Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way






























Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
நபி (ஸல்) அவர்கள் ஒன்றை விட்டும் எம்மைத் தடுத்தால் விதிவிலக்கின்றி முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும், ஒன்றை ஏவினால் முடியுமானளவு செய்ய வேண்டும் என்பதை இந்நபிமொழி எமக்கு அறிவிக்கின்றது. பின்னர் முன்னைய சில சமுதாயங்களைப் போன்று நாமும் ஆகிவிடுவதை எமக்கு எச்சரித்தார்கள். அவர்கள் அளவுக்கதிகமான கேள்விகளைக் கேட்டு, தமது நபிமார்களுடன் முரண்பட்டதால் பேரழிவின் மூலம் அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். எனவே அவர்களைப் போன்று நாமும் ஆகிவிடக் கூடாது, நாமும் அவர்களைப் போன்றே அழிய நேரிடும்.
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்டை வீட்டார் குறித்து கரிசனை செலுத்துமாறு கட்டளைப் பிரப்பித்து, அதனை பற்றி பல முறை தொடர்ந்து தனக்கு கூறியவண்ணம் இருந்தார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். அண்டை வீட்டார் என்பவர் எமக்குப் பக்கத்தில் வாழும் முஸ்லிமோ காபிரோ உறவினர்களோ அல்லது உறவினர் அல்லாதாரோ அனைவரையும் குறிக்கும். இவர்களின் உரிமையை காத்து, அவர்களுக்கு தொந்தரவு செய்யாது, அவர்களுக்கு உபகாரம் செய்து, அவர்களால் ஏற்படுகின்ற தொந்தரவுகளை சகித்து நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களுக்கு அண்டை வீட்டார் உரிமைப் பற்றியும் அதன் மேன்மையையும் வலியுறுத்திக் கூறியது ஒருவர் தனது மரணத்திற்குப் பின் விட்டுச்செல்லும் சொத்தில் அவருக்கும் பங்கு உண்டு என நினைக்குமளவிற்கு இருந்தாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இணைவைப்போடு சம்பந்தப்பட்ட சில விடயங்களை இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் அவற்றுள் சில பின்வருமாறு: முதலாவது : மந்திரித்தல் : இணைவைப்பை உள்ளடக்கிய வார்த்தைகளின் மூலம் நிவாரணம் பெற வேண்டி ஜாஹிலிய்யா மக்கள் பயன்படுத்திய வாசகங்களை இது குறிக்கிறது. இரண்டாவது: மணிகள் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தாயத்துகள் : இவை குழந்தைகள் மற்றும் மிருகங்களை கண்திருஷ்டியிலிருந்து பாதுகாப்பதற்காக அணிவிக்கப்படுகின்றன. மூன்றாவது: திவலா, அதாவது கணவன் மனைவியருக்கிடையே பாசத்தை ஏற்படுத்து வதற்காக செய்யப்படுகின்ற ஒரு காரியத்தைக் குறிக்கும். மார்க்க ஆதாரங்களால் நிரூபிக்கப்பட்டோ, அனுபவ வாயிலாகவோ உணரப்பட்ட விடயம் அல்லாததாலும், வெறுமனே ஒரு பொருளை காரணமாக வைத்து அதில் நம்பிக்கை கொள்வதனாலும் இந்த விடயங்கள் யாவும் இணைவைத்தல் என்ற பாவத்தில் உள்ளடங்குகிறது. ஆனால் அல்குர்ஆன் ஓதுதல் போன்ற மார்க்கரீதியிலான வழிமுறைகள், அல்லது அனுப அறிவு வாயிலாக நிரூபிக்கப்பட்ட மருந்துகள் போன்ற கற்புலனாகும் வழிமுறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது அனுமதிக்கப் பட்டதாகும். ஆனால் அவை காரணகாரியங்கள் என்பதை ஏற்றுக்கொள்வதுடன் பயன் கிடைப்பதும் கிடைக்காதிருப்பதும் அல்லாஹ்விடம் உள்ள விடயம் என்பதையும் நம்ப வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் மரணித்தோரை ஏசுவதும், அவர்களை மானபங்கப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டது என்பதுடன், அது கெட்ட குணங்களில் ஒன்றாகும் என்றும் தெளிவு படுத்துகிறார்கள். நற்காரியங்கள் அல்லது தீயகாரியங்ளை செய்தவர்களாக இறைவனிடம் அவர்கள் சென்றுவிட்டனர். அவர்களை ஏசுவதால் அந்த ஏச்சுப்பேச்சுகள் அவர்களை சென்றடைவதில்லை, மாறாக உயிர் வாழும் அவர்களின் உறவுகளையே அது பாதிக்கிறது.
