





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் ஸஃத் பின் மாலிக் பின் ஸினான் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ''ஒருவர் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பது கூடாது''.
இதனை இமாம்களான இப்னுமாஜா, தாரகுத்னி, மற்றும் பலரும் அறிவிப்பாளர் தொடர் அருபடாமல் அறிவித்துள்ளனர்தனக்கோ பிறருக்கோ ஏற்படுகின்ற எல்லா வகையான தீங்குகளையும் அதன் வெளிப்பாடுகளையும் தடுப்பது கடமையாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். தனக்கோ பிறருக்கோ தீங்கை ஏற்படுத்துவதும் கூடாது. அத்துடன் தீங்கை இன்னொரு தீங்கினால் எதிர்கொள்வதும் கூடாது. காரணம் தீங்கிழைத்தல் என்பது அதே மாதிரியான ஒன்றினால் நீங்கி விடாது. ஆனால் அத்துமீறாது பழிக்குப்பழி தண்டனை வழங்குதல் அனுமதிக்கப்பட்டதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ' (பிரதிவாதியை விசாரிக்காமல் ) மக்களின் வாதத்திறமையின் அடிப்படையில் அவர்கள் கோருவதெல்லாம் வழங்கப்பட்டால், மக்களில் பலர்; ஏனைய மனிதர்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உரிமை கோரத் தொடங்குவார்கள். எனவே உரிமை கொண்டாடும் வாதி அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், அதனை மறுப்பவர் -பிரதிவாதி- சத்தியம் செய்ய வேண்டும்.'
இந்த ஹதீஸை இமாம் பைஹகீ மற்றும் ஏனையோர் இவ்வாறு பதிவு செய்துள்ளனர், மேலும் இதன் ஒரு பகுதி புஹஇடம்பெற்றுள்ளதுஎவ்வித ஆதாரமோ, தகுந்த சாட்சியங்களோ இல்லாது தங்களது வாதத்தின் அடிப்படையில் வழக்காடும் ஒருவருக்கு அவரால் கோரப்படுபவை வழங்கப்படும் என்றிருந்தால் சிலர் மக்களின் உடமைகளையும், அவர்களின் உயிரையும் கூட உரிமை கோரத் தொடங்குவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஆகவே, வாதி தனது கூற்றுக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அவரிடம் ஆதாரம் இல்லையென்றால், அந்தக் கோரிக்கை பிரதிவாதியின் முன் வைக்கப்படும். அவர் மறுத்தால், அவர் சத்தியம் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.
தனது தந்தை அபூமூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மூலம் அபூபுர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் அவரை (அபூ மூஸா அல் அஷ்அரியை) யமன் நாட்டுக்குப் அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் குறித்து) நபியவர்களிடம் கேட்க, அவை எவை? எனக் கேட்டார்கள்: அதற்கு அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு அவரகள்; 'அல்பித்உ, அல்மிஸ்ர்' என்றார்கள்.அப்போது அபூ புர்தாவிடம் அல்பித்உ என்றால் என்ன? எனக் கேட்க்கப்பட்டது. அதற்கு அவர்கள் 'தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் என்றார்கள், அல்மிஸ்ர் என்பது தொலி நீக்கப்படாத வாற்கோதுமையில் தயாரிக்கப்படும் பானம்' என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்' என்று பதிலளித்தார்கள். இமாம் முஸ்லிம் அவர்கள் பின்வருமாறு பதிவு செயதுள்ளார்கள், அதன் வாசகம் பின்வருமாறு: நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்த போது நான், 'அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் தோல் நீக்கப்படாத கோதுமையிலிருந்து ஒருவகை பானம் தயாரிக்கப்படுகிறது. அதற்கு 'அல்மிஸ்ர்' என்று பெயர் சொல்லப்படுகிறது. மேலும், தேனிலிருந்து 'பித்உ' எனப்படும் ஒரு பானமும் தயாரிக்கப் படுகிறது. (அவற்றை நாங்கள் அருந்தலாமா?)' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்' என்று கூறினார்கள். முஸ்லிமின் இன்னோர் அறிவிப்பில் : தொழுகையை விட்டும் தடுக்கக்கூடிய போதைகள் அனைத்தும் ஹராமாகும் என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. முஸ்லிமின் இன்னோர் அறிவிப்பில் : 'நபியவர்கள் 'ஜவாமிஉல் கலிம்' எனும் ஆரம்பம் முதல் இறுதிவரை சொற்சுருக்கமும் பொருட்செரிவும் மிக்க வார்தைகளை பேசும் திறமை வழங்ப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் கூறினார்கள் : தொழுகையிலிருந்து தடுக்கக்கூடிய போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்'.
இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னை யமனுக்கு அனுப்பினார்கள் என அபூமூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது அங்கே சில பானங்கள் தயாரிக்கப்படுவதாகுவும், அதை அருந்துவது தடைசெய்யப்பட்டதா என நபியவர்களிடத்தில் வினவ நபியவர்கள் அந்த பானம் பற்றி விவரிக்குமாறு அவரை வேண்டிக் கொண்டார்கள். அப்போது அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கே ';பித்உ' மற்றும் 'மிஸ்ர்'; எனும் இரண்டு வகையான பானங்கள்; உண்டு. பித்ஃ என்பது தேனினால் தயாரிக்கப்படும் மதுசாரம், மிஸ்ர் என்பது வாற்கோதுமையினால் தயாரிக்கப்படும் மதுசாரம் என்று கூறினார்கள். உடனே சொற்சுருக்கமும் பொருட்செரிவும் வழங்கப்பட்ட நபியவர்கள் : போதை தரும் அனைத்தும் தடைசெய்யப்பட்டதாகும் என்று மிகவும் சுருக்கமாக பதிலளித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : 'உடலுறவில் ஈடுபடாமல், பாவங்கள் செய்யாமல் ஹஜ் செய்தவர் தனது தாய் அன்று ஈண்டெடுத்த பாலகன் போன்று திரும்புவார்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் யார் ஒருவர் உடலுறவு மற்றும் அதனுடன் தொடர்பான முத்தமிடுதல், இச்சையுடன் தொடுதல் போன்ற ஆரம்ப செயற்பாடுகளில்; ஈடுபடாமலும் பாவமான மற்றும் தவறான காரியங்களை செய்யாமலும் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக வீடு திரும்புவார் எனத் தெளிவு படுத்தியுள்ளார்கள் ஹதீஸில் குறிப்பிடப்பட்ட 'ரபஸ்' என்ற வார்த்தையானது கெட்ட வார்த்தை பேசுதல் என்ற கருத்தையும் குறிக்கும். இங்கு குறிப்பிடப்பட்ட 'வலம் யப்ஸுக்' அதாவது புஸூக் என்பது இஹ்ராம் கட்டடியதும் செய்யக் கூடாத தடுக்கப்பட்ட காரியங்களைக் குறிக்கிறது. அதாவது ஒரு குழந்தை பாவமற்ற நிலையில் பிறப்பதைப் போன்று தனது ஹஜ்ஜிலிருந்து பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் திரும்புவார்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உணவு சாப்பிடுவதற்கு தயார் நிலையில் இருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்உணவு சாப்பிடுவதற்கு தயாரான நிலையில்; தொழுபவர் மனது ஏங்கிக்கொண்டு உணவு பற்றிய சிந்தனையுடன் தொழுவதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அவைலஹிஸ்ஸலாம் அவர்கள் தடுத்தார்கள். அதே போல் மலசலத்தை அடக்கிக்கொண்டு அதன் சிந்தனையில் தொழுவதையும் தடுத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகி றார்கள் : 'வெள்ளிக்கிழமை தினத்தில் இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ 'மௌனமாக இரு' என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்'. (ஜும்ஆவின் பலனை இழந்துவிட்டாய்).
