





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
பஹ்ஸ் இப்னு ஹகீம் தனது தந்தை வழியாகத் தனது பாட்டனாரைத் தொட்டும் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்: நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம், “நான் யாருக்கு உபகாரம் புரிய வேண்டும்?” எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள், “உமது தாயார், பின்பும் உமது தாயார், பின்பும் உமது தாயார், பின்பு உமது தந்தை, பின்பு அதற்கு அடுத்தடுத்து நெருக்கமாக இருப்பவர்கள்” என்று கூறினார்கள்.
இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஇங்கு நபியவர்கள், உபகாரம் புரிவதற்கும், நல்ல முறையில் நடந்துகொள்வதற்கும், அழகாக இணைந்து நடப்பதற்கும், சேர்ந்துநடப்பதற்கும் மனிதர்களிலேயே மிகப் பொருத்தமானவர், தாய் தான் என்று தெளிவுபடுத்துகின்றார்கள். ஏனையோரை விடத் தாயாருக்கு இருக்கும் உரிமையை உறுதிப்படுத்தும் விதத்தில் மூன்று தடவை அதனைக் கூறி, விதிவிலக்கின்றி ஏனைய அனைத்து மனிதர்களையும் விட அவரது சிறப்பைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். பின்பு நபியவர்கள், அவரை அடுத்து உபகாரம் செய்யப்படுவதற்குத் தகுதியானவர் தந்தை என்றும், பின்பு அடுத்து நெருக்கமாக உள்ள உறவினர்கள் என்றும் தெளிவுபடுத்துகின்றார்கள். நெருக்கமாக உள்ள உறவினர்கள், தூரமாக உள்ள உறவினர்களை விட, சேர்ந்து நடக்கத் தகுதியானவர்களாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யார் رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனம் கட்டாயமாகி விடும். (பொருள் : நான் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை ரஸூலாகவும் பொருந்திக் கொண்டு விட்டேன்.)
இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, யார், 'நான் அல்லாஹ்வை ரப்பாகவும் (அதாவது, கடவுளாகவும், பொறுப்பாளனாகவும், ஆட்சியாளனாகவும், தலைவனாகவும், சீர்த்திருத்துபவனாகவும்), இஸ்லாமை (அதாவது, ஏவல், விலக்கல்கள் உட்பட, அதன் அனைத்து சட்டங்களையும்) மார்க்கமாகவும் (அதாவது, சட்டமாக உள்ளத்தால் ஏற்றுக் கட்டுப் பட்டு), முஹம்மத் (ஸல்) அவர்களை ரஸூலாகவும் (நபியாகவும், மேலும் அவர்களுக்கு கொடுத்து அனுப்பப்பட்ட, அவர்கள் எமக்கு எத்திவைத்த அனைத்தையும்) பொருந்திக் கொண்டு விட்டேன் என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனம் கடமையாகி விட்டது.
