





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : உண்மையில், எனக்குப் பிறகு நீங்கள் வெறுக்கும் சில விடயங்களும், ஆட்சியாளர்கள் செல்வங்களை தாங்களே அனுபவிக்கும் போக்கும் காணப்படும்' அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று கேட்டனர். அவர் கூறினார்: 'உங்களுக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் உங்களுக்குரியதை அல்லாஹ்விடம் கேளுங்கள்.' என்றார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஒரு காலம் வரும் அதில் முஸ்லிம்களின் விவகராங்களை பொறுப்பேற்று நடத்தும் சில ஆட்சியாளர்கள் -அதிகாரிகள்- குடிமக்களின் செல்வங்கள் மற்றும் இது போன்ற உலகியல் விவகாரங்களை அவர்கள் அனுபவிப்பதோடு அவற்றை அவர்கள் நாடிய விதத்தில் கையாள்வார்கள். அதில் தங்களது குடிமக்களின் உரிமைகளை வழங்காது தடுத்துக்கொள்வார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அவர்களின் செயற்பாடுகளில் மார்க்கம் சார்ந்த ஏற்றுக்கொள்ள முடியாத வெறுத்தக்க விடயங்களும் காணப்படும். என்று நபியவர்கள் கூறிய போது ஸஹாபாக்கள் இவ்வாறான நிலையில் தாம் செய்ய வேண்டியது குறித்து விசாரித்தார்கள். அப்போது. அவ்வதிகாரிகள் செல்வங்களை உங்களுக்கு பகிராது அனுபவிக்கும் நிலையானது, நீங்கள் அவர்களுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய அவர்களின் கட்டளைகளுக்கு செவிதாழ்த்தி கட்டுப்பட்டு நடக்கும் கடமையை தடுத்து விடாதிருக்கட்டும்.) மாறாக இவ்வாறான நிலையில் நீங்கள் பொறுமையை கடைப்பிடித்து அவர்களுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள். அவர்களின் ஆட்சிக்கெதிராக முரண்பட்டுச் செல்லாதீர்கள். உங்களுக்குரிய உரிமை கிடைக்கவும், அவர்களை சீர்ப்படுத்துமாறும் அவர்களின் தீங்கு மற்றும் அநியாயத்திலிருந்து பாதுகாக்குமாறும் அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று வழிப்படுத்தினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அன்நுஃமான் இப்னுல் பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த்தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களை தடுத்தால் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் வரம்புகளை பின்பற்றி அவனின் கட்டளைகளின் மீது உறுதியாக இருந்து நன்மையை ஏவி தீமையை தடுப்போருக்கும், அல்லாஹ்வின் வரம்புகளை துவம்சம் செய்து மீறி நடந்து, நன்மையான விடயங்களை விட்டுவிட்டு, தீமையான விடயங்களை செய்வோருக்குமான ஓர் உதாரணத்தையும், சமூகத்தின் மீட்சியில் அது எவ்வளவு தாக்கம் செலுத்துகிறது என்பதையும் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் இருசாராரும் கப்பலில் பயணம் செய்யும் ஒரு கூட்டத்திற்கு ஒப்பானவர்கள், அவர்களில் மேல்தளத்தில் இருப்போர் கீழ்த்தளத்தில் இருப்போர் யார் என்பதை அறிந்து கொள்ள சீட்டுக்குழுக்கப்பட்டது. அதன்படி அவர்களில் சிலருக்கு மேல்தளமும் சிலருக்கு கீழ் தளமும் கிடைத்தது.கீழ் தளத்தில் உள்ளோருக்கு நீர் தேவைப்பட்டால் மேள்தளத்தில் உள்ளோரை கடந்தே அவர்கள் செல்ல வேண்டியிருந்தது. ஆகவே கீழ்தளத்தில் இருந்தோர் நாம் இருக்கும் கீழ் தளத்தில் ஒரு துளையை இட்டுக்கொண்டால் அதனூடாக நீர் பெறலாம், அதனால் மேல் தளத்தில் உள்ளோருக்கு எங்களால் எந்தத் தொல்லையும் கிடையாது என்று கூறிக்கொண்டார்கள். கப்பலின் மேல்தளத்தில் உள்ளோர் இக்காரியத்தை செய்யுமாறு அவர்களை விட்டுவிட்டால் கப்பலுடன் சேர்ந்து அனைவரும் மூழ்கிவிடுவார்கள்.
