





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸிர்மா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : யார் ஒரு முஸ்லிமிற்குத் தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். மேலும் எவன் ஒருவன் முஸ்லிமை சிரமத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனைக் சிரமத்தில் ஆழ்த்துவான்.
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்முஸ்லிமுக்கு தீங்கை ஏற்படுத்துதல் அல்லது அவனது குடும்பம், சொத்து போன்ற ஏதாவது ஒரு விடயத்தில் சிரமத்தை ஏற்படுத்துதல் போன்றவனற்றை விட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆகவே யார் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு செய்து, சிரமத்திற்குள்ளாக்குகின்றானோ அதைப்போன்ற தண்டனையை அல்லாஹ் தீங்கு செய்து சிரமப் படுத்தியவனுக்கு வழங்குகிறான்.
ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'நாங்கள் முழு நிலவுள்ள-பௌர்னமி- இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு சந்திரனை நோக்கி 'இந்த சந்திரனை நீங்கள் தடங்கலின்றி (தெளிவாக கஷ்டமின்றி) காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப் படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!' என்று கூறினார்கள்'. பின்னர் நபியவர்கள் (வஸப்பிஹ் பிஹம்திரப்பிக) என்ற வசனத்தை ஓதினார்கள்' பொருள் : சூரிய உதயத்திற்கு முன்னறும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் உனது இரட்சனின் புகழைக் கொண்டு துதிப்பீராக'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபித் தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓர் இரவில் - பதினான்காம் இரவில்- இருக்கும் போது சந்திரனைப் பார்த்து: நிச்சயமாக முஃமின்கள் தமது வெற்றுக் கண்களால் எவ்விதத் தடையுமின்றி தெளிவாக தங்களது இரட்சகனை காண்பார்கள் என்றார்கள். மேலும் அவர்கள் தங்களது இரட்சகனை பார்ப்பதில் நெரிசல்களுக்கு உள்ளாக மாட்டார்கள், அவனை காண்பதில் அவர்களுக்கு எவ்வித களைப்போ சிரமமோ ஏற்படாது எனவும் குறிப்பிட்டார்கள'; பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள் : பஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளை விட்டும் உங்களை திசைதிருப்பக் கூடிய விடயங்களை விட்டும் தவிர்த்து இதனை செய்ய முடியுமென்றால் இந்த இரு தொழுகைகளையும் பூரணமாக அதற்குரிய நேரத்தில் கூட்டாக- ஜமாஅத்தாக தொழுது வாருங்கள்;.அவ்வாறு நீங்கள் தொழுது வருவது அல்லாஹ்வின் திருமுகத்தை மறுமையில் காண்பதற்கான வழிகளில் ஒன்றாக அமைந்து விடும். இவ்வாறு கூறிவிட்டு பின்வரும் வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள் : "சூரிய உதயத்திற்கு முன்னும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும் உனது இரட்சகனை புகழ்வதின் மூலம் துதிசெய்வீராக".
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் அநியாக்காரனுக்கு அவகாசம் வழங்கிக்கொண்டிருப்பான், ஆனால் அவனை தண்டிக்க ஆரம்பித்துவிட்டால் அவனை விடவும் மாட்டான்' என்று நபியவர்கள் கூறிவிட்டு, ஸூறா ஹூதின் 102 ம்; வசனத்தை ஒதினார்கள். ''மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய கிராமங்களை உம் இரட்சகன்; தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவும்; மிகக் கடினாமானதாகவும் இருக்கும்''
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இணைவைப்பு மற்றும் பாவகாரியங்கள் ஆகியவற்றின் மூலம் அநியாயத்தில் ஈடுபட்டு அத்துமீறி நடப்பதையும், மக்களின் உரிமைகளில் அக்கிரமம் செய்து நடப்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் எச்சரிக்கிறார்கள். என்றாலும் இவ்வாறான ஒருவருக்கு அல்லாஹ் அவகாசமளித்து தண்டனை வழங்குவதைப் பிற்படுத்தி அவசரமாக தண்டிக்காது ஆயுளையும் நீடித்து வைக்கிறான். இவ்வாறான நிலையில் இருந்து தனது அக்கிரமங்களுக்கு தௌபா –பாவமீட்சி – கோராது இருந்தால் அவனை அவனது அக்கிரமத்திலும் அநியாயத்திலும் தொடர்ந்தும் இருக்கா வண்ணம் தண்டிப்பதுடன்; ஒரு போதும் அவனை விட்டுவிடமாட்டான். பின்னர் ஸூறா ஹூதின் 102 ம்; வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒதினார்கள் ''மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய கிராமங்களை உம் இரட்சகன்; தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவும்; மிகக் கடினாமானதாகவும் இருக்கும்''.
அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ இப்னு அபீதாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் (மண்ணறையையும்) தரையுடன் சமப்படுத்தாது விட்டு விடாதீர்!' என்று கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலல்லம் அவர்கள் உருவச்சிலைகளை எதனையும் விட்டுவைக்காது அதனை நீக்கி அழித்து விடுமாறு தனது தோழர்களை அனுப்பிவைப்பவர்களாக இருந்தார்கள். திம்ஸால் என்பது செதுக்கப்படட்ட, செதுக்கப்படாத சிலையைக் குறிக்கும். மேலும் தரைமட்டத்தை விட உயர்ந்திருக்கும் மண்ணறைகளை நிலமட்டத்துடன் சமப்படுத்தி விடுமாறும், அல்லது ஒரு சான் அளவு மட்டத்தில் உயர்ந்த கப்ருகளை வைக்குமாறும், கட்டப்பட்ட மண்ணறைகளை இடித்து விடுமாறும் வழிப் படுத்தி நபியவர்கள் தமது தோழர்களை பல பகுதிகளுக்கும் அனுப்பிவைத்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இம்ரான் இப்னு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ' பறவைச் சகுனம் பார்ப்பவனும், சகுனம் பார்க்கப் பட்டவனும், ஜோசியம் பார்த்தவனும், ஜோசியம் பார்த்துவிடப் பட்டவனும், சூனியம் செய்தவனும், சூனியம் செய்யுமாறு பணித்தவனும் எம்மைச் சார்ந்தவனல்ல, யார் ஒரு ஜோசியனிடம் சென்று அவன் கூறுவதை உண்மைப் படுத்துகின்றானோ அவன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை மறுத்தவனாவான்'.
இதனை அல் பஸ்ஸார் பதிவு செய்துள்ளார்'எம்மை சார்ந்ததோர் அல்லர்' என்ற வார்த்தையின் மூலம் நபியவர்களின் சமூகத்தில் உள்ளோர் செய்யும் சில செயற்பாடுகளை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அவற்றுள் சில பின்வருமாறு : முதலாவது அம்சம் : 'பறவைச் சகுனம் பார்ப்பவனும் சகுனம் பார்க்கப்பட்டவனும்' இதன் அடிப்படை பயணம் அல்லது வியாபாரம் அல்லது இது போன்ற ஏதாவது ஒரு செயலை துவங்கும் போது ஒரு பறவையை பறக்க விடுவதாகும். அந்தப் பறவையானது வலப்பக்கமாக பறந்து சென்றால் நற்சகுனம் என்று பொருள். எனவே அவர் நாடிய விடயத்தை மேற்கொள்வார். குறித்த பறவையானது இடது பக்கமாக பறந்து சென்றால் அதனை துற் சகுணமாகக் கருதி செய்ய நாடிய காரியத்தை தவிர்த்துக்கொள்வார்.