





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் ஒரு கூட்டத்தினரால் மண் மற்றும் குப்பை கூலங்கள் வீசப்படும் இடத்திற்குச் சென்று நின்ற நிலையில் சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவரைவிட்டு ஓதுங்கிச் சென்றேன். அப்பொழுது தன்னிடம் நெறுங்கி நிற்குமாறு நபியவர்கள் என்னைப் பணித்தார்கள். நான் அவர்களை நெருங்கி அவர்களது இரு குதிகால்களிடத்தில் நின்று (அவர்களை மறைத்துக் கொண்டேன்.) அவரகள் வுழூ செய்து தனது இரு ( خف குப்பு) காலுறைகளின் மீது தண்ணீரினால் (மஸ்ஹு) தடவிக் கொணடார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஹுதைபதுப்னுல் யமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன், சிறு நீர் கழிக்க நாடிய அவர்கள் ஒரு கூட்டத்தினரால்; குப்பைகூலங்கள் மற்றும் வீடுகளில் கூட்டப்படும் மண் வீசப்பட்ட இடத்திற்குச் சென்று, நின்ற நிலையில் சிறுநீர் கழித்தார்கள். அவர்களது அன்றாட வாழ்வில் பெரும்பாலும் குந்திய நிலையில் சிறுநீர் கழிப்பதுவே அவர்களது வழமையாக இருந்தது. ஹுதைபாஅவர்கள் நபியவர்களை விட்டும் தூரமானார்கள். அப்பொழுது ஹுதைபாவுக்கு நெருங்கி நிற்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் . அவ்வேளை ஹுதைபா அவர்கள் நபியவர்களை நெருங்கி நபியவர்களின் குதிகால்கால்கள் பக்கமாக நின்றார்கள், நபியவர்களை அந்நிலையில் எவரும் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக நபியவர்களை மறைத்துக் கொண்டார்கள். பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூ செய்தார்கள், இரு கால்களை கழுவுவதற்கு பதிலாக தான் காலில் அணிந்திருந்த இரு 'خف குப்பு'களையும் களையாது அவ்விரண்டின் மீதும் தண்ணீரினால் தடவிப் போதுமாக்கி கொண்டார்கள். 'خف குப்பு' என்பது: மெல்லிய தோல், அல்லது அதுபோன்றவைகளினால் இருகால்களின் கரண்டை மறையும் அளவு செய்யப்பட்ட காலுறை போன்று இரு கால்களிலும் அணியப்படக் கூடியது.
மதுபானம் அருந்திய ஒரு மனிதன் ரஸூல் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்.அவரை அடியுங்கள் என்று நபியவர்கள் கூறினார்கள்.என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிக்கின்றார்கள். மேலும் " நம்மில் சிலர் அந்த மனிதனைத் தம் கரத்தாலும்,இன்னும் சிலர் தம் செருப்பாலும்,மற்றும் சிலர் தம் துணியாலும் அடித்தனர்.மேலும் அவர் அங்கிருந்து செல்லும் போது சிலர் அல்லாஹ் உன்னைக் கேவலமடையச் செய்வானாக என்று கூறினர்.அதற்கு நபியவர்கள் நீங்கள் இப்படிக் கூறாதீர்கள்,இப்படி அவருக்கு எதிராக சைத்தானுக்குத் துணை போகாதீர்கள்,என்று ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" எனவும் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்ஹதீஸ் விளக்கம்:மதுபானம் குடித்திருந்த ஒரு மனிதனை ரஸூல் (ஸல்) அவர்களிடம் ஸஹாபாக்கள் அழைத்து வந்தனர்.அப்பொழுது அவரை அடிக்கும்படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.எனவே அவரை ஸஹாபாக்கள் அடிக்கலாயினர்.அவ்வமயம் சிலர் அவரை வெறும் கையால் அவரை அடித்தனர்.