யார் ஸுப்ஹ் தொழுகையை தொழுகிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் பிரத்தியேகமான பாதுகாப்பும், புகழிடமும் உண்டு, எனவே அவனை பாதுகாத்து அவனுக்கு உதவிபுரிகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இவ்வாறான பாதுகாப்பை,பொறுப்பை பஜ்ர் தொழுகையை விட்டுவிடுவதன் மூலமோ, அல்லது தொழுகின்றவருக்கு இடையூறு செய்து அடர்ந்தேருவதன் மூலமோ இதனை முறித்து விடவேண்டாம் என நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எச்சரிக்கிறார்கள். இவ்வாறு செய்பவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை முறித்து விட்டவராவர். யார் இவ்வாறு செய்வதற்கு எத்தனிக்கிறாரோ அவர் இந்த விடயத்தை தட்டிக் கழித்தவராவார். அவரை அல்லாஹ் நரகில் முகம்குப்புற வீசிவிடுவான்.
தர்மம் செய்வதினால் செல்வம் குறைந்து விடாது, மாறாக அது ஆபத்திலிருந்து பாதுகாக்கும் என்பதாகவும், மேலும் அல்லாஹ் தர்மம் செய்யும் மனிதருக்கு மிகப்பெரும் பாக்கியத்தை பகரமாக வைத்துள்ளான், ஆகவே அது அவனது செல்வத்தின் அதிகரிப்பே தவிர அவனது செல்வம் குறைந்துவிட்டது என்பது அர்த்தமல்ல எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவு படுத்துகிறார்கள். தண்டிப்பதற்கு அல்லது பலிவாங்குவதற்கு பலமிருந்தும் பிறரை மன்னிப்பது அவனது சக்தியையும் கண்ணியத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. எவருக்கும் பயப்படாது, அனுதாபப்படாது மற்றவரின் நலனை எதிர்பார்த்தோ அல்லாமல் அல்லாஹ்வின் திருமுகம் நாடி பணிந்து நடப்பவனுக்குரிய கூலி உயர்வையும் கண்ணியத்தையும் தவிர வேறில்லை.
முகமலர்ச்சி, நன்மை செய்தல், அழகிய வார்த்தை, தீங்கை தடுத்தல் போன்ற நற்குணங்களினால் மனிதர்கள் ஈமானில் பரீபூரண நிலையை அடைகிறார்கள் என இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இறைவிசுவாசிகளில் சிறப்புக்குரியோர், தனது மனைவி, மகள், சகோதரிகள், இனபந்துக்களான நெருங்கிய பெண்கள் ஆகியோரிடத்தில் சிறந்தவர்களாக இருப்போர் ஆவர். காரணம் அவர்களே மனிதர்களில் நற்குணத்துடன் நடந்து கொள்ள தகுதியானவர்கள்.
இந்த உலகமும் அதிலுள்ளவைகளும் சொற்பகால தற்காலிக இன்பமாகும். பின்னர் அவை அழிந்துவிடும் எனவும் அவ்வாறான இன்பங்களில் மிகவும் சிறப்புக்குரியது ஸாலிஹான மனைவியே எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவித்துள்ளார்கள். ஸாலிஹான அவனின் மனைவியை அவன் பார்த்தால் அவனை அவள் சந்தோசப்படுத்துவாள். அவளுக்கு ஏதாவது ஒரு காரியத்தை செய்து தருமாறு கட்டளையிட்டால் அவனுக்கு கட்டுப் படுவாள், அவன் வீட்டில் இல்லாத போது தன்னையும் கணவனின் சொத்துக்களையும் பாதுகாப்பாள்.
ஆதமின் மகனே நீ கட்டாயமான மற்றும் ஆகுமான விடயங்களில் செலவு செய்வீராக, நான் உனக்கு அதனை தாராளமாகவும் அதற்குப் பதிலாகவும் நிரப்பமாகத் தருவேன். மேலும் உனது செல்வத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு செய்தியை தெரிவிக்கிறார்கள்.