





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்அஷ்அரீ கோத்திரத்தார் யுத்த களத்தில் இருக்கும் போது அல்லது மதீனாவில் தங்களின் குடும்பத்தாரிடையே உணவு பற்றாக் குறை ஏற்படும் போது,தங்களிடம் இருக்கும் உணவுகளை ஒரு துணியில் ஒன்று சேர்ப்பார்கள் பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து தங்களுக்கு மத்தியில் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.எனவே அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்,நான் அவர்களைச் சார்ந்தவன், என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ மூஸா அல்அஷ்அரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஅஷ்அரிய்யா என்போர் அபூ மூஸா (ரழி) அவர்களின் சமூகத்தைச் சார்ந்தவர்களாவர்.இவர்கள் தங்களிடம் உணவு குறைந்து விடும் போது, அல்லது அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாதில் இருக்கும் வேளையில் அவர்கள் தங்களின் உணவுகளை ஒன்று சேர்த்து அதனைத் தங்கள் மத்தியில் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.அவர்களின் இந்த சிறந்த பண்பின் காரணமாக அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களைச் சார்ந்தவர்கள்,நபிகளாரின் அன்புக்குரியவர்கள் என்ற சிறப்பை அடைந்து கொள்ளும் தகுதியைப் பெற்றனர். மேலும் அவர்களைப் போன்று ரஸூல் (ஸல் அவர்களும் தன்னை விட மற்றவர்களின் தேவைக்கு முன்னுரிமை அளித்தல்,அல்லாஹ்வுக்கு அடிபணிதல் எனும் நற் பண்புகள் உடையவராக இருந்தபடியால் தானும் அவர்களைச் சார்ந்தவர் என்று ரஸூல் (ஸல்) அவர்கள் குறிபிட்டார்கள்.என்பதை இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.
உங்களில் எவரேனும் தொழும் வேளையில் அவருக்கு சிறு தூக்கம் ஏற்பட்டால் அவர் தன்னை விட்டு தூக்கம் நீங்கும் வரை நித்திரை செய்து கொள்ளவும். ஏனெனில் அவர் சிறு தூக்கத்தோடு தொழுவாராகில் தான் பாவ மன்னிப்புக் கோருகின்றாரா,அல்லது தன் மீது சாபமிட்டுக் கொண்டிருக்கின்றாரா என்று சில வேளை அவர் அறிய மாட்டார்.என ரஸூல் (ஸல் அவர்கள் கூறினார்கள்,என ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஹதீஸின் மூலப் பொருள்.இபாதத்தில் தன்னை வருத்திக் கொள்வது மக்றுூஹான-விரும்பத் தகாத செயல் என்பதாகும் எனவே ஒரு தொழுகையாளி தொழுது கொண்டிருக்கும் போது தனக்கு தூக்கம் அதிகரித்து வருவதை அவர் உணர்ந்தால் அவர் உடனே தன் தொழுகையை நிறுத்து விட வேண்டும், அல்லது அதனைப் பூர்த்தி செய்து விடவேண்டும்.காரணம் அவர் தனக்கு களைப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் தொழும்போது அதன் காரணமாக தன் மீது சாபமிட்டுக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளவதற்காகத்தான்
நான் நபி ஸல்)அவர்களுடன் ஐவேளை தொழுதிருக்கிறேன். அவர்களின் தொழுகை நடு நிலையாகவே இருந்தது. அவர்களின் குத்பாவும் நடு நிலையாகவே இருந்தது.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபியவர்களின் தொழுகையும் அவரின் குத்பாவும் மிக நிண்டது, மிக சுருக்கமானது என்று குறிப்பிடும் அளவுக்கு மிகவும் நீண்டதாகவோ, மிகவும் சுருக்கமானதாகவோ இருக்க வில்லை. இரண்டுக்கும் மத்தியில் காணப்பட்டது மட்டுமல்லாது அவைகள் நடுநிலைமையை பெற்றதாக இருந்தன. காரணம் அன்னார் பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும், குறிப்பாக இமாம்கள், கதீப்மார்கள் அனைவருக்கும் உயர்ந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.
