





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் 'அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஆபினீ வஹ்தினீ வர்ஸுக்னீ' என்று கூறுபவர்களாக இருந்தார்கள்;. பொருள் : யாஅல்லாஹ் ! என்னை மன்னித்து விடுவாயாக, எனக்குக் கிருபை செய்வாயாக ,எனக்கு ஆரோக்கியத்தைத் தருவாயாக, எனக்கு நேர்வழி காட்டிடுவாயாக, எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக'.
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்ஒரு முஸ்லிமுக்கு மிகவும் தேவைப்படுகின்ற, இம்மை மறுமை நலன்களை உள்ளடக்கிய ஐந்து மகத்தான பிரார்தனைகள் உள்ளடங்கிய ஒரு துஆவை தனது தொழுகையில், இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் ஓதக் கூடியவர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திகழ்ந்தார்கள். அதில் நபியவர்கள் பாவங்களுக்கு மன்னிப்புக் கோரி, அவற்றை மறைத்து, அழித்து விடுமாறும், அருளை நிறைவாகத் தருமாறும், மார்க்கத்தில் சந்தேகங்ள் மற்றும் மனோ இச்சைகளைப் பின்பற்றுவதை விட்டும், உடலில் நோய் நொடிகளை விட்டும், ஆரோக்கியத்தையும், ஈடேற்றத்தையும் தருமாறும் வேண்டுகிறார்கள். அத்துடன் அல்லாஹ்விடம் சத்தியத்தியத்தைப் பின்பற்றி வாழ்வதற்கும், அதில் நிலைத்திருக்கவும், மேலும் ஈமான், அறிவு, நற்செயல் ஆகிய ரிஸ்கையும் தூய்மையும் ஹலாலும் நிறைந்த செல்வமெனும் ரிஸ்கையும் தருமாறு வேண்டுகிறார்கள்.
ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்ததும் 'அஸ்தஃபிருல்லாஹ்' (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) என்று மூன்று தடவைகள் கூறி விட்டு பின்வரும் திக்ரை ஓதுவார்கள் : 'அல்லாஹும்ம அன்தஸ் ஸலாமு, வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி'.' (பொருள்) யா அல்லாஹ்: நீ ஈடேற்றமானவன், உன் மூலமே ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியமும் மான்பும் உடையவனே, நீ உயர்ந்தோனாய் உள்ளாய்) வலீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இமாம் அவ்ஸாஈ (ரஹ்) அவர்களிடம் இஸ்திபார் செய்வது எப்படி என வினவினேன், அதற்கு அவர்கள் 'அஸ்தஃபிருல்லாஹ்' அஸ்தஃபிருல்லாஹ்' என்று நீ கூற வேண்டும் என்றார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்ததும் 'அஸ்தஃபிருல்லாஹ்' அஸ்தஃபிருல்லாஹ்' அஸ்தஃபிருல்லாஹ்' என மூன்று தடவைகள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். பின்னர் அவர்கள் தனது இரட்சகனை 'அல்லாஹம்ம அன்தஸ் ஸலாமு, வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி' என்ற கூற்றினால் மகத்துவப்படுத்தினார்கள். இங்கு அஸ்ஸலாம் என்பது அல்லாஹ் தனது பண்புகளில் பரிபூரண சாந்தியளிப்பவன், எல்லாவகையான குறைகளை விட்டும் தூய்மையானவன் என்பதாகும். அவனிடமிருந்தே இம்மை மறுமையின் தீங்குகளைவிட்டும் ஈடேற்றத்தை கோர வேண்டும். வேறு யாரிடமும் அதனை தேடக்கூடாது. அவன் தூயவன் அவனிடமே இம்மை மறுமையின் நலன்கள் யாவும் பெருகிக்கிடக்கிறது. அவனே மகத்துவம் மற்றும் உபகாரம் போன்ற பண்புகளின் சொந்தக்காரனாவான்.
