





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் (ஸுப்ஹ்) ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறி வார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டுப் பிறகு என்னுடன் விறகுக் கட்டைகள் சுமந்த சிலரை அழைத்துக்கொண்டு, கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என மனம் நாடுகிறது' எனக் கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நயவஞ்சகர்கள் பற்றியும் அவர்கள் ஜமாத் தொழுகைக்கு கலந்து கொள்ளாது சோம்பரித்தனமாக இருப்பதை குறித்தும் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக அவர்கள் இஷா மற்றும் பஜ்ர் தொழுகைக்கு சமூகளிப்பதில்லை. அவர்கள் அவ்விரு தொழுகைககளிலும் சக முஸ்லிம்களுடன் ஜமாஅத்தில் கலந்து கொள்வதால் கிடைக்கும் நன்மை, மற்றும் வெகுமதியின் அளவை அறிவார்களேயானால் அவர்கள் குழந்தைகள் கை, கால்களால் தத்தித் தவழ்வதைப் போன்று தவழ்ந்தாயினும் வந்து சேர்வார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வதன் முக்கியத்துவத்தின் காரணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒருவரை தொழுகைக்காக இகாமத் கூறுமாறு பணித்து, அவர்களுக்கு பதிலாக இன்னொரு நபரை மக்களுக்கு இமாமத் செய்யுமாறு பணித்து விட்டு தம்முடன் விரகுகளை சுமந்த சில மனிதர்களை அழைத்துச் சென்று ஜமாஅத் தொழுகைக்கு சமூகம் அளிக்காதோரின் வீடுகளை எறிப்பதற்கு எத்தனித்தார்கள். காரணம் நியாயமான காரணமின்றி ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளாதிருப்பது மிகப்பெரும் பாவம் என்பதினாலாகும். இவ்வாறிருந்தும் நபியவர்கள் வீடுகளில் பெண்கள் மற்றும் ஏதும் அறியாத குழந்தைகள் போன்ற சலுகை பெற்றோர் இருந்ததினால் அவர்கள் எரிக்கும் எண்ணத்தை கைவிட்டார்கள்.
நபி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'தாம் உயிருடன் இருக்கும் போது மறுமையை சந்திப்போரும், சமாதிகளை வழிபாட்டுத் தளங்களாக எடுப்போருமே மக்களில் மிக மோசமானவர்கள்'.
இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்தாம் உயிருடன் இருக்கும் போது மறுமையை சந்திப்போரும், சமாதிகளை வழிபாட்டுத்தளங்களாக எடுத்து அதன் பால் தொழுவோருமே மக்களில் மிக மோசமானவர்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக மஹ்மூத் இப்னு லபீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உங்களிடம் நான் மிக அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும், அல்லாஹ்வின் தூதரே சிறிய இணைவைப்பு என்றால் என்ன? என ஸஹாபாகக்கள் வினவிய போது முகஸ்துதி எனக் கூறினார்கள். மறுமை நாளில் மக்களுக்கு தங்களின் அமல்களுக்கு அல்லாஹ் கூலி வழங்குகையில் முகஸ்துதியாளர்களைப் பார்த்து ' உலகில் யாருக்கு காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள், அவர்களிடம் ஏதும் வெகுமதி உள்ளதா என்பதை பாருங்கள் என்று கூறிவிடுவான்'
இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சமூகத்தின் மீது மிகவும் அதிகமாக பயந்த சிறியவகை இணைவைப்பு முகஸ்துதி பற்றி குறிப்பிடுகிறார்கள் முகஸ்துதி என்பது மக்களின்; புகழை எதிர்பார்த்து செய்யும் விடயங்களைக் குறிக்கிறது. பின்னர் முகஸ்துதியாளர்களுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டணை குறித்து தெரிவிக்கிறார்கள். முகஸ்துதியாளர்களுக்கான தண்டனை யாதெனில், 'யாருக்காக நீங்கள் அமல்களை செய்தீர்களோ அவர்களிடமே இன்று செல்லுங்கள், அவர்கள் அதற்கான கூலியை வழங்குவதற்கான அதிகாரத்தைப் பெற்றுள்ளனரா என்று பாருங்கள்' என்று அவர்களிடம் கூறப்படும்.
