





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள் அந்நாளில் தான் சுவர்க்கத்தினுள் தங்கவைக்கப் பட்டு அந்நாளில் தான் அதிலிருந்து வெளியேற்றவும் பட்டார்கள். அத்துடன் யுக முடிவு நாளும் ஜும்ஆத் தினத்தில்தான் நிகழும்'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்த நாள் ஜும்ஆ தினமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இத்தினத்தின் சிறப்புகள் சில பின்வருமாறு : இந்நாளில் ஆதம் அலைஹிஸ்லாம் படைக்கப்பட்டமை. சுவர்க்கத்தினுள் நுழைவிக்கப்பட்டமை, அதிலிருந்து வெளியேற்றபட்டு பூமிக்கு இறக்கப்பட்டமை, இந்நாளில் யுகமுடிவு நிகழ்கின்றமை போன்றனவாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ஓர் அடியான் இன்னோர் அடியானின் குறையை மறைத்தால், அல்லாஹ் மறுமையில் அவரின் குறையை மறைப்பான்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிம் ஒருவரை ஏதாவதொரு விடயத்தில் குறையை மறைத்தால், அல்லாஹ் மறுமையில் அவரின் குறையை மறைப்பான். ஏனெனில், கூலியென்பது குறித்த செயலுக்க ஒப்பாகவே கிடைக்கும். அல்லாஹ் அவரை மறைப்பதென்பது, அவரது குறைகளையும், பாவங்களையும், மஹ்சரில் மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்தாமல் மறைப்பதாகும். சிலவேளை, அவற்றை அவரிடமே கூறாமலோ, விசாரிக்காமலோ கூட இருக்கலாம்.
பராஉ இப்னுல் ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் : 'ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும் போது, அவர், அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன் வேறு எவருமில்லை முஹம்மத் -ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்- அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று உறுதிமொழி கூறுவார். இதுதான், (இறை)நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ்; இம்மையிலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச்செய்வான் ' எனும் (14:27ஆவது) இறைவசனத்தின் கருத்தாகும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இறை விசுவாசி (முஃமின்); கப்ரில் விசாரிக்கப்படுவார். கப்ரில் -மண்ணறையில்- விசாரிக்கப்படுவதற்கென பொறுப்புச் சாட்டப்பட்ட முன்கர் நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் விசாரணை நடத்துவர். அவர்கள் இருவரினதும் பெயர்கள் பல ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளன. அப்போது அவர், அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன் வேறு எவருமில்லை. முஹம்மத் -ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்- அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று உறுதிமொழி கூறுவார். இதனையே அல்லாஹ் அல் கவ்லுஸ் ஸாபித் (உறுதியான வார்த்தை) என பின்வரும் வசனத்தில் கூறிப்பிடுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அந்த வசனம் : "(இறை)நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ்; இம்மையிலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச்செய்வான்'' (இப்ராஹீம்: 27)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுக்கும் (நிலை ஏற்படும்)வரை மக்களுடன் போர் புரியும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். யார் இவற்றை செய்கிறாரோ அவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக் கொள்வார்; நியாயமான காரணம் இருந்தால் தவிர. அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்எந்த இணையும் இல்லாத உண்மையான இறைவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே எனவும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹவிவஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தை உண்மைப்பாடுத்தி சாட்சி கூறும் வரையில் இணைவைப்பாளர்களுடன் போராடுமாறு தனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகிறார்கள். அத்துடன் அந்த சான்று பகர்தலின் அடிப்படையில் தினமும் ஐவேளைத் தொழுகைகளை நிலைநாட்டுதல், தகுதியானோருக்கு கடமையான ஸகாத்தை வழங்குதல் போன்ற விடயங்களை செய்யுமாறு குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்தால் இஸ்லாம் அவர்களின் உயிருக்கும் உடமைகக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குகிறது. ஆகவே அவர்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கேட்ப கொலை செய்யப்டுவதற்குரிய குற்றங்களை செய்தாலே தவிர அவர்களை கொல்வது அனுமதிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர்களின் இரகசியவிவகாரங்கள் குறித்த விசாரணையை அல்லாஹ் பொறுப்பேற்பான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் என் சமூகத்தாரிடத்தில்; தவறுதலாக ஏற்படக் கூடியதையும் மறதியாக ஏற்படக்கூடியதையும் இன்னும் நிர்பந்தமாக நிகழக்கூடிவற்றையும் எனக்காக மன்னித்து விடுகிறான்'.
