





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
உபாதா இப்னு அஸ்ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்போம் என்றும், எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நீங்கள் கண்டாலே தவிர அவர்களுடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையே பேசுவோம் என்றும், அல்லாஹ்வின் விடயத்தில் பழிப்போரின் பழிச்சொல்லுக்கு அஞ்சமாட்டோம் என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி அளித்தோம்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தோழர்களிடத்தில், அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு இன்பத்திலும் துன்பத்திலும் -இலகுவான விடயத்திலும் சிரமமான விடயத்திலும், - வசதியான மற்றும் வறுமையான நிலைகளிலும், கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி பெற்றார்கள். அத்துடன் அவர்களின் ஆணைகள்; தமக்கு விருப்பமானதாக அல்லது விருப்பமில்லததாக இருப்பினும் சரியே, அதே போன்று குடிமக்களுக்கு சேரவேண்டிய பொது நிதிகள், பதவிகள் மற்றும் இவைகள் அல்லாத விடயங்களில் தமக்கு முன்னுரிமையளித்து அவற்றை அவர்கள் அனுபவித்தாலும் அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி, போராட்டாம் செய்யாது நியாயமான முறையில் அவர்களின் ஆணைகளை செவியேற்று கட்டுப்பட்டு நடப்பது கடமையாகும். ஏனெனில் அவர்களின் இந்த அநியாயத்தை விடவும் இந்தப் போராட்டம், கிளர்ச்சி அதிக தீங்குகளையும், பாரிய குழப்பங்களையும், முஸ்லிம்களுக்கு மத்தியில் தோற்றுவிக்கின்றது. அதே போன்று அவர்கள் குறித்து அல்லாஹ்வுக்கு மாத்திரம் பயந்தவர்களாக இதயசுத்தியுடன், எவரது பழிச்சொல்லுக்கும் பயப்படாது உண்மையை கூறுவதிலும் தயங்கக்கூடாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உம்முல் முஃமினீன் உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : 'உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)' என்று கூறினார்கள். மக்கள், 'அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?' என்று கேட்டார்கள். 'இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)' என்று கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்(ஒரு காலம் வரும் அக்காலத்தில்) ஆட்சித் தலைவர்களினால் சில பிரதிநிதிகள் எமக்கு நியமிக்கப்படுவார்கள், அவர்களிடம் மார்க்கத்திற்கு உடன்பட்ட சில நன்மைகளையும் காண்போம், ஷரீஆவுக்கு முரண்பட்ட சில பாவங்களையும் காண்டு அவற்றை நாம் மறுக்கும் நிலையில் இருப்போம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். அதனைத் தடுக்க சக்தியற்று, உள்ளத்தால் வெறுத்தவர் பாவத்திலிருந்தும் நயவஞ்சகத்தனத்திலிருந்தும் தப்பிக் கொண்டவராவார். கையினாலோ, நாவினாலோ தடுக்க சக்தி பெற்று, தடுத்தவரும் பாவத்திலிருந்து அதற்கு துணையாக இருப்பதிலிருந்தும் தப்பிவிட்டார். இருப்பினும் அவர்களது செயலைப் பார்த்து திருப்தியடைந்து, துணை போனவர்கள் அவர்களைப் போன்றே அழிந்து போவார்கள். பின் தோழர்கள் அவர்களை எதிர்த்து நாம் போராடவா என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் அவர்கள் தொழுகையை நிலைநாட்டும் வரை போர் தொடுக்க வேண்டாமெனத் தடுத்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற கூலி அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது அவனுக்கு எழுதப்படும்'.