அத்ய் பின் ஹாதிம் (ரலி) கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் "அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களோ ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்" எனும் வசனத்தை ஓதத் தான் கேட்ட போது நாம் அவர்களை வணங்குவதில்லையே என்று கூறினேன். அப்போது நபியவர்கள் : "அல்லாஹ் ஹலாலாக்கியதை அவர்கள் ஹராமாக்க நீங்களும் ஹராமாக்கவில்லையா? அல்லாஹ் ஹராமாக்கியதை அவர்கள் ஹலாலாக்க நீங்களும் ஹலாலாக்கவில்லையா? எனக் கேட்க, நான் ஆம் என்றேன், "அதுதான் அவர்களை வணங்குவதாகும்" என்றார்கள்.
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்யூத, கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமாக தமது மதகுருகள் உருவாக்கும் சட்டத்திற்குப் கட்டுப்படுவதன் மூலம் அம்மதகுருக்களைக் கடவுள்களாக எடுத்துக் கொண்டார்கள் என்ற செய்தியை உள்ளடக்கிய இறைவசனத்தை நபியவர்கள் ஓதும் போது செவிமடுத்த இந்த நபித்தோழருக்கு அதன் கருத்தில் குழப்பநிலை தோன்றியது, ஏனெனில் வணக்கம் என்பது சிரம்பணிவது போன்றன மாத்திரம் என அவர் விளங்கி வைத்திருந்தார். அல்லாஹ், ரஸூலின் சட்டத்திற்கு மாற்றமாக ஹலாலை ஹராமாக்குவதிலும், ஹராமை ஹலாலாக்குவதிலும் தமது மதகுருக்களுக்குக் கட்டுப்படுவதும் அவர்களை வணங்குவதுதான் என நபியவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு ஆளுநராக அனுப்பிய போது பின்வருமாறு கூறினார்கள்: 'நீர் வேதமுடையவர்களிடத்தில் செல்கிறீர். அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சி சொல்லும் படி அவர்களை அழைப்பீராக!. இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால், 'அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான்' என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்கு கட்டுப்பட்டால் 'அல்லாஹ் அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் ஏழைகளுக்குக்கு வழங்குவதற்காக ஸகாத்தைத் கடமையாக்கியுள்ளான்' என அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் விலையுயர்ந்த பொருட்களை எடுப்பதை குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையும் கிடையாது'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஆத் ரழியல்லாஹு அவர்களை யமன் நாட்டிற்கு அழைப்பாளராகவும், போதகராகவும் அனுப்பும் போது அவர் கிறிஸ்தவ சமூகத்தை சந்திக்கப் போவதையும், அதனால் அதற்குரிய ஆயத்தங்களுடன் செல்ல வேண்டும் என்பதையும் தனது அழைப்புப் பணியில் முக்கியமானவற்றில் ஆரம்பித்து தனது பிரச்சாரப்பணியை ஆரம்பிக்க வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தினார்கள். அந்த வகையில் முதலில் 'உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சி கூறுதல் எனும்; நம்பிக்கையைச் சரிபடுத்தலின் பால் அழைக்க வேண்டும். இதன் மூலம்தான் அவர்கள் இஸ்லாத்தினுள் நுழைவார். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களுக்கு தொழுகையை நிலைநாட்டுமாறு கட்டளையிட வேண்டும். ஏனெனில் ஒரிறைக் கொள்கையை ஏற்றதன் பின்னுள்ள மிகப்பெரும் கடமையாக தொழுகை காணப்படுகிறது. தொழுகையை அவர்கள் நிலைநாட்டினால் அவர்களில் உள்ள செல்வந்தர்களகள் தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கு ஸகாத் வழங்க வேண்டும் என பணிக்க வேண்டும். பின்னர் நபியவர்கள் அவர்களிடம் காணப்படும் விலையுயர்ந்த பொருள்களை ஸகாத்தாக பெறுவதை எச்சரித்தார்கள். ஏனெனில் ஸகாத் நடுத்தரமான பொருளிலிருந்தே பெறுதல் கடமையாகும். பின் அநியாயம் இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதினால் அவருக்கெதிராக பிரார்த்திக்கக் கூடாது என்பதற்காக அநியாயம் இழைப்பதை தவிர்ந்து கொள்ளுமாறு உபதேசம் செய்தார்கள்
ஜாபிர் (ரலி) கூறினார்கள் : சூனியத்தை எடுப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்ட போது "அது ஷைத்தானின் செயலாகும்" எனக் கூறினார்கள்.
இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்அறியாமைக் காலத்தில் சூனியத்தை சூனியத்தால் எடுப்பது போன்று சூனியம் செய்யப்பட்டவருக்கு சிகிச்சை செய்வது பற்றி நபியவர்களிடம் வினவப்பட்டது. அப்போது அது ஷைத்தானின் செயலாகும், அல்லது அவனது ஊசலாட்டமாகும் என பதிலளித்தார்கள். ஏனெனில் இது சூனிய வகைகள் மூலமும், ஷைத்தானைப் பயன்படுத்தியும் செய்யப்படும் முறையாகும். எனவே இது தடை செய்யப்பட்ட, இணைவைப்பாகும். இதில் அனுமதிக்கப்பட்ட முறை எதுவெனில் மார்க்க சட்டபூர்வமான மந்திரித்தல் மூலம், அல்லது சூனியம் வைக்கப்பட்ட இடத்தைக் கண்டறிந்து, அல்குர்ஆன் ஓதுவதுடன் அதனைக் கையினால் அவிழ்த்தல் மூலம், அல்லது அனுமதிக்கப்பட்ட சிகிச்சை முறை மூலம் சூனியத்தை எடுக்கலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) அளவு கடந்து புகழ்ந்ததை போன்று என்னை நீங்கள் அளவு கடந்து புகழ வேண்டாம், நான் அல்லாஹ்வின் அடியானாவேன், எனவே அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றே கூறுங்கள்'.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்கிறிஸ்தவர்கள் ஈஸா இப்னு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு செய்தது போல், ஷரீஆ வரைமுறையை மீறி தன்னை அளவு கடந்து புகழ்வதையும், அல்லாஹ்வின் பண்புகள், மற்றும் அவனுக்கே உரித்தான விஷேட செயல்களைக் கொண்டு வர்ணிப்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடுத்தார்கள், அதே போன்று நபியவர்கள் மறைவானவற்றை அறிகிறார் என்று கருதுவது, அல்லது அல்லாஹ்வுக்கு நிகராக அவர்களிடம் பிரார்த்திப்பது போன்ற விடயங்களையும் இந்த ஹதீஸில் தடுத்துள்ளார்கள். பின்னர் அவர்கள் தான் யார் என்பதை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள். தான் அல்லாஹ்வின் அடியார்களில் ஒவருன், என்னை நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்று அழைக்குமாறு பணிக்கிறார்கள்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்களிடம் நான் கேட்டபோது, 'அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேரார்வம்; எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிவிட்டு, 'மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்தினால் - தூய்மையான எண்ணத்துடன் 'உண்மையாக வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தான்' என்று கூறினார்கள்'.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்மறுமை நாளில், மக்களில் நபியவர்களின் பரிந்துரைக்கு மிக தகுதியானவர் 'தனது உள்ளத்தினால் மிகத்தூய்மையான எண்ணத்துடன் லாஇலாஹ இல்லல்லாஹ் (உண்மையாக வணங்கப்படத் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,) என்று கூறுபவரே என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள். 'லாஇலாஹ இல்லல்லாஹ், என்பது (உண்மையாக வணங்கப்படத் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்ற கருத்தைக் குறிக்கும். அத்துடன் ஷிர்க் மற்றும் முகஸ்துதி ஆகியவற்றை விட்டு நீங்கியவராக இருத்தல் வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "யாருடைய தேவை நிறைவேறுவதிலிருந்து சகுனம் தடுக்கின்றதோ அவர் இணைவைத்து விட்டார், அதற்குரிய பரிகாரம் என்ன என வினவ, இறைவா நலவு உன்னிடமிருந்து மாத்திரம் தான், நல்ல சகுனமும் உன்னிடமிருந்து மாத்திரம் தான், உன்னைத் தவிர வேறு இறைவனில்லை என்று கூறட்டும்".
இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்தான் முன்னெடுக்கவிருக்கும் ஒரு விடயத்தை விட்டும் யாரை தீய சகுனம் தடுக்கின்றதோ அவர் இணைவைப்பின் ஒரு வகையைச் செய்து விட்டார். இப்பாரிய பாவத்திற்கான பரிகாரம் என்னவென நபித்தோழர்கள் வினவிய போது அல்லாஹ்விடம் முழுப் பொறுப்பையும் சாட்டக்கூடிய, அவனுக்கு மாத்திரம்தான் சக்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்தக் கூடிய மேற்கண்ட வார்த்தையை மொழியுமாறு கூறினார்கள்.