இம்ரான் இப்னு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : நான் மூல நோயினால் பீடிக்கப்பட்டிருந்தேன். எனவே தொழுகை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவினேன். அதற்கு நபியவர்கள்: 'நின்ற நிலையில் தொழுவீராக, அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில் தொழுவீராக, அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்த நிலையில் தொழுவீராக' என்று கூறினார்கள்.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்நின்ற நிலையில் தொழுவதுதான் தொழுகையின் அடிப்படை என்பதை நபியவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். எனவே அவ்வாறு நின்று தொழ முடியாவிட்டால் உட்கார்ந்து தொழ வேண்டும், அதுவும் முடியாவிட்டால் சாய்ந்து தொழ முடியும்.
அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை' என்று கூறி, வீட்டிலேயே தொழுது கொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, 'தொழுகை அறிவிப்பு சப்தம் (அதான்) உமக்குக் கேட்கிறதா?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம்' (கேட்கிறது) என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!' (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கண்பார்வையற்ற ஒரு மனிதர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து அல்லஹ்வின் தூதரே ஐவேளைத் தொழுகைகளுக்கு என்னை பள்ளிவாயிலுக்கு அழைத்து வர எனக்கு உதவியாளர் எவரும் இல்லை என்று முறைப்பட்டார்கள். அதாவது அவர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஜமாஅத்துடன் தொழாது தனித்து வீட்டிலேயே தொழுவதற்கு சலுகை தருமாறு வேண்டிக்கொள்ளவே அதற்கான அனுமதியை வழங்கினார்கள். பின் அவர் திரும்பி செல்லவே அவரை அழைத்து தொழுகைக்கான அதான் -அழைப்புச் சத்தம் உமக்குக் கேட்கிறதா என்று கேட்டார்கள். அதற்கு ஆம் என அவர் பதில் கூற, அவரிடம் தொழுகையின் அழைப்பாளருக்கு பதிலளிப்பீராக அதாவது பள்ளிக்கு வந்து ஜமாஅத்தில் கலந்து கொள்வீராக என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ பின் அபீதாலிப் (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோர் கூறுகின்றனர் : "இமாம் தொழுகையில் ஒரு நிலையில்இருக்கும்போது நீங்கள் வந்தால் இமாம் செய்வதைப் போன்றே செய்யட்டும்".
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்இமாம் நிலை, ருகூஃ, ஸுஜூது, இருப்பு எந்த நிலையில் இருக்கும் போது வந்தாலும் அதே நிலையில் இமாமுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். சில பாமரர்கள் செய்வது போல் இமாம் நிலைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களுக்கு குத்பதுல் ஹாஜாவை இவ்வாறு கற்றுக் கொடுத்தார்கள் : 'இன்னல் ஹம்த லில்லாஹ், நஸ்தஈனுஹூ வனஸ்தஃபிருஹூ, வனஊது பிஹீ மின் ஷுரூரி அன்புஸினா, மன் யஹ்தில்லாஹு பலா முழில்லலஹூ, வமன் யுழ்லில் பலா ஹாதிய லஹூ, வஅஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ'' (பொருள் : நிச்சயமாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன! நாம் அவனைப் புகழ்கிறோம். அவனிடமே உதவி தேடுகிறோம். இன்னும் அவனிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம். மேலும் நமது உள்ளங்களில் தோன்றும் தீய எண்ணங்களை விட்டும் அவனிடமே பாதுகாவல் தேடுகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழிப்படுத்தி விட்டானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அல்லாஹ் யாரை வழி கெடுத்து விட்டானோ அவரை நேர்வழிப்படுத்துபவர் யாரும் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவனது நல்லடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்) என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள்; பின்வரும் மூன்று வசனங்களை ஓதுவார்கள் : 'மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, எவனைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கேட்டுக் கொள்வீர்களோ அந்த அல்லாஹ்வையும், மேலும் இரத்த உறவுகளைத் துண்டித்து நடப்பதையும் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்' (நிஸா : 01), 'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்' (ஆல இம்ரான் : 102), 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான வார்த்தையையே கூறுங்கள்;, (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்குவான், மேலும்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் கட்டுப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றியை ஈட்டிக் கொண்டுவிட்டார்;' (அஹ்ஸாப் : 70, 71).
