





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: “போதையூட்டக்கூடியவை அனைத்தும் மதூபானமாகும். மேலும் பேதையூட்டக்கூடியவை அனைத்தும் ஹராமாகும். இந்த உலகத்தில் மதூபானம் அருந்தி தௌபா செய்யாது அதில் திலைத்து இருந்த நிலையில் மரணிக்கிறாரோ அவர் மறுமைiயில் மதூபானம் அருந்த மாட்டார்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார். இமாம் புஹாரி அவர்கள் இதன் கடைசி வாக்கியத்தை அறிவித்துள்ளார்கள்மூளைத்திறனை மயக்கி அதன் செயற்பாட்டை செயலிழக்கச்செய்யும் அனைத்தும் போதையூட்டும் மதுபானம் ஆகும். அது பருகுதுதல் அல்லது சாப்பிடுதல் அல்லது உரிஞ்சுதல் அல்லது வேறு ஏதாவது வழிமுறைகளில் காணப்பட்டாலும் சரியே. மூளைத்திறனை மயக்கி அதன் செயற்பாட்டை செயலிழக்கச்செய்யும் அனைத்தையும் அது சிறிய அளவில் பெரிய அளவில் இருந்தாலும் அல்லாஹ் அதனை ஹராமாக்கி தடைசெய்துள்ளான். மேற்குறிப்பிடப்பட்ட போதைப்பொருட்களின் வகைகளில் ஒன்றை ஒருவர் தொடராக குடித்து, தௌபா –பாவமன்னிப்புக்- கேட்காது மரணித்து விட்டால், மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்கு உட்படுவார். அவருக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனை சுவர்க்கத்து மதுவை அருந்துவதற்கான பாக்கியத்தை இழப்பதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : உங்களது சொத்துக்கள், உயிர்கள், நாவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இணைவைப்பாளர்களுக்கு எதிராகப் போரிடுங்கள்.
இமாம்களான அபூ தாவுத், நஸாஈ, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஅல்லாஹ்வின் வார்த்தையே உயர்ந்ததாக இருக்கும் நோக்கில், இயன்றளவு எல்லா வழிகளையும் பயன்படுத்தி, நிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போரிடுமாறு அல்லாஹ் தனது நபிக்கு ஏவுகின்றான். பின்வருவன அவற்றில் உள்ளவையாகும் : 1. அவர்களுக்கெதிராக யுத்தம் செய்வதற்காக ஆயுதங்கள் வாங்குதல், போராளிகளுக்கு செலவழித்தல் போன்ற அமைப்பில் பணம் செலவழித்தல். 2. அவர்களுடன் நேரடியாகப் போரிட உடல் மற்றும் உயிரைக் கொண்டு வெளியேறல். 3.அவர்களை நாவினால் இம்மார்க்கத்தை நோக்கி அழைத்தல், அவர்களிடம் ஆதாரங்களை முன்வைத்தல், அவர்களைக் கண்டித்தல் அவர்களுக்கு மறுப்பளித்தல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக குரைம் இப்னு ஃபாத்திக் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிரார்கள்: 'செயல்கள் ஆறு வகையாகும், மக்கள் நான்கு வகையினர்: அந்த ஆறு விடயங்களில் இரண்டு உறுதியானவை. அவை இரண்டுக்கும் ஒன்றை ஒத்த சமமான வெகுமதி- கூலி- கிடைக்கும். ஒரு நல்ல செயலுக்கு பத்து மடங்கு வெகுமதி-கூலி- கிடைக்கும்,(அதே போன்று) ஒரு நல்ல செயலுக்கு எழுநூறு மடங்கு வெகுமதி கிடைக்கும். உறுதியான இரண்டு விடயங்களைப் பொருத்த வரை அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்தவர் சொர்க்கத்தில் நுழைவார், அல்லாஹ்வுக்கு எதையாவது இணைவைத்து இறந்தவர் நரகத்தில் நுழைவார். ஒரு செயலுக்கு நிகரான வெகுமதி என்பது ஒரு நன்மையான காரியத்தை செய்ய உறுதி கொண்ட விடயத்தை, அவனது மனம் உணர்ந்திருந்திருந்ததை, அல்லாஹ் அறிகிறான் எனில் அது அவனுக்கு நற்செயலாகப் பதிவு செய்யப்படும். ஒருவன் தீய செயலைச் செய்தால், அது அவனுக்கு எதிரான தீய செயலாகப் பதிவு செய்யப்படும். யார் ஒரு நற் செயலைப் புரிகிறாரோ அந்த நற்செயலுக்கு அதைப் போன்ற பத்து மடங்கு கூலி கிடைக்கும். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவரின் ஒரு நற்செயலுக்கு எழுநூறு மடங்கு நன்மை கிடைக்கும். மனிதர்களைப் பொறுத்தவரை, இவ்வுலக வாழ்வில் செல்வச் செழிப்பில் இருப்போர்; மறுமையில் கஷ்டத்தில் இருப்பார்கள். மறுமையில் செழுமையுடன் இருப்போர் உலக வாழ்வில் நெருக்கடியில் இருப்பர். சிலர் உலக வாழ்விலும் மறுமையிலும் நெருக்கடியில் உள்ளனர்; மேலும் சிலர் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் செல்வச் செழிப்பில் உள்ளனர்.'
இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்செயல்கள் ஆறு வகைப்படும்.மனிதர்கள் நான்கு வகையினர் உள்ளனர் என நபியவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகின்றார்கள். ஆறு செயற்பாடுகள் பின்வருமாறு: முதலாவது: யார் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காது மரணித்தால் அவனுக்கு சுவர்க்கம் கிடைக்கும். இரண்டாவது, அல்லாஹ்வுக்கு ஏதாவது ஒரு விடயத்தில் இணைவைத்த நிலையில் மரணித்தவருக்கு நிரந்தர நரகம் உண்டு. இவைகள் இரண்டும் சந்தேகமின்றி உறுதியாக மறுமையில் நிகழக்கூடிய விடயங்களாகும். மூன்றாவது : செய்வதற்கு எண்ணிய நல்ல காரியம். யார் ஒரு நல்ல காரியததை செய்ய வேண்டும் என நிய்யத் வைத்து (மனதால் செய்யவேண்டும் என உறுதி கொள்ளல்)அவர் தனது நிய்யத்தில் அவருடைய உள்ளம் நிறைவாக உணரும் அளவுக்கு உண்மையாளராக இருந்ததை அல்லாஹ் அறிகிறான்.இவ்வாறு இருக்கையில் அந்த நல்ல காரியத்தை செய்வதற்கு தடையாக ஏதோ ஒரு விடயம் குறுக்காக அமையுமானால் அதற்கான பூரண கூலியை அல்லாஹ் அவனுக்கு எழுதி விடுகிறான். நான்காவது: செய்து முடிந்த ஒரு தீமை. யார் ஒரு தீமையைச் செய்கிறாரோ அவருக்கு ஒரு தீமை எழுதப்படுகிறது. இந்த இரண்டு விடயங்களும் எந்த அதிகரிப்புமின்றி குறிப்பிட்ட செயலுக்குரிய ஒரே மாதிரியான கூலியைக் குறிக்கிறது. ஐந்தாவது: ஒரு நற்செயலுக்கான கூலி அதைப்போன்று பத்தாக வழங்கப்படுகின்றமை. யார் ஒரு நன்மையான காரியத்தை செய்ய மனதால் நினைத்து அதனை செய்தும் விடுகிறார். அந்த நற்செயலுக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன. ஆறாவது: ஒரு நற்செயலுக்கான கூலி 700 மடங்காக வழங்கப்படுகின்றமை. யார் ஒருவர் இறைவழியில் ஒரு விடயத்தில்; செலவு செய்கிறாரோ அதற்கான கூலி 700 மடங்காக எழுதப்படுகிறது. இது அடியார்கள் மீதான அல்லாஹ்வின் பேரருளும் பேருபகாரமுமாகும். மனிதர்கள் நான்கு வகையினர். அவர்களின் விபரம் பின்வருமாறு : முதலாமவர்: உலகில் வாழ்வாதாரத்தை தாராளமாகப் பெற்றவர் மாத்திரமின்றி அவர் விரும்பிய விதத்தில் அதனை அனுபவித்ததவர்; மறுமையில் பெரும் நெருக்கடிக்குள் இருப்பவர் இவர் இறுதியாக செல்லுமிடம் நரகமாகும் அவர்தான் காபிரான -இறைவனை மறுத்துவாழ்ந்த –செல்வந்தன். இரண்டாமவர் : இவ்வுலக வாழ்வில்; வசதி ஏதுமின்றி மிக வறுமையில் இருந்தவர், என்றாலும் மறுமையில் செல்வச்செழிப்பில் இருப்பவர் இறுதியில் சுவர்க்கம் செல்பவர் அவர்தான் அல்லாஹ்வை நம்பி வாழ்ந்த ஏழை முஃமின். மூன்றாமவர்: இவ்வுலகிலும் மறுமையிலும் நெருக்கடிக்கு உள்ளானவர் அவர்தான் அல்லாஹ்வை நிராகரித்து