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்அல்லாஹ்வின் அருள் மற்றும் கருணை குறித்து இந்த ஹதீஸில் நபியவர்கள் விவரிக்கிறார்கள். ஒரு முஸ்லிம்; அவன் ஆரோக்கியமாக ஊரில் தங்கியிருக்கும் போது நற்செயல்களை செய்வது அவனின் அன்றாட விவகாரமாக இருந்து, பின் அவனுக்கு நியாயமான ஒரு காரணம் (தடங்கள்) ஏற்பட்டு, அவன் சுகயீனமுற்று அதனை செய்வதற்கு இயலவில்லை, அல்லது அவன் பிரயாணத்தில் செல்கிறான் அல்லது இதுவல்லாத வேறு எந்த நியாயமான காரணமாக இருந்தாலும் அவன் ஆரோக்கியமாக ஊரில் -தங்குமிடத்தில் செய்த நன்மைக்கான முழுமையான கூலி எழுதப்படும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக தமீம் அத்தாரீ ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'மார்க்கம் என்பது நலன் நாடுவதாகும்;.' என்று நபியவர்கள் கூறியபோது, யாருக்கு நலன் நாட வேண்டும்? என நாம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள்: அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்திற்கும், அவனது தூதரிற்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், இன்னும் முஸ்லிம் பொதுமக்களுக்கும் நலன் நாடுவதாகும்' எனக் கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த மார்க்கம் உளத் தூய்மை மற்றும் உண்மை ஆகிய பண்புகளை அடித்தளமாகக் கொண்டமைக் கப்பட்டுள்ளது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால் மார்க்கத்தில் உள்ளவற்றை அவன் கடமையாக்கியது போன்று எவ்விதக் குறைத்தலோ மோசடியோ செய்யாது பூரணமாக நிறைவேற்ற வேண்டும். பின் 'நலன் நாடுதல்' யாருக்கு இருக்க வேண்டும் என அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர் : முதலாவது: அல்லாஹ்வுக்கு நலன் நாடுதல் என்பது அவனுக்கு இணைவைக்காது உளத்தூய்மையுடன் செயற்படுதலாகும். அதாவது தவ்ஹீதின் வகைகளான ருபூபிய்யாவிலும்,(இரட்சித்து பரிபாலித்தலில் அவனை ஒருமைப்படுத்துதல்) உலூஹிய்யாவிலும், (அல்லாஹ்வுக்குரிய வணக்கங்களில் அவனை ஒருமைப்படுத்துதல்) அஸ்மா வஸ்ஸிபாத்திலும் (அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துதல்) தனித்துவமானவன் என்று நாம் ஈமான் கொள்ள வேண்டும். அத்துடன் அவனின் கட்டளைகளை மதித்து நடப்பதுடன் அவனை ஈமான் கொள்வதின் பால் பிறரையும் அழைத்தல் ஆகிய விடயங்களை இது குறிக்கும் . இரண்;டாவது : அவனின் வேதமான அல்குர்ஆனுக்கு நலன் நாடுதல் என்பது அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்றும், அவனின் இறுதி வேதம் என்றும், அல்குர்ஆனுக்கு முன்னுள்ள அனைத்து இறை சட்டதிட்டங்களையும் மாற்றிய வேதம் என்றும் நம்ப வேண்டும். அத்துடன் அதனை மகிமைப்படுத்துவதுடன், உரிய முறையில் ஓதி அதன் முஹ்கமான (தெளிவான ஒரே கருத்தைக் காட்டும்) வசனங்களை நடைமுறைப் படுத்துவதுடன், முதஷாபிஹான (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) வசனங்களை ஓப்புக்கொள்ள வேண்டும். அதற்கு தவறான பொருள்கோடல் செய்வோரின் வியாக்கியானத்தை விட்டும் அதனைப் பாதுகாப்பதுடன், அதன் உபதேசங்களினால் படிப்பினை பெறுதல் வேண்டும். மேலும் அதன் அறிவை பரப்புவதுடன் அதன் போதனையை நோக்கி மக்களை அழைக்கவும் வேண்டும். இவைகளே அல்குர்ஆனுக்கு நலன் நாடுதல் என்பது குறிக்கிறது. மூன்றாவது : அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு நலன் நாடுதல் என்பதன் கருத்து : நாம் அவர்களை தூதர்களில் இறுதியானவர் என்று நம்பிக்கை கொள்வதுடன், அவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த