





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். பாதையில் உள்ள ஒரு நீர் நிலைக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது சிலர் அஸ்ர் தொழுகைக்காக அவசரப்பட்டனர். (அதற்காக) அவசர அவசரமாக வுழு செய்தனர். நாங்கள் அவர்களிடம் போய்ச் சேர்ந்த போது அவர்களுடைய குதிகால்களில் தண்ணீர் படாமல் தெளிவாக அவை காட்சியளித்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான் உண்டு. ஆகவே வுழுவை பரிபூரணமாகச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்கள். அவர்களுடன் சில ஸஹாபாக்களும் இருந்தனர். செல்லும் வழியில் நீர் கிடைத்தது அதனால் சில ஸஹாபக்கள் -நபித்தோழர்கள்-அஸ்ர் தொழுவதற்காக வுழு செய்ய விரைந்தனர். அவசரமாக வுழு செய்ததால் அவர்களின் குதிகால் பகுதிகள் நீர்படாது காய்ந்து காணப்பட்டது தெளிவாக புலப்பட்டது. அவ்வேளை நபியவர்கள் : வுழுவின் போது பாதத்தின் பிற்பகுதியை ஒழுங்காக கழுவாது அலட்சியமாய் இருப்போருக்கு நரகில் வேதனையும் நாசமும் உண்டாகட்டும் எனக் குறிப்பிட்டு விட்டு, வுழுவை பரிபூரணமாக செய்யுமாறு கட்டளைப் பிரப்பித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : பாங்கு சொல்பவர் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் (பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்)என்றால் நீங்களும் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் 'அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்' (பொருள் : அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக்கூடிய வேறு இறைவனில்லை என்று நான் சாட்சிகூறுகிறேன்.) என்றால் நீங்களும் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் (பொருள் : (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்' என்றால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் ஹய்ய அலஸ்ஸலாஹ், (பொருள் தொழுகைக்காக விரைந்து வாருங்கள்) என்றால், அப்போது நீங்கள் 'லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்' (பொருள்: நன்மையை செய்வதற்கோ தீமையிலிந்து தவிரந்திருக்கவோ அல்லாஹ்வின் உதவியின்றி முடியாது' என்று சொல்ல வேண்டும்; பிறகு அவர் 'ஹய்ய அலல்ஃபலாஹ்' என்றால் அப்போதும் நீங்கள் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லவேண்டும் பிறகு அவர் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்றால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லவேண்டும்; பிறகு அவர் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்றால் நீங்களும் 'லாஇலாஹ இல்லல்லாஹ' என்று உள்ளத்தின் உறுதியுடன் கூறினால் அத்தகையோர் சுவர்க்கம் புகுவர்'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்அதான் என்பது தொழுகையின் நேரம் வந்து விட்டது என்பதை மக்களுக்கு அறிவிப்பதாகும். அதானின் வார்த்தைகள் யாவும் ஈமானிய நம்பிக்கையின் தொகுப்பாக காணப்படுகிறது. இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'அதானை' செவிமடுக்கையில் மார்க்கத்தில் பின்பற்ற வேண்டிய விடயங்களை தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது அதானை செவிமடுப்பவர் முஅத்தின் சொல்வது போன்று அவரும் பதில் கூறவேண்டும். உதாரணத்திற்கு முஅத்தின் 'அல்லாஹு அக்பர்' என்று கூறினால் அதானை செவிமடுப்பவர் அல்லாஹு அக்பர் எனக் கூறவேண்டும். என்றாலும் முஅத்தின் 'ஹய்யஅலஸ்ஸலாஹ் 'ஹய்யஅலல் பலாஹ்' எனக் கூறும்போது லாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹ் எனப் பதில் கூறவேண்டும். ஒருவர் முஅத்தினுடன் சேர்ந்து அவர்கூறும் வார்த்தைகளை உளத்தூய்மையுடன் கூறினால் அவர் சுவர்க்கம் நுழைவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். அதான் வாசகங்களின் கருத்துக்கள் : 'அல்லாஹு அக்பர்' என்பது அல்லாஹ் மிகவும் தூய்மையானவன், மிகவும் போற்றுதலுக்குரியவன், மிகவும் கண்ணியமானாவன் அனைத்து விடயங்களை விடவும் பெரியவன் என்பதைக் குறிக்கும். அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ்' என்பது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை' என்பதைக் குறிக்கும். 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்பதன் பொருள் : முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர், அவர்களை அல்லாஹ் தூதராக அனுப்பினான் என்பதை உள்ளத்தால் ஏற்று நாவால் சாட்சி கூறுகிறேன். என்பதாகும். மேலும் அவர்களுக்கு கட்டுப்படுவது கடமையாகும். 