இந்த அடிப்படையில் குறித்த காரியத்தை தான் செய்வதோ பிறருக்கு பொறுப்புச்சாட்டுவதோ கூடாது. அத்துடன் பறவைகள், விலங்குகள், குறைபாடுகள் உள்ளவர்கள், எண்கள், நாட்கள், அல்லது கேட்கக் கூடியதாகவோ அல்லது காணக் கூடியதாகவோ எவை இருந்தாலும், அவை அனைத்தும் துற்சகுணத்தில் அடங்கிவிடும். இரண்டாவது அம்சம்: 'ஜோசியம் (சாஸ்திரம் பார்பவனும், ஜோசியம் பார்த்து விடப் பட்டவனும்,' அதாவது யார் நட்சத்திரங்களையும் அது போன்றவற்றையும் பயன் படுத்தி, தனக்கு மறைவான ஞானம் உள்ளதாக வாதிடுகிறானோ, அல்லது மறைவான அறிவு தன்னிடம் இருப்பதாக வாதிடும் சாஸ்திரக்காரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மையென ஏற்றுக் கொள்கிறானோ அவன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இறக்கப்பட்டதை மறுத்தவனாவான். மூன்றாவது அம்சம்: 'சூனியம் செய்பவனும் செய்யுமாறு பணித்தவனும். இது, பிறருக்கு நன்மை செய்ய நாடியோ அல்லது தீங்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலோ யார் தானாகவே சூனியத்தை செய்கிறரோ அல்லது இன்னொருவரிடம் பொறுப்புச்சாட்டி செய்யுமாறு வேண்டுகிறாரோ அல்லது தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு கோரும் வாசகங்களை ஓதி அதில் ஊதி நூல்களில் முடிச்சிட்டு சூனியம் செய்கிறாரோ அவர்கள் அனைவரையுமே இந்த சொற் பிரயோகம் குறிக்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவியரில் சிலர் அறிவித்துள்ளார்கள் : 'குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை நம்புகிறவனின் நாற்பது நாட்களுடைய தொழுகைகள் ஏற்கப்பட மாட்டாது'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்குறி சொல்பவனிடம் செல்வதை விட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.' அர்ராப் என்ற சொல்லானது ஜோசியக்காரன், நட்சத்திர குறிசொல்பவன், தடயங்கள்கண்டறிந்து குறிசொல்பவன் அதாவது சில முன்மாதிரி அம்சங்களைப் பயன்படுத்தி தனக்கு மறைவான விடயங்கள் பற்றிய அறிவுள்ளது எனக் கூறுவோர் யாவருக்கும் ஒரு பொதுவான சொல்லாகவே (அர்ராப் என்ற) இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.வெறுமனே குறிசொல்பவனிடம் செல்பவனிடம் மறைவான விடயம் சம்பந்தமாக கேட்டவனுக்கே நாற்பது நாட்கள் தொழுத தொழுகையின் நன்மைகளை அல்லாஹ் தடைசெய்துவிடுகிறான் என்றால் அவனின் பாவத்திற்கானதும் பெரும்பாவத்திற்கானதுமான தண்டனையாகும். இது இந்த செயலின் அபாயத்தை விளக்கப்போதுமான விடயமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நட்சத்திர ஜோதிடக் கலையில் ஒரு பகுதியைக் கற்பவன் சூனியக் கலையில் ஒரு பகுதியைக் கற்றவனாவான், அது அதிகரிக்க இதுவும் அதிகரிக்கும்'.