இன்னும் சிலர் தங்களின் செருப்பைக் கொண்டு அவரை அடித்தனர்.மற்றவர்களை எச்சரிக்கை செய்யும் நோக்கில் அவர்கள் இப்படி செய்தனர்.வேறு சிலர் தங்களின் துணியைக் கொண்டு அவரை அடித்தனர்.அதாவது 'ஹத்து எனும் தண்டனையை நிறைவேற்ற உபயோகிக்கும் சவுக்கை அவர்கள் பயன்படுத்தவில்லை.மேலும் ஈத்த மர மட்டைகளைக் கொண்டு அல்லது செருப்புக்களைக் கொண்டு இரண்டு இரண்டு தடவைகள் அவரை அடிக்கும்படியாக இருபது பேர்களுக்கு ரஸூல் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று பிரிதொரு ரிவாயத்தில் பதிவாகியுள்ளது.இது மதுபானத்தின் ஹத்து நாற்பது கசையடிகள் என்பதைத் தௌிவு படுத்துகின்றது.எனினும் குலபாஉர் ராசிதீன்கள் இதை விவும் அதிகமாகத் தண்டித்திருப்பதாகப் பதிவாகியுள்ளது.அதன்கருத்தாவது நாட்டுத் தலைவர் சந்தர்ப்பததை பொறுத்து மேற்கொள்ளும் தண்டனையைச் சார்ந்ததாகும்.மேலும் மேற்படி நபரை மக்கள் அடித்து முடிந்ததும் அவருக்கு சமூகத்தின் மத்தியில் இழிவும்,அவமானமும் உண்டாகட்டும்,என்று சிலர் அவரை சபித்தனர்.அப்பொழுது நபியவர்கள் "இப்படிக் கூறாதீர்கள்,இப்படி அவருக்கு எதிராக சைத்தானுக்குத் துணை போகாதீர்கள்,என்று கூறினார்கள்.ஏனெனில் சில வேளை இவர்களின் இந்த சாபம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விடுமாயின்,அவன் அவமானம் அடைய வேண்டுமென்ற சைத்தானின் நோக்கம் நிறைவேறிவிடும் .என்பதற்காகவும், ஹத்தின் தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளி மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவுமே நபியவர்கள் இப்படிக் கூறாதீர்கள் என்று கூறினார்கள்
ரஸூல்(ஸல்)அவர்கள் மிம்பரில் இருந்தவாறு தர்மம் கொடுப்பதின் சிறப்பையும் யாசித்தலை விட்டும் பேணிப்பாக இருப்பதையும் பற்றிக் கூறும் போது"கீழ் கையை விடவும் மேல் கையே சிறந்தது.ஏனெனில் மேல் கை.தர்மம் கொடுக்கக் கூடியது,கீழ் கை யாசிக்கக்கூடியது"என்று கூறினார்கள் என இப்னு உமர்(ரழி)அவர்கள் அறிவித்தார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுரஸூல் (ஸல்) அவர்கள் தர்மத்தின் சிறப்பை எடுத்துக் கூறி,மனிதர்களிடம் யாசிப்பதை இழிந்துரைத்தார்கள். மேலும் மற்றவர்களிடம் பொருள் தேடி யாசிப்பவனை விடவும் தன் செல்வத்தை தர்மம் செய்யும், அதனை நல் வழியில் செலவு செய்யும் மனிதனே சிறந்தவன் என்றும் அறிவுறுத்தினார்கள்.
தன் பணத்தை விட தன் வாரிஸின் பணத்தை அதிகம் விரும்புகின்ற யாரும் உங்களில்இருக்கின்றனரா? என்று ரஸூல் (ஸல்) அவர்கள் வினவினார்கள்.அதற்கு தோழர்கள்,அல்லாஹ்விஹ்வின் தூதரே! நம்மில் எவரும் தங்களின் பணத்தையல்லாது பிரரின் பணத்தை அதிகம் விரும்புவதில்லை.என்றனர்.அதற்கு நபியவர்கள் "அப்படியாயின் நிச்சயமாக அவன் ஏற்கெனவே செலவு செய்ததுதான் அவனின் பணம்.அவன் தாமதப்படுத்தி வைத்தவை அவனது வாரிஸின் பணம்" என்றுரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என இப்னு மஸ்உத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்தன் பணத்தை விட தன் வாரிஸுவின் பணத்தை அதிகம் விரும்புகின்ற யாரும் உங்களில் இருக்கின்றனரா?