அபூபக்ர் அஸ்ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: மக்களே நீங்கள் ' 'யாஅய்யுஹல்லதீன ஆமனு அலைக்கும் அன்புஸகும் லா யழுர்ருகும் மன் ழல்ல இதஹ்ததைத்தும்' பொருள் : (விசுவாசங் கொண்டோரே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறியவர் உங்களுக்கு எவ்வித தீங்கும் செய்ய மாட்டார், அல்லாஹ்வின் பக்கமே உங்கள் யாவரின் மீட்சி இருக்கிறது, நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்துவிடுவான்) என்ற வசனத்தை (அதன் ஆழமான கருத்தை தெரியாது) ஒதுகின்றீர்கள் ' நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுவதைக் கேட்டேன் : 'மக்கள் ஒரு அநியாக்காரணைக் கண்டும் அவனை தடுக்காதிருந்தால் விரைவில் அவர்கள் அனைவர் மீதும் தண்டனையை இறக்குவான்.'
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, குப்ரா எனும் நூலில் இாம் நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்மக்கள் 5ம் அத்தியாயத்தின் 105 ம் வசனத்தை ஓதிவருவருவதாக அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகிறார்கள். (விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறியவர் உங்களுக்கு எவ்வித தீங்கும் செய்ய மாட்டார்). ஒரு மனிதனைப் பொருத்தவரை அவனை மாத்திரம் சீர்செய்துகொள்வதற்காக பாடுபடுவதுதான் கடமை என்பதையும் அத்துடன் மற்றவர் வழிதவறிச்செல்வதால் தனக்கு அது ஒருபோதும் தீங்கு விளைவிக்காது என்பதையும், நன்மையை ஏவி தீமை தடுப்பதற்கான பொறுப்புக் கிடையாது அது தேவையில்லை என்பதாகவே இவ்வசனத்தின் மூலம் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வசனத்தின் கருத்து அதுவல்ல. நபிஸல்லல்லாஹு அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு குறித்த பின்வரும் செய்தியை அறிவிக்கிறார்கள் : மக்கள் அநியாயம் செய்யும் ஒருவனை கண்டு, தடுப்பதற்கான சக்தியிருந்தும் அவனின் அநியாயத்தை தடுக்காதிருந்தால் அல்லாஹ் அவனின் தண்டனையை அனைவர் மீதும் விரைவில் இறக்கிவைப்பான். இத்தண்டனைக்கு தீமையை செய்தவனும் அதனை கண்டு மௌனம் காத்தவனும் உட்படுவான்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் மனிதர்கள் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புகளுக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும், அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். இன்சொல்லும் ஒரு தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமாகும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஒவ்வொரு முஸ்லிமும் உடலிலுள்ள மூட்டுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தனக்கு கிடைத்துள்ள ஆரோக்கியத்திற்கு நன்றி செலுத்தும் முகமாகவும், தனது மூட்டுக்களை மடிப்பதற்கும் நீட்டுவதற்குமான இயலுமையை தந்தமைக்கும் தினமும் அல்லாஹ்வுக்கு தர்மம் செய்ய பணிக்கப்பட்டுள்ளனர் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். குறித்த தர்மமானது செல்வத்தால் மாத்திரமின்றி அனைத்து நற்காரியங்களின் மூலமும் நிறைவேற்ற முடியும் என்பதையும் இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டுகிறார்கள் அவற்றின் சில பின்வருமாறு : இரு பகைவருக்கு மத்தியில் நீ சமாதானத்தை ஏற்படுத்தி நீதிவழங்குவதும் தர்மமாகும். ஒருவர் தனது வாகனத்தில் ஏறி அமர்வதற்கு உதவுவதும் அல்லது அவரின் பயணச்சுமைகளை ஏற்றிவிடுவதும் உமக்கு தர்மமாகும். திக்ர்,துஆ,(பிரார்த்தனை) ஸலாம் கூறுதல் போன்ற அழகிய வார்த்தையும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமாகும்
நபியவர்கள் கூறியதாக ஆயிஷா ரழியல்லாஹூ அன்ஹா அறிவிக்கிறார்கள். இறைவா! என் சமுதாயத்தின் காரியங்களில் ஒன்றைப் பொறுப்பேற்ற ஒருவர் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் அவருடன் நீ கடுமையாக நடப்பாயக!என் சமுதாயத்தின் காரியங்களில் ஒன்றைப் பொறுப்பேற்ற ஒருவர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொண்டால் அவருடன் நீ மென்மையாக நடப்பாயாக.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸில் பொறுப்பின் முக்கியத்துவம் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் மக்கள் விவகாரங்களை பொறுப்பேற்றவர், மக்களுடன் கடுமையாக நடந்து கொண்டால் அல்லாஹ்வும் அவருடன் அதே போல் நடந்து கொள்ள வேண்டும் எனவும், நீதி, நேர்மை,கருணை,மென்மை போன்ற பண்புகளுடன் நடந்து கொள்பருக்கு நற்கூலி வழங்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறார்கள். ஆகையால் செயலின் தன்மைக்கு ஏற்பவே கூலியும் கிடைககிறது.