'ஹய்யஅலஸ் ஸலாஹ்'என்பதன் கருத்து : தொழுகைக்காக விரைந்து வருங்கள் என்பதாகும். இதனைக் செவிமடுத்தவரின் பதில் 'லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ் என்பதன் அர்த்தம்: கட்டுப்படுவதற்கு தடையாக இருப்பவற்றிலிருந்து மீட்சி பெருவதற்குரிய வழியும்; அவற்றை செய்வதற்குரிய சக்தியும் அத்துடன் எந்த ஒருவிடயத்தையும் செய்வதற்கு வல்லமையும் அல்லாஹ்வின் உதவியின்றி கிடையாது'. 'ஹய்ய அலல்பலாஹ' என்பது வெற்றியின் வழியை நோக்கி வாருங்கள். அதுதான் சுவர்க்கத்தை வெற்றிகொள்வதும், நரகத்தை விட்டும் தப்புவதுமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'யார் ஒரு கடமையான தொழுகையை நிறைவேற்ற மறந்துவிடுகிறாரோ அவர் அதனை ஞாபகம் வந்ததும் தொழுது கொள்ளட்டும்; அதற்கான குற்றப்பரிகாரம் அதனைத்தவிர வேறுஒன்றுமில்லை (என்னை நினைவு படுத்த தொழுகையை நிலைநாட்டுவீராக,) (தாஹா :14)
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கடமையான எந்த தொழுகையாயினும் அதன் நேரம் கடந்த பின்னும் நிறைவேற்ற மறந்து விட்டால், அவருக்கு ஞாபகம் வரும் வேளை உடன் விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதனை விட்டதனால் ஏற்றபட்ட பாவத்தை நீக்குவதற்கும் மறைப்பதற்குமான வழி அது நினைவுக்கு வந்தவுடன் அதனை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழி கிடையாது. அல்லாஹ் தனது திருமறையில் 'என்னை நினைவுபடுத்துவதற்காக தொழுகையை நிலைநாட்டுவீராக எனக் குறிப்பிடுகிறான்' இதன் கருத்து : நீ நிறைவேற்ற மறந்த தொழுகையை ஞாபகம் வரும்போது அதனை நிறைவேற்றுவீராக என்பதாகும்.
அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கலந்து கொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கலந்து கொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெண்களையும்,பருவ வயதை அடையாத குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நேர்ச்சை செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். நோர்ச்சையானது (அல்லாஹ் விதித்தவை தவிர) எந்த நன்மையையும் கொண்டு வரமாட்டாது. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை).
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நேர்ச்சை செய்வதை தடைசெய்தார்கள். நேர்ச்சை என்பது மார்க்கரீதியாக கட்டாயப்படுத்தாத ஒன்றை தான் செய்வதாக ஒருவர் தன்மீது கடமையாக்கிக்கொள்ளும் ஒரு விடயமாகும். தொடர்ந்து நபியவர்கள் குறிப்பிடுகையில் : நேர்ச்சையானது அல்லாஹ் விதித்த எதனையும் முற்படுத்தவோ பிற்படுத்தவோ மாட்டாது. மாறாக தனக்குத் தேவையானதை மாத்திரமே செய்யும் கஞ்சனின் செல்வத்தை மாத்திரமே அது வெளிப்படுத்துகிறது. மொத்தத்தில் நேர்ச்சையானது அல்லாஹ் ஏற்கனவே நிர்ணயித்த –விதித்தத் தவிர எதனையும் கொண்டு வரப் போவதில்லை.
அபூமூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ் நாடிய நேரம்வரை நாங்கள் (அங்கேயே) இருந்தோம். பின்பு சில ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் மூன்று ஒட்டக மந்தைகளை எங்களுக்கு வழங்கும்படி ஆணையிட்டார்கள். (அவற்றில் ஏறி) நாங்கள் சென்றபோது, எங்களில் சிலர் சிலரிடம், நபி ஸல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நம்மைச் சுமந்து செல்ல ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டோம். அவ்வாறு நம்மை ஏற்றியனுப்பத் தம்மால் இயலாது என நபியவர்கள் சத்தியம் செய்து கூறினார்கள். பிறகு, நாம் ஏறிச்செல்ல ஒட்டகங்கள் வழங்கினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில் நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாதே! என்று கூறினார்கள். ஆகவே, நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (திரும்பவும்) சென்று, அவர்களுக்கு அதை நினைவு படுத்தினோம். அப்போது அவர்கள், 'நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை; மாறாக, அல்லாஹ்தான் உங்களை (அதில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனிமேல் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரம் செய்து விடுவேன்' என்று சொன்னார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ்வின் தூதரிடம் தனது கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு குழுவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தது குறித்து அபூமுஸா அல் அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஜிஹாதில் கலந்து கொள்வதற்கு அவர்களை ஏற்றிச்செல்ல ஒரு ஒட்டகத்தை வழங்குமாறு கோரியே நபியவர்களிடம் அவர்கள் சென்றார்கள். அப்போது நபியவர்கள் தன்னிடம் அவர்களை ஏற்றிச்செல்வதற்கான ஒட்டகம் இல்லையென்பதால் அவர்களை ஏற்றிச்செல்ல முடியாது என சத்தியம் செய்தார்கள். உடனே அவர்கள் திரும்பிச்சென்று சற்று நேரம் தாமதித்துக் காத்திருந்தார்கள். பின் நபியவர்களுக்கு மூன்று ஓட்டகைகள் கிடைத்தன அவற்றில் ஒன்றை அவர்களுக்கு நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். அப்போது அவர்களில் சிலர் மற்றவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களை ஏற்றிச் செல்லமாட்டோம் என சத்தியம் செய்திருப்பதால் இந்த ஒட்டகத்தில் அல்லாஹ் பரக்கத் செய்ய மாட்டான் என்று கூறினார்கள். உடனே அவர்கள் நபியவர்களிடம் வந்து இது குறித்து விசாரிக்கவே, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உங்களை ஏற்றி அனுப்புபவன் அல்லாஹ். ஏனெனில் அவனே அதற்கான நல்வாய்ப்பை தந்து அதற்கான வசதியை ஏற்படுத்தினான். என்னைப் பொறுத்தவரை நான் இது நிகழ்வதற்கான ஒரு காரணமாகவே உள்ளேன் என்றும் குறிப்பிட்டார்கள். தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில் , அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ் நாடினால், நான் ஒரு விஷயத்தைச் செய்வதாகவோ அல்லது கைவிடுவதாகவோ சத்தியம் செய்துவிட்டு, சத்தியம் செய்ததை விட மிக சிறந்த ஒன்றை காணும் பட்டசத்தில் சத்தியம் செய்ததை விட்டுவிட்டு மிகச் சிறந்ததை தேர்வு செய்து விட்டு என் சத்தியத்திற்கான பரிகாரத்தை செய்வேன் என்று கூறினார்கள்.
அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பின் வரும் விடயம் பற்றி வினவப்பட்டது ஒரு மனிதர் தான் ஒரு வீரன் என்பதற்காக யுத்தம் புரிகின்றார். இன்னொருவர் இனமாச்சரியத்திற்காக யுத்தம் புரிகின்றார். மற்றவர் முகஸ்துதிக்காக யுத்தம் புரிகின்றார். இவர்களில் யார் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார்? அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்கி உயர் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக போர் புரிகின்றாறோ அவர் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார் என்றார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் யுத்தம் புரிபவர்களின் மாறுபட்ட நோக்கங்கள் பற்றி வினவப்பட்டது. அதாவது தான் ஒரு வீரன் என்பதற்காக யுத்தம் புரிபவர். இன்னொருவர் இனமாச்சிரியத்திற்காக யுத்தம் புரிபவர். மற்றவர் முகஸ்துதிக்காகவும் புகழுக்காகவும் யுத்தம் புரிபவர். இவர்களில் யார் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார்? அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: யார் அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்கி உயர் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக போர் புரிகின்றாறோ அவர் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார் என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் முஅத்தின் கூறுவது போன்று கூறுங்கள்'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்முஅத்தின் -தொழுகை அழைப்பாளர்- பாங்கு கூறினால் அவற்றிற்கு அவர் கூறுவதை போன்று வார்த்தைக்கு வார்த்தை பதில் கூறுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதாவது அவர்-முஅத்தின்- அல்லாஹு அக்பர் எனக் கூறினால் அவரைத்தொடர்ந்து நாமும் அல்லாஹு அக்பர் கூற வேண்டும், அதே போன்று ஷாஹாதா - அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு, அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ் என்று கூறுகையில் தொடர்ந்து நாமும் அது போல் கூற வேண்டும். ஆனால் (ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் பலாஹ்) என்ற வார்த்தைகள் இவற்றிலிருந்து விதிவிலக்குப் பெறுகிறது. இந்த வார்த்தையினை முஅத்தின் கூறிய பின் (லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்) எனக் கூறுதல் வேண்டும்.
முகீரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் ஒரு பயணத்தின்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (வுழூச் செய்தபோது) அவர்களின் இரண்டு காலுறைகளையும் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அதைவிட்டுவிடுவீராக, கால்கள் இரண்டும் வுழூவுடன் இருக்கும் நிலையில்தான் காலுறைகளை அணிந்தேன்' என்று கூறிவிட்டு அவ்விரு காலுறைகளின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள் வுழூ செய்தார்கள், இரு கால்களையும் கழுவும் நிலையை அடைந்ததும் முகீரா இப்னு ஷுஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்கள் கால்களை கழுவுவதற்காக அவர்களின் பாதணிகளை கழற்றுவதற்கு கையை நீட்டினார்கள். அப்போது நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அதனை –காலுறைகளை-பாதணிகளை- -கழட்டாது விட்டுவிடுங்கள். ஏனெனில் நான் அதனை வுழூவோடு இருக்கும் நிலையிலேயே அணிந்தேன் என்று கூறினார்கள். இரு கால்களையும் கழுவுவதற்குப் பதிலாக தனது இரு காலுறைகளின்-(பாதணிகளின்) - மீதும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மஸ்ஹ் செய்தார்கள்.