என்று ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம் கேட்டார்கள்.அதாவது தன் வாழ்வில் தன் ஆதிக்கத்திலிருக்கும் தன்னுடைய பணத்தை விடவும்,பின்னர் தனக்கு உரித்தாகவிருக்கும் தன் வாரிஸுவின் பணத்தை எவரும் அதிகம் விரும்புவாரா, என்பதாகும்.எனவே இதனைக் கேட்ட நபித் தோழர்கள்,அல்லாஹ்வின் தூதரே!நம்மில் எவரும் தங்களின் பணத்தையே அதிகம் விரும்புவர்.-என்றனர்.அதாவது மற்றவனின் பணத்தைவிட தனது முழுக் கட்டுப்பாட்டிலும்,அதிகாரத்திலும் இருக்கும் பணத்தை அதிகம் நேசிக்காத மனிதன் எவனுமில்லை.என்பதாகும்.ஏனெனில் அவனுக்குச் சொந்தமானவைதான் அவனின் விருப்பங்களையும், தேவைகளையும் உறுதிப்படுத்தக் கூடியவை.எனவே நபியவர்கள்,"அப்படியாயின் அவன் ஏற்கெனவே செலவு செய்தது நிச்சயமாக அவனின் பணம்.அவன் தாமதப்படுத்தி வைத்தவையோ அவனின் வாரிஸுவின் பணம்"என்று கூறினார்கள்.அதாவது மனிதன் தன் வாழ்வில் தனக்காகவும்,தன் குடும்பத்திற்காகவும், செலவு செய்தவையும்,மற்றும் அவன் மறுமையில் நன்மையை எதிர்பார்த்து ஹஜ்ஜு,வக்பு காரியங்களிலும், பள்ளிவாசல்கள்,மற்றும் வைத்தியசாலைகளை நிர்மாணித்தல் போன்ற கருமங்களிலும் அவன் செலவு செய்தவைகளே உண்மையில் அவனின் செல்வங்களாகும்.ஆனால் அவன் தன் வாழ்வில் செலவு செய்யாமல் கஞ்சத் தனமாகச் சேமித்து வைத்தவைகள் அவனின் சந்ததிக்குரிய செல்வங்களாகும் என்பது இதன் கருத்தாகும்.மேலும் இந்த ஹதீஸின் கருத்தினை அப்துல்லாஹ் இப்னு ஷுகைர் அவர்களைத் தொட்டும் முஸ்லிம் அறிவித்திருக்கும் ஒரு ஹதீஸும் உறுதி செய்கின்றது.அதன் விவரம் வருமாறு:நான் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்தேன்.அப்பொழுது நபியவர்கள் الهكم التكاثر என்ற அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள்.அதனைத் தொடர்ந்து "மனிதன் எனது செல்வம்,எனது செல்வம் என்று கூறுகிறான்.ஆனால் மனிதா!உனது செல்வமோ நீ சாப்பிட்டு கழித்தவை,அல்லது நீ உடுத்திப் பழசு படுத்தியவை,அல்லது நீ தர்மம் செய்து முன் கொண்டு சென்றவை" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஷுகைர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மனிதன் தன் செல்வத்தை எல்லாம் அல்லாஹ்வின் பாதையில் செலுவு செய்து விட்டு தானும் தன் பிள்ளைகளும் மக்கள் மத்தியில் கையேந்தி திரிய வேண்டுமென்பது இதன் பொருளல்ல.மாறாக தனக்கும் தான் உணவளிக்கக் கடமைப்பட்டுள்ள தன் மனைவி, மக்கள்,பெற்றோர் என்போரினது செலவுக்குப் போக மேலதிகமானதை தனக்குப் பின் தன் வாரிஸுக்காக சேமித்து வைப்பதற்கு மனிதன் எப்படி பிரயாசப்படுகின்றானோ அது போன்று அவன் தன் மறுமைக்காகவும் சேமித்து வைக்கப் பிரயாசைப்பட வேண்டு மென்பதே இதன் கருத்தாகும்.இதனை அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸும் பறைசாட்டுகிறது.அவர் அறிவிப்பதாவது"ஆதமின் மகனே! மேலதிகமாக இருப்பதை நீ செலவு செய்து விடுவது உனக்கு நல்லது.நீ அதனைப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பது உனக்குத் தீயது"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என்று அறிவித்துள்ளார்கள்.மேலும் இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள்.(இல-2/718,1036)