முஆத் இப்னு ஜபல் ரழி யல்லாஹ்ஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். ஒரு பெண் தன் கணவனுக்கு தீங்கிழைக்க (தொல்லை கொடுக்க) வேண்டாம். அவ்வாறு தீங்கிழைக்கும் போது சுவர்க்கத்தில் இருக்கும் அவனின் மனைவியான சுவர்க்கத்து கன்னி உலகத்தில் உள்ள தீங்கிழைக்கும் மனைவியை நோக்கி, "பெண்னே! தீங்கிழைக்காதே, அல்லாஹ்வின் சாபம் உனக்கு உண்டாகட்டும். ஏனெனில் உன்னோடு இருக்கும் கணவர் ஒரு விருந்தாளியாவார், அவர் உன்னை விட்டுப்பிரிந்து எங்களுடன் அவசரமாக இணைந்து கொள்வார்.
இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார் - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்நபி ஸல் அவர்கள் மனைவி கணவனுக்கு தீங்கிழைப்பதை (தொல்லை கொடுப்பதை) தடுத்துள்ளார்கள்.ஏனெனில் அந்தக் கணவர் உலகத்தில் ஒரு விருந்தாளி, அவர் வெகு விரைவில் மறுமை நோக்கி பயணமாகி சொர்க்கத்தில் நுழைந்து வேறொரு பெண்ணின் சொந்தக்காரராக மாறிவிடுவார்.
என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். "யார் இந்தப் பெண்மணி?" என்று கேட்டார்கள். அவள் (அதிகமாக) தொழுவது பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது நபி(ஸல்) "போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை! மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்" என்று கூறினார்கள், என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஆயிஷா (ரழி) அவர்களை ஒரு பெண் சந்தித்து அவர்களிடம் தான் செய்யும் அதிமான வணக்கங்கள் குறித்தும்,தொழுகை குறித்தும் பிரஸ்தாபித்தாள். இதனை ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் கூற நபி ஸல் அவர்கள் வணக்கத்தில் எல்லைமீறி ஈடுபடுவதை விட்டும், தனது சக்திக்கு அப்பாற்பட்டு வருத்திக்கொண்டு செய்வதை விட்டும் அப்பெண்மணியைத் தடுத்தார்கள். அது மட்டுமல்லாமல் அல்லாஹ் நீங்கள் வணக்கங்கள் செய்து சலிப்புற்று அதனை விட்டுவிடுமளவுக்கு உங்களுடன் உறவாடுவதில்லை, எனவும் அதனால் அல்லாஹ்வின் அருளும், கூலியும் தொடர்ந்து கிடைப்பதற்கு உங்களால் முடிந்ததை தொடர்ந்து செய்வதுதான் வழியாகும் எனவும் தெரிவித்தார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள்கூறியதாவதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரின் வணிகக்குழுவொன்றை எதிர்கொள்ள படைப் பிரிவு ஒன்றில் எங்களை அனுப்பினார்கள். எங்களுக்கு அபூஉபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள், ஒரு பை பேரீச்சம் பழத்தை எங்களுக்குப் பயண உணவாகக் கொடுத்தார்கள். எங்களுக்குக் கொடுக்க வேறெதையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை, அபூஉபைதா (ரலி) அவர்கள் அதிலிருந்து ஒவ்வொரு பேரீச்சம் பழமாக எங்களுக்குக் கொடுத்துவந்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் முஹம்மத் இப்னு முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்) அதை வைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள் (அது உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்காதே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள் குழந்தை வாயிலிட்டுச் சுவைப்பதைப் போன்று நாங்களும் அந்தப் பேரீச்சம் பழத்தைச் சுவைப்போம், அதற்கு