இமாம்களான அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுயார் நட்சத்திரம் மற்றும் கிரகங்களுடன் தொடர்பான ஜோதிடக் கலைகளைக் கற்று வானியல் இயக்கங்களையும் தோற்றங்களையும் மறைவுகளையும் பூமியில் நடைபெறும் நிகழ்வுளான ஒருவரின் இறப்பு மற்றும் பிறப்பு அல்லது ஆரோக்கியமின்மை போன்றவற்றுடன் ஒப்பிட்டு எதிர்காலத்தில் நடக்கவிருப்பவற்றை அனுமானித்து கூறும் செயற்பாடுகளை மேற்கொள்கிறாரோ அவர் சூனியத்தின் ஓரு பகுதியைக் கற்றவராவார். இதனை அதிகதிகமாக கற்றுக்கொள்பவர் சூனியத்தையும் அதிகதிகம் கற்றவராவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள் : "பெரும்பாவங்கள் : அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், அவனது உபாயத்திலிருந்து அச்சமற்றிருத்தல், அவனது அருளிலிந்து நிராசையடைதல், அவனது ரஹ்மத்திலிருந்து நம்பிக்கையிழத்தல் என்பனவாகும்".
இதனை அப்துர்ரஸ்ஸாக் பதிவு செய்துள்ளார்பெரும்பாவங்களாகக் கணிக்கப்படும் சில பாவங்களை நபியவர்கள் இங்கு கூறியுள்ளார்கள். அவை 1. அல்லாஹ்வின் பரிபாளனக் கோட்பாடு, இறைமையில் அவனுக்கு நிகராக இன்னொருவரை வைத்தல், இதுதான் மிகப்பெரிய பாவமென்பதால் இதனைக் கொண்டே ஆரம்பித்துள்ளார்கள். 2. அல்லாஹ்வின் மீதான ஆதரவைத் துண்டித்தல், ஏனெனில் இது அல்லாஹ்வைப் பற்றி தவறான எண்ணம் வைத்தல் மற்றும் அவனது அருளின் விசாலத்தை அறியாதிருத்தலின் வெளிப்பாடாகும். 3. அடியானுக்கு அருள்களைக் கொடுத்து, துஷ்பிரயோகம் செய்ய விட்டுவிட்டுஅலட்சியமாக இருக்கும் போது அவனை அல்லாஹ் விட்டுப் பிடிப்பான் என்பதையிட்டு அச்சமற்றிருத்தல். மேற்கண்டவை மாத்திரம்தான் பெரும்பாவங்களென வரையறுத்தல் இந்நபிமொழியின் நோக்கமல்ல. ஏனெனில் பெரும்பாவங்கள் அதிகமாக உள்ளன, அவற்றில் மிக முக்கியமானதை விளக்குவதே இங்கு நோக்கமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழில்லாஹு அறிவித்துள்ளார்கள் : 'இறைநம்பிக்கை (ஈமான்) என்பது 'எழுபதுக்கும் அதிகமான' அல்லது 'அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஈமான் பல கிளைகளையும், பண்புளையும் கொண்டது எனவும் அது செயற்பாடுகள், நம்பிக்கைகள் மற்றும் வார்த்தைகள் போன்றவற்றை உள்ளடக்கியது எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவரகள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஈமானின் பண்புகளில் மிகவும் உயர்ந்ததும் சிறப்புக்குரியதும் 'லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையாகும், அல்லாஹ் மாத்திரமே உண்மையான ஒரே கடவுளாவான், அவன் அனைத்து விடயங்களிலும் தனித்துவமானவன், வணங்கி வழிபட ஏனைய அனைத்தை விடவும் மிகத் தகுதியானவன் என பொருளறிந்து கூறி, அது கூறும் கருத்தின் அடிப்படையில் செயல்படுவதாகும். மனிதர்கள் செல்லும் பாதையில் அவர்களுக்கு தொந்தரவு செய்யக்கூடியவற்றை அகற்றி விடுவது ஈமானின் ஆகவும் குறைந்த –தாழ்ந்த- நிலையில் உள்ள செயற்படுகளில் ஒன்றாகும். அதனைத் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நாணம் -வெட்கம் ஈமானின் பண்புகளில் ஒன்று எனவும் குறிப்பிடுகிறார்கள், ஹயாஉ –நாணம்- என்பது அசிங்கமானதை கைவிட்டு அழகிய செயலை தூண்டும் ஒரு குணமாகும்.