பனூஸலமா கோத்திரத்தார் மஸ்ஜித் நபவீயின் பக்கமாக இடம் பெயர விரும்பினர்.அது ரஸூல் (ஸல்) அவர்களுக்கு எட்டியது.அப்பொழுது நபியவர்கள் அவர்களிடம் "நீங்கள் பள்ளிவாசல் பக்கமாக இடம் பெயர விரும்புவதாக எனக்கு செய்தி கிடைத்துள்ளது" என்றார்கள்.அதற்கு அவர்கள்,அல்வாஹ்வின் தூதரே! ஆம் என்றனர்.அதற்கு நபியவர்கள் "பனூஸலமாவே! நீங்கள் உங்கள் இருப்பிடத்திலேயே இருந்து கொள்ளுங்கள் உங்களின் சுவடுகளுக்கும் நன்மை எழுதப்படும்.நீங்கள் உங்கள் இருப்பிடத்திலேயே இருந்து கொள்ளுங்கள் உங்களின் சுவடுகளுக்கும் நன்மை எழுதப்படும்" என்றார்கள்.என ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.இன்னொரு அறிவிப்பில் "நிச்சயமாக ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு அந்தஸ்து உண்டு.என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்று புஹாரீ அவர்களும் அறிவித்திருக்கிறார் - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஹதீஸ் விளக்கம்:பள்ளிவாயலை விட்டும் தூரமான இடத்தில் வாழ்ந்து வந்த பனூஸலமா கோத்திரத்தார் பள்ளிவாயலுக்குச் சமீபமான இடங்களுக்கு இடம் பெயர விரும்பினர்.ஆனால் மதீனா நகர் நிரம்பி வழிவதை நபியவர்கள் விரும்பவில்லை.மாறாக அதனை மேலும் அபிவிருத்தி செய்து அதனை விஸ்தரிப்பதன் மூலம் முனாபிகீன்களின் பார்வையிலும்,முஷ்ரிகீன்களின் பார்வையிலும் முஸ்லிம்கள் கம்பீரமாகக் காட்சியளிக்க வேண்டு மென்பதே ரஸூல் (ஸல்) அவர்களின் விரும்பமாக இருந்தது.இதனை புஹாரியின் ஒரு அறிவிப்பு உறுதி செய்கின்றது.எனவே அவர்களிடம் நபியவர்கள் "நீங்கள் பள்ளிவாயலுக்குப் பக்கத்தில் இடம் பெயரப் போவதாக எனக்கு செய்தி கிடைத்துள்ளது"என்றார்கள்.அதற்கு அவர்கள் "ஆம் அல்லாஹ்வின் தூதரே! அதனை நாம் விரும்புகிறோம்" என்றனர்.அதற்கு நபியவர்கள் நீங்கள் உங்கள் இருப்பிடங்களில் இருங்கள்.உங்களின் சுவடுகளுக்கும் நன்மை எழுதப்படும்" என்று இரண்டு தடவைகள் கூறினார்கள்.மேலும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு நன்மை,அல்லது ஒரு அந்தஸ்து உண்டென அதனை மேலும் தெளிவு படுத்தினார்கள்.மேலும்" உங்களில் எவருடைய இல்லம் தூரத்தில் இருக்கின்றதுவோ அவரின் கூலி மகத்தானது" என்று அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்.அப்போது அவர்களிடம் அபூஹுரைராவே! அது ஏன்? என்று வினவப்பட்டது.அதற்கு அவர்கள்,அது எட்டுகள் அதிகம் என்றபடியால்,என்றார்கள்.இந்த பேறு சிறு தூரமாயினும் பெருந் தூரமாயினும் சரி வீட்டில் இருந்து சிறந்த முறையில் வுழூ செய்து கொண்டு வாகனத்திலன்றி நடந்து செல்கின்றவனுக்கே அனுகூலமாகும்.அதாவது அவன் எடுத்து வைக்கும் எட்டுக்கள் குறைந்த எட்டுக்களாயினும் அதிக எட்டுக்களாயினும் சரி ஒவ்வொரு எட்டுக்கும் இரண்டு விடயங்கள் எழுதப்படும்.ஒன்று அவனின் ஒரு பதவி உயர்த்தப்படும்,மற்றொன்று அவனின் ஒரு பாவம் அழிக்கப்படும்.மேலும் "உங்களில் ஒருவர் நல்ல முறையில் வுழூ செய்து கொண்டு தொழுகைக்காக வெளியிறங்கிச் செல்லுங்கால் அவர் தன் வலது காலை உயர்த்துகையில் அல்லாஹ் அவருக்கு ஒரு நன்மை எழுதாமலும்,மேலும் அவர் தனது இடது காலை வைக்கும் போது அவருடைய ஒரு பாவத்தை அழித்து விடாமலும் இருப்பதில்லை.