மேல் தண்ணீரும் அருந்திக்கொள்வோம், அன்றைய பகலிலிருந்து இரவு வரை அதுவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. நாங்கள் எங்களிடமிருந்த தடிகளால் மரத்தில் அடி(த்து இலை பறி)ப்போம் பிறகு அதைத் தண்ணீரில் நனைத்து அதையும் உண்டோம். பிறகு நாங்கள் கடற்கரையோரமாக நடந்தோம் அப்போது கடலோரத்தில் பெரிய மணல் திட்டைப் போன்று ஏதோ ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. அங்கு நாங்கள் சென்றோம் அங்கே (அம்பர்) எனப்படும் ஒரு பிராணி கிடந்தது. (தளபதி) அபூஉபைதா (ரலி) அவர்கள் செத்ததாயிற்றே என்று கூறினார்கள். பிறகு "இல்லை, நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதர்கள் ஆவோம் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உள்ளோம். நீங்கள் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்கள். எனவே (இதை) உண்ணுங்கள்" என்று கூறினார்கள் அந்த அம்பர் மீனை வைத்துக்கொண்டு நாங்கள் ஒரு மாதம் கழித்தோம். எங்கள் முந்நூறு பேரின் உடலும் வலிமையாகிவிட்டது. நாங்கள் அந்த அம்பர் மீனின் விழிப் பள்ளத்திலிருந்து பெரிய பாத்திரங்கள் மூலம் எண்ணெய் எடுத்தோம் அதன் உடலைக் காளை மாட்டின் அளவுக்குத் துண்டு போட்டோம் அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களில் பதிமூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அதன் விழிப் பள்ளத்தில் உட்காரவைத்தார்கள். மேலும் அதன் விலாஎலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவைத்தார்கள் பிறகு எங்களிடமிருந்த ஒரு பெரிய ஒட்டகத்தில் சிவிகை பூட்டி அதில் ஏறி அந்த எலும்பிற்குக் கீழே கடந்துபோனார்கள் (அந்த எலும்பு தலையைத் தொடவில்லை அந்த அளவுக்குப் பெரியதாக இருந்து) பிறகு அந்த மீனை (அரை வேக்காட்டில்) வேகவைத்து பயண உணவாக எடுத்துக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை தெரிவித்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திய உணவாகும், அதில் ஏதேனும் உங்களிடம் மீதியிருந்தால் எனக்கும் உண்ணக் கொடுங்களேன் என்று கேட்டார்கள். உடனே நாங்கள் அதிலிருந்து சிறிதளவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினோம். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுநபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி வைத்தார்கள். அதற்கு தலைவராக அபூ உபைதா (ரழி) அவர்களை நியமித்தார்கள்.அதாவது குறைஷியர்களுக்கு உணவுவையும், வாட் கோதுமையையும் சுமந்து செல்லும் ஒரு வியாபார கூட்டத்தை எதிர்கொள்வதற்காக தயார் செய்யப்பட்ட படைப்பிரிவிக்கு தலைவராக அபூ உபைதா ரழி அவர்களை நியமித்தார்கள்.அவர்களிடம் ஈத்தம் பழங்கள் நிரப்பப்பட்ட ஒரு தோலினாளான பையொன்றையும் வழங்கினார்கள் அவர்களின் தலைவர் கொண்டு சென்ற உணவுப் பொருட்கள் குறைவாக இருந்ததனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஈத்தம் பழம் கொடுத்தார்கள் அதனை அவர்கள் வாயில் இட்டு சுவைத்து நீரை அருந்திக்கொண்டது மட்டுமல்லாமல் ஒட்டகம் சாப்பிடும் மரஇலையையும் தங்களது தடியினால் அடித்துப் பறித்து அதன் சொரசொரப்பான தன்மை நீங்குவதற்கு நீரில் நனைத்து உண்டார்கள். அவர்கள் கடற்கரையை அடைந்த போது அங்கே மணல் குன்றை போன்ற ஒன்றை கண்டனர். அதன் அருகே சென்று பார்த்தபோது அம்பர் எனும் பெயரால் அழைக்கப்படும் பெரிய மீனாக இருந்தது. குர்ஆனின் கூற்றின் அடிப்படையில் தானாக இறந்த பிராணிகளை சாப்பிடுவது ஹராம் என்பதினால் அதனை சாப்பிடுவதை அபூஉபைதா ரழி தடுத்தார்கள்.