் புகழ்வதற்காகவும் உட்கார்ந்தோம் என்று கூறினார்கள். நபியவர்கள்: அல்லாஹ்வின் மிது ஆணையாக அது தவிர வேறு நோக்கம் உங்களை உட்காரச் செய்ய வில்லையா?என வினவினார்கள். அல்லாஹ்வின் மிது ஆணையாக அதுதவிர வேறு நோக்கம் எம்மை இங்கு அமரச் செய்ய வில்லை என்றார்கள். அப்போது நபி அவர்கள் : உங்கள் மீது சந்தேகம் கொண்டதனால் நான் உங்களை சத்தியம் செய்யும்படி வேண்டவில்லை.என்றாலும் என்னிடம் ஜிப்ரீல் வந்து: நிச்சயமாக அல்லாஹ; உங்களைப் பற்றி பெருமையாக மலக்குகளிடம் பேசுகிறான் என்று என்னிடம் அறிவித்தார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்அபூ ஸுப்யானின் மகன் முஆவியா ரழியல்லாஹுஅன்ஹுமா அவர்கள் பள்ளியிலே வட்டமாக அமர்ந்திருந்தவர்களை நோக்கிச்சென்று அவர்களை விழித்து எதற்காக அவர்கள் உட்கார்ந்துள்ளார்கள் என வினவினார்கள் அப்பொழுது அவர்கள் அல்லாஹ்வை 'திக்ர்' நினைவு படுத்துகின்றோம் என்றார்கள். அப்பொழுது முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்விடத்தில் அமர்ந்து ஒன்றுகூடி இருப்பது அல்லாஹ்வை 'திக்ர்' நினைவு படுத்துவதை தவிர வேறு நோக்கம் தமக்குக் கிடையாது என அல்லாஹ்வின் மிது ஆணையிட்டுக்கூறுமாறு அவர்களை வேண்டினார்கள். அப்பொழுது அவர்கள் அற்காக சத்தியம் செய்தார்கள். முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களைப் பார்த்து : உங்கள் மீது குற்றம் காண வேண்டும் என்பதற்காகவோ உங்களது உண்மைத் தன்மையில் சந்தேகம் வைத்தோ நான் உங்களை சத்தியம் செய்யும்படி வேண்டவில்லை எனக் கூறினார்கள், பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கும் தனக்கும் இடையில் உள்ள நெறுக்கமான உறவுமுறையை குறிப்பிடும் போது நபியவர்களுக்கு நான் மிக நெறுக்கமாக இருப்பது போன்று எந்த ஒருவரும் இருந்ததில்லை ஏனெனில் தனது சகோதரி உம்மு ஹபீபா நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய அன்பு மனைவியாக இருந்ததினாலும். மேலும் அவர்கள் வஹியை எழுதக்கூடியவர்களில் ஒருவராக இருந்ததினாலுமாகும். அதேவேளை இவர்-முஆவியா ரழியல்லாஹு அன்ஹு நபியவர்களிடமிருந்து மிகக்குறைவான ஹதீஸ்களையே அறிவிப்புச் செய்துள்ளார்கள். அத்தோழர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடய பின்வரும் நிகழ்வை சொன்னார்கள்: ஒரு நாள் தனது வீட்டிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வெளியில் வந்தார்கள். அப்பொழுது சில நபித்தேழர்கள் பள்ளியில் உட்கார்ந்து, தங்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்தின் பால் நேர்வழிகாட்டி அருள்புரிந்தமைக்காக அவனை நினைவு கூறி (திக்ரு செய்து) புகழ்ந்து கொண்டிருக்கும் காட்சியை கண்டதும் அவர்களிடம் இது குறித்து விசாரித்து நபியவர்கள் சத்தியம் செய்யுமாறு கூறினார்கள் அதைப் போன்று முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் நடந்து கொண்டார்கள் இவ்வாறு நபியவர்களும் தமது தோழர்களுடன் நடந்து கொண்டமை குறித்து குறிப்பிட்டார்கள். பின் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; தான் அவர்களை விசாரித்து சத்தியம் செய்ய பணித்ததற்குரிய காரணத்தைக் கூறினார்கள்: அதாவது, மலக்கு (களின் தலைவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்து தன்னிடம் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்களைப் பற்றி பெருமையாக மலக்குகளிடம் பேசுகிறான் உங்கள் சிறப்புக்களை அவர்களிடம் வெளிப்படையாக கூறுகிறான். உங்களது நல்லமல்களை அவர்களுக்கு காண்பிக்கின்றான். அவர்களிடம் உங்களைப்பற்றி புகழ்ந்து கூறுகிறான் என்று என்னிடம் அறிவித்தார்கள்.