





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : ' உங்களில் தொடக்கு ஏற்பட்ட ஒருவரின்; தொழுகையை வுழூச் செய்யும் வரையில் அல்லாஹ் ஏற்க மாட்டான்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையின் நிபந்தனைகளின் ஒன்றான சுத்தம் பற்றி தெளிவு படுத்துகிறார்கள். எனவே தொழுகையை நிறைவேற்ற நாடும் ஒருவருக்கு வுழுவை முறிக்கும் காரியங்களான மலம் அல்லது சலம் அல்லது தூக்கம் போன்ற விடயங்கள் ஏதும் ஏற்பட்டால் அவர் வுழு செய்து கொள்வது கடமையாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : 'பல் துலக்குவது வாயை சுத்தப்படுத்தும், இறை திருப்தியைப் பெற்றுத் தரும்'.
இமாம்களான நஸாஈ மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பற்களை அராக் மரக் குச்சியினால் அல்லது அது போன்றவைகளினால் சுத்தம்செய்வது வாயிலுள்ள அழுக்குகள், துர் வாடை ஆகியவற்றை நீக்கி வாயை சுத்தப்படுத்தும் என இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். பல்துலக்குவதில் அல்லாஹ் விரும்பும் சுத்தமும், அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு, அவனின் ஏவலுக்கு கீழ்படிவதும் இருப்பதால், அடியான் இறை திருப்தியை பெறுவதற்கான வழிகளில் ஒன்றாகவும் இது காணப்படுகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு கூறுகின்றார்கள் : 'ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களை ஒருவர் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு அவைகள் குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது.'
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்பெரும்பாவங்களை விட்டும் விலகியிருக்கும் காலமெல்லாம், தினமும் நிறைவேற்றும் ஐவேளை தொழுகைகளும், ஒவ்வொரு வாரமும் நிறைவேற்றும் ஜும்ஆத் தொழுகையும், ஒவ்வொரு வருடமும் ரமழானில் நோற்கும் நோன்பும் சிறிய பாவங்களுக்கான பரிகாரமாக அமைந்து விடுகின்றன என நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். விபச்சாரம், மது அருந்துதல் போன்ற பெரும்பாவங்களைப் பொருத்தவரை தவ்பா –பவாமீட்சி- கோருவதே அதற்குரிய பரிகாரமாக அமையும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : 'பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்'
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் உறவுகளை சேர்ந்து நடப்பதிலும், உபகாரம் செய்வதிலும் பூரணமான மனிதன் யாரெனில் பதிலுக்குப் பதில் உபகாரத்தை எதிர்பாரக்கும் மனிதன் அல்ல. மாறாக உறவைப் பேணுவதில் உறவுகள் துண்டித்து நடந்தாலும் அவர்களுடன் சேர்ந்து நடப்பவனும், அல்லது அவர்கள் தன்னுடன் மோசமாக நடந்து கொண்டாலும் அதற்குப் பதிலாக அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்பவனே பூரண மனிதனாவான் என்று குறிப்பிடுகிறார்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : "இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் நோன்பு நோற்றவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்".