பின்னர் நிர்ப்பந்த நிலையில் மரணித்த பிராணிகளை சாப்பிடுவது ஆகும் என்பதினாலும், அவர்களின் பிரயாணம் அல்லாஹ் அனுமதித்த விடயத்திற்காக இருந்ததினாலும் அவரின் ஆய்வு முடிவை மாற்றிக் கொண்டு அதனை சாப்பிட அனுமதித்தார்கள். தாமாக செத்த கடல் பிராணிகளை சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டது என்ற விடயம் அவர்களுக்கு தெரியாமலிருந்தது. நிர்பந்தத்தை ஆதாரமாகக் கொண்டு அதனை சாப்பிட்டது மட்டுமல்லாமல் அதனை மதீனாவிற்கும் கொண்டுவந்தார்கள்.இந்த விடயத்தை நபியவர்களிடம் குறிப்பிட்ட போது அதனை அங்கீகரித்து அதிலிருந்து நபியவர்களும் சாப்பிட்டார்கள்
ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரழி அறிவிக்கின்றார்கள். தன் தந்தை இல்லை என்பதை அறிந்த நிலையில் ஒருவர் தன் தந்தை அல்லாதவரை தந்தை என வாதாடினால் சொர்க்கம் அவருக்குத் தடையாகும் (ஹராமாகும்) என்று நபி (ஸல்) கூறினார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுஇந்த ஹதீஸ் ஜாஹிலிய்யாக் கால மக்கள் செய்து கொண்டிருந்த ஒரு விஷயத்தை பற்றி எச்சரித்து தெளிவு படுத்துகிறது. அதுதான் ஒரு குழந்தையை அவரின் தந்தை அல்லாதவருக்கு தந்தையென சேர்த்துவிடுதல் குற்றமாகும். ஒரு மனிதனைப் பொறுத்தவரை அவர் தனது தந்தையுடன் இணைக்கப்படல் வேண்டும், அதுதான் சரியான வழிமுறையாகும். தனது தந்தை இல்லையென அறிந்தும் ஒருவர் பிறர் ஒருவருரை தந்தையென கூறி தர்க்கிப்பது ஹராமாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தை சேர்ந்தவர், அக்கோத்திரம் ஏனைய கோத்திரங்களோடு ஒப்பிடுகிற போது தரத்தில் குறைந்தது என வைத்துக் கொள்வோம். இக்கோத்திரத்தில் உள்ள ஒருவர், தனது கோத்திரத்தை விட சிறந்த கோத்திரத்தில் தன்னை இணைத்து தனது அந்தஸ்தை, கௌரவத்தை அதிகரித்துக் கொள்ள நினைக்கிறார், இவரும் இந்த ஹதீஸின் படி சொர்க்கம் ஹராமாக்கப்பட்டவராவர்
உங்களின்பெற்றோரை நீங்கள் வெறுக்காதீர்கள் யார் பெற்றோரை வெறுக்கிறாரோ அவர் நிராகரித்தவராக ஆவிடுகிறார் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுதனது தந்தையின் பரம்பரையை உண்மையில் அறிந்த நிலையில் யார் அத னை மறுத்து விடுகிறாரோ அது சிறிய குப்ராகும்.மனிதனை நிரந்தரமாக நரகில் தங்க வைக்கக் கூடிய பெரியவகைக் குப்ராக கருதப்பட மாட்டாது. என்றாலும் இவ்வாறு தனது பரம்பரையை வெறுக்கும் செயலானது தடுக்கப்பட்ட அருவருக்கத்தக்க விடயம் என்பதையே இது காட்டும்.
அல்லாஹ்வின் பாதையில் போரிட சென்ற வேலையில் ஒருவர் நோன்பு வைத்தால்,வானம் பூமிக்கிடையே உள்ள தூரம் போல்,அல்லாஹ்அவருக்கும் நரகத்துக்குமிடையே தூரமாக்கி வைப்பான்
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸ் அல்லாஹ்வுக்காக மனத்தூய்மையுடன் நோன்பு நோற்பவரின் சிறப்புக் குறித்து பேசுகிறது.அவ்வாறு நோன்பு நோற்பவரை நரகிலிருந்து அல்லாஹ் பாதுகப்பது மட்டுமல்லாமல் வானம் பூமிக்கிடையே உள்ள தூரம் போன்று அவரை நரகை விட்டும் தூரமாக்கி விடுகிறான்.