இதனை இமாம்களான இப்னுமாஜா, பைஹகீ போன்றோர் அறிவித்துள்ளனர்அல்லாஹ் தனது சமூகத்திற்கு பின்வரும் மூன்று நிலைகளில் மன்னிப்பை வழங்குகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் : முதாலாவது : தவறுதலாக நிகழ்ந்த செயல். அதாவது மனமுரண்டாக அல்லாது தவறுதலாக வெளிப்பட்ட ஒருவிடயம். உதாரணத்திற்கு ஒருவர் ஏதாவது ஒருவிடயத்தை செய்ய விரும்புகிறார். அவ்வேளை அவர் செய்ய விரும்பாத ஒரு செயல் நிகழ்ந்து விடுகிறது. இவ்வாறான தவறை அல்லாஹ் மன்னிக்கிறான். இரண்டாவது : மறதி : அதாவது சுயநினைவுடன் ஒன்றை செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவர் அதனை செய்யும் போது மறந்து விடுகிறார் இதற்கும் எவ்விதப்பாவமுமில்லை. மூன்றாவது: நிர்ப்பந்தம் : தடுப்பதற்கு சக்திபெறாத நிலையில் ஒரு பாவமான விடயத்தை செய்யுமாறு ஒருவர் நிர்ப்பந்திக்கப்படுகிறார். இவ்வாறான நிலையில் அவரின் மீது எவ்விதப்ப பாவமும் கிடையாது. இந்த ஹதீஸின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை தடைசெய்யப்பட்ட ஒரு விடயத்தில் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கிடையிலான தொடர்பை குறிப்பிடுகிறது. ஒரு நபர் கட்டளையிடப்பட்ட ஒன்றைச் செய்ய மறந்து விட்டால், அந்தக் கட்டளையிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படமாட்டாது. இருப்பினும், அவ்வாறு மறதியாக செய்ததன் விளைவாக ஒரு குற்றம் நிகழ்ந்தால், மனிதர்களுடன் தொடர்ப்பான உரிமையா இருப்பின் அவ்வுரிமையிலிருந்து விலக்கு அளிக்கப் படமாட்டாது. அதாவது ஒருவர் தவறுதலாகக் கொல்லப்பட்டால், அவர் 'தியா' கொலைக்கான இழப்பீடு செலுத்த வேண்டும், அல்லது தவறுதலாக ஒரு காரை சேதப்படுத்தினால், அவர் இழப்பீடு செலுத்த வேண்டும்.
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் , (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற்றுள்ளீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : “இறைநம்பிக்கையாளர் அவருடைய இறைவனுக்கருகில் கொண்டுவரப்படுவார். அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்ள வைப்பான். (அவரிடத்தில் இறைவன்), “நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா” என்(று கேட்)பான். அவர், “(ஆம்) அறிவேன். என் இறைவா!” என்று கூறுவார். அப்போது இறைவன், “இவற்றை யெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்காக அவற்றை மன்னித்து விடுகின்றேன்” என்று கூறுவான். பிறகு அவரது நற்செயல்களின் பதிவேடு (அவரிடத்தில் வழங்கப்பட்டுச்) சுருட் டப்படும். நயவஞ்சகர்களும் இறைமறுப்பாளர்களும் சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, “இவர்கள்தான், தம் இறைவன்மீது பொய் யைப் புனைந்துரைத்தவர்கள்” என அறிவிக்கப்படும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் தனது அடியானுடன் மறுமையில் இரகசியமாகப் பேசுவது பற்றி இவ்வாறு கூறினார்கள்: மறுமையில் ஒரு விசுவாசி தனது ரப்புக்கு நெருக்கமாக அழைக்கப்படுவான். அவ்விசுவாசியின் இரகசியத்தை ஏனையோர் அறியாமல் இருக்க, அல்லாஹ் ஏனையோரை விட்டும் அவனை மறைத்துப் பின்வருமாறு கூறுவான்: இன்ன இன்ன