வாழ்ந்த ஏழை. நான்காமவர் : இவ்வுலகில் மறுமையிலும் செழுமையுடன் இருப்பவர் அவர்தான் அல்லாஹ்வை நம்பி வாழ்ந்த முஃமினான செல்வந்தர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்; நிச்சயமாக அல்லாஹ் சாதாரண சூழ்நிலைகளின் போது அவனது கடமைகளை பூரணமாக செய்வதை விரும்புவது போன்று அசாதாரண சூழ்நிலைகளில் அவனது சலுகைகளைப் பயன்படுத்ததுவதை விரும்புகிறான்.
இதனை இமாம் இப்னு ஹிப்பான் பதிவு செய்துள்ளார்சட்டதிட்டங்கள்,வணக்கவழிபாடுகள்; மற்றும் நியாயமான காரணம் நிமித்தம் அதாவது பிரயாணத்தின் போது தொழுகையை சுருக்கியும் சேர்த்தும் தொழுதல், போன்ற அல்லாஹ்வால் அனுமதியளிக்கப்ட்ட சலுகைகளைப் பயன்படுத்துவதை அல்லாஹ் விரும்புகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். கடமையான விடயங்களை செய்வதை அவன் விரும்புவது போன்று சலுகைகளாகத் தரப்பட்டவைகளையும் நிறைவேற்றுவதை விரும்புகிறான் ஏனெனில் கட்டாயமாக செய்யவேண்டும், என்ற அல்லாஹ்வின் கட்டளையும் அவனால் அளிக்கப்பட்ட சலுகைகளும் ஒன்றாகும்.
அம்ர் இப்னு ஆமிர், அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு கூறியதாக அறிவித்துள்ளார்கள் : 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழுச் செய்வார்கள்' என அனஸ் ரழியல்லாஹு கூறியபோது, 'நீங்கள் எப்படிச் செய்வீர்கள்?' என அனஸ் ரழியல்லாஹுஅவர்களிடம் நான் கேட்டதற்கு, வுழுவை முறிக்கும் செயல்கள் நிகழாமலிருக்கும் போதெல்லாம் ஒரே வுழுவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது' என்று அனஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்'.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்சிறப்பையும்; கூலியையும் அடைந்து கொள்வதற்காக தனது வுழு முறியாமல் இருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பர்ழான ஒவ்வொரு தொழுகைக்கும் வுழு செய்பவர்களாக இருந்தார்கள். வுழு முறியாமல் இருக்கும் நிலையில் ஒரே வுழுவினால் அதிகமான பர்ழ் தொழுகைகளை தொழுவதற்கு அனுமதியுண்டு.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை ஒவ்வெரு தடவையும் கழுவுபராக இருந்தார்கள்.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்சில வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழு செய்தால் வுழுவின் உறுப்புக்களை ஒவ்வொரு தடவை கழுவக் கூடியவராக இருந்தார்கள். அதாவது முகம் வாய்க் கொப்பளித்தல், நாசுக்கு நீர் செலுத்துதல் உள்ளடங்களாக முகம், இருகைகள், மற்றும் இருகால்களை ஒவ்வொரு தடவை கழுவினார்கள். இதுவே கட்டாயம் கழுவவேண்டியதன் அளவாகும்.
அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை இவ்விரு முறை கழுவி வுழு செய்தார்கள்.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்சில வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுசெய்தால் வுழுவின் உறுப்புக்களை இரு தடவைகள் கழுவக்ககூடியவராக இருந்தார்கள். அதாவது வாய்க்கொப்பளித்தல், நாசுக்கு நீர் செலுத்துதல் உள்ளடங்களாக முகம், இருகைகள், மற்றும் இருகால்களை இரு தடவைகள் கழுவினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவருக்கு வயிற்றில் ஏதாவது (சத்தம்) கேட்டு ஏதும் காற்று வெளியேறியதா இல்லையா எனும் சந்தேககம் ஏற்பட்டால், அவர் சத்தத்தைக் கேட்காத அல்லது காற்று வெளியேறியதாக உணராத வரை (தொழுகையை முறித்து) பள்ளியை விட்டு வெளியேற வேண்டாம்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுபவருக்கு வயிற்றில் ஏதாவது ஏற்பட்டு காற்று வெளியேறியதா இல்லையா என்ற குழப்பம் -தடுமாற்றம் ஏற்பட்டால் வுழுவை முறிக்கக் கூடிய தொடக்கு ஏற்பட்டுள்ளது என உறுதியாக அறியும் வரையில் அவர் தனது தொழுகையை விட்டுவிட்டு மீண்டும் வுழு செய்வதற்காக செல்ல வேண்டாம் என இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அவர் அவ்வாறு தொழுகையை முறித்துக் கொள்வதற்கு காற்றின் சப்தத்தையோ அல்லது காற்றின் நாற்றத்தையோ நுகர வேண்டும். காற்று வெளியேற வில்லை என உறுதியான நம்பிக்கையுடன் இருக்கும் ஒருவருக்கு ஏற்படும் சந்தேகம் அவரின் உறுதியை பாதிக்கமாட்டாது. இந்த அடிப்படையில்; அவர் சுத்தமாக இருக்கிறார் என்ற நம்பிக்கையே முதன்மைப்படுத்தப்படும். தொடக்கு ஏற்பட்டது என்ற இடையில் ஏற்பட்ட சந்தேகமானது உறுதியற்றது என்பதனால் அதனை விட்டு விட வேண்டும்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஏழு நாற்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்வாரத்தில் ஒரு நாள் குளிப்பது பருவவயதை அடைந்த புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வலியுறுத்தப்பட்ட விடயமாகும். அதில் அவர் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளும் முகமாக தனது தலையையும் மேனியையும் கழுவிக்கொள்ள வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு மிகவும் பொருத்தமான நாளாக ஜும்ஆத்தினம் விளங்குகிறது. இதனை சில அறிவிப்புகளிருந்து தெரிந்து கொள்கிறோம். ஜும்ஆத் தொழுகைக்கு முன் குளிப்பது வலியுறுத்தப்பட்டதும் விரும்பத்தக்கதுமான ஒரு விடயம் என்பதை மேற்படி ஹதீஸ் குறிப்பிடுகிறது. ஆனால் ஒருவர் வாரத்தில் உதாரணத்திற்கு வியாழக்கிழமை குளித்தாலும் பரவாயில்லை. ஏனெனில் ஜும்ஆ நாளில் கட்டாயம் குளித்தாக வேண்டும் என்பதை விடுத்து அது விரும்பத்தக்க விடயம் என்பதை பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது : ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் 'அன்றைய மக்கள் உழைப்பாளர்களாக இருந்தனர். அவர்கள் ஜும்ஆவுக்கு வரும்போது அதே தோற்றத்துடனேயே வந்து விடுவார்கள். இதனால்தான் நீங்கள் குளித்துக் கொள்ளலாமே (குளித்து சுத்தமாகிக் கொண்டால் நன்றாய் இருக்குமே) என்று அவர்களிடம் கூறப்பட்டது' (ஆதாரம் புஹாரி) இன்னொரு அறிவிப்பின் படி அவர்களிடம் வியர்வை துர்நாற்றம் வீசியது அவ்வாறிருந்தும் அவர்களுக்கு ' நீங்கள் குளித்திருக்கலாமே' என்ற கட்டளை வாசகமல்லாத அறிவுரை வாசகமாகமே சொல்லப்பட்டது. அந்த வகையில் இவர்களுக்கே இந்த அறிவுரை இருக்கும் போது இவர்கள் அல்லாதோர் குளிக்காது சமூகமளிப்பதில் எவ்விதக் குற்றமுமில்லை.