அத்துனை விடயங்களையும் உண்மைப்படுத்துவதுடன், அவர்களின் ஏவல்களை எடுத்து நடப்பதன் மூலம் கட்டுப்படுவதும், அவர்களின் விலக்கல்களை தவிர்ந்தும் நடத்தல் வேண்டும். மேலும் அவர்கள் கொண்டுவந்த வழிமுறையின் அடிப்படையிலேயே அல்லாஹ்வை வணங்குதல் வேண்டும். அத்துடன் அவர்களுக்குரிய உரிமையை பேணி நடப்பதுடன், அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களின் பிரச்சாரத்தையும், அவர் கொண்டு வந்த மார்க்கத்தையும் பரப்புவதுடன், அவருக்கெதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை மறுத்திடுதல் வேண்டும். நான்காவது : முஸ்லிம்களின் தலைவருக்கு நலன் நாடுதல் என்பது சத்தியத்தில் அவர்களுக்கு ஒத்துழைத்தல், அவர்களின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்யாதிருத்தல், அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் விடயத்தில் அவர்களின் கட்டளைகளுக்கு செவிசாய்த்து கட்டுப்பட்டு நடப்பதையும் குறிக்கிறது. ஐந்தாவது: முஸ்லிம்களுக்கு நலன் நாடுதல் என்பது அவர்களுக்கு உபகாரம் செய்வதும் அவர்களை நல்ல காரியங்களின் பால் அழைப்பதும் அவர்களுக்கு பிறரால் ஏற்படும் ஆபத்துக்களை தடுப்பதும் அவர்களுக்கு நன்மையை விரும்புவதும், தக்வா மற்றும் நன்மையான காரியங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பதையும் இது குறிக்கிறது.
எனது இந்த வீட்டில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டேன் என ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள் : 'யா அல்லாஹ் !என் சமுதாயத்தின் விவகாரங்களில் ஒன்றை பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக! மேலும் என் சமூகத்தின் விவகாரங்களில் ஒன்றை ஒருவர் பொறுப்பேற்று அவர்களுடன் நலினமாக நடந்து கொள்கிறாரோ அவருடன் நலினமாக நடந்து கொள்வாயாக !
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களை பொறுப்பேற்றோர் அது சிறிய பொறுப்போ, பெரிய பொறுப்போ அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிராரத்தனை புரிந்துள்ளார்கள். அதாவது அதிகாரத்தைப் பெற்று நலினமாக நடந்து கொள்ளாது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய அவர்களுக்கும் அதே மாதிரியான செயலுக்கேற்ற கூலியை வழங்குமாறு நபியவர்கள் அவர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்துள்ளார்கள். யார் அவர்களுடன் நலினமாக நடந்து அவர்களின் விவகாரங்களை இலகுபடுத்திக் கொடுக்கின்றாரோ அவர்களுடன் அல்லாஹ் நலினமாக நடப்பதுடன் அவனுடைய விவகாரங்களையும் இலகுபடுத்திக் கொடுக்கிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக மஃகில் இப்னு யஸார் ரழியல்லாஹு அவர்கள் கூறினார்கள் : அடியான் ஒருவனுக்கு மக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே மரணித்து விட்டால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்துவிடுகிறான்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மக்களுக்கு பொறுப்பாளராகவும், நிர்வாகியாகவும் அல்லாஹ் ஓவ்வொருவரையும் ஆக்கியுள்ளதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள். குறிப்பிட்ட நிர்வாகமானது அமீர் (கலீபா) போன்ற பொது (நாட்டு) நிர்வாகமாகவோ அல்லது குடும்பத்தினூடான வீட்டு நிர்வாகம் போன்ற குறிப்பான நிர்வாகமாக இருந்தாலும் சரியே இவையனைத்தையும் இது உள்ளடக்குகிறது. ஆகவே தனது குடிமக்களின் உரிமைகளில் அலட்சியமாக