பாவங்கள் நினைவில் உள்ளதா? என்று கேட்டு, இவ்வாறே, தனக்கும் அவ்வடியானுக்கும் மத்தியில் உள்ள எல்லாப் பாவங்களையும் ஒப்புக்கொள்ளச் செய்வான். அவன், 'ஆம் ரப்பே!" என்று கூறுவான். அப்போது விசுவாசி திடுக்கிட்டுப் பயந்தவுடன், அல்லாஹ், 'இவ்வுலகில் இவற்றை நான் மறைத்திருந்தேன்; இன்று நான் அவற்றை மன்னித்து விடுகின்றேன்’ என்று கூறுவான். அச்சமயம் அவனது நன்மைகள் ஏடு அவனிடம் வழங்கப்படும். நயவஞ்சகர்களும் இறைமறுப்பாளர்களும் சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, “இவர்கள்தான், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என அறிவிக்கப்படும்
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நான் நபியவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். ஒரு நாள், நாம் பயணித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு சமீபமாகச் சென்றுவிட்டேன். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய தூதரே! என்னை நரகை விட்டுத் தூரப்படுத்தி, சுவனத்தில் நுழைய வைக்கும் ஒரு அமலை எனக்குக் காட்டித் தாருங்கள்' எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள், 'நீங்கள் மிக முக்கியமான ஒன்றைப் பற்றிக் கேட்டுவிட்டீர்கள். இதை யாருக்கெல்லாம் அல்லாஹ் இலகுபடுத்திக் கொடுக்கின்றானோ, அது அவர்களுக்க இலகுவாக இருக்கும். நீங்கள் அல்லாஹ்வை -அவனுக்கு எந்த இணையும் கற்பிக்காத நிலையில் - வணங்க வேண்டும். மேலும், தொழுகையையும் நிலைநாட்ட வேண்டும். ஸகாத்தைக்கொடுக்கவேண்டும். ரமழானில் நோன்பு நோற்கவேண்டும். கஃபாவை ஹஜ் செய்யவேண்டும்.' என்று கூறிவிட்டு, 'நன்மையின் வாயில்களை உனக்கு அறிவித்துத் தரட்டுமா? நோன்பு ஒரு கேடயம். நீர் நெருப்பை அனைப்பது போன்று, தர்மம் பாவங்களை அனைத்துவிடும். ஒரு மனிதன் நடு இரவில் தொழவதும் (நன்மையின் ஒரு வாயிலாகும்.) பின்பு "அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து விலகிவிடும்; அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும், ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களின் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது." என்ற வசனத்தை ஓதினார்கள். பின்பு நபியவர்கள், 'ஒரு விடயத்தின் தலையான அம்சத்தையும், அதன் பிரதான தூணையும், அதன் உயர்நிலையையும் உனக்குக் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம்! அல்லாஹ்வுடைய தூதரே!' எனக் கூறியபோது, 'தலையான அம்சம் இஸ்லாமாகும். அதன் பிரதான தூண் தொழுகையாகும். அதன் உயர்நிலை ஜிஹாதாகும்.' என்று கூறிவிட்டு, 'அவை அனைத்தையும் பாதுகாத்துத் தரும் ஒன்றைக் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நான், ஆம்! அல்லாஹ்வுடைய நபியே! எனக் கூறியதும், தமது நாவைப் பிடித்து, 'இதைத் தடுத்துக்கொள்' என்று கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய நபியே! நாம் பேசுவதற்கெல்லாம் குற்றம் பிடிக்கப்படுவோமா?' எனக் கேட்டபோது, 'உன் தாய் உன்னை இழக்கட்டும். முஆதே! மக்களை நரகில் முகங்குப்புற எறிந்து விடுவது, அவர்களது நாவின் அறுவடைகளைத் தவிர வேறென்ன இருக்கமுடியும்?'
இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுமுஆத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நான் நபியவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். ஒரு நாள் பயணித்துக்கொண்டிருக்கும் போது நான் நபியவர்களை நெருங்கிவிட்டேன். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய தூதரே! என்னை நரகை விட்டுத் தூரப்படுத்தி, சுவனத்தில் நுழைய வைக்கும் ஒரு அமலை எனக்குக் காட்டித் தாருங்கள்' எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'மனித ஆத்மாக்களால் செய்யச் சிரமமான ஒரு அமலைப் பற்றி நீங்கள் கேட்டுள்ளீர்கள். யாருக்கெல்லாம் அல்லாஹ் அதனை இலகுபடுத்திக் கொடுக்கின்றானோ, அவர்களுக்கு அது இலகுவாக இருக்கும். இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுங்கள் : முதலாவது : அல்லாஹ்வுக்கு எந்த இணையும் வைக்காது அவனை மாத்திரமே வணங்க வேண்டும். இரண்டாவது, தினமும் கடமையாக்கப்பட்டுள்ள ஸுபஹ், ளுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகிய ஐவேளைத் தொழுகைகளையும், நிபந்தனைகள், அடிப்படைகள் மற்றும் கடமைகளைப் பேணித் தொழவேண்டும். மூன்றாவது, கடமையான ஸகாத்தைக் கொடுக்க வேண்டும். ஸகாத் என்பது, ஒரு சொத்து, குறிப்பிட்ட ஒரு அளவை அடையும் போது கடமையாகும் பணம் சார்ந்த ஒரு வணக்கமாகும். தகுதியானவர்களுக்கு அது ஒப்படைக்கப்பட வேண்டும். நான்காவது, நோன்பு நோற்கவேண்டும். அதாவது, வணக்கம் என்ற நோக்கத்துடன், அதிகாலை உதயமாகியதில் இருந்து, சூரியன் மறையும் வரை உணவு, பானம் போன்ற நோன்பை முறிக்கும் அனைத்தையும் தவிர்த்தல். ஐந்தாவது : ஹஜ் செய்தல். அதாவது, மக்காவை நாடிச் சென்று, அல்லாஹ்வை வழிபடும் நோக்கில் ஹஜ்ஜுடைய கிரியைகளை நிறைவேற்றல். பின்பு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : நன்மையின் வாயில்களை அடையச் செய்யும் காரணிகள் பற்றி உமக்கு அறிவித்துத் தரட்டுமா? அதாவது, அந்தக் கடமைகளுடன், உபரியானவற்றையும் நீ செய்யவேண்டும் : முதலாவது: உபரியான நோன்புகள். இவை இச்சைகளை உடைத்து, பலத்தைக் குறைத்து பாவத்தில் வீழ்வதைத் தடுக்கின்றன. இரண்டாவது : உபரியான தர்மங்கள். இவை செய்யப்பட்ட பாவங்களை அணைத்து, அழித்து, அதன் தடயங்களையும் நீக்கிவிடும். மூன்றாவது : இரவுடைய இறுதி மூன்றில் ஒரு பகுதியில் தஹஜ்ஜுத் தொழுதல். பின்பு நபியவர்கள் "அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து விலகிவிடும்; அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும், ஆர்வத்தோடும் (தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதல், துஆக் கேட்டல் போன்றவற்றின் மூலம்) பிரார்த்தனை செய்வார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களின் குளிர்ச்சியை (மறுமை நாளில் அவர்களது கண்களைக் குளிரச் செய்பவை மற்றும் சுவனத்தில் உள்ள இன்பங்களை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது." என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பின்பு நபியவர்கள், 'மார்க்கத்தின் அடிப்படையையும், அது தாங்கியிருக்கும் தூணையும், அதன் உச்சநிலையையும் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'ஆம்! யா ரஸூலல்லாஹ்' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள் : அடிப்படையான அம்சம் இஸ்லாமாகும். அதாவது, ஷஹாதத் கலிமாவாகும். அதன் மூலம் தான் மார்க்கத்தின் அடிப்படையை அவன் அடைந்து கொள்கின்றான். அதன் தூண் தொழுகையாகும். தூண்கள் இல்லாமல் வீடில்லை என்பது போன்று, தொழுகையில்லாமல் இஸ்லாம் இல்லை. யார் தொழுகின்றாரோ, அவரது மார்க்கம் பலமடைந்து, உயர்வடைந்துவிடும். அதன் உயர்நிலை, அதாவது, அது உயர்வடைவது, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உயரச் செய்வதற்காக சிரமப்பட்டு, மார்க்கத்தின் எதிரிகளோடு போரிட்டு ஜிஹாத் செய்யும் போதே! பின்பு நபியவர்கள், 'முன்சென்ற அனைத்தையும் முறையாகப் பேணிப் பாதுகாக்கும் ஒன்றைக் கூறட்டுமா?' எனக் கேட்டுவிட்டு, தமது நாவைப் பிடித்து, 'இதைத் தடுத்துக்கொள். அவசியமில்லாத எதனையும் பேசிவிடாதே' என்று கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'நாம் பேசுகின்ற