பத்ரில் கலந்து கொண்ட ஒருவரான, மேலும், அகபா இரவில் நியமிக்கப்பட்ட பொறுப்புதாரிகளில் ஒருவரான, உபாதா இப்னுஸ் ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள், தமது தோழர்கள் தம்மைச் சூழாக இருக்கும் நிலையில் இவ்வாறு கூறினார்கள் : அல்லாஹ்வுக்கு எந்த இணையையும் ஏற்படுத்த மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபச்சாரம் செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி வழங்குங்கள். மேலும், உங்களது பிள்ளைகளைக் கொலை செய்யமாட்டீர்கள் என்றும், மேலும், உங்கள் கரங்கள் மற்றும் கால்களுக்கு இடையில் இருந்து இட்டுக்கட்டி, அவதூறுகளைக் கொண்டு வரமாட்டீர்கள் என்றும், நன்மையில் மாறு செய்ய மாட்டீர்கள் என்றும் (எனக்கு உறுதிமொழி வழங்குங்கள்) உங்களில் யார் (இதை) நிறைவேற்றுகின்றாரோ, அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. இவற்றில் ஏதாவதொன்றை யாராவது செய்து, பின்பு அல்லாஹ் அவரை மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளவர். அல்லாஹ் நாடினால், அவரை மன்னிப்பான். நாடினால் தண்டிப்பான். (இவ்வாறு நபியவர்கள் கூறிய பின்னர்) நாம் அதற்கு உறுதிமொழி வழங்கினோம்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்உபாதா இப்னுஸ் ஸாமித் (ரலி) அவர்கள், மாபெரும் பத்ர்ப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். மேலும், நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் வருவதற்கு முன்னர், மக்காவில் இருக்கும் போது, மினாவில் உள்ள அகபா எனும் இடத்தில் ஓர் இரவு நேரம், நபியவர்களுக்கு உதவுவதாக வாக்களிக்க வந்த தமது சமுதாயத்தினருக்குத் தலைவராகவும் இருந்தவர். அவர்கள் அறிவிப்பதாவது, நபி (ஸல்) அவர்கள், தமது தோழர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டிருந்த நிலையில் சில விடயங்களுக்கு உறுதிமொழி அளிக்குமாறு வேண்டினார்கள். முதலாவது : அல்லாஹ்வை வணங்கும் விடயத்தில் எதையும் - அது மிகக் குறைவானதாக இருப்பினும் - இணைவைக்காமல் இருத்தல். இரண்டாவது : திருடக்கூடாது. மூன்றாவது : விபச்சாரம் எனும் மானக்கேடான பாவத்தை செய்யக்கூடாது. நான்காவது : தமது ஆண்பிள்ளைகளை வறுமைக்குப் பயந்தோ, பெண்பிள்ளைகளை அவமானத்திற்குப் பயந்தோ கொலை செய்யக் கூடாது. ஐந்தாவது : தமது கைககள் மற்றும் கால்களால் இட்டுக்கட்டி, பொய்களைக் கொண்டுவராமல் இருத்தல். ஏனெனில், பெரும்பாலான செயல்கள் இவ்விரு உறுப்புக்கள் மூலமாகவே நடக்கின்றன. ஏனைய உறுப்புக்கள் அதனுடன் கூட்டுச் சேர்ந்தாலும் சரியே. ஆறாவது : நல்லவிடயங்களில் நபி (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்யக்கூடாது. அவர்களில் யார் இந்த உறுதிமொழியில் உறுதியாக இருந்து, அதைப் பேணிக்கொள்கின்றாரோ, அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. கூறப்பட்டவற்றில் - இணைவைப்பல்லாதவற்றை - யாராவது செய்து, அதற்காக இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால், அது அவருக்கான குற்றப்பரிகாரமாகும். அதைக் கொண்டு குற்றம் நீங்கிவிடும். அவற்றில் ஏதாவதொன்றை யாராவது செய்து, பின்பு அல்லாஹ் அவரை மறைத்து விட்டால், அவரது விடயம் அல்லாஹ்விடம் உள்ளது. அல்லாஹ் நாடினால், அவரை மன்னிப்பான். நாடினால் தண்டிப்பான். (அப்போது) சமூகமளித்திருந்தவர்கள் அனைவரும் அதற்கு உறுதிமொழி அளித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: இஸ்லாம் ஆதரவற்றதாகவே ஆரம்பித்தது. அவ்வாறு ஆரம்பித்தது போன்றே, ஆதரவற்ற நிலைக்கே அது இறுதியில் சென்றடையும். ஆதரவற்ற நிலையிலும் அதை நடைமுறைப்படுத்தும் 'குரபா'க்களுக்கு சுபசோபனம் உண்டாகட்டும்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள் கூறுவதாவது, இஸ்லாம் சில தனிநபர்கள் மாத்திரம் இருக்க, ஏற்றுக் கொண்டவர்கள் குறைவாக இருக்கும் நிலையில் ஆதரவற்ற ஒன்றாகவே ஆரம்பித்தது. அவ்வாறு ஆரம்பித்தது போன்றே, நடைமுறைப் படுத்துபவர்கள் குறைவடைந்து, ஆதரவற்ற நிலைக்கே அது மீண்டும் செல்லும். ஆதரவற்ற நிலையிலும் அதை நடைமுறைப்படுத்தும் 'குரபா'க்களுக்கு சுபசோபனமும், மகிழ்ச்சியும், கண்குளிர்ச்சியும் உண்டாகட்டும்.
நபியவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள், அறிவிக்கின்றார்கள் : அற்பமாகக் கருதப்படும் பாவங்களை நான் எச்சரிக்கின்றேன். அற்பமாகக் கருதப்படும் பாவங்களுக்கான உதாரணமாவது, ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் இறங்கிய ஒரு கூட்டத்தினரைப் போன்றதாகும். இவர் ஒரு குச்சியைக் கொண்டவந்தார். மற்றையவர் இன்னுமொரு குச்சியைக் கொண்டுவந்தார். இவ்வாறே அவர்கள் தமது ரொட்டியை வேகவைத்து விட்டார்கள். அற்பமாகக் கருதப்படும் பாவங்களை செய்பவர், அவற்றைக் கொண்டு எப்போதாவது பிடிக்கப்பட்டால், அவரை அவை அழித்தே விடும்.
இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்இங்கு நபியவர்கள், சிறிய பாவங்களில் கவனயீனமாக ஈடுபடுவதையும், அவற்றை அதிகமாகச் செய்வதையும் எச்சரிக்கின்றார்கள். ஏனெனில், அவை ஒன்றிணைந்து அவனை அழித்து விடுகின்றன. அதற்கு உதாரணமாவது, ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் இறங்கிய ஒரு கூட்டத்தினரைப் போன்றதாகும். ஒவ்வொருவரும் ஒரு குச்சியைக் கொண்டு வந்தனர். இவ்வாறே அவர்கள், தாம் சேர்த்த குச்சிகளைக் கொண்டு தமது ரொட்டியை வேகவைத்து விட்டார்கள். அற்பமாகக் கருதப்படும் பாவங்களை செய்பவர், அவர் தௌபா செய்யாத நிலையிலும், அவரை அல்லாஹ் மன்னிக்காத நிலையிலும், அவற்றைக் கொண்டு எப்போதாவது பிடிக்கப்பட்டால், அவரை அவை அழித்தே விடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நற்குணங்களைப் பரிபூரணப்படுத்தவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்
இதை இமாம் புஹாரி அவர்கள் ‘அல்அதப் அல்முப்ரத்’ எனும் நூலிலும், இமாம்களான அஹ்மத், பைஹகீ ஆகியோரும் பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள், தம்மை அல்லாஹ் சிறப்பான நற்குணங்களைப் பரிபூரணப்படுத்துவதற்காகவே அனுப்பிவைத்தான் என அறிவிக்கின்றார்கள். அதாவது, நபியவர்கள், முன்சென்ற நபிமார்களை (அவர்களது போதனைகளை) முழுமைப்படுத்தும் விதமாகவும், அரபிகளின் நற்குணங்களைப் பரிபூணரப்படுத்தும் விதமாகவும் அனுப்பி வைக்கப் பட்டார்கள். அவர்கள் நன்மையை விரும்புபவர்களா கவும், தீமையை வெறுப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சுயகௌரவமும், பெருந் தன்மையும், தயாளகுணமும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் இருந்த குறைகளான, குடும்பங்களை வைத்துப் பெருமை பேசுதல், பெருமையடித்தல், ஏழையை இழிவாகக் கருதுதல் போன்றவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக நபியவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான் : ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். (ஏனெனில்) அவன் காலத்திற்கு ஏசுகின்றான். நானே காலமாக இருக்கின்றேன். அதிகாரம் என்னிடமே உள்ளது. இரவையும் பகலையும் நானே மாறச் செய்கின்றேன்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதாக, நபியவர்கள் கூறுகின்றார்கள் : சோதனைகளும், வெறுக்கத்தக்க அம்சங்களும் நிகழும் போது, காலத்தை இகழ்ந்து, ஏசும் மனிதன், என்னைக் குறை கூறி நோவினை