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜ, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குத்பதுல் ஹாஜாவை தங்களுக்கு கற்றுத் தந்ததாக இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். குத்பதுல் ஹாஜா என்பது திருமண உரை மற்றும் ஜும்ஆ உரை மற்றும் இதுபோன்ற உரைகளையும், விசேட நிகழ்வுகளை ஆரம்பிக்கும் போதும் கூறும் வார்த்தைகளைக் குறிக்கும். இந்த குத்பாவானது எல்லா வகையான புகழுக்கும் பாராட்டுதளுக்கும் அல்லாஹ் தகுதியான்வன் ; என்பதை தெளிவுபடுத்தி, இணையில்லா ஏகனாகிய அவனிடம் உதவி கோரல், பாவங்களை மறைத்து அதனை அழித்து விடுவதற்கும் உதவி கோருதல், மற்றும் எல்லா வகையான கெடுதிகளை விட்டும் பாதுகாப்புத் தேடி அவனிடம் ஒதுங்குதல் போன்ற பல உன்னதமான விடயங்களை உள்ளடக்கியுள்ளது. நேர்வழியானது அல்லாஹ்வின் கைவசம் உள்ள விடயம் என்பதையும் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே யாருக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுகிறானோ அவனை வழிதவறச் செய்பவன் எவருமில்லை. யாரை அல்லாஹ் வழி தவறச்செய்து விடுகிறானோ அவனை நேர்வழிப்படுத்த எவரும் கிடையாது. பின் அவர்கள் தவ்ஹீதின் மூலம் சான்று பகர்தல், அதாவது உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் தூதருமாவார் என தூதுத்துவச் சான்றினையும் குறிப்பிடுகின்றார்கள். இந்த குத்பாவை அல்லாஹ்வின் திருமுகம் நாடி அவனின் கட்டளைகளை ஏற்று அவன் தடுத்தவற்றை தவிர்ந்தும் இருக்குமாறும் அல்லாஹ்வை பயப்பாடுமாறும் கூறுகின்ற மூன்று வசனங்களை கூறி முடித்துள்ளார்கள். யார் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறாரோ அவர்களின் சொல்லும் செயலும் சீர்பெற்று பாவங்கள் மன்னிக்கப்பட்டு இவ்வுலகில் மனமான வாழ்வு கிட்டவும், மறுமையில் சுவர்க்கத்தை வெற்றி கொள்ளவும் காரணமாக அமையும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'வலீ (பொறுப்பாளர்) இல்லாமல் திருமணம் இல்லை'.
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்திருமண ஒப்பந்தத்தை நடாத்துவதற்கான பொறுப்பாளர் இன்றி ஒரு பெண் திருமணம் செய்வது செல்லுபடியாகாது, என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள்: '(இஸ்லாமிய அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையை நுகர மாட்டான். அந்த நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைதூரமளவிற்கு வீசிக் கொண்டிருக்கும்'.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்பாதுகபாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில்; இஸ்லாமிய அரசின் கீழ் வாழும்; முஸ்லிமல்லாத பிரஜை ஒருவரை தகுந்த காரணமின்றிக் கொன்றவன் சுவர்க்கத்தின் வாடையை நுகர மாட்டடான் என்ற கடுமையான எச்சரிக்கையை இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துவதுடன் அதன் நறுமணமானது நாற்பதாண்டுப் பயணத் தொலைவுவரை வீசிக் கொண்டிருக்கும என்றும் குறிப்பிடுகிறார்கள்.
அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தீர்ப்புக்கூறுவதில் இலஞ்சம் கொடுப்பவனையும், எடுப்பவனையும் சபித்தார்கள்.
இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இலஞ்சம் கொடுப்பவன் அதனை எடுப்பவன் ஆகியோர் இறையருளைவிட்டும் தூரப்படுத்தப்பட வேண்டும் என பிரார்த்தனை புரிந்தார்கள். இலஞ்சம் வழங்குபவன் தனது நோக்கத்தை பிழையான வழியில் அடைந்து கொள்வதற்கென தீர்ப்பில் தனக்கு சாதகமானதாக அமைய நீதிபதிகளுக்கு வழங்கும் கையூட்டல் இதில் உள்ள ஒன்றாகும்.