அனைத்துக்கும் அல்லாஹ் எம்மை விசாரித்துத் தண்டிப்பானா?' என்று கேட்கின்றார்கள். அதற்கு நபியவர்கள், 'உன் தாய் உன்னை இழக்கட்டும்' (இங்கு அவர்களுக்கெதிராக துஆச் செய்வது நோக்கமல்ல. அறிந்து, விழிப்புடன் இருக்கவேண்டிய ஒரு விடயம் பற்றி விழிப்பூட்டும் போது அரபிகள் பாவிக்கும் ஒரு வார்ததையாகும்.) என்று கூறிவிட்டு, 'அவர்களின் நாவுகளின் அறுவடைகளாகிய, நிராகரிப்பு, ஏசுதல், புறம், கோள், இட்டுக்கட்டல் போன்றவற்றைத் தவிர, வேறு எவைதான் அவர்களை நரகில் முகங்குப்புற எறிகின்றன?' என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர எதனையும் அவன் ஏற்கமாட்டான். அல்லாஹ் தூதர்களுக்கு ஏவியதையே விசுவாசிகளுக்கும் ஏவினான். "தூதர்களே! நல்லவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள், இன்னும், நற்செயலைச் செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்" (ஸூரா முஃமினூன் : 51), மேலும் கூறுகின்றான் "நம்பிக்கைக் கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு - (வணக்கத்திற்குரியவனான) அவனையே வணங்குபவர்களாக இருந்தால் - நீங்கள் நன்றி செலுத்துங்கள்." (ஸூரா அல் பகரா : 172) பின்பு நபியவர்கள் ஒரு மனிதனைப் பற்றிக் கூறினார்கள். அவன் நீண்ட ஒரு பயணத்தில், பரட்டைத் தலையுடன், புழுதி படிந்த நிலையில், தனது இரு கைகளையும் உயர்த்தி, 'யா ரப்பு! யா ரப்பு!' எனப் பிரார்த்திக்கின்றான். ஆனால், அவனது உணவு ஹராமானது, அவனது குடிபானமும் ஹராமானது, அவனது ஆடையும் ஹராமானது, அவன் ஹராமினாலே உணவு ஊட்டப்பட்டுள்ளான். அவனுக்கு எவ்வாறு பதிலளிக்கப்படும்!'
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நிச்சயமாக அல்லாஹ் குறைகள் மற்றும் பலவீனங்களை விட்டுத் தூய்மைப்படுத்தப்பட்ட, பரிசுத்தமானவன் என்றும், பரிபூரணம் மிக்க பண்புகள் கொண்டவன் என்றும் செயற்கள், வார்த்தைகள் மற்றும் நம்பிக்கைகள் என அனைத்திலும் அவனுக்கென்றுத் தூய்மையாக இருக்கும், நபியுடைய வழிக்கு நேர்பட்டிருக்கும் பரிசுத்தமானதை மாத்திரமே அல்லாஹ் ஒப்புக் கொள்வான் என்றும் நபியவர்கள் இங்கு அறிவிக்கின்றார்கள். அவ்வாறு மாத்திரம் தான் அல்லாஹ்வை நெருங்கப்படவேண்டும். ஒரு மனிதனின் அமல் பரிசுத்தமடைவதற்கான மிக முக்கியமான ஒரு காரணி, அவனது உணவு ஹலாலானதாகவும், தூய்மையானதாகவும் இருப்பதாகும். அதனூடாகவே அவனது அமல் பரிசுத்தமடைகின்றது. இதனால் தான் அல்லாஹ், ரஸூல்மார்களுக்கு ஹலாலானதை சாப்பிட்டு, நல்லமல்கள் செய்யுமாறு ஏவியது போன்று, விசுவாசிகளுக்கும் ஏவியுள்ளான் "தூதர்களே! நல்லவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள், இன்னும், நற்செயலைச் செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்" , "நம்பிக்கைக் கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு - (வணக்கத்திற்குரியவனான) அவனையே வணங்குபவர்களாக இருந்தால் - நீங்கள் நன்றி செலுத்துங்கள்." பின்பு நபியவர்கள் துஆ ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான பின்வரும் காரணிகளைப் பயன்படுத்தியும், அமல்களைப் பாழ்ப்படுத்தி, துஆ ஏற்றுக்கொள்ளப்படத் தடையாக இருக்கும், 'ஹராமாண உணவை' நபியவர்கள் எச்சரிக்கின்றார்கள். முதலாவதாக, ஹஜ், ஜிஹாத், உறவுகளை சேர்ந்து நடத்தல் போன்ற வணக்கங்களுக்காக நீண்ட பயணம் செய்தல். இரண்டாவதாக, தலைமுடியை வாராமல், பரட்டைத் தலையுடன், நிறம் மாறிய நிலையில், தனது ஆடைகளும் புழுதிபட்ட பட்டநிலையில் இருத்தல். எனவே இவர் ஒரு நிர்ப்பந்த நிலையில் இருக்கின்றார். மூன்றாவதாக, தனது இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, துஆக் கேட்டல். நான்காவதாக, அல்லாஹ்வின் பெயர்களை முன்னிறுத்தி, யா ரப்பு! யா ரப்பு! என மீண்டும் மீண்டும் கேட்டல். துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான இவ்வாறான காரணங்கள் இருந்தும், அது ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. ஏனெனில், அவனது உணவும், பானமும், ஆடையும் ஹராமாகும். அவன் ஹராமாலேயே ஊட்டப்பட்டுள்ளான். இவ்வாறான தன்மை உடையவர்களுக்கு பதிலளிக்கப்படுவதென்பது மிகத் தூரமானது. அவனுக்கு எவ்வாறு பதிலளிக்கப்படும்?