செய்கின்றான். ஏனெனில், நிகழும் அனைத்தையும் அல்லாஹ்வே நிர்வகித்து, செயற் படுத்துகின்றான். எனவே, காலத்திற்கு ஏசுவது என்பது, அல்லாஹ்வுக்கு ஏசுவதே! காலம் என்பது, (அல்லாஹ்வினால்) வசப்படுத்தப்பட்டுள்ள ஒரு படைப்பே. அல்லாஹ்வின் கட்டளை கொண்டே அதில் சம்பவங்கள் நிகழுகின்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ருகையா தமீம் பின் அவ்ஸ் அத்தாரீ ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'மார்க்கம் என்பது நலன் நாடுவதாகும்;.' என்று நபியவர்கள் கூறியபோது, யாருக்கு நலன் நாட வேண்டும்? என நாம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள்: அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்திற்கும், அவனது தூதரிற்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், இன்னும் முஸ்லிம் பொதுமக்களுக்கும் நலன் நாடுவதாகும்' எனக் கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த மார்க்கம் உளத் தூய்மை மற்றும் உண்மை ஆகிய பண்புகளை அடித்தளமாகக் கொண்டமைக் கப்பட்டுள்ளது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால் மார்க்கத்தில் உள்ளவற்றை அவன் கடமையாக்கியது போன்று எவ்விதக் குறைத்தலோ மோசடியோ செய்யாது பூரணமாக நிறைவேற்ற வேண்டும். பின் 'நலன் நாடுதல்' யாருக்கு இருக்க வேண்டும் என அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர் : முதலாவது: அல்லாஹ்வுக்கு நலன் நாடுதல் என்பது அவனுக்கு இணைவைக்காது உளத்தூய்மையுடன் செயற்படுதலாகும். அதாவது தவ்ஹீதின் வகைகளான ருபூபிய்யாவிலும்,(இரட்சித்து பரிபாலித்தலில் அவனை ஒருமைப்படுத்துதல்) உலூஹிய்யாவிலும், (அல்லாஹ்வுக்குரிய வணக்கங்களில் அவனை ஒருமைப்படுத்துதல்) அஸ்மா வஸ்ஸிபாத்திலும் (அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துதல்) தனித்துவமானவன் என்று நாம் ஈமான் கொள்ள வேண்டும். அத்துடன் அவனின் கட்டளைகளை மதித்து நடப்பதுடன் அவனை ஈமான் கொள்வதின் பால் பிறரையும் அழைத்தல் ஆகிய விடயங்களை இது குறிக்கும் . இரண்;டாவது : அவனின் வேதமான அல்குர்ஆனுக்கு நலன் நாடுதல் என்பது அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்றும், அவனின் இறுதி வேதம் என்றும், அல்குர்ஆனுக்கு முன்னுள்ள அனைத்து இறை சட்ட திட்டங்களையும் மாற்றிய வேதம் என்றும் நம்ப வேண்டும். அத்துடன் அதனை மகிமைப் படுத்துவதுடன், உரிய முறையில் ஓதி அதன் முஹ்கமான (தெளிவான ஒரே கருத்தைக் காட்டும்) வசனங்களை நடைமுறைப் படுத்துவதுடன், முதஷாபிஹான (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) வசனங்களை ஓப்புக்கொள்ள வேண்டும். அதற்கு தவறான பொருள்கோடல் செய்வோரின் வியாக்கியானத்தை விட்டும் அதனைப் பாதுகாப்பதுடன், அதன் உபதேசங்களினால் படிப்பினை பெறுதல் வேண்டும். மேலும் அதன் அறிவை பரப்புவதுடன் அதன் போதனையை நோக்கி மக்களை அழைக்கவும் வேண்டும். இவைகளே அல்குர்ஆனுக்கு நலன் நாடுதல் என்பது குறிக்கிறது. மூன்றாவது : அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு நலன் நாடுதல் என்பதன் கருத்து : நாம் அவர்களை