





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அதிய் இப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: (மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார்." நீங்கள் உங்கள் வலப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். ஆகவே, ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஒவ்வொரு விசுவாசியும் மறுமை நாளில் அல்லாஹ்வின் முன் தனித்து நிற்பார்கள் என்றும், அல்லாஹ்வும் அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் ஒரு பரிந்துரையாளரோ அல்லது மொழிபெயர்ப்பாளரோ இல்லாமல் அவனிடம் பேசுவான் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்குத் தெரிவிக்கிறார்கள். அதனால் அவன் மிகுந்த பயத்துடன் தன் வலது பக்கத்தையும் இடது பக்கத்தையும் பார்ப்பான்; தனக்கு முன்பாக இருக்கும் நரகத்திலிருந்து தப்பிக்க ஏதாவது வழியைக் கண்டுபிடிக்க முடியுமா என்று அவன் ஆவலுடன் பார்ப்பான். அவன் தனது வலது பக்கம் பார்த்தால், தான்; செய்த நல்ல செயல்களைத் தவிர வேறு எதையும் காண மாட்டார். அவன் தனது இடது பக்கம் பார்த்தால், தான் செய்த கெட்ட செயல்களைத் தவிர வேறு எதையும் பார்க்க மாட்டார். அவன் தனக்கு முன்னால் பார்த்தால், நரகத்தைத் தவிர வேறு எதையும் அவன் காணமாட்டான், அதிலிருந்து அவன் விலகிச் செல்ல முடியாது ஏனென்றால் நரகத்திற்கு மேலே கட்டப்பட்ட ஸிராத் பாலத்தைக் கடப்பதைத் தவிர அவனுக்கு முன்னால் வேறு வழி இல்லை. பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உங்களுக்கும் நரகத்திற்கும் இடையில் நன்மை மற்றும் தர்மத்தின் ஒரு தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது அரை பேரீச்சம் பழம் போன்ற சிறிய ஒரு பொருளாக இருந்தாலும் சரியே!' என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது : ''அஊது பில்லாஹில் அழீம் வபிவஜ்ஹிஹில் கரீம் வஸுல்தானிஹில் கதீம் மினஷ் ஷைய்தானிர் ரஜீம்'' என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்;. இதனை நபியவர்கள் கூறினார்களா? என்று கேட்டதற்கு ஆம் என்று நான் கூறினேன். இந்தப் பிரார்த்தனையை கூறினால் இந்நாள் முழுவதும் என்னிடமிருந்து பாதுகாப்புப் பெறுகிறான் என்று ஷைத்தான் கூறுகிறான். திக்ரின் பொருள் : மகத்துவம் கொண்ட அல்லாஹ்வைக் கொண்டும், அவனது அழகிய திருமுகத்தைக் கொண்டும்,நிலையான மேலாதிக்கத்தைக் கொண்டும், விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது மேற் குறிப்பிட்ட திக்ரை கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் அதன் விளக்கம் பின்வருமாறு: (أعوذ بالله العظيم) 'அஊது பில்லாஹில் அழீம்' என்றால் அல்லாஹ்வைக் கொண்டும் அவனின் பண்புகளைக் கொண்டும் நான் புகழிடம் தேடி பாதுகப்பும் கோருகிறேன். (وبوجهه الكريم) வபிவஜ்ஹிஹி கரீம் என்றால் : பெரும் கொடையாளானாகிய அவனின் திருமுகத்தைக் கொண்டும் என்று பொருளாகும். (وسلطانه) வஸுல்தானிஹி என்றால் (அவனின் அதிகராம்) அதாவது அவனின் மேலான்மை மற்றும் வல்லமை மற்றும் அதிகாரம் அவன் விரும்பும் எந்தப்படைப்பின் மீதும் இருக்கும் என்பதாகும். (القديم) (அல் கதீம்) என்பது நித்தியமான முடிவே இல்லாத தொன்று தொட்டே உள்ள என்று பொருளாகும். (من الشيطان الرجيم) 'மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' என்பது அல்லாஹ்வின் கருணையிலிருந்து விரட்டப்பட்டு தூரமாக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து என்பதாகும். இதன் கருத்து : யா அல்லாஹ் : ஷைத்தானின் தீய ஊசாலட்டத்திலிருந்தும், அவனின் தூண்டுதல் களிலிருந்தும்,அவனுடைய அடிச்சுவடு களிலிருந்தும், அவனுடைய தீய எண்ணங்களிலிருந்தும், அவனுடைய வழிகேட்டிலிருந்தும், தீய விஷயங்களை எனக்குக் கவர்ச்சிகரமானதாகக் காட்டுவதிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக.அவனே வழிகேட்டிற்கும் அறியாமைக்கும் தூண்டுபவனும் ஆவான். அப்துல்லாஹ்; இப்னு அம்ர் (ரழி) அவர்களிடம்; ஒருவர், 'நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இதை மாத்திரமா சொன்னார்கள்?' என்று கேட்டார். என்றார். அதற்கு அவர், 'ஆம்' என் கூறினார். ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்போது இந்த துஆவை ஓதினால், இந்த துஆவை ஓதிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் நுழைந்த இந்த மனிதர் என்னிடமிருந்து இரவும் பகலும் பாதுகாப்புப் பெற்றுள்ளார் என்று ஷைத்தான் கூறுவான்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்: அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, 'சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அதற்கு அவர்கள் 'எங்கள் இரட்சகனே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் 'திருப்தி அடைந்தீர்களா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள் 'உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?' என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் 'அதை விடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப் போகிறேன்' என்பான். அவர்கள் 'அதிபதியே! அதைவிடச் சிறந்தது எது?' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்கள்மீது என் அன்பை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன்' என்று கூறுவான்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மறுமையில் அல்லாஹ் சுவர்க்கவாசிகளைப் பார்த்து, சுவர்க்கவாசிகளே! என்று விழித்துப் பேசுவதாக இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது அவர்கள் எமது இரட்சகனே உமக்கு அடிபணிந்து உமது உதவியை நாடி நிற்கிறோம் என்று பதில் கூறுவார்கள். அப்போது அல்லாஹ் நீங்கள் திருப்தியுடன் இருக்கிறீர்களா? என்று கேட்க அதற்கவர்கள் ஆம்' நாம் திருப்தியுடன் உள்ளோம். என்று கூறுதுடன் உனது படைப்புகளில் எவருக்கும் கொடுக்காததை எமக்குக் கொடுத்திருக்கும் போது நாம் திருப்தியடையாமல் இருக்க எமக்கு என்ன நேர்ந்து விட்டது!? என்றும் கூறுவார்கள். அதனைத்தொடர்ந்து அல்லாஹ் அவர்களிடம் இதனை விடவும் மிகவும் சிற்புக்குரிய ஒன்றை தரட்டுமா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் இரட்சகனே! இதனைவிடவும் மிகவும் சிறப்புக்குரியது எது ? என்று அவர்கள் ஆச்சரியமாக கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்கள்மீது என் நிலையான கருணையை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன்' என்று கூறுவான்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூ தர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : யாராவது ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனைப் பார்த்து, 'பாவி' என்றோ, 'காபிர்' என்றோ கூறி, உண்மையில் அம்மனிதன் அவ்வாறில்லாவிட்டால், அத்தீர்ப்பு அவனுக்கே திரும்பி வந்துவிடும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள், யாராவது