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ்வை விசுவாசித்து, நோன்பு கட்டாயக் கடமையென்பதையும், அதனை நோற்கும் நோன்பாளிகளுக்கு தயார்செய்து வைத்துள்ள கூலிகள் மற்றும் வெகுமதிகளையும் உண்மைப்படுத்தி அவனது வாக்குறுதியை உண்மைப்படுத்தி, அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி முகஸ்துதி இன்றி அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்றவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவத்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் லைலதுல் கத்ர் (கண்ணியமிக்க) இரவில் நின்று வங்கியவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ரமழானில் இறுதிப்பத்தில் வரக்கூடிய லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குவதின் சிறப்பு குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரஸ்தாபித்துள்ளார்கள். அவ்விரவில் தொழுகை பிரார்த்தனை அல்குர்ஆன் பாராயணம்,திக்ர் போன்ற விடயங்களில் யார் தன்னை ஈடுபடுத்தி,அவ்விரவையும் அது பற்றி இடம்பெற்றுள்ள சிறப்புகளையும் நம்பிக்கை கொண்டு, நற்கருமங்கள் செய்வதன் மூலம் அல்லாஹ்வின் நன்மையை எதிர்பார்த்து, முகஸ்துதியோ பிறருக்கு காட்டும் நோக்மோ இன்றி அவ்விரவில் நின்று வணங்கினால் அவரின்; முன் செய்த அனைத்து சிறு பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அன் நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : ஹலாலும் (ஆகுமானவைகள்) தெளிவானது. ஹராமும் (தடை செய்யப்பட்டவைகள்) தெளிவானது. இவ்விரண்டிற்குமிடையே (இவை ஹலாலானவையா?, அல்லது ஹராமானவையா? என்ற) சந்தேகத்திற்கிடமான விடயங்களுமுண்டு. அவற்றை மக்களில் அதிகமானோர் அறியாதிருக்கின்றனர். சந்தேகத்திற்கிடமான வற்றைத் தவிர்ந்து கொண்டவர் தனது மார்க்கத்தையும், மானத்தையும் பாதுகாத்துக் கொண்டார். யார் சந்தேகமான விடயத்தில் விழுந்து விடுகிறாரோ அவர்; ஹராத்தில் விழுந்து விட்டவராவார். இது தனது மந்தையை அனுமதிக்கப்படாத ஒரு வேலிக்கருகாமையில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு இடையனின் செயற்பாட்டை ஒத்ததாகும். அந்தக் கால் நடைகள் அவை தடுக்கப்பட்ட அப்பகுதிக்குள் சென்று மேய்ந்து விடக் கூடிய சாத்தியம் எப்போதும் இருக்கிறது. ஆக, அதிகாரம் பெற்ற ஒவ்வொருவருக்கும் அவருக்குரிய ஒரு பாதுகாப்பு எல்லை உண்டு. அல்லாஹ்வின் பாதுகாப்பு எல்லை, அவன் அனுமதிக்காத(ஹராமான) காரியங்களாகும். அறிந்துகொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைப் பகுதி உண்டு. அது சீராகி விடுமானால் உடல் முழுவதும் சீராகி விடுகின்றது. அது கெட்டு விடுமாயின் உடல் முழுவதும் கெட்டு விடுகின்றது. அந்த சதைப் பகுதி இதயமாகும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மனித நடவடிக்கைள் அல்லது விவகாரங்களில் ஒரு பொது விதி குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இங்கு தெளிவுபடுத்துகிறார்கள். அந்த விதியானது இஸ்லாமிய சட்ட ஒழுங்கில் அவை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவையாவன : தெளிவான ஹலால், தெளிவான ஹராம், ஹலாலிற்கும் ஹராத்திற்கும் மத்தியில் உள்ள தெளிவற்றதும் சந்தேகத்திற்கிடமானதும் , மக்களில் அதிகமானோர் அவற்றின் சட்டம் குறித்து அறியாத விடயங்கள். ஆகவே, யார் மார்க்க விடயங்களில் சந்தேகமான விடயங்களை விட்டுவிடுகிறாறோ ஹராத்தில் விழுவதிலிருந்து விலகி தனது மார்க்கத்தை காப்பாற்றிக் கொண்டார். இதனைச் செய்வதால் மக்களிடமிருந்து வரும் குறை, விமர்சனப் பேச்சுக்களை விட்டும் இவரது மானமும் பாதுகாக்கப்பட்டு விடுகின்றது. சந்தேகமானவற்றைத் தவிர்ந்து கொள்ளாதவர் ஒன்றோ ஹராத்தில் வீழ்ந்திடுவார், அல்லது மக்களின் இழி பேச்சிற்கும் ஆளாவார். மார்க்க விவகாரங்களில் சந்தேகமான விடயங்களை புரிபவரின் நிலையை தெளிவு படுத்த பின்வரும் ஒர் உதாரணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த விவகாரம் நில உரிமையாளரால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்ட ஓர் நிலத்திற்கருகில் கால் நடைகளை மேய விட்டவனைப் போன்றாகும். அதற்கருகில் மேய்வதால் அப்பிராணிகள் அப்பாதுகாப்பு வேலிக்குள் சென்று மேய வாய்ப்புள்ளது. இவ்வாறுதான்; சந்தேகமானதைச் செய்பவனும், அதன் மூலம் தெளிவான ஹராத்திற்கு அருகில் நெருங்கி, அதில் வீழ்ந்திட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், உடலில் இதயம் எனும் ஒரு சதைத்துண்டு இருப்பதாகவும், அது சீரானால் முழு உடலும் சீராகிவிடும் எனவும் அது கெட்டுப்போனால் முழு உடலும் கெட்டு விடும் எனவும் குறிப்பிடுகிறார்கள்.
ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து இரண்டு விடயங்களை மனனமிட்டிருந்தேன் எனக் கூறினார்கள் : நிச்சயமாக அல்லாஹ், செய்யும் காரியங்கள் அனைத்தையும் சிறப்பாகவும் கச்சிதமாகவும் செய்யுமாறு பணித்திருக்கின்றான். ஆகவே நீங்கள் கொலை செய்தால், அழகிய முறையில் கொல்லுங்கள். நீங்கள் அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். எனவே உங்களில் ஒருவர்; தனது கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும். அதன் மூலம் அறுக்கும் மிருகங்களின் கஷ்டங்களை எளிதாக்குங்கள்; (குறையுங்கள்).
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் எல்லா விவகாரங்களிலும் இஹ்ஸானைக் கடைப்பிடிக்குமாறு எமக்கு அறியத்தருகிறார்கள். இஹ்ஸான் என்பது வணக்க வழிபாடுகளிலும், நன்மையான காரியங்களை செய்வதிலும், படைப்புகளுக்கு நோவினை ஏற்படுவதை தடுப்பதிலும் இறை அவதானம் எனும் உணர்வோடு எப்போதும் இருத்தலையே குறிக்கும். இந்த வகையில்; இஹ்ஸான் என்பது கொலை செய்தல், பலியிடுதல் போன்ற விவகாரங்களிலும் காணப்படும். அது நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் மேற்கொள்ளல் என்ற கருத்தை குறிக்கும். பலிக்குப்பலி தண்டனை நிறைவேற்றும் போது குறித்த நபரை கொலை செய்வதில் இஹ்ஸானை; கடைப்பிடித்தல் என்பது: கொலைசெய்யப்படு பவரின் உயிர் மிக இலகுவான முறையில் விரைவாகவும், சுகமாகவும் பிரிவதற்கு வழிசெய்தல் என்பதைக் குறிக்கும். ஷரீஆ முறைப்படி அறுப்பதில் இஹ்ஸான் பேணல் என்பதன் அர்த்தம் அறுவையின் போது மிருகத்துடன் நலினமாக நடப்பதாகும். அதாவது அறுக்கும் ஆயுதத்தை கூர்மையாக்குதல், அறுவை மிருகத்தின் முன் அது பார்த்துக் கொண்டிருக்கை யில் ஆயுதத்தை கூராக்காதிருத்தல், இன்னொரு மிருகம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அதனை அறுக்காது இருத்தல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'தீங்கிழைக்கவும் கூடாது. தீங்கிற்குப் பழி வாங்கவும் கூடாது. யார் பிறருக்கு தீங்கிழைக்கிறானோ அவனுக்கு அல்லாஹ் மிகப்பெரும் தண்டனையை வழங்குவான். யார் எவ்வித நியாயமுமின்றி பிறறை சிரமப்படுத்துகிறானோ அவனுக்கு அல்லாஹ் சிரமத்தை அளிக்கிறான் '.
இதனை இமாம் அத்தாரகுத்தனீ பதிவு செய்துள்ளார்தனக்கோ பிறருக்கோ ஏற்படுகின்ற எல்லா வகையான தீங்குகளையும் அதன் வெளிப்பாடுகளையும் தடுப்பது கடமையாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.தனக்கோ பிறருக்கோ தீங்கை ஏற்படுத்துவதும் கூடாது. அத்துடன் தீங்கை இன்னொரு தீங்கினால் எதிர்கொள்வதும் கூடாது. காரணம் தீங்கிழைத்தல் என்பது அதே மாதிரியான ஒன்றினால் நீங்கிவிடாது. ஆனால் அத்துமீறாது பலிக்குப்பலி தண்டனை வழங்குதல் அனுமதிக்கப்பட்டதாகும். மக்களுக்கு தீங்கை ஏற்படுத்துவதினால் ஏற்படும் தீங்கிற்கான எச்சரிக்கையையும், மக்களுக்கு சிரமத்தை –கஷ்டத்தை- ஏற்படுத்துபவருக்கு கிடைக்கின்ற சிரமத்தையும் பற்றிய எச்சரிக்கையையும் இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்தினார்கள் .