வாஇழ் அல் ஹழ்ரமீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : ஸலமா இப்னு யஸீத் அல் ஜுஃபீ அவர்கள் நபியவர்களிடம், 'அல்லாஹ்வுடைய நபியே! எமக்குப் பொறுப்பாக வரும் தலைவர்கள், அவர்களது உரிமைகளைக் கேட்டு எடுத்துக்கொண்டு, எமது உரிமைகளைத் தராமல் இருந்தால், என்ன செய்யுமாறு ஏவுகின்றீர்கள்?' என்று கேட்டார்கள். நபியவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. மீண்டும் கேட்டும் நபியவர்கள் பொருட்படுத்தவில்லை. அவர் மீண்டும் இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை கேட்டபோது, அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் அவரைப் பிடித்து இழுத்தார்கள். அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள். 'நீங்கள் செவிசாய்த்துக் கட்டுப்படுங்கள். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளவை, அவர்களுக்குக் கடமையாக இருக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்டுள்வை, உங்களுக்குக் கடமையாக இருக்கும்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்மக்களிடம் தமக்குள்ள உரிமைகளாகிய, செவிசாய்த்தல், வழிப்படல் போன்றவற்றை கேட்டுப் பெற்றுக் கொண்டுவிட்டு அவர்கள் மீதுள்ள கடமைகளாகிய, நீதமாக நடத்தல், போர்ச்செல்வங்களைக் கொடுத்தல், அநியாயத்தைத் தடுத்தல், சமத்துவம் பேணல் போன்றவற்றைக் கொடுக்காமல் இருக்கும் ஆட்சியாளர்கள் விடயத்தில் என்ன செய்வது? என்று நபியவர்களிடம் கேட்கப்பட்டது. நபியவர்கள் இந்தக் கேள்விகளை வெறுத்தது போன்று, பொருட்படுத்தாது இருந்துவிட்டார்கள். ஆனாலும், கேள்விகேட்டவர், இரண்டு மூன்று தடவைகள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். உடனே, அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள், அவரை மௌனிக்கச் செய்வதற்காக இழுத்து எடுத்தார்கள். அப்போது நபியவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் : அவர்களது வார்த்தைகளுக்கு செவிசாயுங்கள்! அவர்களது கட்டளைக்கு அடிபணியுங்கள். அவர்கள் மீது கட்டாயப்படுத்தப்பட்டு, சுமத்தப்பட்டுள்ள நீதம், பிரஜைகளின் உரிமைகளைக் கொடுத்தல் போன்றவை அவர்களது கடமைகளாகும். உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள, கட்டுப்படல், கடமைகளை நிறைவேற்றல், சோதனைகளில் பொறுமையாக இருத்தல் போன்றவை உங்கள் மீது கடமையானவையாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 'நிச்சயமாக, இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை வென்றுவிடும். எனவே, (கூடுதலான வழிபாடுகள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைபிடியுங்கள். இயன்றதைச் செய்யுங்கள். நற்செய்தி கூறுங்கள் (கூடுதல் வழிபாடுகளை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் துணையாக்கிக் கொள்ளுங்கள்.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்இஸ்லாமிய மார்க்கமானது அதன் அனைத்து விவகாரங்களிலும் இலகு மற்றும் எளிமையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இயலாமை மற்றும் தேவை போன்ற காரணங்களின் போது இலகுவைக் கடைப்பிடிப்பது மிகவும் வலியுறுத்தப் படுகிறது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். மார்க்க விவகாரங்களில் ஆழ்ந்து சென்று தீவிரமாக ஈடுபடுட்டு மென்மையை கைவிடுவதானது, குறித்த செயலை செய்ய முடியாத நிலை உருவாவததுடன், குறித்த செயலில் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ ஈடுபடாது அச்செயலை செய்வதை விட்டும் விலகியிருப்பதற்கும் வழிவகுக்கும். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தீவிர நிலையை விட்டு நடுநிலை பேணுமாறு வலியுறுத்துகிறார்கள். ஒரு அடியான் தனக்கு செய்யுமாறு பணித்த விடயங்களில் கவனக் குறைவாக இருக்கக் கூடாது அதே வேளை தன்னால் சுமக்க முடியாத காரியங்களை சுமக்கவும் கூடாது. ஒரு விடயத்தை மிகவும் பரிபூரணமாகசெய்ய முடியவில்லை என்றிருந்தால் அவனுக்கு இயலுமான வகையில் அதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். இயலாமை காரணமாக பரிபூரணமாக ஒரு அமலை நிறைவேற்றுவதற்கு முடியாத ஒருவர் அவர் செய்யும் அமல்கள் - நற்காரியங்கள்- குறைவாக இருப்பினும் குறித்த செயல்களை தொடராக செய்பவராக இருந்தால் அவருக்கு அதிகமான நன்மை உண்டு என நபியவர்கள் நற்செய்தி கூறுகிறார்கள். காரணம் இயலாமை என்பது அவரின் சக்திக்கு உட்பட்டதன்று. ஆகையால் அவருக்கு வழங்கப்படுகின்ற கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படமாட்டாது. இந்த உலகம் ஒரு பயணத் தளமாகவும், மறுமைக்குச் செல்லும் பாதையாகவும் இருப்பதால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும் மூன்று நேரங்களில் தொடர்ச்சியான வழிபாடுகளின் மூலம் உதவி தேடுமாறு கட்டளையிட்டுள்ளனர். இந்த மூன்று நேரங்களும் பின்வருமாறு: 1- அல்-கத்வா: பகலின் முதல் பகுதியில் நடப்பது. பகலின் முதல் பகுதி என்பது அதிகாலை தொழுகைக்கும் சூரிய உதயத்திற்கும் இடையிலான நேரத்தைக் குறிக்கிறது. 2- அல் ரவ்ஹது: சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடப்பது. 3- துல்ஜா: இரவு முழுவதும் அல்லது இரவின் ஒரு பகுதி நடப்பது. பகலில் வேலை செய்வதை விட இரவில் வேலை செய்வது மிகவும் கடினம் என்பதால், 'வஷைய்உன் மினத்துல்ஜா'என்று கூறி அதன் ஒரு பகுதியில் வேலை செய்யக் கட்டளை இடப்பட்டுள்ளது.
இப்னு உமர் (ரழி) அன்ஹூமா அறிவிக்கிறார்கள். நாம் நபி (ஸல்) அவர்களுக்கு செவி சாய்த்து கட்டுப்படுவோம் என சத்தியப்பிரமானம் செய்தால் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு முடியுமானவற்றில் எனக் கூறுவார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஇப்னு உமர் (ரழி) அவர்கள் குறிப்பிடும் செய்தியில் அவர்கள் (ஸஹாபாக்கள்) நபியவர்களுக்கு சத்தியப்பிரமானம் (பைஅத்) செய்தால் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு தான் சொல்வதை கேட்டு கட்டுப்பட்டு நடக்குமாறு கட்டளை இடுவார்கள்.கட்டுப்படுதல் என்பதை இயலுமை, ஒரு மனிதன் பெற்றிருக்கும் பலம் என்பவற்றுடன் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.எனவே ஒரு முஸ்லிமை பொருத்தவரை தனது அமீரிடமிருந்து (தலைமையிருந்து) தமது சக்திக்கு அப்பாட்பட்ட விடயமொன்றை செய்யுமாறு பொறுப்புச் சாட்டப்பட்டால் அந்த விடயத்தில் அவருக்கு கட்டுப்படத் தேவையில்லை. ஏனென்றால் அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புக்களைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை.