மிக்தாத் இப்னு அம்ர் அல்கின்தீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நான் நபியவர்களிடம் இவ்வாறு கேட்டேன் : நான் நிராகரிப்பாளர்களில் ஒருவரைச் சந்தித்து, நாமிருவரும் சண்டையிட்டு, அவன் எனது ஒரு கையை வாளால் வெட்டிவிட்டான். பின்பு அவன் ஒரு மரத்தில் ஏறி தன்னைக் காத்துக்கொண்டு, 'நான் இஸ்லாத்தை ஏற்றுவிட்டேன்' என்று கூறுகின்றான். அல்லாஹ்வின் தூதரே! அவன் இவ்வாறு கூறிய பின்னர் நான் அவனைக் கொலை செய்யலாமா?' அதற்கு நபியவர்கள், 'அவரைக் கொலைசெய்யாதீர்கள்' என்று கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது ஒரு கையை வெட்டினான். வெட்டிய பின்பு தான் அவ்வாறு கூறினான்.' என்று கேட்டபோது, 'அவரைக் கொலைசெய்யாதீர். அவ்வாறு நீங்கள் அவரைக் கொலைசெய்தால், கொலைசெய்ய முன்னர் நீர் இருந்த தரத்தில் அவரும், அவர் கூறிய அவ்வார்த்தையைக் கூற முன்னர் அவர் இருந்த தரத்தில் நீங்களும் இருப்பீர்கள்.' என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் இவ்வாறு கேட்கின்றார்கள், அதாவது, அவர் யுத்தத்தில் ஒரு நிராகரிப்பாளரைச் சந்தித்து, வாளால் யுத்தம் செய்துகொண்டிருக்கும் போது, அந்த நிராகரிப்பாளர் இவரது ஒரு கையை வாளால் வெட்டிவிட்டு, விரண்டோடி ஒரு மரத்தின் மீதேறி ஒதுங்கிக்கொண்டு, 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறினால், இவர் தனது கையை வெட்டிய காரணத்தினால் இவரைக் கொலை செய்ய முடியுமா? என்று கேட்கின்றார்கள். அதற்கு நபியவர்கள் 'கொலைசெய்யாதீர்கள்' என்று கூறிவிடுகின்றார்கள். அப்போது அந்த நபித்தோழர், 'அல்லாஹ்வுடைய தூதரே! இவர் எனது ஒரு கையை வெட்டியுள்ளார். அப்படியிருந்தும் நான் அவரைக் கொலைசெய்யக் கூடாதா?' என்று கேட்கின்றார்கள். அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: அவரைக் கொலை செய்யாதீர்கள். ஏனெனில், அவர் இப்போது உயிர் பாதுகாக்கப்பட்ட ஒருவராக மாறிவிட்டார். எனவே, அவர் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் நீ அவரைக் கொலை செய்தால், அவர் உன்னைப் போல, இஸ்லாத்தை ஏற்று உயிரைப் பாதுகாத்துக் கொண்டவர். நீ அவரைக் கொலைசெய்த காரணத்தினால், பலிக்குபலி என்ற அடிப்படையில், அவர் இருந்ததைப் போன்று, கொலை செய்ய அனுமதிக்கப்பட்டவராகிவிடுவீர்.