எனவே உங்களில் ஒருவர் விரும்பினால் நெருக்கமாக அல்லது தூரமாக இருந்து கொள்ளட்டும்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என்று நபித் தோழர் ஒருவர் கூறினார்கள்.என அபூதாவுத் அறிவிக்கின்றார்கள்.(563) இது அபூதாவுதின் ஸஹீஹான ஹதீஸ்களைச் சார்ந்தது என்று அல்பானீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். صحيح أبي داود (3/97) برقم (572) மேலும் "ஓரிரவு நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது அல்லாஹ் அழகிய தோற்றத்தில் என்னிடம் வந்து "முஹம்மதே! மேலே இருப்போர் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் விடயம் யாதென்று நீங்கள் அறிவீர்களா?என்றான்.அதற்கு நான் ஆம் அவர்கள் பிராயச்சித்தம் மற்றும் அந்தஸ்து பற்றி வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர்,என்றேன்.அதற்கு அவன் பிராயச்சித்தம் மற்றும் அந்தஸ்து என்றால் யாது? என்று வினவினான்.அதற்கு நான் தொழுத பின்னர் பள்ளிவாயலில் தங்கியிருப்பதுவும்,ஜமாஅத்தை அடைந்து கொள்வதற்காக காலால் நடந்து செல்வதுவும்,மனம் விரும்பாத சமயத்திலும் நல்ல முறையில் வுழூ செய்து கொள்வதுமாகும்.என்று ரஸூல் (அவர்கள்) கூறினார்கள்,என இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கின்றார்கள்.இதனை அஹ்மத் அவர்கள் ரிவாயத் செய்துள்ளார்கள் (இல:3484) மேலும் இதனை அஷ்ஷைக் அல்பானீ அவர்கள் "صحيح الجامع الصغير وزيادته" (1/72) ல் ஸஹீஹான ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.இந்த அந்தஸ்துகள் பின் வரும் விடயங்களைக் கொண்டே அநுகூலமாகும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.1:வுழூவுடன் பள்ளிவாசலுக்குச் செல்லல்,2:நற் கூலியை எதிர்பார்த்தல்,ஏனெனில் "செயல்கள் யாவும் எண்ணத்தைப் பொருத்தேயாம்.எல்லோருக்கும் அவரவர் எண்ணியதே அநுகூலமாகும்" என்று ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.3:தன் வீட்டிலிருந்து புறப்படும் போது பள்ளிவாசலுக்குச் செல்கிறேன் என்ற எண்ணத்துடனேயே வெளியேறிச் செல்லல்.4:தடங்கல் ஏதும் இருநதாலன்றி வாகனத்தில் போகாமல் கால் நடையாகவே செல்லல்.எனினும் தடங்கல் ஏதுமுள்ள மனிதன் வாகணத்தில் வருவதில் தவறில்லை.அவ்வமயம் வாகனச் சில்லின் ஒரு சுற்று அதன் ஒரு எட்டு எனக் கணிக்கப்படும்.ஏனெனில் பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கும் அதன் பாகம் அது சுழலும் போது மேலும் கீழுமாகச் சுழன்று வருகின்றது.இது நிலத்திலிருந்து பாதத்தை உயர்த்துவதும் மீண்டும் அதனை பூமியின் மீது வைப்பதுவும் போன்றதாகும்.எனவே மனிதன் தடங்கல் ஏதும் உடையவனாக இருப்பின் அவன் வாகனத்தில் வருவதில் தவறு ஏதுமில்லை.எனவே இதற்கும் நடந்து செல்வதன் நன்மை கிடைக்கும்.ஆகையால் பள்ளிவாசலுக்கு நடந்து போய் வரும் மனிதனுக்கு அவனின் பாத எட்டுகளுக்காக வழங்கும் நன்மைகள் போன்று அல்லாஹ் வாகணத்தில் செல்லும் தடங்கல் உள்ளவனுக்கும நன்மைகள் வழங்குவான்.
அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு அழுத மனிதன்،கறந்த பால்அதன்காம்பில் நுழையும் வரையில்,நரகம் செல்ல மாட்டான்.மேலும் அல்லாஹ்வின் பாதையில் (செல்லும் போது) படிந்த புழுதியும்,நரகத்தின் புகையும் ஒன்று சேராது.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடப்பதும்,பாவங்களை விட்டும் விலகி நடப்பதுமே பெரும்பாலும் அல்லாஹ்வின் மீது அச்சம் கொள்ளக் காரணமாக அமைகின்றன. எனவேதான்"அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு அழுத மனிதன்,பால் அதன் மடியில் திரும்பிச் செல்லும் வரையில் நரகம் செல்ல மாட்டான்"என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.இது அசாத்தியமான ஒரு விடயத்தை இன்னொரு அசாத்தியமான விடயத்துடன் தொடர்பு படுத்திக் கூறும் வசன முறையைச் சார்ந்ததாகும்.அதாவது எப்படி கரந்த பால் திரும்பவும் அதன் மடியில் போய் சேருவது அசாத்தியமானதோ,அது போன்று அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தின் காரணமாக அழுத ஒரு அடியான் நரகம் செல்வதும் அசாத்தியமானது,என்று நபியவர்கள் இதன் மூலம் எடுத்துக் காட்டினார்கள்.மேலும் இம்மை, மறுமை போன்று பரஸ்பரம் முரண்பட்ட இரண்டு விடயங்கள் எப்படி ஒன்று சேராதோ அது போன்று அல்லாஹ்வின் பாதையில் சென்ற அடியானைத் தொட்ட புழுதியும் நரகத்தின் புகையும் பரஸ்பரம் முரண்பட்ட இரண்டு விடயங்களாகும்.எனவே அவை இரண்டும் ஒன்று சேராது.ஆகையால் அல்லாஹ்வின் பாதையில் கலந்து கொண்ட அடியான் நரகம் செல்ல மாட்டான்,என்பதை ரஸூல் (ஸல்) அவர்கள் இதன் மூலம் தெளிவுபடுத்தினார்கள்.
அலீ பின் அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது இடது கையில் பட்டையும், வலது கையில் தங்கத்தையும் எடுத்து, இரு கைகளையும் உயர்த்தி, 'இந்த இரண்டும் என் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளன, பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன' என்று கூறினார்கள்”.
இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னுமாஜா ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறதுநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இடது கையில் ஒரு பட்டுத் துணியையும், அல்லது பட்டுத் துண்டு ஒன்றையும், வலது கையில் ஒரு தங்க ஆபரணம் அல்லது அது போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு, 'உண்மையில், பட்டு மற்றும் தங்கம் அணிவது ஆண்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அது பெண்களுக்கு அனுமதிக்கப்படுகிறது' என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் கூறியதை தான் கேட்டதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளார்கள்' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன், தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்' எனக் கேட்கப் பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை அது தடை செய்யப்பட்டதாகும்' எனக் கூறினார்கள். பின்னர் நபியவர்கள்', யூதர்களை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பைத் தடை செய்தபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை உண்டனர் என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மக்கா வெற்றிகொண்ட வருடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அவர்கள் கேட்டார்கள். நபியவர்கள் கூறினார்கள் 'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், தானாக செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளார்கள் அப்போது : ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே !இறந்த விலங்குகளின் கொழுப்பை விற்பது அனுமதிக்கப்பட்டதா? ஏனெனில் அதன்மூலம் கப்பல்களுக்கு முலாம் பூசப்படுகிறது, தோல்களுக்கு மெருகேற்றப் படுகிறது. மக்கள் அதன்மூலம் விளக்கேற்று கிறார்கள். அதற்கு நபியவர்கள் 'இல்லை' அதனை விற்பது ஹராமாகும் என்றார்கள். அதனைத் தொடர்ந்து நபியவர்கள் ' யூதர்களை அழித்து நாசமாக்குவானாக! விலங்குகளின் கொழுப்பை ஹராமாக்கியபோது அதனை அவர்கள் உருக்கி பின் அதன் எண்ணையை விற்று அதன் கிரயத்தை உண்டனர்.' என்று கூறினார்கள்.
"யுத்தம் ஒரு சதியாகும்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது"காபிரகளுக்கு எதிரான போரின் நோக்கம் இஸ்லாத்தினதும்,இஸ்லாமியரினதும் நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதே. எனவே அவர்களுடன் யுத்தம் புரியம் போது தந்திரோபயங்களைக் கையாள்வதை இந்த ஹதீஸ் அனுமதித்துள்ளது."