அபூ ஜுஹைபா வஹ்ப் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:ஸல்மான் மற்றும் அபூ தர்தா ஆகிய இருவருக்குமிடையில் ரஸூல் (ஸல்) அவர்கள் சகோதரத்துவ உரவொன்றை ஏற்படுத்தி வைத்தார்கள்.எனவே ஸல்மான்,அபூ தர்தாவைத் தரிசிக்கச் சென்ற சமயம் உம்முதர்தா அவர்கள் கசங்கிய ஆடை ஒன்றை அணிந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள்.எனவே அவர்,அவரிடம்"இது வென்ன உங்களின் கோலம்?' என்றா்கள்.அதற்கு அவர்"உங்களின் சகோதரன் அபூ தர்தாவுக்கு உலக விடயத்தில் எந்தத் தேவையும் இல்லையே"என்றார்கள்.அப்பொழுது அபூ தர்தா வந்து விட்டார்.அவ்வமயம் அவர்அ,வருக்காக உணவு தயார் செய்து"நானோ நோன்பாளி ஆகையால் நீங்கள் உண்ணுங்கள்"என்றார் அதற்கு அவர் நீங்கள் உண்ணும் வரையில் நான் உண்ணமாட்டேன்"என்றார்.எனவே அவர் சாப்பிடலானார்.இரவு நேரம் ஆனதுவும் தொழுவதற்காக அபூ தர்தா எழுந்தார்.அப்பொழுது அவரிடம் ஸல்மான் நீங்கள் நித்திரை செய்யுங்கள் என்றார்.எனவே அவர் நித்திரை கொள்ளலானார்.பின்னர் தொழுவதற்காக அவர் எழுந்தார்.எனவே அவரிடம் நீங்கள் உரங்குங்கள் என்று ஸல்மான் கூறினார்.பின்னர் இரவின் இறுதிப் பகுதி ஆகியதும் இப்பொழுது எழுந்திருங்கள் என்றார் ஸல்மான்.அதன் பின்னர் இருவரும் தொழுதனர்.அதனையடுத்து அவரிடம் ஸல்மான்"நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனுக்கு வழங்க வேண்டிய சில உரிமைகள் இருக்கின்றன.மேலும் நீங்கள் உங்கள் ஆத்மாவுக்கு வழங்க வேண்டிய சில உரிமைகளும்,உங்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய சில உரிமைகளும் இருக்கின்றன.எனவே அனைவரின் உரிமைகளையும் அவரவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்" என்றார்கள்.பின்னர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்த அபூ தர்தா அன்னாரிடம் இதைப் பற்றிக் கூறினார்கள்.அதற்கு நபியவர்கள் "ஸல்மான் சொன்னது உண்மை" என்றார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்ரஸூல் (ஸல்) அவர்கள் ஸல்மான் மற்றும் அபூதர்தாஆகியோருக்கிடையில் சகோதர ஒப்பந்தம் ஒன்றை செய்து வைத்தார்கள்.அதன் பின்னர் ஸல்மான் அவர்கள் அபூ தர்தா அவர்களைச் தரிசிக்கச் சென்றார்,அவ்வமயம் அவரின் மணைவி மணமகள் ஆடையிலல்லாமல் அலங்கோலமான உடையணிந்திருக்க அவர் கண்டார்.எனவே அது பற்றி அவரிடம் அவர் கேட்டார்.அதற்கு அவர் தங்களின் சகோதரன் அபூ தர்தாவுக்கு உலகம்,குடும்பம்,ஊண் என்று எந்தத் தேவையுமில்லை.எனவே இதையெல்லாம் அவர் புறக்கணித்து வாழ்கின்றார்.என்றார்.பின்ன அபூ தர்தா வந்த போது அவர் ஸல்மானுக்கு உணவு சமைத்து அதனை அவருக்குப் பரிமாறினார்.அவ்வமயம் அபூ தர்தா நோன்பு வைத்திருந்த படியால் அவர் நோன்பை விட்டு விடும்படி அவருக்கு ஸல்மான் உத்தரவிட்டார்.ஏனெனில் அவர் எப்பொழுதும் நோன்பு பிடித்து வருபவர் என்பதை அவர் அறிந்து வைத்திருந்த படியால் அவர் அவ்வாறு கட்டளையிட்டார்.எனவே அபூ தர்தாசாப்பிடலானார்.அதன் பின்னர் இரவு வணக்கத்தில் ஈடுபட ஆயத்தமானார் அபூ தர்தா.அவ்வமயம் இரவின் கடைசி பகுதி வரையில் அவரைத் தூங்குமாறு அவருக்கு ஸல்மான் உத்தரவிட்டார்.பின்னர் இருவரும் இரவின் கடைசிப் பகுதியில் எழுந்து தொழுதனர்.பின்னர் நோன்பு நோற்றல்,இரவில் நின்று வணங்குதல் ஆகிய கருமங்களில் ஈடுபடுவதன் மூலம் மனிதன் தன்னை வீனாக அலட்டிக் கொள்ளக் கூடாது.என்றும், அவனின் தொழுகையானது நன்மையை ஈட்டித் தரக் கூடியதாகவும்,சிரமங்கள்,துண்புறுத்தல்கள் இலிலாததாகவும் இருத்தல் வேண்டுமென்பதை ஸல்மான்,அபூ தரதாவுக்குத் தெளிவு படுத்தினார்கள்.