நடந்து, அவர்களுக்கு மோசடி செய்து அவர்களுக்கு எந்த நலனையும் நாடாது, மார்க்கம் மற்றும் உலகியல் உரிமைகளை பால்படுத்தியவரே இவ்வாறான கடுமையான தண்டணைக்கு தகுதியானவராக மாறுகிறார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : '(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகத்தின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இன, கோத்திரத்திற்காகக் கோபப்படுகிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும். யார் என் சமுதாயத்தாருக்கு எதிராக கிளர்ச்சி செய்து, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் ஆட்சித்தலைமைகளுக்கு கட்டுப்படாது, சட்டரீதியாக –ஏகோபித்து-தெரிவுசெய்யப்பட்ட ஒரு இமாமுக்கு –ஆட்சியாளருக்கு கீழ் உள்ள முஸ்லிம் கூட்டமைப்பிலிருந்து விலகி, அதே நிலையில், அதாவது குறித்த ஆட்சியாளரை விட்டு விலகி கட்டுப்படாத நிலையில் மரணித்தால் அறியாமைக்காலத்தில் மரணித்த ஒருவரின் நிலையிலேயே அவன் மரணிக்கின்றான் என்று கூறியுள்ளார்கள். சத்தியம், அசத்தியம் பற்றிய எவ்வித தெளிவுமின்றி வெறுமனே தனது கோத்திரம் , அல்லது இனத்திற்காக கோபம் கொண்டு மார்க்கத்திற்கோ, சத்தியத்திற்கோ உதவும் நோக்கமின்றி எந்த அறிவோ தெளிவோ இன்றி தனது இன மற்றும் குலத்திற்காக போராடி அதே நிலையில் மரணித்தாலும் அவரும் அறியாமைக் காலத்தில் மரணித்தவர் போன்றாவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஒருவர் புரட்சி செய்து, நல்லவர்கள், தீயவர்களை தாக்கி தான் செய்வதை பொருட்படுத்தாது ஒரு முஃமினை கொல்வதால் அவனுக்கு கிடைக்கும் தண்டனையை அஞ்சாது, முஸ்லிம் பிரதேசங்களில் ஒப்பந்த அடிப்படையில் வாழும் மாற்று மதத்தவர், அல்லது ஒப்பந்தம் செய்து ஏற்றுக் கொண்ட அதிகாரிகளின் ஒப்பந்தங்களை நிறைவேற்றாது அதனை முறித்து அனைவரையும் தாக்குவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இவ்வாறு செய்பவன் மேற்படி கடுமையான எச்சரிக்கைக்கு உட்படுவான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அர்ஃபஜா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரு நபரின்; (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்று விடுங்கள்'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்முஸ்லிம்கள் ஒரே தலைவரின்-ஆட்சியளரின் கீழ் ஒன்றுபட்ட பின் வேறு ஒருவன் ஆட்சிக்கெதிராக அதனை நீக்கவும், அல்லது முஸ்லிம் கூட்டமைப்பை பல்வேறு குழுக்களாக பிரிப்பதற்கு வந்தால் அவனது கெடுதியைத் தடுக்கவும், முஸ்லிம்களின் உயிரைப் பாதுகாக்கவும் அவனுக்கெதிராக போராடுவது கடமை என்பதை இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : "ஜிஹாதில் மிகவும் சிறந்தது அநியாயக்கார அரசனிடத்தில் நீதியை எடுத்துரைப்பதாகும்".
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்அநீதியான மற்றும் அடக்குமுறை ஆட்சியாளர் அல்லது இளவரசருக்கு முன்பாக நீதி மற்றும் உண்மையின் வார்த்தையைப் பேசுவதே சர்வவல்லமையுள்ள இறைவனின் பாதையில் செய்யும் ஜிஹாதின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நன்மை பயக்கும் வடிவங்களில் ஒன்று என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கினர். ஏனென்றால், அது சரியானதைக் கட்டளையிட்டு, தவறானதைத் தடை செய்யும் சடங்கின்படி செயல்படுவதை உள்ளடக்கியது, அது வார்த்தையாலோ, எழுத்தாலோ, செயலாலோ அல்லது வேறு எதாவதாலோ நன்மையை அடைந்து தீங்கைத் தடுக்கும்..