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஜும்ஆவிற்கு சமூகமளித்தவர் அவசியம் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்கொன்றை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது கதீப் அவர்கள் உரையாற்றுகையில் அவரின் போதனைகளை, அறிவுறைகளை சிந்தித்துணர்வதற்காக காது தாழ்த்தி மௌனமாக கேட்பது அவ்வொழுங்குகளின் முக்கியமான ஒன்றாகும். இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கையில் பிறரைப் பார்த்து 'செவிமடுப்பீராக' 'மௌனமாக இருப்பீராக' என ஆகக் குறைந்தளவிலான வார்த்தைகளினால் பேசினாலும் அவர் ஜும்ஆவின் சிறப்பை இழந்துவிட்டவராவார் என விபரித்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : "இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தசேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைவது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, நகங்களை வெட்டிக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியனவாகும்''.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலும் மற்றும் நபிமார்களின் மரபுகளிலும் உள்ள ஐந்து விடயங்களை தெளிவுபடுத்துகிறார்கள்; அவை பின்வருமாறு : முதலாவது : விருத்த சேதனம்; விருத்தசேதனம் என்பது ஆணுறுப்பின் மேல் பகுதியில் உள்ள தோலை கத்தரிவிடுதல். பெண் பிறப்புறுப்பில் உறவு கொள்ளும் இடத்திற்கு மேலே உள்ள பகுதியை நீக்கி விடுதல். இரண்டாவது: மர்ம உறுப்பின் மேலே உள்ள பகுதியில் காணப்படும் முடிகளை மழித்தல். மூன்றாவது: மீசையை கத்தரித்தல் -ஒட்ட வெட்டுதல்- அதாவது ஆணின் உதட்டின் மேல் பகுதி தெரியுமளவிற்கு மேல் உதட்டுப்பக்கத்தில் வளரும் முடிகளை கத்தரிப்பதை குறிக்கிறது. நான்காவது : நகங்களை களைதல். ஐந்தாவது :அக்குள் முடிகளை களைதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீசையை கத்தரிக்குமாறு ஆணையிடுகிறார்கள். அத்துடன் அதனை கத்தரிக்காது விட்டுவிடுவதை எச்சரிப்பதோடு அதனை இயலுமான வரை கத்தரிக்குமாறு வேண்டுகிறார்கள். மீசையை நன்கு கத்தரிக்குமாறு குறிப்பிட்ட நபியவர்கள் தாடியை நன்கு அடர்த்தியாக வளர்க்குமாறு கட்டளையிடுகிறார்கள்.
உஸ்மான் இப்னு அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அடிமையான ஹும்ரான் அவர்கள் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் வுழு செய்த நிகழ்வை அறிவிக்கிறார்கள்: உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் இரு கைகளையும் முழங்கை உட்பட கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு 'நான் வுழூச் செய்வதைப் போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழூச் செய்ததை பார்த்திருக்கிறேன்' என்று கூறிவிட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னிடம், 'யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்' என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வுழுசெய்யும் முறையை, அழகிய முறையில் தெளிவு படுத்தும் நோக்கில் செயன்முறை ரீதியாக கற்றுக் கொடுத்தார்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொண்டு வரக் கூறி அதனை தனது இருகைகளிலும் மூன்று முறை ஊற்றி கழுவிவிட்டு, பின்னர் தனது வலது கையை பாத்திரத்தினுள் இட்டு நீரை எடுத்து வாயிலிட்டு நன்றாக அந்நீரை சுலட்டி, பின்னர் அதனை வெளியே கொப்பளித்ததோடு, அதே நீரால் நாசினுள் இட்டு அதனை வெளியே சிந்தினார்கள். அதனைத் தொடர்ந்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின் முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவினார்கள். அதனைத் தொடர்ந்து ஈரக்கையால் தலையை ஒரு தடவை தடவினார்கள். பின்னர் கரண்டைக்கால் உட்பட இரு கால்களையும் கழுவினார்கள். உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வுழு செய்து முடிந்ததும் தான் வுழூச் செய்ததைப் போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழூச் செய்ததை தான் பார்த்ததாக அவர்களிடம் தெரிவித்தார்கள். அத்துடன் அவர்கள்; வுழு செய்ததைப் போன்று வுழுசெய்து விட்டு தனது இரட்சகனுக்கு முன் நின்று உள்ளச்சத்துடன் மெய்நிலையில் - உள்ளத்தை ஓர்நிலைப்படுத்தியவராக இரண்டு ரக்அத்துக்கள் தொழுதால் அவரின் முழுமையான வுழுவிற்கும் தூய்மையான அவரின் தொழுகைக்கும் அல்லாஹ் அவரின் முன்சென்ற சிறுபாவங்களை மன்னித்து கூலி வழங்குகிறான் என்ற நற்செய்தியையும் குறிப்பிட்டார்கள்.