ஒருவர் இன்னொருவரைப் பார்த்து, 'நீ பாவி' அல்லது 'நீ காபிர்' என்று கூறி, உண்மையில் அவன் அவ்வாறில்லாவிட்டால், கூறப்பட்ட அப்பண்பிற்குத் தகுதியானவனாக அவனே இருப்பான் என்றும், அவனது வார்த்தை அவனை நோக்கியே திரும்பும் என்றும் எச்சரிக்கின்றார்கள். உண்மையில் அவன் அவ்வாறிருந்தால், அது இவருக்குத் திரும்பி வரமாட்டாது. ஏனெனில், அவன் கூறிய விடயம் உண்மையாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : நாய் மற்றும் உருவமிருக்கும் வீட்டில் மலக்குமார்கள் பிரவேசிக்க மாட்டார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நாயோ உயிர் உள்ள உருவப்படமோ உள்ள வீட்டில் அருள் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அவர்கள குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் உயிருள்ள உருவப்படங்களை உருவாக்குவது (சித்தரிப்பது) மிகப்பெரும் ஒரு தீமையாகும். காரணம் அவை அல்லாஹ்வின் படைப்பை ஒத்திருப்பதோடு இணைவைப்பிற்கு வழிவகுக்கும் ஒரு சாதனமாக இருக்கிறது அத்துடன் அவ்வுருவப்படங்களில் சிலவை அல்லாஹ்வைத் தவிர்த்து வணங்கப்படுபவைகளாகும். நாய் இருக்கும் வீட்டிட்குள் மலக்குகள் நுழையாது இருப்பதற்கு அவை அதிகம் அசுத்தமானவற்றை சாப்பிடுவதும். அதே வேளை சில நாய்கள் ஷைத்தான்கள் என அழைக்கப்டுவதும் காரணமாக அமைந்துள்ளது. அந்தவகையில் ஷைத்தான்கள் மலக்குகளுக்கு எதிரானோர் ஆவார்கள். மேலும் மலக்குகள் நாயிருக்கும் வீட்டிட்குள் நுழையாது இருப்பதற்கு அதன் துர்நாற்றமும் ஒரு காரணமாகும். ஏனெனில் துர்நாற்றத்தை மலக்குகள் விரும்புவதில்லை. இன்னொரு காரணம் நாயை செல்லப்பிராணியாக எடுத்துக் கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அருள் மலக்குகள் அவரின் வீட்டிட்குள் நுழையாது இருப்பதன் மூலமும் அதில் தொழாது, அவருக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்காது, அவருக்கும் அவரது வீட்டிட்கும் அருள்வளம் கிடைப்பதற்கு பிரார்த்திக்காதிருப்பதன் மூலமூம் அவரை ஷைத்தானின் தீங்கு ஏற்படுவதை விட்டும் தடுக்காதிருப்பதன் மூலமும் அதனை செல்லப் பிராணியாக எடுத்துக்கொண்டவர் தண்டிக்கப் படுகிறார்.
அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு ஸமுரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : "(தாகூத்கள்") சிலைகள் மீதோ உங்களின் பெற்றோர்களின் மீதோ நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாம்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'தவாகி'க்கள் மீது சத்தியம் செய்வதைத் தடை செய்கிறார்கள். 'தவாகி' என்பது 'தகியா'.என்ற ஒருமைச் சொல்லின் பன்மையாகும். இச்சொல்லானது, அல்லாஹ்வுக்குப்பதிலாக இணைவைப்பாளர்கள் வணங்கிய ஜாஹிலிய்யாக் கால சிலைகளைக் குறிக்கும். இதுவே அவர்களின் அத்துமீறல்களுக்கும் சத்தியத்தை நிராகரிப்பதற்கும் காரணமாக அமைந்தன. அதேபோல மூதாதையர்களின் மீது சத்தியம் செய்வதை தடை செய்துள்ளார்கள். ஏனென்றால் இஸ்லாத்திற்கு முந்தைய காலமான ஜாஹிலியயாக் காலத்தில், அரேபியர்கள் தங்கள் மூதாதையர் மீது பெருமை மற்றும் மரியாதையின் நிமித்தம் சத்தியம் செய்து வந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக புரைதா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: யார் அமானிதத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றாரோ, அவர் எம்மைச் சார்ந்தவர் அல்ல.
இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஇங்கு நபியவர்கள் அமானிதத்தைக் கொண்டு சத்தியம் செய்வதை எச்சரித்துத் தடுக்கின்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: யாராவது அதானைக் கேட்ட போது, 'அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காஇமா, ஆதி முஹம்மதனில் வஸீலத வல் பழீலா, வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்' என்று கூறுகின்றாரோ, அவருக்கு மறுமையில் எனது சபாஆ (பரிந்துரை) கிடைக்கும். துஆவின் அர்த்தம் : யா அல்லாஹ் இந்த முழுமையான அழைப்பினதும் நிலையான தொழுகையினதும் ரப்பே! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வசீலா என்னும் அந்தஸ்தையும், சிறப்பையும் கொடுப்பாயாக! நீ வாக்களித்திருக்கின்ற புகழுக்குரிய அந்தஸ்துக்கு அவரை அனுப்புவாயாக.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்இங்கு நபியவர்கள் தெளிவுபடுத்துவது என்னவென்றால் யாராவது ஒரு முஸ்லிம் பாங்கு சொல்வதைக் கேட்டு பின்னர், (யா அல்லாஹ்! இந்த முழுமையான) அதாவது இறைத்தூதினதும், ஓரிறைக் கொள்கையினிதும் பரிபூரணமான (அழைப்பின் ரப்பே) அதாவது அல்லாஹ்வை வணங்கவும், தொழுகையை நிலைநாட்டவும் விடுக்கப்படும் அழைப்பு (நிலையான தொழுகை) என்ற நிலை நாட்டப்படும் தொழுகை (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வசீலாவையும்) இது நபியவர்களுக்கு மாத்திரம் தகுதியான சுவனத்தின் ஓர் உயர்ந்த அந்தஸ்தாகும் (சிறப்பையும் கொடுப்பாயாக) அதாவது ஏனைய படைப்புக்களை விட உயர்ந்த அந்தஸ்தை அவர்களுக்கு கொடுப்பாயாக (அவர்களை புகழப்பட்ட அந்தஸ்துக்கு அனுப்புவாயாக) அதாவது புகழுக்குரிய அந்தஸ்தாகிய மறுமையில் உள்ள மகத்துவமிக்க சபாஆ (அதாவது நீ அதனை அவர்களுக்கு வாக்களித்துள்ளாய்) அதாவது, 'உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்ற (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்' என்ற வசனத்தின் மூலம் அது நபியவர்களுக்கு உரியது என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான். இந்த துஆவை யார் ஓதுகின்றாரோ அவருக்கு மறுமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரை கட்டாயமாகி விடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக்குவியல், அல்லது அதில் பாதியளவைக்கூட (அவரது) அந்தத் தர்மம் எட்ட முடியாது.'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லலம் அவர்கள், குறிப்பாக ஆரம்பத்தில் இஸ்லாத்தைத் தவழுவிய முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரி ஸஹாபாக்களைக் திட்டுவதை தடைசெய்துள்ளார்கள். மேலும், ஒருவர் உஹுது மலையின் தங்கத்திற்கு சமமான தொகையைச் செலவிட்டாலும், ஒரு நபித்தோழரின்; (ஒரு)கைக்குவியல் அல்லது அதன் அரைவாசியை செலவழித்து பெறும் வெகுமதியை அவர் பெறமாட்டார். ஒரு முத்து என்பது ஒரு நடுத்தர அளவிலான நபரின் உள்ளங்கை அளவாகும். தோழர்கள் தங்கள் இஹ்லாஸ் (மனத்தூய்மை) மற்றும் உண்மையான எண்ணத்தின் காரணமாகவும் மக்கா வெற்றிக்கு முன் கடுமையான தேவை இருந்த சந்தர்ப்பத்தில் போர்களுக்காக மிகவும் ஆர்வத்துடன் உதவியமை காரணமாகவும் இவ்வளவு வெகுமதியையும் அந்தஸ்த்தையும் பெற்றனர்.