தூதர்களில் இறுதியானவர் என்று நம்பிக்கை கொள்வதுடன், அவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த அத்துனை விடயங்களையும் உண்மைப்படுத்துவதுடன், அவர்களின் ஏவல்களை எடுத்து நடப்பதன் மூலம் கட்டுப்பட்டும், அவர்களின் விலக்கல்களை தவிர்ந்தும் நடத்தல் வேண்டும். மேலும் அவர்கள் கொண்டுவந்த வழிமுறையின் அடிப்படையிலேயே அல்லாஹ்வை வணங்குதல் வேண்டும். அத்துடன் அவர்களுக்குரிய உரிமையை பேணி நடப்பதுடன், அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களின் பிரச்சாரத்தையும், அவர் கொண்டு வந்த மார்க்கத்தையும் பரப்புவதுடன், அவருக்கெதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை மறுத்திடுதல் வேண்டும். நான்காவது : முஸ்லிம்களின் தலைவருக்கு நலன் நாடுதல் என்பது சத்தியத்தில் அவர்களுக்கு ஒத்துழைத்தல், அவர்களின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்யாதிருத்தல், அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் விடயத்தில் அவர்களின் கட்டளைகளுக்கு செவிசாய்த்து கட்டுப்பட்டு நடப்பதையும் குறிக்கிறது. ஐந்தாவது: முஸ்லிம்களுக்கு நலன் நாடுதல் என்பது அவர்களுக்கு உபகாரம் செய்வதும் அவர்களை நல்ல காரியங்களின் பால் அழைப்பதும் அவர்களுக்கு பிறரால் ஏற்படும் ஆபத்துக்களை தடுப்பதும் அவர்களுக்கு நன்மையை விரும்புவதும், தக்வா மற்றும் நன்மையான காரியங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பதையும் இது குறிக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'மனிதர்களின் ஒவ்வொரு மூட்டுக்கும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தர்மத்தை செய்தாக வேண்டும். சூரியன் உதயமாகும் ஒவ்வொரு நாளும் இரு மனிதர்களுக்கிடையில் நீதி செலுத்துதல் ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய பொருட்களை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். தீங்கு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்'
இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்ஒவ்வொரு முஸ்லிமும் உடலிலுள்ள மூட்டுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தனக்கு கிடைத்துள்ள ஆரோக்கியத்திற்கு நன்றி செலுத்தும் முகமாகவும், தனது மூட்டுக்களை மடிப்பதற்கும் நீட்டுவதற்குமான இயலுமையை தந்தமைக்கும் தினமும் அல்லாஹ்வுக்கு தர்மம் செய்ய பணிக்கப்பட்டுள்ளனர் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். குறித்த தர்மமானது செல்வத்தால் மாத்திரமின்றி அனைத்து நற்காரியங்களின் மூலமும் நிறைவேற்ற முடியும் என்பதையும் இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டுகிறார்கள் அவற்றின் சில பின்வருமாறு : இரு பகைவருக்கு மத்தியில் நீ சமாதானத்தை ஏற்படுத்தி நீதிவழங்குவதும் தர்மமாகும். ஒருவர் தனது வாகனத்தில் ஏறி அமர்வதற்கு உதவுவதும் அல்லது அவரின் பயணச்சுமைகளை ஏற்றிவிடுவதும் உமக்கு தர்மமாகும். திக்ர்,துஆ,(பிரார்த்தனை) ஸலாம் கூறுதல் போன்ற அழகிய வார்த்தையும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமாகும்